பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டு பொங்கிய ரஞ்சித்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டு பொங்கிய ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ranjith condemns Pollachi rape caseபொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாஃபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் டுவீட்டிலிருப்பதாவது,

“பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்..

நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும்.

நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.

ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்ப்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

Director Ranjith condemns Pollachi rape case

ரிசார்ட்டில் 200 பெண்களுடன் யோகிபாபு விடிய விடிய லூட்டி

ரிசார்ட்டில் 200 பெண்களுடன் யோகிபாபு விடிய விடிய லூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yogi Babu and Yaashika Anand Became Zombiesஎஸ் 3 பிக்ச்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் திரைப்படம் ஜாம்பி.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்போது இரண்டாம் கட்ட பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும்.

தற்போது யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் பலர் பங்கேற்கும் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் ரிசார்ட்டில் நடைபெறுவது போல தான் படத்தில் அதிமாக காட்சிகள் இடம்பெறுகிறது. ஆதலால் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு நேரத்தில் பிரபல வி.ஜி.பி போன்ற ரிசார்ட்களில் வைத்து தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வி.ஜி.பி ரிசார்ட்டில் 200 இளம் பெண்கள் மற்றும் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், கார்த்திக், பிஜிலி ரமேஷ், சித்ரா அக்கா உள்ளிட்ட இன்டர்நெட் பிரபலங்கள் ஒன்றாக பங்கேற்ற பிரமாண்டமான காட்சி படமாக்கப்பட்டது.

ஜாம்பிகள் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் சந்திக்கும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி அது. இந்த படத்தின் ஹைலைட்டான காட்சியும் கூட அதை இயக்குனர் ஹீலியம் விளக்கொளியில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.

சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள ஈசிஆர் சாலையில் பயணிக்கும் இப்படத்தின் கதை ஒரு நாள், ஓர் இரவில் நடப்பது போல் உருவாகியுள்ளது.

வேகமாக உருவாகிவரும் ஜாம்பி படத்தை படக்குழுவினர் சம்மர் ரிலீசாக வெளியிடவுள்ளனர்.

புவன் நல்லன் இயக்கும் இப்படத்துக்கு இசை பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

Yogi Babu and Yaashika Anand Became Zombies

கிரிக்கெட்டே இல்லாத படத்தில் ‘சிக்சர்’ அடிக்கும் வைபவ்

கிரிக்கெட்டே இல்லாத படத்தில் ‘சிக்சர்’ அடிக்கும் வைபவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vaibhav and Pallak Lalwani pair up for Sixer movieசிக்ஸர் என்பது கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்தில் எடுக்கப்படும் அதிகபட்ச ரன் அதாவது 6 ரன்கள் எடுப்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதுகிறோம்.

அதை மனதில் வைத்து வைபவ் நடிக்கும் படத்துக்கு சிக்ஸர் என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள் வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன். அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கும் இந்த படம் மிக விரைவாக படப்பிடிப்பை முடித்திருக்கிறது.

“சிக்ஸர் தான் தலைப்பு என்றாலும் இந்த படத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ‘6’ சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

பல புள்ளிகளை இது இணைக்கிறது. இந்த கதைக்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் கொண்ட, அதை திறம்பட செய்யும் வைபவ் மிக பொருத்தமாக இருந்தார்.

பல்லக் லால்வானி நாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நல்ல துடிப்பான இளைஞர்கள் குழு, கதையிலும், மிகச்சிறப்பாக படத்தை முடிக்கவும் உறுதுணையாக இருந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன.

கோடை விடுமுறையின் இரண்டாம் பாதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறோம். தலைப்புக்கு ஏற்றவாறே நாங்கள் சிக்ஸர் அடிக்க முயற்சித்திருக்கிறோம்.

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் சார் இந்த படத்தை வணிக அளவில் கொண்டு சேர்க்க மிகவும் உறுதுணையாக இருக்கிறார், அவருக்கு எங்கள் நன்றி” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர்.

Vaibhav and Pallak Lalwani pair up for Sixer movie

விஜய்சேதுபதி எடுத்துக் கொடுத்த ‘ஒத்த செருப்பு’டன் வரும் பார்த்திபன்

விஜய்சேதுபதி எடுத்துக் கொடுத்த ‘ஒத்த செருப்பு’டன் வரும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthibans next titled Oththa Serupu First look released by Vijay Sethupathiபுதிய பாதை படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் இயக்குனராக அவதாரம் எடுத்தவர்.

இதற்கு முன் பல படங்களில் அவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படமே அவருக்கு ஒரு அடையாளத்தை பெற்றுத் தந்தது.

அதன்பின்னர் படங்களை தயாரிக்கவும் செய்தார். சில காலம் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்த படத்திற்கு ஒத்த செருப்பு என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இதில், பார்த்திபன் தனது முகத்தை மூடிக்கொண்டு, தலையில் தலைப்பாகை அணிந்தபடி இருக்கும் போஸ்டர் இடம் பெற்றுள்ளது.

காலா பட புகழ் சந்தோஷ் நாராயணன் இசையமக்க, ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Parthibans next titled Oththa Serupu First look released by Vijay Sethupathi

RGB 4K லேசர் ப்ரக்ஜக்சன் தியேட்டரை திறந்து வைத்த ஜிவி பிரகாஷ்-ஹரிஷ் கல்யாண்

RGB 4K லேசர் ப்ரக்ஜக்சன் தியேட்டரை திறந்து வைத்த ஜிவி பிரகாஷ்-ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Harish Kalyan inaugurate RGB 4K LASER PROJECTION at Sivasakthi Cinemasசென்னை பாடியில் நல்ல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் திரையரங்கம் சிவசக்தி சினிமாஸ். தற்போது மேலும் அதிநவீன தொழில்நுட்பமான RGB Laser தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறது.

இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கும் 3வது திரையரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

மேலும் லேசர் தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்ட குப்பத்து ராஜா, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் ட்ரைலர்களை பார்த்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பல வகையான ப்ரஜக்‌ஷன்களை பார்த்திருக்கிறோம், இங்கு புது வகையான ஒரு லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் படூர் ரமேஷ். அவர் தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக மாறிக் கொண்டிருக்கிறார். பல தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்.

இதில் படங்கள் மிக துல்லியமாக தெரிகிறது என்றார் ரோகிணி பன்னீர் செல்வம்.

இந்த திரையரங்கில் பொறுத்தியிருப்பது லேசர் ப்ரொஜெக்டர். க்ரிஷ்டி RGB லேசர் ப்ரொஜெக்டரான இதை முதலில் வெற்றி திரையரங்கில் தான் பொறுத்தினோம். மக்கள் நல்ல வரவேற்வை அளித்தார்கள்.

இந்த புரொஜெக்டர் விலை மிகவும் அதிகம், ஆனாலும் படூர் ரமேஷ் அண்ணன் இந்த பகுதி மக்களுக்காக இதை செய்ய முன்வந்திருக்கிறார்.

மக்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை கொடுக்கும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது. நாங்கள் மலேசியாவில் நல்ல சேவையை செய்து வருகிறோம், இந்தியாவிலும் எங்கள் சேவையை தொடர இருக்கிறோம். எல்லா திரையரங்க உரிமையாளர்களும் எங்களுக்கு நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள் என்றார் TSR Films டத்தோ ராமசாமி.

தமிழ் சினிமா எப்போதும் புது தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. 2கே, டால்பி அட்மாஸ், 4கே தொழில்நுட்பங்களை தொடர்ந்து இப்போது லேசர் 4கே தொழில்நுட்பத்தை அமல்படுத்தியிருகிறார்கள்.

ரசிகர்கள் மகிழ்ச்சியாக, நல்ல அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய செலவு செய்த ரமேஷ் சாருக்கு நன்றி என்றார் டால்பி இந்தியா ராஜ் வர்தாக்.

ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் இங்கு வந்திருக்கிறோம். கிட்டதட்ட 1.5 கோடி ரூபாய் செலவு செய்து, ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க பெரிய முயற்சியை செய்திருக்கிறார்கள்.

இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் அமல்படுத்தியிருக்கும் 3வது திரையரங்கு என்று சொன்னார்கள், அதிர்ஷ்டவசமாக 3 திரையரங்கங்களும் நம் தமிழ்நாட்டில் அதுவும் சென்னையில் இருப்பது நமக்கு பெருமை. அடுத்த வாரம் இந்த திரையங்கில் என் படமும் வெளியாக இருக்கிறது, அதை உங்களோடு சேர்ந்து பார்க்க நானும் ஆவலாக இருக்கிறேன் என்றார் ஹரீஷ் கல்யாண்.

இந்த திரையரங்கிற்கு முதன்முறையாக வருகிறேன், மிகச்சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். இங்கு வந்து இந்த ஏரியா லோக்கல் பசங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. குப்பத்து ராஜா டீசர் நேற்று தான் வெளியானது. அதை ரசிகர்களுடன் இணைந்து இன்று பார்ப்பது மகிழ்ச்சி.

திரையரங்கு உரிமையாளர்கள் நன்றாக இருந்தால் தான் நாங்களும், சினிமாவும் நன்றாக இருக்க முடியும். அடுத்த வாரம் வெளியாகும் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்துக்கும் வாழ்த்துக்கள் என்றார் ஜிவி பிரகாஷ் குமார்.

இந்த நிகழ்வில் இளம்பூரணன் சேகர், டதின் இந்திரா, வெங்கட்ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

GV Prakash and Harish Kalyan inaugurate RGB 4K LASER PROJECTION at Sivasakthi Cinemas

ஆணவப் படுகொலைகளை அழிக்க வரும் ஜீன்ஸ்காந்தின் ‘ஆத்தா’

ஆணவப் படுகொலைகளை அழிக்க வரும் ஜீன்ஸ்காந்தின் ‘ஆத்தா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Jeanskanths Aathaa movie deals with honour killingsஒரு தாய் தனது மகனுக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்து விதவையாக வாழும் வாழ்க்கைதான் ‘ஆத்தா ‘படத்தின் கதை.

ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர சாதி மதத்தோடு பார்க்க கூடாது .சாதி ஒரு மனிதனின் அடையாளமே தவிர ஒரு மனிதனின் வாழ்க்கையோ கௌரவமோ கிடையாது.

சாதி ஒரு மனநோய் என்பதை உணர்த்தி ஆணவப் படுகொலைகளை ஒழிக்கும் கதைக்கு அழகாக திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குநர் ஜீன்ஸ்காந்த் .

ஒரு கல்லூரி மாணவனின் காதல் வாழ்க்கையை இளமைத் துள்ளலோடு பார்த்து ரசிக்கலாம். தேவாவின் உதவியாளர் விஜய்மந்தாரா நான்கு பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

‘நான் கடவுள் ‘படத்தில் பிச்சைப் பாத்திரம் பாடலை பாடிய மது பாலகிருஷ்ணா ‘ஊருசனம் பொல்லாதது ஆத்தா’ என்கிற பாடலைப் பாடுகிறார். பிரியனின் உதவியாளரும் த்ரிஷா நடித்த ‘கர்ஜனை’ படத்தின் ஒளிப்பதிவாளருமான சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார்.

மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் உதவியாளர் மின்னல் முருகானந்தம் இரண்டு சண்டைக்காட்சிகளை அமைத்து ஸ்டண்ட்டைக் கவனிக்கிறார்.

பொதிகை டிவி தலைமை எடிட்டரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான லட்சுமணன் படத்தொகுப்பு செய்கிறார் .பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கிறது.

சத்யராஜ், சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. படத்தில் இரண்டு காதநாயாகி இஸ்மத் பானு, சுரேஸ்லேகா, நடிக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி அரசியல் பிரமுகர் மயிலை கணேசன், சண்டைப் பயிற்சியாளர் அயூப்கான் ,அப்துல் ரஹீம், மணிவாசகன் மாரிக்கனி ஈஸ்வரன் வில்லனாக நடிக்கிறார்கள்.

ஜெயசிம்மன், மீரான் முகமது ,கிளாடிஸ் எழில் ஹீரோவின் நண்பர்களாக நடிக்கிறார்கள். சிவகாசி செல்லத்துரை, கன்னிசேரி பாண்டியன், விருதுநகர் பால்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் .

தேனி, வீரபாண்டி, கம்பம், கோம்பை ,மேகமலை போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறும்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜீன்ஸ்காந்த்.

ஜீன்ஸ் ஸ்டுடியோ மிக பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.

Director Jeanskanths Aathaa movie deals with honour killings

Jeanskanth movie aathaa

More Articles
Follows