மறைந்த நடிகை சித்ராவின் கடைசிப் படம்..; இலவசமாக சினிமா பார்க்க அழைக்கும் ‘கால்ஸ்’

மறைந்த நடிகை சித்ராவின் கடைசிப் படம்..; இலவசமாக சினிமா பார்க்க அழைக்கும் ‘கால்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ்.

இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

இது வெளியான இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அப்படத்தின் “காலங்கள் கரைகிறதே” எனும் பாடல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

அதுவும் வெளிவந்த இரண்டே தினங்களில் தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் #4 ல் உள்ளது.

மக்கள் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடங்கி தற்போது வெளியிட்ட பாடல் வரை மகத்தான ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இப்படம் வரும் 26 ஆம் தேதியன்று இன்று திரைக்கு வருகிறது.

இப்படக்குழு மக்களிடம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் மறைந்த நடிகை சித்ராவிற்காகவும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் இயக்குனர் திரு. சபரிஷ் அவர்கள் பேசுகையில்…

வி. ஜே சித்ராவின் மரணத்திற்கு பிறகும் மக்கள் அவர் மீதும் அவர் படத்தின் மீதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர்.

அனைவரும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் மற்றும் இப்படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் வசிக்கும் பெண்கள் மட்டும் இந்த படத்தை இலவசமாக பார்க்கலாம் என ‘கால்ஸ்’ படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சென்னை தியேட்டர்களில் இலவசமாக பார்க்க… விபரங்களுக்கு….9176 38 2842

Free tickets for Chithra’s calls in chennai theatres

chithra calls

மீண்டும் மீண்டும் சிம்பு படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த கௌதம் மேனன்

மீண்டும் மீண்டும் சிம்பு படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.

கமல், சூர்யா, அஜித், தனுஷ் உள்ளிட்ட பல ஹீரோக்களை கௌதம் மேனன் இயக்கியிருந்தாலும் தனக்கு இயக்க பிடித்த ஹீரோ சிம்பு தான் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் சிம்பு-கெளதம் மேனன் கூட்டணியை 3வது முறையாக வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இணைத்துள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், பிப்ரவரி 25ல் இயக்குநர் கெளதம் மேனன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு “நதிகளிலே நீராடும் சூரியன்” என அறிவித்துள்ளனர்.

இது அழகான தமிழ் பெயர் என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

STR – Gautham Menon next film title revealed

Nadhigalilae Neeradum Suriyan

EvFWwXxXYAQKPDk

BREAKING இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

BREAKING இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tha Pandiyan (1)இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று பிப்ரவரி 26ல் காலமானார். அவருக்கு வயது 88.

வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக தா.பாண்டியனின் உடல்நிலை மோசமடைந்ததால், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.

செயற்கை சுவாசக் கருவியுடன் தா.பாண்டியனுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தா. பாண்டியன் காலமானார்.

Communist leader Tha. Pandiyan passed away

ஓடிடி பேஸ்புக் ட்விட்டர் தளங்களுக்கு கட்டுப்பாடு..: சர்ச்சைகளுக்கு 36 மணி நேர கெடு.. மத்திய அரசு அதிரடி

ஓடிடி பேஸ்புக் ட்விட்டர் தளங்களுக்கு கட்டுப்பாடு..: சர்ச்சைகளுக்கு 36 மணி நேர கெடு.. மத்திய அரசு அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் ஊடகங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஒடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு.

புகார் அளித்த 36 மணி நேரத்தில் ஆபாச படங்களை சமூக வலைதளங்கள் நீக்க வேண்டும்.

*அரசு, நீதிமன்றங்கள் தகவல்களை கேட்டால் சமூக வலைதளங்கள் தர வேண்டும்.

வன்முறை தூண்டும் விதமான கருத்துகளை தணிக்கை செய்யவும் மத்திய அரசு முடிவு.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்…

*ஓடிடி தளங்களா அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் பல்வேறு வயதுள்ள வாடிக்கையாளர்களை மனதில் வைத்து வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஓடிடி தளங்கள் தங்கள் நிகழ்ச்சிகளை 5 பிரிவுகளாக பிரிக்க வேண்டும்.

அனைவரும் பார்க்ககூடிய நிகழ்ச்சிகள், 7 வயதுக்குள்ளானவர்கள், 13 வயதுக்கு மேலானவர்கள், 16 வயதுக்குள்ளானவர்கள், பதின் பருவத்தினர் என பிரிக்க வேண்டும்.

Govt Launches New Classification For OTT Platforms in India

நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற தல அஜித்..; வைரலாகும் போட்டோஸ்..!

நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற தல அஜித்..; வைரலாகும் போட்டோஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மட்டுமின்றி சூட்டிங் ட்ரோன் தயாரித்தல், துப்பாக்கி சுடுதல், குக்கிங், கார் ரேஸ், பைக் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித்.

தற்போது சைக்கிள் பயணத்திலும் தீவிரம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்துக்கு அஜித் வந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அஜித் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Thala Cycling photos goes viral

Thalapathy 65 Pan India Movie..? மாநிலத்தில் நேசிக்கப்படும் அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணம்..: தளபதி 65 அப்டேட்ஸ்

Thalapathy 65 Pan India Movie..? மாநிலத்தில் நேசிக்கப்படும் அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணம்..: தளபதி 65 அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘தளபதி 65’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சண்டை இயக்குநர்களாக அண்பறிவ் பணியாற்றுவதாக தகவல் வெளியானது.

கே.ஜி.எப் 1 மற்றும் 2-ல் ஸ்டண்ட் டைரக்டர்களாக இவர்கள் பணியாற்றியுள்ளனர்

இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்திருப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸா தெரிவித்துள்ளார்.

இது குறித்த ட்விட்டரில், “மாநிலத்தில் நேசிக்கப்படும் இந்த அற்புத மனிதருடன் மீண்டும் ஒரு பயணத்தை தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

விரைவில் முழு தேசமும் அவரை நேசிக்கும். ’நண்பனை’ விட்டுச் சென்ற இடத்திலிருந்து மீண்டும் வேலை செய்ய காத்திருக்கிறேன். தளபதி 65 ஒரு பான் இந்தியா படமாக இருக்கும்! எல்லோரும் தயாராகுங்கள்…” எனத் தெரிவித்துள்ளார்.

Thalapathy 65 will also be a Pan-Indian movie ?

More Articles
Follows