JUST IN ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..’ பாடல் புகழ் மாற்றுத் திறனாளி கோமகன் காலமானார்

JUST IN ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..’ பாடல் புகழ் மாற்றுத் திறனாளி கோமகன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Komaganசிநேகா, கோபிகா, மல்லிகா, கனிகா ஆகியோருடன் சேரன் இயக்கி நாயகனாக நடித்த படம் ‘ஆட்டோகிராஃப்’.

இந்த படத்தில் இடம்பெற்ற ’’ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இந்த பாடலில் ‘’மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்’’ என்கிற வரிகளைப் பாடியவர் கோமகன்.

இவர் கோமகனின் ராகப்ரியா’ எனும் இசைக்குழுவையும் நடத்தி வந்தார்.

பிறப்பிலேயே பார்வையற்றவர் கோமகன். இவரது பூர்வீகம் நாகர்கோவில் என்றாலும் சென்னையிலுள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் வேலை செய்து வந்தார்.

அங்கேயே பணிபுரிந்த அனிதா என்பவருடன் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் போமகனுக்கு அரசு வேலை கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார்.

இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை.

இவரின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து கொண்டே வந்ததால் வென்ட்டிலேட்டரிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இன்று நள்ளிரவு 1.15 மணியளவில் மரணமடைந்தார்.

Autograph fame Singer Komagan passes away

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் தந்தை கொரோனா தொற்றால் மரணம்

அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனரின் தந்தை கொரோனா தொற்றால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Selva fatherபிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் 85 இன்று காலை 7.15 மணியளவில் காலமானார்.

கொரோனா தொற்று காரணமாக பெரம்பூர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டைரக்டர் செல்வா குறிப்பு:

DD பொதிகை டி வி யில் பரபரப்பாக பேசப்பட்ட நீலா மாலா , சித்திரபாவை தொடர்களை இயக்கிய டைரக்டர் செல்வா இயக்கிய முதல் திரைப்படம் தலைவாசல். சூப்பர் ஹிட் ஆனது.

அஜித்குமாரை அறிமுகப்படுத்தி அமராவதி படத்திற்காக இயக்கினார். இதில் சங்கவி நாயகியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு கர்ணா, புதையல், பூவேலி, உன்னருகே நானிருந்தால், ஜேம்ஸ்பாண்டு, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், நான் அவனில்லை, தோட்டா போன்ற வெற்றிப் படங்களான 25 படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ளார்.

இப்போது அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தை இயக்கி முடித்துள்ளார் செல்வா.

Fame director Selva’s father Bakthavachalam 85 passed away in Chennai, today 7.15 am battling COVID19 infection.

#RIPBakthavachalam | #selva #directorselva #COVID19 | #Coronavirus | #WearMask | #StaySafe
+91 98406 37906,
+91 98406 55333

JUST IN நடிகர் பாண்டு திடீர் மரணம்..; அதிமுக கொடி & தமிழ்நாடு டூரிஸம் லோகோ டிசைன் செய்தவர் இவரே.!

JUST IN நடிகர் பாண்டு திடீர் மரணம்..; அதிமுக கொடி & தமிழ்நாடு டூரிஸம் லோகோ டிசைன் செய்தவர் இவரே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். அவருக்கு வயது 74.

கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது.

அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

பாண்டுவின் பயணம் ஒரு பார்வை..

இடிச்சபுளி செல்வராஜ் இவரின் அண்ணன்.

இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவர். இவர் நல்ல ஓவியரும்கூட. பிசினஸ்மேன், நடிகர், நகைச்சுவைப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர்.

கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த எம்ஜிஆர் அவரை கட்டிபிடித்து பாராட்டி இருக்கிறார்.

இவர் மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட் என்பது பலர் அறிந்திராத விசயம். தமிழ்நாடு டூரிஸம் டிபார்ட்மெண்ட் லோகோவும் இவரின் கைவண்ணமே.

மெட்டல்ல லெட்டரிங் போர்டு வைக்கிறதை முதன்முதலா சென்னையில அறிமுகம் செய்தவரும் இவரே.

ADMK flag designer Cum Actor Pandu passes away

உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு விமான ஆம்புலன்ஸ் அனுப்பிய சோனு சூட்

உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு விமான ஆம்புலன்ஸ் அனுப்பிய சோனு சூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sonu soodஉத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டது.

இந்த நோயாளிக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் வேறு ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

எனவே என்ன செய்வது என தெரியாத அவர் உயிருக்கு போராடும் தன்னை காப்பாற்றுமாறு அந்த நபர் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையறிந்த சோனு சூட் அவருக்கு ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

உடனே ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி அவரை ஐதராபாத்துக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

தற்போது அங்கு சிகிச்சை பெறும் அந்த நபர் உடல்நலம் தேறி வருகிறார்.

உயிர் காத்த ரியல் ஹீரோ சோனு சூட்டுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Actor Sonu Sood Gets Critically Ill Covid-19 Patient Airlifted From Jhansi to Hyderabad

அப்பாவ நினைச்சா பெருமையா இருக்கு..; மநீம தோல்வி குறித்து கமல் மகள் ஸ்ருதி பேட்டி

அப்பாவ நினைச்சா பெருமையா இருக்கு..; மநீம தோல்வி குறித்து கமல் மகள் ஸ்ருதி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruti haasan kamal haasanநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அவர் பாரதீய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசனிடம் தோற்றார்.

இதனையடுத்து.. “தேர்தல் வெற்றி எங்கள் இலக்கு அல்ல.. மக்கள் நலனே இலக்கு தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தன் சமூகவலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:

“எதுவாக இருந்தாலும் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்.

அவர் வீழ்ந்து போகிறவர் அல்ல. போராடுகிறவர்.” என தெரிவித்துள்ளார்.

Shruti haasan’s emotional tweet on Kamal Haasan

MLAக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய ஸ்டாலின்.; மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார்.!

MLAக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய ஸ்டாலின்.; மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mk stalin (3)நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது

இதனையடுத்து திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மே 7ல் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் பன்வாரில் லால் புரோகித்தை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 133 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.

அத்துடன் பதவியேற்க புதிய அமைச்சர்கள் பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினார் ஸ்டாலின்.

இதனையடுத்து நாளை மறுநாள் மே 7ஆம் தேதி காலை 9 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின்.

MK Stalin set to take oath as CM on May 7

More Articles
Follows