தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் 60 நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது…
நான் படிக்கும் காலம் முதலே கமல் ரசிகன் தான். அவர் மாதிரி நடிக்க முயற்சித்துள்ளேன். நடிகராகவும் ஆசைப்பட்டேன்.
நான் இயக்கிய படங்களிலேயே இந்தியன் படம் தான் பெஸ்ட் என பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
தன் உடம்பையும் நடிக்க வைத்திருக்கிறார். மீண்டும் சேனாதிபாதி வருவார். 360 டிகிரியில் தன் நடிப்பை கொடுத்துள்ளார்.
இந்தியன் 2 படத்தில் குஜராத்தி மொழி பேசி நடித்துள்ளார் கமல். (உடனே கமல் அந்த பட டயலாக்கை மேடையில் பேசி காட்டினார்).
கமல் ஒரு முழுமையான நடிகர். அவர் ஒரு குறிஞ்சி பூ மற்றும் அத்தி வரதரை போன்றவர்” என்றார்.
கடவுளை வணங்காதவர். கடவுள் இருந்தா நல்லா இருக்கும்ல என அடிக்கடி கூறுபவர் கமல். அவரை ஷங்கர் இவ்வாறு ஒப்பிட்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Director Shankar compared Actor Kamal with God Athivaradhar