நான்கு இந்திய மொழிகளில் ஓடிடி-யிலும் ரிலீசாகும் GODZILLA Vs KONG

நான்கு இந்திய மொழிகளில் ஓடிடி-யிலும் ரிலீசாகும் GODZILLA Vs KONG

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GODZILLA Vs KONG (2)உலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “GODZILLA VS KONG”.

இந்த படம் விரைவில் ரிலீசாகும் என அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்பட ரிலீஸ் குறித்து டிவீட்டரில் வார்னர் பிரதர்ஸ் பதிவிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசரையும் பகிர்ந்திருந்தது அந்த நிறுவனம்.

இந்த திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமின்றி HBO Max என்ற ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளதாம்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

மார்ச் இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.

GODZILLA Vs KONG release details in india

#GoBackModi என பதிவிட்ட ஓவியா மீது சைபர் கிரைமில் புகார்..; மீண்டும் மரண அடி பதிலடி கொடுத்த ஓவியா

#GoBackModi என பதிவிட்ட ஓவியா மீது சைபர் கிரைமில் புகார்..; மீண்டும் மரண அடி பதிலடி கொடுத்த ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya (2)கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் #GoBackModi என ட்விட்டரில் பதிவிட்டனர்.

பிப்ரவரி 13-ம் தேதியே நடிகை ஓவியா #GoBackModi கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டார்.

அந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ஓவியா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸிஸ் சுதாகர் சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.

“பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தூண்டிவிடும் செயலில் நடிகை ஓவியா ஈடுபடுவதாகவும், இறையாண்மையை கெடுக்கும் வகையில் நடிகை ஓவியா செயல்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்து இருந்தார்.

தற்போது இதற்கு மரண அடி பதிலாக மீண்டும் 2 வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஜெய்ஹிந்த், கருத்து சுதந்திரம் (freedomofthoughts)’ என தன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே ஓபன் டைப் ஓவியா என பெயரெடுத்த நடிகை ஆச்சே இவர்.. இப்போ சும்மா விடுவாரா..??

Actress Oviya’s reply to her haters

16 வயசுப் பையன் கேரக்டருக்காக 40 கிலோ குறைத்த நடிகர்..; அர்ஜூன் மாமா ஆசியுடன் துருவா அறிமுகம்

16 வயசுப் பையன் கேரக்டருக்காக 40 கிலோ குறைத்த நடிகர்..; அர்ஜூன் மாமா ஆசியுடன் துருவா அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா.

வரும் பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு (17.2.2021) இன்று சென்னையில் நடந்தது.

சந்திப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, படத்தின் கதையாசிரியர் அருண் பாலாஜி, தயாரிப்பாளர் எஸ்.சிவா அர்ஜூன் படத்தை தமிழில் வெளியிடுகிற ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆக்ஷன் கிங் அர்ஜூன் பேசும்போது, ”துருவா என் தங்கச்சியோட மகன். முறைக்குதான் அவர் எனக்கு மருமகனே தவிர, அவரும் எனக்கு மகன் மாதிரிதான்.

துருவாவோட, அண்ணன் சிரஞ்சீவி சர்ஜா. அவருக்கு நடிக்க வர்றதுல ஆர்வம் இருந்துச்சு. அதுக்கேத்தபடி அவரை உடற்திறன், கராத்தே, பாக்ஸிங், பாம்பேல நடிப்புப் பயிற்சின்னு நல்லா டிரெய்ன் பண்ணேன். ஆனா அவர் எங்களை விட்டுப் போய்ட்டார்ங்கிறது வேதனையான விஷயம்.

சிரஞ்சீவிக்கு பயிற்சி கொடுத்துக்கிட்டிருந்த காலகட்டத்துல, துருவா தனக்கும் நடிக்க ஆர்வம் இருக்குன்னு வந்தார். அதுவும் ஹீரோவா நடிக்கணும்கிற ஆர்வத்தோட வந்தார். ஹீரோவாகுறதுக்கு முன்னே நடிகன் ஆகணும். ஆனா, அதெல்லாம் சுலபம் இல்லை.

நீ சின்னப்பையன். இப்போ இதெல்லாம் வேண்டாம்’னு அட்வைஸ் பண்ணேன். அதையெல்லாம் தாண்டி அவர் யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்காம தனக்குத்தானே குருவா இருந்து, தானே ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி, தானே டைரக்ட் பண்ணி, நடிச்சு ஒரு சி.டி.யில பதிவு பண்ணி கொண்டு வந்தார். பார்த்து அசந்துபோனேன்.

அவர், ஃபீல்டுக்குள்ள வந்து படங்கள் நடிச்சு பெயரைச் சம்பாதிச்சது அப்படித்தான். ஏழு வருஷத்துல மூன்று படங்கள்தான் நடிச்சிருக்கார். அத்தனையும் ஹிட்.

நிறைய படங்கள் நடிக்கணும்கிறதை விட நல்ல படங்கள் நடிக்கணும்கிறதுல உறுதியா இருக்கார். பணம் சம்பாதிக்கிறதைவிட பெயரைச் சம்பாதிக்கணும்கிற எண்ணம் இருக்கு.

அதுக்காக ரொம்பவே அர்ப்பணிப்போட ஒவ்வொரு விஷயத்தையும் பண்றார்.

இந்த செம திமிரு படமும் அவருக்கு பெரியளவுல பெயர் வாங்கிக் கொடுக்கப் போற படமா இருக்கும். இந்த படத்துக்காக இரண்டரை வருஷம் கடுமையா உழைச்சிருக்கார்.

படத்துல 16 வயசுப் பையன், நல்லா வளர்ந்த இளைஞன்னு ரெண்டு விதமா வர்றார். சிறுவயது தோற்றத்துல நடிக்கிறதுக்காக 40 கிலோவரை எடை குறைச்சார்.

அந்தளவு நடிப்பு மேல ஈடுபாடு. படத்துல சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடின்னு எல்லாம் இருக்கும். ஆக்ஷன் ரொம்பவே தூக்கலா இருக்கும்.

படத்தோட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சில சர்வதேச ‘பாடி பில்டர்ஸ்’ நாலு பேர் நடிச்சிருக்காங்க. அந்த காட்சிகள் படு அசத்தலா, ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும்” என்றார்.

துருவா சர்ஜா பேசும்போது…

”அர்ஜுன் மாமாவோட வழிகாட்டலோடத்தான் நான் என்னோட ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வைக்கிறேன். மாமா எனக்கு பொய் சொல்லக்கூடாதுங்கிற அட்வைஸ்ல ஆரம்பிச்சு, இந்த ஃபீல்டுல நிலைச்சு நிக்கணும்னா எதையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லிக் கொடுத்தார்.

இந்த படத்துல என்னோட முரட்டுத்தனமான தோற்றத்தை பார்த்து புகழுறாங்க. ஆனா, அர்ஜூன் மாமாவோட ஒப்பிட்டா நான் ஒண்ணுமேயில்லை.

படத்துல என்னோட டான்ஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு தெரியுது. படத்துக்காக நான் டான்ஸ் கத்துக்கலை.

அதுக்குப் பதிலா ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டு ஆடியிருக்கேன். எல்லாத்தையும்விட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ரொம்பவே ரசிப்பீங்க” என்றார்.

படத்தில், சர்வதேச உடற்திறன் சாம்பியன்கள் கைக்ரீன் (Kai green), மோர்கன் அஸ்தே (Morgan Aste), ஜான் லூகாஸ் (John Lucas), ஜோய்லிண்டர் (Joe linder) என நான்கு பேர் நடித்துள்ளனர்.

அவர்களில் ஜான் லூகாஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ”பாரம்பரியத்துக்கும் கலாசாரத்துக்கும் பேர்போன இந்தியாவுக்கு வந்தது, இந்தியப் படத்துல நடிச்சது பெருமையா இருக்கு” என்றார்.

இந்த படத்தை ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ T.முருகானந்தம் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்.

இப்படத்தை பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரித்துள்ளனர். ஓளிப்பதிவை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் கையாண்டுள்ளார், இசை சந்தன் ஷெட்டி.

Dhruva Sarja speech at Sema Thimiru press meet

விஜய்ன்னாலே வெற்றிதான்..; -‘வா பகண்டையா’ இசை விழாவில் பேரரசு பேச்சு

விஜய்ன்னாலே வெற்றிதான்..; -‘வா பகண்டையா’ இசை விழாவில் பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார். அவர் சில வருடங்களுக்குப் பிறகு மனதுக்கு இனிய பாடல்களைக் கொடுத்திருக்கும் படம் ‘வா பகண்டையா.’

உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இந்த படத்துக்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதி, இயக்கி, தனது ‘ஒளி ரெவிலேஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்தும் இருக்கிறார் ப.ஜெயகுமார்.

புதுமுக நடிகர்கள் விஜய தினேஷ் ஹீரோவாகவும், நிழன் வில்லனாகவும், அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில், ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள யோகி ராம் இன்னொரு வில்லனாக நடிக்கிறார்.

இவர்களோடு ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ நிதிஷ் வீரா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், மனோபாலா, ‘காதல்’ சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கதை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பகண்டையா என்ற கிராமத்தில் நடப்பதுபோல் அமைந்துள்ளதாம். தலைப்புக்கு அர்த்தம் புரிந்திருக்குமே…

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா 17.2.2021 அன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

விழாவில் நாயகன், நாயகி, வில்லன் , இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி ராமசாமி, ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் விக்ரமன், இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் தினா, ‘ஸ்டண்ட் யூனியன்’ தலைவர் தவசி ராஜ், பி.ஆர்.ஓ. சங்கத் தலைவர் விஜயமுரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநரும், ‘பெப்சி’ அமைப்பின் தலைவருமான ஆர்.கே. செல்வமணி பேசும்போது…

”முப்பது வருஷத்துக்கு முன்னே நான் இயக்கிய ‘புலன் விசாரணை’ படம் ரிலீஸானப்போ என்னால தியேட்டருக்குள்ளே போக முடியலை. அப்படியொரு கூட்டம்.

அந்தளவு கூட்டத்தை இன்னைக்கு இந்த விழாவுல பார்க்க முடியுது. எப்படி புலன் விசாரணை 100 நாள் ஓடி வெற்றி பெற்றுச்சோ அப்படி இந்த படமும் பெரியளவுல வெற்றி பெறணும்னு வாழ்த்தறேன்.

புலன் விசாரணையில எப்படி விஜய்காந்தோ அதே பழைய விஜய்காந்த் மாதிரி இந்த படத்தோட ஹீரோ தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருக்கார். ஒரு தமிழ்ப் பொண்ணை ஹீரோயினா அறிமுகப்படுத்திருக்காங்க. அதையெல்லாம் வெச்சுப் பார்க்கிறப்போ நல்ல தமிழ்ப் படமா வந்திருக்கும்கிற நம்பிக்கை வருது.

டிரெய்லர் பார்க்கிறப்போ, படம் சமூக அக்கறையை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்குன்னு புரிஞ்ச்சுக்க முடிஞ்சுது. இனத்தால, மதத்தால நாட்டை துண்டாடுறவங்களுக்கு எதிரான வசனமும் இருக்கு. அது எல்லாமே சரியானதுதான். அந்த வகையில இயக்குநர் நல்ல படத்தை எடுத்திருக்கார்” என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது…

”என்னோட படங்களுக்கு ஊர் பெயர்களைத்தான் தலைப்பா வைப்பேன். அதே மாதிரி இந்த படத்தோட இயக்குநர் அவரோட பகண்டையா’ங்ககிற ஊர்ப் பெயரை தலைப்பா வெச்சிருக்கார்.

இயக்குநருக்கு ஊர்ப்பற்று மட்டுமில்லை; தேசப்பற்றும் இருக்கு. அதனாலதான், நாட்டுல இன உணர்வைத் தூண்டி, மத உணர்வைத் தூண்டி ஆதாயம் பார்க்க, அரசியல் பண்ணா நினைக்கிறவங்களை செருப்பால அடிக்கிற மாதிரி வசனம் வெச்சிருக்கார்.

யாருக்கு ஊர்ப்பற்றும் தேசப்பற்றும் இருக்கோ அவங்க நல்ல கலைஞன். அவங்கதான் உண்மையான மனிதன். அப்படி பார்க்கிறப்போ இந்த படத்தோட இயக்குநரை உண்மையான மனிதன்னு சொல்லலாம்.

டிரெய்லர் பார்த்தப்போ ‘சாதிங்கிறது மாம்பழக் கொட்டைக்குள்ள இருக்கிற வண்டு மாதிரி’ன்னு ஒரு வசனம் வந்துச்சு. மாம்பழத்தை ஏன் இழுத்திருக்கார்னு படத்தை பார்த்தாதான் புரியும். பார்க்கணும்.

அடுத்ததா, படத்தோட ஹீரோ பேரு விஜய தினேஷாம். விஜய்ன்னாலே வெற்றிதான். ஹீரோவை பார்த்து ஆர்.கே. செல்வமணி, விஜய்காந்தை பார்த்த மாதிரி இருக்குன்னார். விஜய்காந்தை மட்டுமில்லை; விஜய்ய பார்த்த மாதிரியும் இருக்கார்” என்று படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கும்படி சிலாகித்துப் பாராட்டினார்.

இயக்குநர் விக்ரமன் பேசும்போது…

”என்னோட பல படங்களுக்கு இசையமைச்ச நண்பர் எஸ்.ஏ. ராஜ்குமார் இந்த படத்துக்கு இசையமைச்சிருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. சமூக அக்கறையை மையமா வெச்சு உருவாகியிருக்கிற இந்த படத்தோட ஒரு பாட்டுல ‘தமிழர்களோட சினத்தால் தனி ஈழம் உருவெடுக்கும்’கிற மாதிரி ஒரு வரி வருது.

இயக்குநரோட அந்த கனவு நனவாகணும். அதுதான் நம் எல்லோருடைய விருப்பமும் ஆசையும்கூட” என பெருமிதப்பட்டார்.

இசையமைப்பாளர் தினா பேசும்போது, ”இந்த நிகழ்ச்சில கலந்துக்கிட்டிருக்கிற, இயக்குநரோட சொந்த ஊரான விழுப்புரத்துல இருந்து வந்திருக்கிற ரசிகர்களோட உற்சாகத்தைப் பார்த்தா படம் விழுப்புரத்துல 175 நாள் ஓடி வெள்ளிவிழா காணும்கிறது உறுதியா தெரியுது.

அங்கே மட்டுமில்லாம் எல்லா இடத்துலயும் படம் பெருசா ஓட ரசிகர்கள் ஆதரவு தரணும்” என்றார்.

எஸ்.பி.பி. பாடிய பாடல் இடம்பெற்ற கடைசித் திரைப்படம் என்ற பெருமை பெற்றுள்ள இந்த படத்துக்கு, ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

Director Perarasu speech at Vaa Bagandaiya audio launch

தன் தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை பற்றி புதுச்சேரியில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு

தன் தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை பற்றி புதுச்சேரியில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி அவர்கள் ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வந்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்றால் ராகுல் காந்தி.

அப்போது மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி…

“உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வியை கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி…

“எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிளந்தது போல் இருந்தது.

உங்களில் யாரேனும் தந்தையை இழந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும்.

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை“ என தெரிவித்தார் ராகுல் காந்தி.

Rahul Gandhi talks about his father’s death

ராம் இயக்கத்தில் யுவன் இசையில் நடிகர் சிம்பு..?

ராம் இயக்கத்தில் யுவன் இசையில் நடிகர் சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதனையடுத்து ‘பத்து தல’ படம் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்த நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

STR’s next with Director Ram ?

STR Yuvan Ram

More Articles
Follows