தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ள டான்போஸ்கோ, “7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் மூலம் இயக்குநராக தடம் பதிக்க வருகிறார்.
இப்படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார்.
ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.
“7 ஸ்டார் – இது புன்னை நகர் அணி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘புரட்சி இயக்குநர்’ எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ‘ஜனரஞ்சக இயக்குநர்’ எஸ்.ஆர்.பிரபாகரன் வெளியிட்டனர்.
Directors SAC and Prabhakaran released first look poster of 7 Star Idhu Punnai Nagar Ani movie