‘கைதி’ & ‘மாஸ்டர்’ பட வில்லனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் வசந்தபாலன்

‘கைதி’ & ‘மாஸ்டர்’ பட வில்லனை ஹீரோவாக்கும் தயாரிப்பாளர் வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெயில்’, ‘அங்காடி தெரு’, காவியத் தலைவன், ‘ஜெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன்.

இதில் ஜெயில் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

தற்போது தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து தயாரிப்பாளராக மாறியுள்ளார் வசந்தபாலன்.

இவர்கள் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்திற்கு யூ பாய்ஸ் ஸ்டூடியோஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிறுவன புதிய படத்தில் ‘கைதி’ ‘மாஸ்டர்’, உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த அர்ஜூன் தாஸ் தான் ஹீரோவாகிறார்.

இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்..

Arjun Das turns hero in Vasantha Balan’s next

Vasanthabalan Arjun Das

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்..; தயாரிப்பாளர் இவரா.?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண்..; தயாரிப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர்.

‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும்.

இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம்.

இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து…

“இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் – நடிகர் ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்க விவரம், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Ram Charan and director Shankar collaborate for a new film

Shankar Ram Charan

சினிமாவுக்கு வந்த கவர்ச்சி பாம் ‘டிக் டாக்’ இலக்கியா..; அந்த படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?

சினிமாவுக்கு வந்த கவர்ச்சி பாம் ‘டிக் டாக்’ இலக்கியா..; அந்த படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tik Tok Elakkiya (2)டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் ‘நீ சுடத்தான் வந்தியா?’

காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது.

இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.

இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர்.

அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவுசெய்கிறார்.

துரைராஜன் இசையமைக்கிறார்.படத்தில் ஐந்து பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன.

‘டிக் டாக் இலக்கியா’வை நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது…

“டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி நடிப்பது வேறு .படத்தில் காட்சிகளில் நடிப்பது வேறு.

ஆரம்பத்தில் சில நாட்களில் காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்குச் சிரமமாக இருந்தது. போகப் போக சரியாகி விட்டது.

சில நாட்களில் நான் சொல்வதைப் புரிந்துகொண்டு சரியாக நடித்தார். இந்தப்பட அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக இலக்கியா கூறினார்.

டிக் டிக் போல மிகையாக இல்லாமல் அவர் படத்தில் நாகரிகமான அளவான கவர்ச்சித் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.” என்றார்.

கதை பற்றிக் கூறும்போது…

“தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை.

வாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார்.

அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது. பார்க்கப் போனபோது உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டிவைக்கிறது .

அது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கதையின் பெரும்பகுதி காடுகளில் நடக்கிறது. பல்வேறு காடுகளில் சிரமப்பட்டுப் படம்பிடித்தோம். சிறு பகுதி மட்டும் சென்னையில் படமானது.” என்கிறார்.

பரபரப்பு சஸ்பென்ஸ் கவர்ச்சி என வணிகக் கலவையில் உருவாகியுள்ளது
‘நீ சுடத்தான் வந்தியா?’படம். விரைவில் வெள்ளித்திரையில்…

Tik Tok elakkiya turns heroine in new Tamil film

பிப்ரவரி 19ல் ‘செம திமிரு’ காட்ட வரும் ‘சுல்தான்’ பட நாயகி ராஷ்மிகா மந்தனா

பிப்ரவரி 19ல் ‘செம திமிரு’ காட்ட வரும் ‘சுல்தான்’ பட நாயகி ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sema thimiru (2)ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட்.

மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ மற்றும் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தற்போது ‘செம திமிரு’ என்ற படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ளது ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துருவா சர்ஜா. இவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினர்.

இவர் நாயகனாக நடித்துள்ள படம் தான் ‘செம திமிரு’.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்தப் படத்தைத் தான் பிப்ரவரி 19-ம் தேதி தமிழகத்தில் வெளியிடுகிறது.

இந்தப் படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படத்தை பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரிக்க நந்தகிஷோர் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்துக்குத் தன் ஒளிப்பதிவால் அழகூட்டியுள்ளார் விஜய் மில்டன்.

‘செம திமிரு’ படத்தில் சந்தன் ஷெட்டி இசையில் உருவான ‘காராபோ’ பாடல் நீண்ட நாட்களாக சமூக வலைதளத்தில் பேசப்படும் பாடலாக இருந்தது நினைவு கூரத்தக்கது.

இந்தப் படம் தவிர்த்து டீஸர், ட்ரெய்லர் ஆகியவற்றால் சமூக வலைதளத்தில் இப்போதும் பேசப்படும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தையும் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் மார்ச் 5-ம் தேதி வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் பேசப்படும் படங்களைக் குறிவைத்து வெளியிட்டு ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தொடர்ச்சியாக வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.

Rashmika’s Sema Thimiru will release on February 19th

சினிமாவில் அஜித் மனைவி ரீ-எண்ட்ரீ..; மீண்டும் ஷாலினியை இயக்கும் மணிரத்னம்

சினிமாவில் அஜித் மனைவி ரீ-எண்ட்ரீ..; மீண்டும் ஷாலினியை இயக்கும் மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shalini (2)குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி வளர்ந்து நாயகியாக சில படங்களில் நடித்தார் ஷாலினி.

விஜய், பிரசாந்த், மாதவன் உள்ளிட்ட டாப் ஹீரோஸ் உடன் ஜோடியாக நடித்திருந்தார்.

அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த போதே அஜித்குமாரும் ஷாலினியும் காதலித்தனர்.

இதனையடுத்து 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மத்ததுடன் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் ஷாலினி.

இவர்களுக்கு தற்போது ஒரு மகள் & ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலினியை நடிக்க வைக்க மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ படத்தில் மாதவன் ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shalini Ajith re entry in mega budget movie

பள்ளி நண்பர்களுடன் இணைந்து சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய வசந்தபாலன்

பள்ளி நண்பர்களுடன் இணைந்து சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vasantha Balan (2)இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராவார்.

தற்போது அவர், தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி வி பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன.

இவற்றில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்…’ பாடல் 14 மில்லியன் பார்வைகளை கடந்து தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

அதில் ஒருவரான வரதராஜன் வசந்தபாலனுடன் ஆல்பம் திரைப்படம் துவங்கி அவரது எல்லா திரைப்படங்களிலும் உதவி இயக்குநர், கேஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர்.

வெயில் திரைப்படத்தில் இடம்பெற்ற பரத் கதாபாத்திரம், லோக்கல் விளம்பர நிறுவனம் எல்லாம் அவரை மனதில் கொண்டு எழுதப்பட்டவை.

இன்னொரு நண்பரான முருகன் ஞானவேல் தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறி நிறுவனத்தில் உயரதிகாரியாக உள்ளார்.

மற்றொரு நண்பரான கிருஷ்ணகுமார் கணினி உப பொருட்களை சிறியதாக விற்கத்துவங்கி தன் கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்த இடத்தில் உள்ளார்.

விரைவில் இவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் பெயரும், அதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் பெயர்களும் அறிவிக்கப்படும்.

தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Director Vasantha Balan’s next project details here

More Articles
Follows