ரஜினி என்ற பல்கலைக்கழகத்தில் மாணவன் நான்.. – விஜய்சேதுபதி

ரஜினி என்ற பல்கலைக்கழகத்தில் மாணவன் நான்.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I wish to be a student in Rajinikanth University says Vijay Sethupathiகார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினியின் தலைவர் 165 படத்தில் நடித்துவருகிறார் விஜய்சேதுபதி.

பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் கடந்த ஒரு மாதமாக டார்ஜிலிங்கில் நடைபெற்றது.

இப்பட சூட்டிங்கை முடித்துவிட்டு ஓரிரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து 2ஆம் கட்ட சூட்டிங்கில் ரஜினியுடன் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்? என விஜய்சேதுபதியுடன் கேட்கப்பட்டதற்கு…

ரஜினியை ஒரு பல்கலைக்கழகமாக பார்க்கிறேன். அந்த பல்கலைக்கழகத்தில் மாணவனாக கற்றுக்கொள்ள ஆவலோடு இருக்கிறேன்.

அவரிடம் வீழ்ந்தாலும் எனக்கு பெருமையே. நான் சம்பாதித்தது போதும். நிறைவான வேடங்களில் நடிக்க தான் விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

I wish to be a student in Rajinikanth University says Vijay Sethupathi

சிவகார்த்திகேயனை அடுத்து ரஜினியுடன் இணையும் மலையாள நடிகர்

சிவகார்த்திகேயனை அடுத்து ரஜினியுடன் இணையும் மலையாள நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fahadh faasilகார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் தலைவர் 165 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசைமையத்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ரஜினியின் நண்பராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் அண்மையில் வெளியான வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுங்கா அப்டேட்ஸ்: மடோனாவை புகழ்ந்து தள்ளும் விஜய்சேதுபதி

ஜுங்கா அப்டேட்ஸ்: மடோனாவை புகழ்ந்து தள்ளும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi praises Madonna performance in Junga movieவிஜய்சேதுபதியும், அருண்பாண்டியனும் இணைந்து தயாரித்துள்ள படம் ’ஜுங்கா’.

கோகுல் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டியன், சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, சுரேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

வருகிற 27-ம் தேதி ‘ஜுங்கா’ ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு ‘ஜுங்கா’ படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது விஜய்சேதுபதி பேசினார். அவர் பேசியதாவது..

‘‘இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கொள்ள முடியும். இது தான் ‘ஜுங்கா’வில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம்.

‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் சரண்யா மேடத்துடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஒரு கேரக்டரை எப்படி மேம்படுத்தி நடிக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

இந்த படத்தில் சாயிஷா, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். இவர்களில் மடோனாவுக்கு காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும் அவருக்கு வழங்கிய கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.

நான் சந்தித்த நடிகைகளில் ஆகச்சிறந்த நடிகை மடோனா! இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பலமுறை சொல்லியிருக்கிறேன். காயத்ரிக்கு அடுத்து இப்போது மடோனாவை திறமையான நடிகை என்று சொல்கிறேன்!

‘ஆண்டவன் கட்டளை’க்கு பிறகு யோகி பாபுவுடன் இணைந்து நடிக்கும் படம் ‘ஜுங்கா’. படப்பிடிப்பு தளத்தில் அந்த நேரத்துக்கு என்ன பஞ்ச் பேசமுடியுமோ அதை பேசி அசத்துவார் ‘யோகி’ பாபு. இதில் நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம்.’’ என்றார் விஜய்சேதுபதி.

இந்த விழாவில் இயக்குநர் கோகுல் பேசுகையில்…
‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை.
இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம். படத்தை ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறோம். வெற்றிப் பெறும் என்று உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.’ என்றார்.
டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன்  கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
இறுதியாக தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
Vijay Sethupathi praises Madonna performance in Junga movie
2019-ல் கமலுடன் இணையும் நயன்தாரா 2018-ல் மோதுகிறார்

2019-ல் கமலுடன் இணையும் நயன்தாரா 2018-ல் மோதுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswaroopam 2 and Kolamaavu Kokila will clash on 10th August 2018ரஜினி, அஜித், விஜய், சூர்யா முதல் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி வரை அனைவருடன் ஜோடி போட்டு விட்டார் நயன்தாரா.

ஆனால் இதுவரை முன்னணி நடிகரான கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை.

இதற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் முதன்முறையாக கமலுடன் நடிக்கிறார் நயன்தாரா.

இப்பட சூட்டிங் ஆகஸ்ட் இறுதியில் துவங்கப்படலாம் எனத் தெரிகிறது.

எனவே இப்படம் அடுத்த 2019ல் வெளியாகும்.

இந்நிலையில் வருகிற 2018 ஆகஸ்ட் 10ல் கமலுடன் மோதவிருக்கிறார் நயன்தாரா.

அதாவது இவர்களின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி மோதவுள்ளன.

கமலின் விஸ்வரூபம் 2 மற்றும் நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் களத்திற்கு வருகின்றன.

Viswaroopam 2 and Kolamaavu Kokila will clash on 10th August 2018

ஹரீஷ் இயக்கும் படத்தில் இசையமைக்கும் அனிருத்-விவேக் மெர்வின்

ஹரீஷ் இயக்கும் படத்தில் இசையமைக்கும் அனிருத்-விவேக் மெர்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anirudh and Vivek Mervin to compose music for childrens adventureஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது, அந்த திரைப்படம் ரசிகர்களை குடும்பத்தோடு திரை அரங்கங்களுக்கு அழைக்கும் படமா? என்பதை பொறுத்து தான் என்கிறார் அறிமுக இயக்குனர் ஹரீஷ்.

குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகனின் வருகை தான் ஒரு இயக்குனருக்கு உண்மையான வெற்றி.

அறிமுக இயக்குனர் ஹரீஷ் ராம் இதுபோன்ற நம்பிக்கைகள் மற்றும் முயற்சிகளுடன் ‘நகைச்சுவை குடும்ப அட்வென்சர்’ என்ற வகையின் மூலம் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைக்கிறார்.

எதிர்நீச்சல், காக்கிசட்டை மற்றும் கொடி போன்ற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில் குமார் உடன் பயணித்தது, இவருக்கும் உலகளாவிய பார்வையாளர்களின் மீது அதிக அக்கறை காட்ட ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

ஒரு இணை இயக்குனரையும் தாண்டி, கொடி படத்தின் திரைக்கதை குழுவில் ஒரு பகுதியாக இருந்தார் ஹரீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் மற்றும் விவேக் மெர்வின் ஒன்றாக இந்த படத்துக்கு இசையமைப்பது மிகப்பெரிய பலமாக இருக்கும்.

வெற்றி பாடல்களை தொடர்ந்து கொடுக்கும் இந்த இரண்டு இசையமைப்பாளர்களும் ஒரே படத்திற்கு இசையமைப்பது நமக்கு கற்பனைக்கு எட்டாத உற்சாகத்தை அளிக்கிறது.

புதுமுகங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை நரேன் இளன் கையாள்கிறார்.

இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனிடன் உதவியாளாராக இருந்தவர்.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்களாக கலைவாணன் (எடிட்டர்), ஸ்டன்னர் சாம் (ஸ்டண்ட்ஸ்), ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் AR (வசனம்), வாசுகி பாஸ்கர் & பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), டி உதயகுமார் (ஆடியோகிராஃபி) ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

வில்லவன் கோத்தாய் ஜி (விஎஃப்எக்ஸ் கிரியேட்டிவ் டைரக்டர்), ஸ்ரீ ரங்கராஜ் ஜே (விஎஃப்எக்ஸ் இயக்குநர்) மற்றும் சந்திரமோகன் ஜே (விஎஃப்எக்ஸ் தயாரிப்பாளர்) என விரிவுபடுத்தப்பட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் குழு மேலும் உற்சாகமளிக்கிறது.

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP சார்பில் கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2018ல் துவங்க இருக்கிறது.

Anirudh and Vivek Mervin to compose music for childrens adventure

இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள *ஒண்டிக்கட்ட* ஜூலை 20ல் ரிலீஸ்

இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள *ஒண்டிக்கட்ட* ஜூலை 20ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer Bharani turns director with Ondikatta Movie release on 20th Julyபிரண்ட்ஸ் சினி மீடியா என்ற பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ஒண்டிக்கட்ட“ என்று பெயரிட்டுள்ளனர்.

தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.

தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஆலிவர் டெனி /
இசை – பரணி /
பாடல்கள் – கபிலன், பரணி, தர்மா /
எடிட்டிங் – விதுஜீவா /
நடனம் – சிவசங்கர், தினா, ராதிகா
ஸ்டன்ட் – குபேந்திரன் /
கலை – ராம் / தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
தயாரிப்பு – மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி

எழுதி இயக்கி இருப்பவர் இசையமைப்பாளர் பரணி.

படம் உலகம் முழுவதும் வருகிற 20 ம் தேதி வெளியாகிறது.

Music Composer Bharani turns director with Ondikatta Movie release on 20th July

More Articles
Follows