சினிமாவில் தனக்கான அடையாளத்தை தேடும் அஜித்-சிம்பு பட நடிகர்

சினிமாவில் தனக்கான அடையாளத்தை தேடும் அஜித்-சிம்பு பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

John Kokken (2)அனைத்து சினிமாக்காரர்களாலும் நன்கு அறியப்பட்டவர் ஜான் கொக்கன்.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் நுழைந்தார். 10 சிறந்த மாடல்களில் ஒருவராக முன்னேறினார்.

அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளியான கலாபம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் லவ் இன் சிங்கப்பூர், அலெக்சாண்டர் தி கிரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழில், அஜித்தின் வீரம், விஷாலின் மதகதராஜா, சிம்பு நடித்த ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தமிழ், மலையாளம் மொழி மட்டுமில்லாமல், கன்னடம் மற்றும் தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் பிரம்மாண்டமாக வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் வில்லனாகவும், பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார்.

தற்போது அதிகம் எதிர்பார்க்கும் கே.ஜி.எஃப் 2 ஆம் பாகத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

John Kokken re entry in Kollywood

சூப்பர் ஸ்டார் & உலகநாயகன் சந்திப்பு..: ஆதரவு கேட்டாரா கமல்.? வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி.?

சூப்பர் ஸ்டார் & உலகநாயகன் சந்திப்பு..: ஆதரவு கேட்டாரா கமல்.? வாய்ஸ் கொடுப்பாரா ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

25 வருடங்களாக அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 29ல் தன் உடல்நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கும் வாக்கை தவறவிட்டார்.

பொது மக்கள் மற்றும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருந்த கமல்.. “ரஜினியின் முடிவு ரசிகர்களை போல தனக்கும் வருத்தமே. ஆனால் என் நண்பனின் உடல்நலமே முக்கியம். சென்னை சென்றதும் ரஜினியை சந்திப்பேன்” என்றார்.

சென்னை வந்தவுடன் காலில் சிகிச்சை மேற்கொண்டதால் ஓய்வில் இருந்தார் கமல்.

இந்நிலையில் இன்று ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார் கமல்.

இருவரும் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ரஜினி உடல்நலம் குறித்து கேட்டுள்ளார் கமல்.

பின்னர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கமல் & ரஜினி் ஆலோசனை கண்டிப்பாக நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதால் அவரது ஆதரவை பெற பல கட்சிகள் முயன்று வருகின்றன.

எனவே கமலும் ரஜினியின் ஆதரவை கேட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

தன் திரையுலக ஆசான் கமலுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? என காத்திருந்து பார்ப்போம்..

Makkal Needhi Maiam’s Chief Kamal Haasan met his contemporary Rajinikanth in poes garden

rajini kamal (1)

ரா ரா சரசுக்கு ரா ரா.. நினைவிருக்கா..?; கலைமாமணி விருதால் சிவாங்கி குடும்பம் சிலிர்ப்பு..

ரா ரா சரசுக்கு ரா ரா.. நினைவிருக்கா..?; கலைமாமணி விருதால் சிவாங்கி குடும்பம் சிலிர்ப்பு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் சிவாங்கி.

தன் இனிமையான குரல் வளத்தாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமான இவர் வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் ‘டான்’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட ‘கலைமாமணி விருதால் சிவாங்கி மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.

என்னாது… சிவாங்கி-க்கு கலைமாமணி விருது? அப்படின்னு ஷாக்காக வேண்டாம்.

சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் என்பவர் ஒரு பிரபல கர்நாடக சங்கீத பாடகி் ஆவார்.

இவர் ரஜினி நடித்த ‘சந்திரமுகி’ படத்தில் இடம்பெற்ற ‘ரா ரா’ என்ற பாடலை பாடியவராவர்..

தற்போது பின்னிக்கும் அவரது கணவர் கிருஷ்ணகுமாருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

இதனை சிவாங்கியின் அம்மா பின்னி கிருஷ்ணகுமார் தனது இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார்.

இதனால் சிவாங்கியின் குடும்பமே மகிழ்ச்சியில் உள்ளதாம்.

Kalaimamani award for Shivangi family

சூர்யா & விஜய்சேதுபதி படங்களுடன் மோத தயாரான கொசு படம் ’The Mosquito Philosophy’

சூர்யா & விஜய்சேதுபதி படங்களுடன் மோத தயாரான கொசு படம் ’The Mosquito Philosophy’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Mosquito Philosophy.

தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது.

அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது.

தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது.

இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவே தமிழ் சினிமாவின் முதல் “Mumblecore ” என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் “Dogme 95 ” கோட்பாடு இயக்கத்தின் தாக்கம் இப்படத்தில் பெருமளவில் உள்ளது.

எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட “The Mosquito Philosophy” யில் Retakes என்று ஒரு விஷயம் இல்லவே இல்லை.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இணை தயாரிப்பாளருமான ஜதின் ஷங்கர் ராஜ், முன்னேற்பாடுகள் எதுவுமின்றி இருக்கும் சூழலையும் சுற்றுப்புற வெளிச்சங்களையும் மட்டுமே வைத்து இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார்.

மேலும் படத்தின் முதன்மை நடிகர் சுரேஷ் மற்றும் இயக்குநர் ஆகிய இருவரைத் தவிர மற்ற எந்த நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் இப்படத்தின் கதை தெரியாது. இவ்வாறு பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் உள்ளடக்கியது கொசுவின் தத்துவம்.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற “லென்ஸ்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் இரண்டாவது படம் தான் “The Mosquito Philosophy”.

இவர் தனது முதல் படத்திற்கு “சிறந்த அறிமுக இயக்குநர்” _க்கான கொல்லாபுடி சீனிவாஸ் விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது Netflix-யில் உலகளவில் லென்ஸ் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

Netflix -யில் ஓடிக்கொண்டிருக்கும் “ஓடு ராஜா ஓடு” நகைச்சுவை திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெதின் ஷங்கர் ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளர் டேனி சார்ல்ஸ் ஆவார்.

கன்னட திரையுலகை சேர்ந்த ஐயோ ராமா படத்தின் பின்னணி இசை அமைத்துள்ளார்.

பிப்ரவரி 23ம் தேதி மதியம் 3 மணிக்கு சத்யம் சினிமாஸ் Seasons திரை அரங்கில் “The Mosquito Philosophy” திரையிடப்படவுள்ளது.

The Mosquito Philosophy in race with Surya’s Soorarai Pottru & Vijay Sethupathi’s Ka Pae Ranasingam

Mosquito Philosophy

விஜய்சேதுபதியின் ‘உப்பெனா’ நாயகியை தமிழுக்கு கொண்டு வரும் லிங்குசாமி

விஜய்சேதுபதியின் ‘உப்பெனா’ நாயகியை தமிழுக்கு கொண்டு வரும் லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

uppena movie heroineவிஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்து அண்மையில் வெளியான படம் ‘உப்பெனா’

இதில் வைஷ்ணவ் தேவ், க்ருதி ஷெட்டி ஜோடியாக நடித்து இருந்தனர்.

கடந்த பிப்ரவரி12-ம் தேதி வெளியான இந்த படம் வசூலை குவிப்பதுடன் விஜய்சேதுபதிக்கும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

இதில் நாயகி க்ருதியின் தந்தையாக தான் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், லிங்குசாமி இயக்கவுள்ள தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் உப்பெனா நாயகி க்ருதி ஷெட்டி நடிக்கவிருக்கிறாராம்.

இதில் ராமிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Upeenna fame Krithi Shetty’s next tamil film

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு.. உன்ன சிக்க வைச்சி கொல்லுறேன்டி மயிலு..; பதற வைக்கும் ‘பஹீரா’

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு.. உன்ன சிக்க வைச்சி கொல்லுறேன்டி மயிலு..; பதற வைக்கும் ‘பஹீரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bagheera (2)ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹீரா’.

இந்த படத்தில் அமைரா தஸ்துர், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, சாக்க்ஷி அகர்வால், காயத்ரி சங்கர் உள்ளிட்ட நடிகைகள் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் இன்று பிப்ரவரி 19ல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பெண்களை வேட்டையாடும் சைக்கோ கொலையாளி வேடத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா.

இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முறையாக முகம் முழுவதும் ஷேவிங் செய்தும் மொட்டை அடித்தும் நெகட்டிவ் ரோலில் மிரட்டலாக நடித்துள்ளார் பிரபுதேவா.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு.. உன்ன சிக்க வைச்சி கொல்லுறேன்டி மயிலு என்ற டயலாக்கும் அதில் இறுதியாக இடம் பெற்றுள்ளது.

இதர தகவல்கள்…

#Bagheera​ Movie cast & crew:

Cast: Prabhu deva, Amyra dastur, Ramya nambeesan, Janani Iyer, Sanchita shetty, Gayathrie shankar, Sakshi agarwal, Sonia agarwal, Sai kumar, Nassar, Pragathi.

Writer & Director: Adhik Ravichandran

Production: Bharathan Pictures
Produced by R.V.Bharathan
Co-Producer by S.V.R Ravi Shankar
Music – Ganesan sekar
DOP – Selva Kumar SK, Abinandhan Ramanujam
Editor – Ruben
Art Director – Siva Yadav

Interesting facts on Bagheera teaser

More Articles
Follows