தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்துள்ள பைரவா படம் ஜனவரி 12ல் வெளியாகவுள்ள நிலையில், இதன் முன்பதிவு இன்றே தொடங்கியுள்ளது.
இப்படத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
மேலும் வெளிநாடுகளில் இதன் பிரிமீயர் ஷோ ஜனவரி 11ஆம் தேதியே தொடங்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவில் புதிதாக சில நாடுகளிலும் பைரவா படம் வெளியாகவிருக்கிறதாம்.
நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.
இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு பெருமைத் தேடி தருகிறார் பைரவா என்றே கூறலாம்.
Bairavaa releasing in around 55 countries