6 அத்தியாயம் படம் தமிழ் சினிமாவின் புதிய முயற்சி: பாரதிராஜா பாராட்டு

6 அத்தியாயம் படம் தமிழ் சினிமாவின் புதிய முயற்சி: பாரதிராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bharathiraja praising 6 Athiyayam Movie‘6 அத்தியாயம்’ திரைப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது..

“பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.

சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன்.

ஆனால் இந்த ‘6 அத்தியாயம்’ படத்தை பார்த்து முடித்ததுமே, நானே இந்தப்படத்தை பற்றி பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

இந்தப்படம் திரையிடப்பட்டு முதல் அத்தியாயம் முடிந்ததுமே, எங்கேயோ ஒரு குரூப் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறதே என நினைத்தேன்.

இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகளில் அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசி அத்தியாயத்தில் அப்படியே மிரண்டு விட்டேன்.

பொதுவாக பெங்காலிகள் உட்பட வடக்கில் உள்ள படைப்பாளிகளை நான் பெரிதும் பாராட்டுவேன்.

காரணம் அவர்கள் சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் காட்டுவார்கள்.

சமீபத்தில் வந்த நம் தமிழ்ப்படங்களில் பல நம்மை கெடுத்து குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த ‘6 அத்தியாயம்’ படம் பார்த்து நான் உண்மையிலேயே மிரண்டுதான் போனேன்.

எனக்கும் இதுபோன்ற சிந்தனைகள் இருந்ததுண்டு. ஆனால் அதை ஒருபோதும் நான் செயல்படுத்த முயன்றதில்லை. கச்சிதமான சிந்தனை என்பது ஒரு சினிமாவுக்கு செய்யக்கூடிய தர்மம்.

பிரெஞ்ச், ஈரானிய, ஜப்பானிய, சைனீஸ் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு பாராட்டுகிறோம். தமிழ்நாட்டுல இவ்வளவு பிரமாதமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்ததுமே, யார் இவர்கள்.. இவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்று தான் நானே மைக் பிடித்தேன்.

இந்த யோசனையே புதிதாக உள்ளது. தமிழ்சினிமாவிற்கு இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. 6 அத்தியாயங்களை எப்படி ஒன்று சேர்ப்பது..?

ஒரு அத்தியாயம் முடிந்ததுமே எழுந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் இந்தப்படத்தில் முதல் அத்தியாயம் முடியும்போதே இரண்டாம் அத்தியாயத்தை பார்க்கும் விதமாக நம்மை இழுத்து பிடித்து அமர வைத்து விடும் யுத்தியை இதில் கையாண்டிருக்கிறார்கள்.

இப்படி ஆறு அத்தியாயங்களுக்கும் நம்மை கட்டிப்போட்டு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து 6-வது அத்தியாயம் முடிவில் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள்.

இது மிகச்சிறந்த யோசனை. மிகப்பெரிய சாதனையும் கூட. இதுபோல நல்ல கலைஞர்கள் வந்தார்கள் என்றால் தமிழ் திரையுலகை பற்றி உலகம் முழுதும் பேசுவார்கள்.

குறும்படத்திலேயே இவ்வளவு கெட்டிக்காரத்தனம் காட்டினால், அதை ஒரு முழுநீள திரைப்படத்திலும் நிச்சயம் கொண்டுவரமுடியும்.. உலகளவில் நம் படங்களை கொண்டுபோய் சேர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் கொடுத்திருக்கிறது. 6 அத்தியாயம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என பாராட்டி பேசினார் பாரதிராஜா.

‘6’ அத்தியாயம்’ பற்றி…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள்.

ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.

இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

படத்திற்கான கேம் ஆப் “RunForUrLife” எனும் பெயரில் கூகிள் பிலே ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் படக்குழு விரைவில் வெளியிடயிருக்கிறது.

‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

Director Bharathiraja praising 6 Athiyayam Movie

6 Athiyayam movie press show stills

சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை; பிரகாஷ்ராஜுக்கு எஸ்வி.சேகர் பதிலடி

சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை; பிரகாஷ்ராஜுக்கு எஸ்வி.சேகர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SVe Shekar reaction to Prakashraj about political speechநடிகர் கமல்ஹாசனை போல் பிரகாஷ்ராஜ் அவர்களும் அண்மைக்காலமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

கர்நாடகாவில் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டத்தை தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் மற்றொரு பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தன்னை விட சிறந்த நடிகர் என பேசியிருந்தார்.

இதனையடுத்து ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகை பற்றி கேட்டபோது… நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவு என தன் கருத்தை பகிரங்கமாக வெளியிட்டார்.

இந்நிலையில் பிரகாஷ்ராஜிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்வி சேகர் தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ்ராஜின் செய்தி வெளியான நாளிழை பதிவிட்டு அதற்கு சில நடிகர்கள் நடிப்பது சினிமாவுக்கே நல்லதில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SVe Shekar reaction to Prakashraj about political speech

மெர்சலை ஓட்டிய தியேட்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

மெர்சலை ஓட்டிய தியேட்டருக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal stillsதிருப்பூர் முருங்கபாளையத்தில் சரண் சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரின் உரிமத்தை புதுப்பிக்குமாறு வருவாய்த்துறை சார்பில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் உரிமத்தை அவர்கள் உரிய காலத்திற்குள் புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் திரையிடக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

எனவே அந்த சினிமா தியேட்டரில் படம் திரையிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதி இல்லாமலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் தியேட்டரில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரையிடப்பட்டது.

இதனை அறிந்த அதிகாரிகள் சரண் சினிமா தியேட்டருக்கு சென்று ‘சீல்’ வைத்தனர்.

இதையடுத்து தியேட்டர் மூடப்பட்டு சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

விஜய்யுடன் போட்டோ எடுத்தது குத்தமா? இப்படி பண்றாங்களே

விஜய்யுடன் போட்டோ எடுத்தது குத்தமா? இப்படி பண்றாங்களே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Alisha abdullah slams vijay fansநடிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள பலரும் ஆசைப்படுவது உண்டு.

அதுபோல் நடிகையும் பைக் ரேசருமான அலிஷா அப்துல்லா நடிகர் விஜய்யுடன் ஒரு போட்டோ எடுத்துள்ளார்.

அதை தன் வாட்ஸ்அப்பில் புரொபைல் பிக்சராக வைத்துள்ளார்.

அதை அவரது அனுமதியில்லாமல் எடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது ஊரெல்லாம் பரவ, தற்போது அதற்கு தன் கண்டத்தை தெரிவித்துள்ளார் அலிஷா.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அலிஷா கோபத்துடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

It gets very annoying when you don’t have your privacy! People steal your display picture .. why? For what ? Without your knowledge

— Alisha abdullah (@alishaabdullah)

விவேகம் நஷ்டத்தை ஈடுகட்ட சம்பளத்தை குறைத்த அஜித்..?

விவேகம் நஷ்டத்தை ஈடுகட்ட சம்பளத்தை குறைத்த அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivegam ajithவீரம் மற்றும் வேதாளம் படங்களின் வெற்றியால் தனது அடுத்த படமான விவேகம் படத்தையும் சிவாவே இயக்க வாய்ப்பு கொடுத்தார் அஜித்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.

ஆனால் இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது.

இதனால் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிவா மற்றும் அஜித் கூட்டணி 4வது முறையாக புதிய படத்திற்காக இணையவுள்ளனர்.

இப்படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கும் என கூறப்படுகிறது.

எனவே விவேகம் ஏற்படுத்திய நஷ்டத்தை இப்படத்தின் சம்பளத்தில் குறைத்து அதை ஈடுகட்ட அஜித் சம்மதம் தெரிவித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நகுல் நடிக்கும் செய் படத்தில் பாகிஸ்தான் பாடகர் அறிமுகம்

நகுல் நடிக்கும் செய் படத்தில் பாகிஸ்தான் பாடகர் அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sei-movie-01நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி.

ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் ஆதிஃப் அலி பாடியிருக்கிறார் என்பதோடு, ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல்முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா….’ பாடலை பாடியுள்ளார்.

கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார்.

மேலும் ‘செய்’ ஆல்பத்தில் பிரபல முன்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னிதயாள் மற்றும் அறிமுக பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியிருக்கும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

Pakistan play back singer introducing in Sei movie

sei poster

More Articles
Follows