கண் மூடி திறப்பதற்குள் ஒரு சினிமா..; அமெரிக்கர் சாதனையை முறியடித்த தமிழர்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு

கண் மூடி திறப்பதற்குள் ஒரு சினிமா..; அமெரிக்கர் சாதனையை முறியடித்த தமிழர்.. அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘Be Pretty’ என்ற உலகின் மிகச் சின்ன படத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் டைரக்ட் செய்துள்ளார்.

குறும்படம் தெரியும்.. அது என்னப்பா.? சின்ன படம் எனக் கேட்கிறீர்களா.? நீங்கள் கண் மூடி திறப்பதற்குள் அந்த படம் 5 நொடிகளில் முடிந்துவிடுமாம்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு நொடிகள் கொண்ட ‘சோல்சர் பாய்’ என்ற சிறிய படத்தை அமெரிக்கர் ஒருவர் இயக்கியிருந்தார்.

அந்த படம் உலக சாதனை செய்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை தமிழர் ஒருவர் முறியடித்துள்ளார்.

இவர் கோலிவுட்டில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இவர் இயக்கிய, ‛பி பிரிட்டி’ (Be Pretty) என்ற இந்த சிறிய திரைப்படம் கொரோனா காலத்தில் முககவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு் பாராட்டியுள்ளார்.

இந்த உலக சாதனை படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட வேண்டும் என அன்பு ராஜசேகர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Be pretty first look released by education minister Anbil Mahesh

Be Pretty

உயிர் காக்க நிதி திரட்டும் டிவி ஸ்டார்ஸ் அமித் பார்கவ் & ஸ்ரீஜனனி

உயிர் காக்க நிதி திரட்டும் டிவி ஸ்டார்ஸ் அமித் பார்கவ் & ஸ்ரீஜனனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amit Bhargavகரோனா பெருந்தொற்று அன்றாடம் ஆயிரமாயிரம் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், சிகிச்சைக்கு அதிமுக்கியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கிக் கொடுக்கும் பணியை பிரபலங்களான அமித் பார்கவ், ஸ்ரீஜனனி முன்னெடுத்துள்ளனர்.

இதற்காக அவர்கள் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை பகுதியை தேர்வு செய்துள்ளனர்.

தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மக்களின் உயிர்காக்க ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள் பலவற்றில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும், ஆம்புலன்ஸ் தேவையும் உள்ளது.

இந்நிலையில், கிரவுட் ஃபண்டிங் தளத்தின் வாயிலாக, சின்னித்திரை பிரபலங்களான அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீஜனனி, நிதி திரட்டி வருகின்றனர்.

அமித் பார்கவ் ஜீ தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவருகிறார். ஸ்ரீஜனனி பாடகியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். கூடவே சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கிரவுட் ஃபண்டிங் தளத்தின் வாயிலாக, சின்னித்திரை பிரபலங்களான அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீஜனனி, நிதி திரட்டி வருகின்றனர்.

இதனை, ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கவும், ஆம்புலன்ஸ் சேவைகளை அதிகரிக்கவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நற்செயலில், தஞ்சையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் நாகராஜனும் பங்கேற்கிறார்.

நிர்மல் ராகவனைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதி மக்களுக்காக பல்வேறு நற்பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

நிமலும் அவரின் குழுவினரும் இணைந்து கொரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு 4000 குடும்பங்களுக்கு உணவளித்த பசியாற்றினர்.

அமித், ஸ்ரீஜனனி முன்னெடுத்துள்ள இந்த திட்டத்தில், கைகோர்த்துள்ள நிமல் திரட்டப்படும் நிதி மூலம் வாங்கப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் உதவியாக இருப்பார். இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசியிருக்கிறார்.

இதுவரை அமித், ஸ்ரீஜனனி மற்றும் நிமல் திரட்டியுள்ள பணத்தின் மூலம் 5 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

அவை பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சை பகுதியின் தேவையைத் தீர்க்க இன்னும் 16 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகின்றன.

மக்களின் உயிர்காக்கும் இந்தப் பணியில் நல் உள்ளம் கொண்டோர் இணைய வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Link to contribute : https://milaap.org/fundraisers/support-help-needy-and-poor-people-covid-patient-oxygen-concentrators

celebrities Amit Bhargav and Sriranjani are doing a fundraiser to buy oxygen concentrators

இதயங்களை என்றும் ஆளும் எஸ்பிபி-க்கு கற்பகதாசன் & சிக்கில் குருசரண் இசையஞ்சலி

இதயங்களை என்றும் ஆளும் எஸ்பிபி-க்கு கற்பகதாசன் & சிக்கில் குருசரண் இசையஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sikkil Gurucharanபிரபல மருத்துவ நிபுணரும் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் நண்பருமான டாக்டர் ஆர் ஸ்ரீதரன் (கற்பகதாசன்), பாடகர் சிக்கில் குருசரணுடன் இணைந்து மறைந்த பாடகருக்கு இசை அஞ்சலி ஒன்றை செலுத்தியுள்ளார்.

‘காத்திருந்த கண்கள்’ திரைப்படத்திற்காக P B ஸ்ரீனிவாஸ் பாடிய ‘துள்ளி திரிந்த பெண் ஒன்று…’ பாடலை அடிப்படையாகக் கொண்டு ‘துள்ளி திரிந்த உயிர் ஒன்று, துயில் கொண்டதே இன்று…’ எனும் பாடலை டாக்டர் ஸ்ரீதரன் இயற்ற, சிக்கில் குருசரண் அதை பாடியுள்ளார்.

எஸ் பி பி-யின் 75-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் சர்வதேச தமிழ் சங்கங்கள் இணையவழியில் நடத்திய நிகழ்ச்சியில் இந்த பாடல் வெளியிடப்பட்டது.

அருண் மேனனின் இசை கோர்ப்பில் வெளியான இப்பாடல் அதன் அர்த்தம் பொதிந்த வரிகள் மற்றும் ஆத்மார்த்தமான பாடும் முறையினால் யூடியூப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

“பாடல் வரிகளை சில வாரங்களுக்கு முன் எனக்கு அனுப்பி வைத்த டாக்டர் ஸ்ரீதரன், P B ஸ்ரீனிவாஸ் பாடிய ‘துள்ளி திரிந்த பெண் ஒன்று…’ போன்றே இதையும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என கூறினார்.

பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது. எஸ் பி பி சாரின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாடல் வெளியானது இன்னும் சிறப்பு.

நமது இதயங்களை என்றும் ஆளும் எஸ் பி பி அவர்களுக்கு எங்களது சிறிய காணிக்கை இது,” என்றார் சிக்கில் குருசரண்.

டாக்டர் ஸ்ரீதரன் இயற்றிய மூன்று பாடல்களை எஸ் பி பி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது புதிய பாடலை குறித்து பேசிய டாக்டர் ஸ்ரீதரன், “எஸ் பி பி-யின் திடீர் மரணம் என்னை மிகவும் பாதித்த நிலையில் எழுதிய பாடல் இது.

எஸ் பி பி 75 நிகழ்ச்சியை நடத்த டோக்கியோ தமிழ் சங்கம் முடிவெடுத்தவுடன், மூன்றே நாட்களில் ஊரடங்கு காலத்தில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டு இணைய நிகழ்ச்சியின் போது வெற்றிகரமாக வெளியிடப்பட்டது,” என்றார்.

Musical tribute to SPB by renowned doctor and Sikkil Gurucharan

தி பேமிலி மேன்-2 பார்த்து எங்க ஃபேமிலியே சமந்தா ஃபேனாயிட்டோம்..; சூர்யா-கார்த்தி பட ஹீரோயின் ஓபன் டாக்

தி பேமிலி மேன்-2 பார்த்து எங்க ஃபேமிலியே சமந்தா ஃபேனாயிட்டோம்..; சூர்யா-கார்த்தி பட ஹீரோயின் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rakul preet singh familyசமந்தா, பிரியாமணி ஆகியோரது நடிப்பில் அமேசான் ஒட்டி தளத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ‘தி பேமிலி மேன்-2’.

இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது என தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அமேசான் நிறுவனத்திற்கும் சீமான் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில்…

‛‛தி பேமிலி மேன்-2 தொடரில் நடித்துள்ள மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

சமந்தா ராஜி கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார்.

இந்த தொடரை பார்த்த பிறகு எங்க குடும்பமே சமந்தாவின் ரசிகர்களாக மாறி விட்டோம்” என பதிவிட்டுள்ளார்.

கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ & சூர்யாவுடன் ‘என்ஜிகே’ படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் ட்விட்டர் பதிவில்..

#familymanseason2 has been watched and it’s USP is terrific terrific performances by all! @BajpayeeManoj Im falling short of words to say how outstanding you were in the show ! @Samanthaprabhu2 take a bow!! U are fire girl! How brilliantly have you pulled off Raji my family..

Has also become your fan now besides me @rajndk congratulationssss n more power to you ! @Samanthaprabhu2 @BajpayeeManoj #PriyaManiRaj

Actress Rakul Preet Singh praises Samantha’s acting in The family man 2 web series

லாக் டவுன் லவ்வர்ஸ் ஆதித் – ஷிவாணிக்கு கை கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

லாக் டவுன் லவ்வர்ஸ் ஆதித் – ஷிவாணிக்கு கை கொடுத்த ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

www movieஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகனின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “WWW”.

ஆதித் அருண், ஷிவாணி ராஜசேகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இத்திரில்லர் திரைப்படத்தின் புதிய சிங்கிள் பாடல் இன்று ஜூன் 8 வெளியாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி “மின்னலை எதிரே” எனும் இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இயக்குநர் KV குகன் கூறியதாவது…

இது ஒரு அழகான மெலோடி பாடல். பொதுமுடக்க காலத்தில் சிக்கி பிரிந்திருக்கும் காதலர்கள் , கணிணி வழியே வெளிப்படுத்திகொள்ளும் உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

பல அழகான மெலடி பாடல்களை தந்த இசையமைப்பாளர் சைமன் K கிங் இப்பாடலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்.

கண்டிப்பாக அனைத்து இசை ஆர்வலர்களும் “மின்னலை எதிரே” பாடலை கொண்டாடுவார்கள். இப்பாடலை வெளியிட்டு ஆதரவு தந்த நடிகர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் WWW ( Who… Where … Why…. ) எனும் இப்படத்தினை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் KV குகன்.

Ramantra Creations சார்பில் Dr. ரவி பிரசாத் ராஜு டட்லா தயாரிக்க விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார்.

தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பு செய்ய, KN விஜயகுமார் வசனமெழுதியுள்ளார்.

பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Hip Hop Tamizha revealed minnalai song from WWW

சானிடைசர் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம்

சானிடைசர் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

N 95 maskகொரோனா வைரஸ் 2வது அலை பரவல் காரணமாக அதன் தடுப்பு பொருட்கள் தேவை அதிகமாகியுள்ளது.

அதாவது சானிடைசர், மாஸ்க், ஆக்சிஜன் மாஸ்க், பிபிஇ கிட் உடை, பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி…

இரண்டு அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க் விலை ரூ.3,

மூன்று அடுக்கு சர்ஜிக்கல் மாஸ்க்கின் அதிகபட்ச விலை ரூ.4.50

ஆக்சிஜன் மாஸ்க் – ரூ.54

பிபிஇ கிட் உடை – ரூ.273

கிருமிநாசினி 200 மி.லி – ரூ.110

N95 முகக் கவசம் – ரூ.22

கையுறை – ரூ.15

ரத்தத்தில் ஆக்சிஜனை சரிபார்க்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் – ரூ. 1,500

ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரான் விலை ரூ.12

சிகிச்சை நிபுணர்கள் அணியும் உடை விலை ரூ.65

TN govt declares 15 items as COVID-19 essentials, fixes price

More Articles
Follows