தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன்லால் நடித்த ‘வெளிப்பாண்டிடே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்ற ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் மூலம் பிரபலமானவர் அப்பாணி சரத்.
அப்பாடலும் அந்த படமும் பிரபலமானதால் தமிழில் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், விஷாலின் சண்டக்கோழி-2 ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவையில்லாமல் ஆட்டோ சங்கர் கேரக்டரில் அந்த வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்-4 வின்னர் நடிகர் ஆரி நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் அப்பாணி சரத்.
இதில் ஆரி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ள இப்படத்தை முருகதாஸின் உதவி இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்குகிறார்.
Appani Sarath playing antogonist in Aaari’s next film