ரஜினி, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்

ரஜினி, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiru aka Chiranjeevi to team up with Shankar for his 153rd projectதமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்தை உலகத்துக்கு சொன்னவர் டைரக்டர் ஷங்கர்.

தமிழில் சில படங்களை இயக்கிய இவர், ஹிந்தியில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.

அது ‘முதல்வன்’ பட ரீமேக்கான ‘நாயக்’ படத்தை இயக்கினார்.

ஆனால் அவரது படங்களுக்கு எல்லா மொழியிலும் வரவேற்பு இருப்பதால் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகும்.

கடந்த வருடம் ரஜினி நடித்த 2.0 படத்தை இயக்கி வெளியிட்டார். தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஒரு படத்தை தெலுங்கில் இயக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.

Chiru aka Chiranjeevi to team up with Shankar for his 153rd project

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து STUDIO GREEN ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார்.

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர்.

இதை பற்றி இயக்குநர்கள் பொன்ராம் & M.P கோபி அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ,நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த கனா படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

அதன் காரணமாக திரு.சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம் அவர் இடைவிடாத படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால் அதற்கு பதிலாக அவருடைய கனா பட ஹீரோ தர்ஷன் அவர்களையும் அந்த படத்தில் காமெடியனாக நடித்த டேனியல் பாக்கியராஜ் அவர்களையும் அவர் ரசிகர் மன்ற மாநில தலைவர் மோகன் தாஸ் அவர்களையும் & மிஸ்டர் லோக்கல் பட இயக்குனர் ராஜேஷ்.M அவர்களையும் விழாவிற்கு அனுப்பி வைத்தார். அது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார்.

இந்த மாபெரும் விழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த திரு.சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி சொல்லி பெருமிதம் கொண்டனர் . இயக்குனர்கள் பொன்ராம் அவர்களும் & M.P.கோபி அவர்களும்.

அருண் விஜய்யின் 25வது படத்தை இயக்கும் கௌதம் மேனன்

அருண் விஜய்யின் 25வது படத்தை இயக்கும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arun Vijay signs his 25th film with director Gautham Menonஅஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியவர் அருண் விஜய்.

இப்படத்தை தொடர்ந்து குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இவை மூன்றும் மாபெரும் ஹிட் அடித்தன.

தற்போது அக்னிச்சிறகுகள், சாஹோ, பாக்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

22 வருடங்களாக சினிமாவிலும் இருக்கும் இவர் தற்போதுதான் 25வது படத்தில் நடிக்கவுள்ளார்.

அப்படத்தை கவுதம் மேனன் இயக்கவுள்ளதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Arun Vijay signs his 25th film with director Gautham Menon

சூப்பர் ஸ்டாரின் தர்பாரில் தாறுமாறு வில்லன் ப்ரதீக் பாபர்

சூப்பர் ஸ்டாரின் தர்பாரில் தாறுமாறு வில்லன் ப்ரதீக் பாபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prateik Babbar confirmed to play baddie in Rajinis Darbarரஜினிகாந்த், லைகா, ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோரது கூட்டணியில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தர்பார்.

இதில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க, இதன் சூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் ராஜ் பாபர், மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டீலின் மகனும், நடிகருமான ப்ரதீக் பாபர் நடிக்கவுள்ளார்.

அண்மையில் ப்ரதீக் நடித்த பாகி 2 படத்தைப் பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ், அவருக்கு இந்த வேடத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா பட ஹிந்தி பதிப்பில் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடிக்கும்போது இவருக்கும் எமி ஜாக்சனுக்னும் இடையே காதல் ஏற்பட்டதும் அதன் பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டதும் கவனிக்கத்தக்கது.

தனது முதல் தமிழ் படத்திலேயே அதுவும் ரஜினி படத்திலேயே ப்ரதீக் பாபர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prateik Babbar confirmed to play baddie in Rajinis Darbar

darbar villain pratiek

ரூ.100 கோடி சம்பளத்தை நெருங்கும் ரஜினி; ‘தர்பார்’ பட்ஜெட் என்ன.?

ரூ.100 கோடி சம்பளத்தை நெருங்கும் ரஜினி; ‘தர்பார்’ பட்ஜெட் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis salary and Darbar movie budget news updatesஇந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் நடிகர் என்றால் அது நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்றால் அது மிகையல்ல.

தொடர்ந்து 40 வருடங்களாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டுக் கொண்டிருப்பதால் இவரின் சாதனைகளை யாராலும் முந்த முடியவில்லை.

எத்தனையோ தலைமுறை நடிகர்கள் வந்தாலும் படத்திற்கு படம் இவரது சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்துக் கொண்டே தான் இருக்கிறது.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினி சம்பளம் மற்றும் பட மொத்த பட்ஜெட் தகவல்கள் வந்துள்ளன.

ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ. 100 கோடியை நெருங்குகிறதாம். அதற்கு அடுத்து முருகதாஸ் சம்பளம் ரூ. 30 கோடி எனவும் நயன்தாராவுக்கு ரூ. 5 கோடி எனவும், அனிருத்துக்கும் ரூ. 2.5 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

ஆக இவர்களின் சம்பளத்தை சேர்த்து படத்தின் பட்ஜெட் ரூ. 200 கோடியை தொடுகிறதாம்.

Rajinis salary and Darbar movie budget news updates

தளபதி 63 கதை திருட்டில் சிக்குவாரா அட்லி..? எழுத்தாளர் சங்கத்தில் புகார்

தளபதி 63 கதை திருட்டில் சிக்குவாரா அட்லி..? எழுத்தாளர் சங்கத்தில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏஆர். ரஹ்மான் இசையமைக்க இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என்று குறும்பட இயக்குனர் கே.பி.செல்வா எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார்.

இது தொடர்பாக செல்வா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், ‘பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன்.

அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து நான் நீதிமன்றத்திற்கு சென்றேன்.

ஆனால் அவர்களோ எழுத்தாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர்.

பின்னர் அட்லி தரப்பில் என்னை தொடர்புகொண்டு கதை விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம், உங்களின் படத்தை கைவிட்டுவிடுங்கள் என்றார்கள். அதன் பிறகு கதை திருட்டு தொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன்.

சங்க விதிப்படி உறுப்பினராகி 6 மாதம் கழித்த பிறகே கதை திருட்டு குறித்து புகார் அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். அது தொடர்பாக கடிதமும் அளித்தார்கள்.

எழுத்தாளர் சங்கத்தில் புகாரை ஏற்க மறுத்த பிறகு நான் மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளேன். கதை திருட்டு குறித்த வழக்கு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது என்றார் செல்வா.

More Articles
Follows