காதலர் தினத்தை குறிவைக்கும் ஜீவா-நிக்கி கல்ராணியின் கீ

காதலர் தினத்தை குறிவைக்கும் ஜீவா-நிக்கி கல்ராணியின் கீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva and Nikki Galrani starring Kee movie release updatesபுதுமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்துள்ள படம் ‘கீ’.

இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிஷ் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே அடுத்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Jiiva and Nikki Galrani starring Kee movie release updates

kee feb 9

அதிக விலைக்கு விற்பனையானது தானா சேர்ந்த கூட்டம் படம்

அதிக விலைக்கு விற்பனையானது தானா சேர்ந்த கூட்டம் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Thaana Serndha Kootam trade updates

சி3 படத்திற்கு பிறகு சூர்யா நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வருகிறது.

ரிலீசுக்கு 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை 86 கோடிக்கு ரூபாய்க்கு விலைபோயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேங் என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியாகிறது.

Suriya Thaana Serndha Kootam trade updates

அமிதாப்பச்சனை தமிழ் சினிமாவுக்கு அழைக்கும் சூர்யா-கேவி.ஆனந்த்

அமிதாப்பச்சனை தமிழ் சினிமாவுக்கு அழைக்கும் சூர்யா-கேவி.ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amitabh Bachchan likely to join with Suriya and KV Anand projectசூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் அடுத்த வாரம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இதில் சாய் பல்லவி, ரகுல்பிரித்தி சிங் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவின் 37வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கிறாராம்.

இவர் ஏற்கெனவே சூர்யா நடித்த ‘அயன், மாற்றான்’ படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இதுவரை நேரடி தமிழ் படங்களில் அமிதாப்பச்சன் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Amitabh Bachchan likely to join with Suriya and KV Anand project

உதயநிதி-தமன்னாவின் கண்ணே கலைமானே பட இசையமைப்பாளர்

உதயநிதி-தமன்னாவின் கண்ணே கலைமானே பட இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi stalin romance with Tamannah in Yuvan Shankar Raja musicஇப்படை வெல்லும், நிமிர் படங்களை தொடர்ந்து உதயநிதி தன் அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார்.

இப்படத்தில் தர்மதுரை படத்தில் இணைந்த இயக்குனர் சீனுராமசாமி, நடிகை தமன்னா, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர்.

இப்படத்திற்கு ‘கண்ணே கலைமானே’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவலை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம்.

இப்பட பாடல்களை வைரமுத்து எழுதுகிறார் என்பதை சீனுராமசாமி தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளராக ஜலந்தர் என்பவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழவைப்பேன் : ரஜினி

என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழவைப்பேன் : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I want give good life to TN peoples as they gave me says Rajini at Natchathira Vizha 2018மலேசியா நாட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அங்கு திரண்டுள்ளது.

இதனால் நேற்றும் இன்றும் எந்தவிதமான படப்பிடிப்புகளும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

இந்த கலை நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்படும் நிதி, நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் பேசும்போது…

நீங்கள் யாரிடம் க்ளீன் போல்ட் ஆகியிருக்கிறார்கள் என்று ரஜினியிடம் சுஹாசினி கேட்டார். அதற்கு ரஜினி யாரிடமும் இல்லை என்றார்.

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட்டில் என்னுடைய தற்போதை பேவரைட் தோனி. எப்போதும் பேவரைட் சச்சின் டெண்டுல்கர்தான்” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது…

நான் கபாலி சூட்டிங் சமயத்தில் மலேசியா வந்தேன். தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளேன்.

மலேசிய மக்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த நாடு என்னுடைய 2வது வீடு போன்றது.

உங்களுடன் நிறைய பேச வேண்டும். மற்றொரு முறை நிச்சயம் பேசுவேன்.

என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைப்பேன். அதுதான் என் ஆசை” என்று நெகிழ்ச்சியாக பேசினார் ரஜினிகாந்த்.

I want give good life to TN peoples as they gave me says Rajini at Natchathira Vizha 2018

விஜய் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா ஏஆர்.ரஹ்மான்.?

விஜய் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா ஏஆர்.ரஹ்மான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will AR Rahman fullfill Vijay fans dreamவிஜய்யின் 62வது படமாக உருவாகவுள்ள படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல்களை தயாரிப்பு நிறுவனமே உறுதிசெய்துள்ளது.

இப்படத்தில் விஜய் பாட வாய்ப்பு இருக்குமோ? என ரசிகர்கள் இப்போதே கேள்வி கேட்க தயாராகிவிட்டனர்.

அண்மையில் வெளியான தலைவா, புலி, தெறி, பைரவா உள்ளிட்ட படங்களில் விஜய் பாடியிருந்தார்.

ஆனால் ஏஆர். ரஹ்மான் இசையமைத்த மெர்சல் படத்தில் விஜய்யை பாட வைக்கவில்லை.

எனவே விஜய் ரசிகர்களின் ஆசையை இசைப்புயல் இந்த (விஜய் 62) படத்திலாவது நிறைவேற்றுவாரா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Will AR Rahman fullfill Vijay fans dream

More Articles
Follows