*ஆண் தேவதை*-க்காக 2 பண முடிப்பை பரிசாக பெற்ற ரம்யாபாண்டியன்

*ஆண் தேவதை*-க்காக 2 பண முடிப்பை பரிசாக பெற்ற ரம்யாபாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Joker fame Ramya Pandian got two cash bags for Aandhevadhaiஅறிமுக கதாநாயகியாக தான் நடித்த ‘ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.

தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்..

“ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார்.

அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப்படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்..

சொல்லப்போனால் ஜோக்கர் படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியரில் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன்.

காரணம் ஜோக்கர் படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியுள்ளேன்..

சமுத்திரக்கனி சார் செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார்.. அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் தான் நடித்தேன்.

அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

இயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணுங்கிறதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப்படம் ஒப்புகொள்றதுக்கு முன்னாடி சில சந்தேகங்கள் எனக்கு இருந்தது அதுபற்றி அவர் எனக்கு விளக்கம் கொடுத்து, என்னை சம்மதிக்க வைத்தார்.

அதுமட்டுமல்ல, ஷூட்டிங் ஸ்பாட்ல, வசனங்களை இன்னும் இம்ப்ரூவ் பண்ணுவார். எனக்கு மொழி பிரச்னை இல்லாததால், நானும் டக்கு டக்குனு வசனங்களை உள்வாங்கி நடிக்க ரொம்ப ஈஸியாவே இருந்துச்சு.

ஒருநாள் படப்பிடிப்பு தளத்துல இப்படி வசனத்தை இன்னும் பட்டை தீட்டுறபோது ஒரு மிகப்பெரிய விவாதமே நடந்துச்சு.. ஆரோக்கியமான விவாதம் தான்.

ஆனால் படத்துல அந்த காட்சி ரொம்ப சிறப்பா வரும்னு அப்பவே எங்களால் கணிக்க முடிஞ்சது.

அதேசமயம் நாங்கள் பெரும்பாலும் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவோம் என்பதால டைரக்டர் தாமிரா திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் எடுக்கவேண்டிய காட்சிகளை தாமதம் இல்லாம எடுக்க முடிஞ்சது.

என்னோட நடிப்பை பாராட்டி படப்பிடிப்பு தளத்திலேயே பணமுடிப்பு பரிசா தந்தாங்க.. அதை என்னால மறக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, டப்பிங் பேசினபோதும் அதுபோல ரெண்டு தடவை பணமுடிப்பு வாங்கினேன்.

சுத்தியிருக்கிறவங்க பாராட்டினாலும் கூட, ஒரு கதையை, என்னோட கேரக்டரை உருவாக்கின இயக்குனர், தான் நினைத்த மாதிரியே வந்துவிட்டதாக சொல்லி பரிசு தர்றது எவ்வளவு பெரிய விஷயம்.

அடுத்தடுத்த படங்களில் குடும்ப தலைவியா நடிக்கிறீங்களேன்னு நிறைய பேர் கேட்டாங்க… குடும்ப தலைவி என்றாலும் இந்தப்படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன்.

ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப்போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா, அடுத்ததா அவங்கள எந்த கேரக்டர்லயும் பொருத்தி பார்க்குற அளவுக்கு ஜனங்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது.

அதனால் ரம்யா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.

ஜோக்கர் படம் மல்லிகாவைத்தான் ரசிகர்களிடம் அதிகமா கொண்டுபோய் சேர்த்தது.. ஆனால் ‘ஆண் தேவதை’ படம் ரம்யா பாண்டியனை முழுமையாக வெளிப்படுத்தும்.

ஏன்னா ஜோக்கர் படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா? நான் வெளிய தெரியவே இல்லை.. நிறைய பேர் நம்பவே இல்லை..

அவ்வளவு ஏன் இயக்குனர் பா.ரஞ்சித் சார் கூட படம் வெளியாகி ஒரு வருஷம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம்.

மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் மூலமா உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார்.

மும்பை , மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப்பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.

இந்தப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.. ஆனால் இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை.

காரணம் ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என் ஏதாவது ஒரு விஷயமாவது நம்ம கவரவேண்டும் இல்லையா..? அப்படி மூன்றும் கலந்த ஒரு படமாக ஆண் தேவதை எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான்.

இந்தப்படம் வெளியான பின்னாடி நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவேன். ஆண் தேவதைக்கு அடுத்து என்னவிதமான படம், கேரக்டர் பண்ணப்போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை.

ஆனா கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியா இருக்கிறேன்” என்கிறார் ரம்யா பாண்டியன்.

Joker fame Ramya Pandian got two cash bags for Aandhevadhai

Samuthirakani and Ramya Pandian in Aandhevadhai

பாடல் எழுதுவதை கவிஞர் பா. விஜய் நிறுத்தவே கூடாது… – பாக்யராஜ்

பாடல் எழுதுவதை கவிஞர் பா. விஜய் நிறுத்தவே கூடாது… – பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pa Vijay must continue his song writing works says Bhagyarajவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுடன் பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி எல் சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில்…

‘எனக்கும் பா விஜய்க்கும் இருபது வருட பழக்கம். எங்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் 98 சதவீதம் வெற்றிபெற்றிருக்கிறது.

பாடல் ஆசிரியராகத் தொடங்கி, இன்று இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் அவருடைய வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இதற்கு பின்னணியில் அவரும், அவருடைய தந்தையாரின் உழைப்பும் இருக்கிறது.

இந்த படத்தில் அவரை நான் பாடகராகவும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டுகிறேன்.

இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கும் கருத்து, அவரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. இன்றைய சமூகத்திற்கு தேவையான விசயத்தை கவிநயத்துடன் சொல்லியிருக்கிறார்.

இதற்காக நான் அவரை தலைவணங்குகிறேன். வர்ஷா என்ற இளம்பெண்ணையும் பாடகியாக நான் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.’ என்றார்.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசுகையில்,‘நான் மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் நான் நடிகனில்லை. ஆனால் எனக்கு பா விஜயைப் பிடிக்கும்.

இந்த படத்தின் கதையை முழுவதுமாக இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லவில்லை. என்னுடைய கேரக்டரைப் பற்றியும், என்னுடைய கெட்டப்பைப் பற்றியும் மட்டுமே சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது.

அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் எந்த கேரக்டரில் நடித்தாலும், அந்த கேரக்டரில் ஒரு காட்சியிலாவது அதில் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றிவிடுவார்.

ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் என்னுடைய எபிசோடில் ஒரு காட்சியில் கூட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தோன்றவேமாட்டார். அந்த கேரக்டர் மட்டுமே இருக்கும். அந்த வகையில் இந்த கேரக்டரை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய்.

நான் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்வதில் பெருவிருப்பு உடையவன். அதே போல் இயக்குநர் பா விஜயின் வளர்ச்சிக்காக அவருடைய தந்தையார் உழைப்பதைக் கண்டு ஆனந்தமடைந்திருக்கிறேன்.

இந்த படத்தின் படபிடிப்பிற்காக கும்பகோணத்திற்கு சென்றிருந்த போது அங்கு பதிமூன்று தலைமுறைகளாக சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தோம்.

அங்குள்ளவர்கள் என்னுடைய கெட்டப்பைப் பார்த்துவிட்டு அவர்கள் வியந்து போய் உரிமையுடன் எங்களுடைய தந்தையாரை பார்த்தது போலிருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்போதே இயக்குநரிடம் இந்த படம் பெரிய அளவிற்கு வெற்றிப் பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னேன்.’என்றார்.

இயக்குநர் கே பாக்யராஜ் பேசுகையில்…

‘என்னுடைய உதவியாளராக பா விஜய் சேரும் போது பாடல் எழுதுவதற்காகத்தான் வந்தேன் என்றார். ஆனால் அவரிடத்தில் ஏரளாமான திறமைகள் இருந்திருக்கிறது.

அதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். அவருடைய உதவியாளர் இங்கு பேசும் போது, பாடல் எழுதும் பயிற்சி பெறும் போதே பகுதி நேரமாக அவர் இசைபயிற்சியையும் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிட்டார்.

இந்த படத்தின் கதையை டிரைலரிலேயே பா விஜய் சொல்லிவிட்டார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகர் என்னுடைய படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், என்னுடைய உதவியாளர் விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இதற்காக அவரை பாராட்டுகிறேன். அதே போல் விஜயின் கனவுகளை நனவாக்குவதற்காக அவருடைய தந்தையார் அளித்து வரும் ஒத்துழைப்பு மறக்க முடியாது.

இந்த படத்திற்காக பா விஜய் உழைத்த உழைப்பு எனக்கு தான் தெரியும். கஷ்டப்பட்டு உழைக்கும் உழைப்பு எப்போதும் வீணாகாது என்பது என்னுடைய நம்பிக்கை.

அதே போல் பா விஜய், பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, அதற்கு பின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இருந்தாலும் பாடல் எழுதுவதையும், கவிதை எழுதுவதையும் அவர் விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.

Pa Vijay must continue his song writing works says Bhagyaraj

நவீன கால கணவன்-மனைவி உறவை சொல்லும் *அதையும் தாண்டி புனிதமானது*

நவீன கால கணவன்-மனைவி உறவை சொல்லும் *அதையும் தாண்டி புனிதமானது*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Athaiyum Thaandi Punidhamanadhu movie set to release on September‘அதையும் தாண்டி புனிதமானது ‘ என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆர்.வெங்கட்டரமணன்.

இவர் தான் ‘அப்பா ..வேணாம்ப்பா..’ என்ற சமூகத்தின் நலன் சார்ந்த திரைப்படத்தை இயக்கியவர்.

கணவன், மனைவிக்கு நடுவில் இருக்கும் உறவு பற்றி பேசும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டது.

நாகரிகத்தின் உச்சத்தில் ஆணும், பெண்ணும் நட்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் ஆண், பெண் உறவுகள் தவறாகப் போனால், குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்ற வித்தியாசமானகதைக் களத்தை துணிந்து தொட்டிருக்கிறார் இயக்குனர்.

வேல்ஸ் மூவீஸ் பேனரில் திரு.பழனிவேல் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சினிமா மேல் தணியாத ஆசைக் கொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

புதுமுகங்கள் ஜெய், கெளதம், வீன்ஷெட்டி, ஹேமா, சஞ்சனா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

வேதா செல்வம் ஒளிப்பதிவாளராகவும், ராஜேஷ்கண்ணன் எடிட்டராகவும், வி.கே.கண்ணன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்களை வைரபாரதி, வெங்கடசுப்பு, நாக முருகேசன் எழுதி உள்ளனர்.

இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

Athaiyum Thaandi Punidhamanadhu movie set to release on September

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் ரூ. 5 லட்சம் நன்கொடை

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் சங்கம் ரூ. 5 லட்சம் நன்கொடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam donates Rs 5 lakhs to Kerala flood relief fundதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் M.நாசர் தலைமையில் இன்று (12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

நடிகர்கள் நாசர், கார்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தபட்டது.

மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவு சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சங்கம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Nadigar Sangam donates Rs 5 lakhs to Kerala flood relief fund

தமிழில் பேசினால் கிளம்பிடுறாங்க…; பேராசிரியர் கு ஞானசம்பந்தம் வேதனை

தமிழில் பேசினால் கிளம்பிடுறாங்க…; பேராசிரியர் கு ஞானசம்பந்தம் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Professor Ku Gnanasambandam speaks at Aaruthura Audio launchவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுடன் பா விஜய், இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா மற்றும் பாடகியாக அறிமுகமாகியிருக்கும் வர்ஷா, பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், ஒளிப்பதிவாளர் பி எல் சஞ்சய், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் கு ஞானசம்பந்தம் அவர்கள் பேசுகையில்…

‘இது போன்ற விழாக்களில் லேசாக பேதை, பெதும்பை, ரிவை, தெரிவை, பேரிளம் பெண்..என தமிழில் பேச ஆரம்பித்துவிட்டால், உடனே செல்போனை எடுத்து காதில் வைத்து கொண்டு ‘மாப்ள இதோ வந்துவிட்டேன்’ என்று எழுந்துவிடுகிறார்கள்.

இங்குள்ள நடிகைகளில் பலரும் தமிழ் தெரியவில்லை என்றாலும் தமிழில் பேச முயற்சித்தார்கள். இதற்காக திரையுலகினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளிக்கூடங்களில் கூட தமிழ் இல்லாத இடத்தில் இவர்களையெல்லாம் திரையில் தமிழில் பேச வைத்திருப்பதற்கு இயக்குநர் பா விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் எனக்கு ஒரு வெயிட்டான கேரக்டர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பா விஜய். அதை நீங்கள் படத்தில் நான் தோன்றும் முதல் காட்சியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

படத்தில் நான் ஏற்றிருக்கும் கேரக்டரை, உடன் நடித்த பாக்யராஜ் அவர்களால் கூட உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அது போன்ற ஒரு வித்தியாசமான கேரக்டரை எனக்கு இயக்குநர் கொடுத்திருக்கிறார்.

தமிழில் எதுகை மோனை என்று எழுதலாம். பேசலாம். ஆனால் ஆங்கிலத்தில் முடியுமா.. என்றால் அது கஷ்டம் தான்.

ஆனால் அதனை இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன். இதற்காக மறைந்த முன்னாள் நடிகர்களின் குரல்களில் பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.

நீங்கள் திருக்குறளை பலர் மொழி பெயர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் திருக்குறளை சுத்தானந்த பாரதி என்பவர் ஒலி பெயர்ப்பு செய்திருப்பார்.

‘சீ மீ அண்ட் த லேடி, பிட்வின் சோல் அண்ட் த பாடி’ என்று எழுதியிருப்பார்.

இதே போல் 1330 குறள்களுக்கும் எழுதியிருப்பார். இதனை படத்தில் எனக்காக மாற்றியமைத்து எழுதியிருக்கிறார் பா விஜய். அதனால் இந்த படம் ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.’ என்றார்.

Professor Ku Gnanasambandam speaks at Aaruthura Audio launch

AARUTHRA PressMeet Event Resized stills (19)

செட்டப் பாக்ஸ் பிரச்சினைகளை சொல்லவரும் *ஓடு ராஜா ஓடு*

செட்டப் பாக்ஸ் பிரச்சினைகளை சொல்லவரும் *ஓடு ராஜா ஓடு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Odu Raja Odu movie deals with Set up box issues in familyகாதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவியின் சந்தோஷமான வாழ்க்கையில், ‘செட்டாப் பாக்ஸ்’ எந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி, அவருடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? என்பது கதை.

ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்கள். படத்தை பற்றி இருவரும் கூறியதாவது:-

“இது ஒரு நகைச்சுவை-திகில் படம். செல்லும் இடமெல்லாம் கதாநாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் சொல்கிற திரைக்கதை, இது.

‘ஜோக்கர்’ பட கதாநாயகன் குரு சோமசுந்தரம், நாசர், லட்சுமி பிரியா ஆகியோருடன் பல புது முகங்கள் நடித்து இருக்கிறார்கள்.

திரைக்கதை அமைத்து படத்தொகுப்பையும் கவனித்துள்ளார் நிஷாந்த் மற்றும் ரவீந்திரன்.

தோஷ் நந்தா இசையமைக்க, விஜய் மூலன் தயாரித்துள்ளார்.

‘இரும்புத்திரை’ படத்தை அடுத்து பி.டி.செல்வகுமார் வெளியிடும் படம், இது.

இந்த படத்தை அடுத்து மாதவன் நடிப்பில், மிக பிரமாண்டமான ஒரு படத்தை தயாரிக்க விஜய் மூலன் திட்டமிட்டு இருக்கிறார்.

Odu Raja Odu movie deals with Set up box issues in family

odu raja odu audio launch

More Articles
Follows