ரஜினி வழியில் அதர்வா; *செம போத ஆகாத* நஷ்டத்தை ஈடுகட்டும் ஹீரோ

ரஜினி வழியில் அதர்வா; *செம போத ஆகாத* நஷ்டத்தை ஈடுகட்டும் ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvaa compensate Semma Botha Aagatha loss in Minnal Veeranகுசேலன் படம் தோல்வியால் தனது குருநாதர் கே.பாலசந்தர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை, படம் வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடாக திருப்பிக்கொடுத்த வரலாறு இன்றும் பேசப்படுகிறது.

இதுபோல இன்னும் ஒரு சிலரே இந்தப்பட்டியலில் உள்ளனர். அந்த பட்டியலில் நடிகர் அதர்வாவும் தற்போது இடம்பிடித்துள்ளார்.

ஆம் சில மாதங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. தன்னை பாணா காத்தாடி படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கடேஷுக்கு கைகொடுக்கும் விதமாக, கிக்காஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இந்தப்படத்தை தானே சொந்தமாக தயாரித்தார் அதர்வா .

ஒருகட்டத்தில் இந்தப்படம் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன்.

ஆனால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மினிமம் கியாரண்டி முறையில் இந்தப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் போட்டிருந்தார் மதியழகன். ஆனால் காலை இரண்டு காட்சிகள் படம் ரிலீஸ் ஆகாததால், படத்தின் மீதான அந்த எதிர்பார்ப்பு மங்கி, விநியோகஸ்தர்களுக்கு இந்தப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

தவிர படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியதால், படத்தை வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. இந்த விபரங்கள் அனைத்தும் அதர்வாவுக்கும் தெரியும்.

இந்தப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே தயாரிப்பாளர் மதியழகன், ஏ.ஆர்.கே.சரவணன் என்பவர் இயக்கத்தில் அதர்வாவை வைத்து ‘மின்னல் வீரன்’ என்கிற படத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்தார்.

இந்தநிலையில் தன்னுடைய ‘செம போத ஆகாத’ பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.

மேலும் இந்தப்படத்தின் பணிகளை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

சமீபத்தில் அதர்வா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று, சமீபகாலமாக சரிந்திருந்த அதர்வாவின் மார்க்கெட் வேல்யூவை சீராக்கி இருக்கிறது.

இந்த வருட இறுதிக்குள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2௦19ல் படத்தை வெளியிட இருக்கிறார்களாம். ஆக, மின்னல் வீரன் அதர்வாவுக்கும் தயாரிப்பாளர் மதியழகனுக்கும் நிச்சயமாக வெற்றிமுகம் காட்டுவான் என உறுதியாக நம்பலாம்.

Atharvaa compensate Semma Botha Aagatha loss in Minnal Veeran

நாளை வெளியாகும் *விஸ்வாசம்* செகண்ட் லுக்கில் ரிலீஸ் தேதி.?

நாளை வெளியாகும் *விஸ்வாசம்* செகண்ட் லுக்கில் ரிலீஸ் தேதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswasam Second look poster and release date updatesவிவேகம் படத்தை தொடர்ந்து சத்யஜோதி நிறுவனம், நடிகர் அஜித், டைரக்டர் சிவா ஆகியோர் இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’.

இமான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.

அஜித்துடன் நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் நவம்பர் முதல் வாரத்தில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் இதன் செகண்ட் லுக் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

அந்த போஸ்டரில் படத்தின் ரிலீஸ் தேதி இருக்கும் என கூறப்படுகிறது.

Viswasam Second look poster and release date updates

ஜகா வாங்கிய *ஜருகண்டி* ஹீரோ; ஹீரோவாக்கி அழகுபார்த்த நண்பருக்கே இப்படி.?

ஜகா வாங்கிய *ஜருகண்டி* ஹீரோ; ஹீரோவாக்கி அழகுபார்த்த நண்பருக்கே இப்படி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jarugandi teamஒரு சில படங்களில் ஹீரோவாகவும் பல படங்களில் ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராகவும் நடித்தவர் நிதின் சத்யா.

தற்போது இவரே தயாரிப்பாளராகி தன் நெருங்கிய நண்பரான ஜெய்யை வைத்து ஜருகண்டி என்ற படத்தை தயாரித்துள்ளார்.

பிச்சுமணி இயக்கியுள்ள இப்படத்தில் ரெபா மோனிகா, ரோபோ சங்கர், இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிக்க, போபோ சாசி இசையமைத்துள்ளார்.

இந்த படம் வருகிற அக்டோபர் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பொதுவாக ஒரு ஹீரோ தயாரிப்பாளர் ஆகிறார் என்றால், அவரே தான் தான் தயாரிக்கும் படங்களில் நாயகனாக நடிப்பார். இதில் அவரின் நண்பரை ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளார்.

அப்படியிருந்தும் நேற்று நடைபெற்ற ஜருகண்டி பிரஸ்மீட்டுக்கு ஜெய் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்யை தவிர நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jai starrer Jarugandi Press meet and release updates

jarugandi press meet

வீரமும், விவேகமும் கலந்த கலவை–மேடி @ மாதவ்’

வீரமும், விவேகமும் கலந்த கலவை–மேடி @ மாதவ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maddy at madhav“ஆன்மே கிரியேஷன்ஸ்” மிகுந்த பொருட்செலவில் தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “மேடி @ மாதவ்” (Maddy @ Madhav)

மாஸ்டர் அஞ்சய் அறிமுக நாயகனாக நடிக்கும் “மேடி @ மாதவ்” விஞ்ஞநான அறிவையும் – தாய்ப்பாசத்தையும் மையக்கருவாக கொண்டு உருவாக்கப்படும் இத்திரைப்படம் நாளைய இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவும்.

அறிய கண்டுபிடிப்பையும், இளைய சமுதாயத்தின் திறமைகளையும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு முதல் விதையாக இத்திரைப்படம் அமையும்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. “மாதவ்” கதாபாத்திரத்தில் நடிக்கும் “Master Anjay ” புலியுடன் நடித்த காட்சிகள் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது இப்படத்தின் சிறப்பம்சமாகும். வீரமும், விவேகமும் மிகுந்த கதாபாத்திரத்தில் “மாதவ்” கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் அஞ்சயுடன், “இளையதிலகம்” பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரிச்சா பாலோட், வையாபுரி, முத்துகளை, ரியாஸ்கான், பானு பிரகாஷ், ரோஷினி வாலியா, ஆதர்ஷ் அகியோர்களுடன் “இனிது இனிது” படநாயகன் ஆதித் மற்றும் புதுமுகம் நேகாகான் இருவரும் இளம்ஜோடிகளாக இப்படத்தில் நடிக்கின்றனர்.

அறிமுக வில்லன்களாக மும்பை நடிகர்கள் ஜீல்பி சையத், ஷாவெர் அலி ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் கோவா – மூனாறு – செர்ராய் கடற்கரை – நிலம்பூர், சாயல்குடி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் 100 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அணைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக மேடி @ மாதவ் திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதை – திரைக்கதை எழுதி அனில்குமார் தயாரிக்கிறார். புதுமுக இயக்குனர் பிரதீஷ் தீபு இயக்குகிறார். “போக்கிரி” திரைப்படத்தின் வசனகர்த்தா V. பிரபாகர் இணை திரைக்கதை வசனம் எழுத, அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எடிட்டிங் – V.T, விஜயன், S.R. கணேஷ் பாபு,

கலை – தோட்டதரணி

சண்டைக்காட்சி – அன்பு, அறிவு

இசை – அவுஸாபச்சன், இஷான்

பாடல்கள் – நா. முத்துக்குமார், குட்டி ரேவதி

நடனம் – பிரசன்ன, ரிச்சர்ட்

மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு

PK- மாதிரியான படத்தில் 2 ஜீனியஸ் உடன் இணைந்தது என் அதிர்ஷ்டம்.. ப்ரியா லால்

PK- மாதிரியான படத்தில் 2 ஜீனியஸ் உடன் இணைந்தது என் அதிர்ஷ்டம்.. ப்ரியா லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priya lalமலையாளத்தில் முதல் படம் ‘ஜனகன்’. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம். அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ் தான் முதல் படம்.

இயக்குநர் சுசீந்திரனின் படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது. ‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது. அது பற்றி ஒரு வரி தான் சுசீந்திரன் கூறினார். அப்போதே இந்த படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டியநாடு போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஜாஸ்மின். ஒரு நர்ஸ் ஆக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு மாணவி போல சுசீந்திரன் என்ன சொல்கிறாரோ அதை நடித்துவிட்டு வருவேன்.

இப்படத்தில் நான் நடித்த முதல் காட்சி க்ளைமாக்ஸ் தான். நீளமான காட்சி என்பதால் எனக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க கொஞ்சம் நேரம் எடுத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிறிய பாவனை கூட அந்த கதாபாத்திரத்தைக் கெடுத்துவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். அதேபோல் சுசீந்திரனும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் வாங்கிக் கொள்வார். இப்படிதான் நடிக்க வேண்டும் என்று நடித்தும் காட்டுவார். அவர் சொல்வதை நான் அப்படியே பின்பற்றுவேன்.

மேலும், பல பேருக்கு இந்த படம் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். பள்ளி பருவத்தில் எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்பந்தமும் இருக்கும். முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜீனியஸாக ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இப்படம் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதேபோல் எனக்கும் அதிக நெருக்கம் இருந்தது.

நீண்ட நாட்களாக ஒரு கனவு, தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று. பாட்டு, நடனம், நடிப்பு போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. ஆனால் என் குடும்பம் சினிமா பின்னணியில் இல்லாததால் அம்மாவிடம் சொல்ல தயங்கினேன். ஆனால் என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

இந்த படத்தில் இரண்டு ஜீனியஸ் இருக்கிறார்கள். ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா, இன்னொருவர் சுசீந்திரன். இந்த இரண்டு ஜீனியஸ் இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.

யுவனின் மிகப் பெரிய விசிறி நான். எனக்கு மிகவும் பிடித்தது பாடல் ‘சிலுசிலு’ பாடல் தான்.

முக்கியத்துவம் கொடுக்கும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

PK படம் மாதிரி உளவியல் ரீதியான முக்கியத்துவம் இப்படத்திலும் இருக்கும். ‘வெண்ணிலா கபடி குழு’வும், ‘நான் மகான் அல்ல’ படமும் எனக்கு மிகவும் பிடித்த படம்.

ரோஷனும் நானும் புது வரவு. இருப்பினும் அவர் எப்போதும் நேர்மறையான எண்ணம் கொண்டவர். அவரைச் சுற்றி நேர்மறையான அதிர்வு இருந்துகொண்டே இருக்கும். அவருக்கும் நடிப்பு என்பது மிகவும் பிடித்தமான விஷயம்.

அக்டோபர் 26ம் தேதி இப்படம் வெளிவருகிறது.

ஆண்தேவதை-யை சின்னா பின்னமாக்கிய விநியோகஸ்தர் : தாமிரா விரக்தி

ஆண்தேவதை-யை சின்னா பின்னமாக்கிய விநியோகஸ்தர் : தாமிரா விரக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aan devathaiரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது ‘ஆண் தேவதை’.

இந்நிலையில் இந்தப்படத்தை வெளியிடுவதற்குள் தாங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டோம், எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்பட்டோம் என தனது மனக்குமுறல்களை பத்திரிகையாளர்களின் முன்னிலையில் வெளிப்படுத்தினார் இயக்குனர் தாமிரா.

“எனது சிகரம் சினிமாஸ் நிறுவனத்துடன் பக்ருதீன், முஸ்தபா மற்றும் குட்டி என எனது மூன்று நண்பர்களையும் தயாரிப்பாளர்களாக சேர்த்துக்கொண்டு ஒரு பைசா கூட வட்டிக்கு வாங்காமல் இந்தப்படத்தை எடுத்து முடித்தோம்.

இந்தப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு ஒன்றே முக்கால் கோடி ரூபாய்க்கு விற்றோம். ஆனால் அவர் முதல் கட்ட அட்வான்ஸ் தொகையாக 41 லட்சம் மட்டும் கொடுத்ததோடு சரி.. அதன் அவர் சொன்னபடி நடந்துகொள்ளவும் இல்லை. படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வதற்கு ஆர்வம் காட்டவும் இல்லை.. இதையெல்லாம் உணர்ந்து நாங்கள் சுதாரிப்பதற்குள் நிலைமை கைமீறி விட்டது.

பெடரேஷனில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார், நம்மை ஏமாற்ற மாட்டார் என நம்பித்தான் அவரிடம் படத்தை கொடுத்தோம்.. ஆனால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

இதற்குமுன் அவர் மற்ற விநியோகஸ்தர்களிடம் வைத்திருந்த கடன் பாக்கி எல்லாம் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு, அவற்றை எல்லாம் நாங்கள் செலுத்தினால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என பெடரேஷன் திட்டவட்டமாக கூறிவிட்டது.

இது எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் அவருடைய நிறுவனத்தின் பெயரில் எங்கள் படம் வெளியாகிறது என்பதால் தான். காலம் கடந்துவிட்டதால் படத்தை ரிலீஸ் செய்வதற்காக வேறு வழியின்றி மாரிமுத்துவின் முந்தியா பாக்கிகளை நாங்கள் செட்டில் செய்து படத்தை ரிலீஸுக்கு நாகரத்தி கொண்டுவந்தோம்.

இதன் காரணமாக வட்டிக்கு கடன் வாங்குவதன் அவலத்தை, வட்டிக்கு கடன் வாங்காமல் படம் எடுத்து சொல்ல நினைத்த நான், இன்று வட்டிக்கு வட்டி கட்டும் சூழலுக்கு ஆளாகி இருக்கிறேன் என்றால் அதற்கு இந்த மாரிமுத்துவும், அவரைப்போல மூன்றாம் தரமான நபர்களை ஆதரிக்கும் பெடரேஷனும் தான் காரணம்.

இவர்களால் சம்பந்தமே இல்லாமல் இன்று 56 லட்ச ரூபாய் கடனுக்கு நான் பொறுப்பேற்க வேண்டியதாகிவிட்டது.

யாரோ வாங்கிய கடனுக்கு நாங்கள் ஏன் வட்டி கட்ட வேண்டும்.. வரயுடைய நிறுவனத்தின் பெயரில் படத்தை வெளியிடும் ஒரே காரனாத்திர்காக நாங்கள் ஏன் அவரது கடன்களை பொறுப்பேற்று அடைக்கவேண்டும்..?

இது அப்பட்டமான மோசடி இல்லையா..? இதற்கு பெடரேஷன் துணை நிற்பது அதிர்ச்சி என்றால், தயாரிப்பாளர் சங்கம் இந்த மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு வழிவகை செய்யாமல் இருப்பது தான் இந்த மோசடி நபர்களுக்கு வசதியாக போய்விடுகிறது..

பெடரேஷனில் இந்த வெளியீட்டாளருக்கு இவ்வளவு ஏற்கனவே கடன் பாக்கி இருக்கிறது, அவரிடம் படத்தை கொடுத்தால் அந்த கடன் சுமையை நீங்கள் தான் ஏற்கவேண்டும் என வெளிப்படையாக அறிவித்திருந்தால் நாங்கள் மாரிமுத்து போன்ற மோசடி நபரிடம் சிக்கி, இந்த படுகுழியில் விழுந்திருக்க மாட்டோம்..

தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டால் நீங்கள் ஏன் அவரிடம் போய் சிக்கினீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். சிக்கியவர்களை காப்பாற்றத்தானே சங்கம் இருக்கிறது.

எங்களை மோசடி செய்த மாரிமுத்து மேலே எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டர்கள். நாளை இதே மாரிமுத்து தைரியமாக இன்னொரு படம் பண்ணுவார். அவரைப்பற்றிய விபரம் தெரியாமல் எங்களைப்போன்ற யாரவது ஒருவர் இனிமேலும் அவரிடம் சிக்கிவிட கூடாது என்கிற எண்ணத்தில் தான் இந்த உண்மைகளை இப்போது வெளியிடுகிறேன்..

சரி.. இவ்வளவு பிரச்சனைகளையும் படத்தின் வெற்றியால் கடந்துவிடலாம் என நினைத்தால் நாங்கள் திட்டமிட்டிருந்த நேரத்தில் மிகப்பெரிய படங்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென களத்தில் குதித்து அதிகப்படியான தியேட்டர்களை கைப்பற்றிக்கொண்டன.

அதனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தியேட்டர்களிலும் சரியான காட்சிகள் கிடைக்கவில்லை. படத்தை வாங்கிய மாரிமுத்துவின் அலட்சிய போக்கினால் சரியாக போஸ்டர்கள் ஒட்டி படத்தை விளம்பரம் செய்யக்கூட முடியவில்லை..

தியேட்டரில் படம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஒருநாள் பேப்பர் விளம்பரத்தையே கூட, மாரிமுத்து கடன் பாக்கி தரவேண்டும் என கூறி நிறுத்தினார்கள் என்றால் இந்தக்கொடுமையை என்வென்று சொல்வது..?

நல்ல படங்களை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ள இந்த அருமையான தருணத்தில் நல்ல படம் என ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஆண் தேவதை படமும் நல்ல வெற்றியை அல்லவா பெற்றிருக்க வேண்டும்..

ஆனால் பெடரேஷனின் அலட்சியம், அதிகாரப்போக்கு, தயாரிப்பாளர் சங்கம் சிறிய படங்கள் மீது காட்டும் பாராமுகம் இவை எல்லாமாக சேர்ந்து எங்கள் படத்தை சின்னாபின்னப்படுத்தி விட்டன. நாங்கள் தோற்கவில்லை.. தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் உண்மை.

இந்தப்படம் ஆரம்பிக்கும்போது நிறைய நட்பு இருந்தது. இன்று நான் ஒருவன் மட்டும் இங்கு தனியாக நிற்கிறேன்.. இத்தனை நாட்கள் நான் சேமித்து வைத்த அறமும் நேர்மையும் இந்தப்படத்தில் தான் இருக்கிறது. இந்தப்படம் தோற்றால் எனது நேர்மை தோற்றுவிடும்..

நான் தப்பிப்பதற்கு இன்னும் கூட வாய்ப்பிருக்கிறது.. இந்தப்படத்தை வரும் அக்-26ஆம் தேதி மறு ரிலீஸ் செய்வதற்கு நல்ல திரையரங்குகளை கொடுங்கள். மக்களின் ரசனை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுதான் நாங்கள் பெடரேஷனிடமும் தயாரிப்பாளர் சங்கத்திடமும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள்” என உருக்கமாக முடித்தார் தாமிரா.

More Articles
Follows