‘அம்மன்’ சீரியல் நடிகர் அவினாஷின் வருங்கால மனைவி இவர்தானா..??

‘அம்மன்’ சீரியல் நடிகர் அவினாஷின் வருங்கால மனைவி இவர்தானா..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Avinash Ashokஓடி விளையாடு பாப்பா & டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் அவினாஷ் அசோக்.

இவர் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான அழகு, சாக்லேட் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார்.

தற்போது தற்போது கலர்ஸ் டிவி தமிழில் ‘அம்மன்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் அவினாஷ்.

இந்த நிலையில் தனது வருங்கால மனைவியான த்ரேஷா ஜோசப் என்பவரின் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் தங்கள் காதலை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அவினாஷ்

Amman serial hero Avinash Ashok to tie knot with Tresa Joseph

தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு.? லதா ரஜினி கட்சி தொடங்க வாய்ப்பு..? சுதாகர் அறிக்கை

தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு.? லதா ரஜினி கட்சி தொடங்க வாய்ப்பு..? சுதாகர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கடந்த 2020 டிசம்பர் 3ல் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

தான் தொடங்கவுள்ள புதிய கட்சிக்கு கட்சிக்கு அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்திருந்தார் ரஜினிகாந்த்.

ஆனால் அதே மாதம் டிசம்பர் 29ல் தன் உடல்நிலையை காரணம் காட்டி “அரசியலும் கிடையாது கட்சியும் கிடையாது” என ட்விட்டரில் நீண்ட விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

அதுபோல் அர்ஜுன மூர்த்தியும் ரஜினி பெயரில் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு நிர்வாகி சுதாகர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில்…

“வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை.

இந்த சட்டமன்ற தேர்தலுக்கு 100% ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்.

அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பரவும் தகவல் பொய்யானது.

இவ்வாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

#Rajinikanth #TNElections2021 #LathaRajini

RMM press statement on Rajinikanths support in this election

இந்தியாவையே மிரள வைத்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் 2ஆம் பாக ட்ரைலர் பிப்ரவரி 8ல் ரிலீஸ்

இந்தியாவையே மிரள வைத்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் 2ஆம் பாக ட்ரைலர் பிப்ரவரி 8ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Drishyam 2மோகன்லால் & மீனா win மலையாள த்ரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் 2’ பட First Look போஸ்டரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் வரும் பிப்.8, 2021 அன்று வெளியாகிறது.

அதிகம் எதிர்பார்க்கப்படும் மலையாள த்ரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் 2’ படத்தை ஜீது ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

இதை ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் அந்தோணி பெரம்பவூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் மீனா, சித்திக், ஆஷா ஷரத், முரளி கோபி, அன்சிபா, எஸ்தர் மற்றும் சாய்குமார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போஸ்டரில் மோகன்லால் (எ) ஜார்ஜ்குட்டி ஒரு சஞ்சலமான மனநிலையில் பதற்றமாக இருக்கிறார்.

இது படத்தின் கதையை மறைமுகமாக விவரிக்கிறது.

மேலும் விபரங்களுக்கு, கீழ்கண்ட சமூக வலைதள லிங்க்கை க்ளிக் செய்யவும்:

Amazon Prime Video

Mohanlal

Mohanlal’s Drishyam 2 trailer on February 8

‘கயல்’ ஆனந்தி கொண்டாடப்பட வேண்டியவர்..; ‘கமலி’ புகழ் பாடும் இயக்குநர் ராஜசேகர்

‘கயல்’ ஆனந்தி கொண்டாடப்பட வேண்டியவர்..; ‘கமலி’ புகழ் பாடும் இயக்குநர் ராஜசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamali From Nadukkaveriஅறிமுக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் நடிகை கயல் ஆனந்தி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “கமலி From நடுக்காவேரி” .

ஒரு சராசரி பெண்ணின் கல்வி பயணத்தை, தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அவளது வாழ்வை அழகாக சொல்லியிருக்கும் படம் தான் “கமலி From நடுக்காவேரி”.

Appundu Studios Pvt Ltd இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்

படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி கூறியதாவது…

இது எனது முதல் திரைப்படம். நான் வாழ்வில் சந்தித்த விசயங்களை தான் திரைக்கதையாக மாற்றினேன்.

ஒரு வகையில் நான் ஆண் கமலி. இப்படம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கபடும் வரம்புகளை தாண்டி, கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும் தான் கதை.

கிராமத்தில் இருந்துவந்து IIT-க்குள் நுழையும் பெண், அவள் வழியில் சந்திக்கும் காதல், சுவராஸ்யங்கள், திருப்பங்கள், நிகழ்வுகள் இப்படித்தான் இந்தப்படம் பயணிக்கும்.

இப்போதும் கிராமப்புறங்களில் பென்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை அதனை வெளிக்கொண்டுவரும் படைப்பாக இப்படம் இருக்கும்.

இது சீரியஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.

என் கதைக்கான பொருத்தமான நடிகையை தேடியபோது கயல் ஆனந்தி மிகச்சரியானவராக தோன்றினார்.

கயல் ஆனந்தியின் திறமை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டியவர்.

இப்படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும். கண்டிப்பாக இப்படத்தில் அனைவரும் அவரின் நடிப்பை கண்டு பிரமிப்பார்கள்.

கோவை நக்கலைட்ஸ் சேனலின் மிகப்பெரிய ரசிகன் நான். முதலில் கதாநாயகனின் தோழி கதாபாத்திரத்திற்காக நடிகையை தேடியபோது, நக்கலைட்ஸில் உள்ள ஸ்ரீஜா நடிப்பு மிகவும் சரியாக இருக்கும் என தோன்றியது.

அதனால் ஸ்ரீஜாவை நேர்காணல் செய்தோம். அப்போது ஸ்ரீஜாவுடன் அவர்களின் நண்பர்கள் இருவர் வந்திருந்தனர்.

அவர்கள் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் படத்தில் சின்ன கதாபாத்திரங்கள் உள்ளது, நடிக்க விருப்பம் உள்ளதா என கேட்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.

சிறிய பாத்திரம் என்றாலும் மிகவும் சிறப்பாக அவர்களை பணியை செய்து கொடுத்தனர். நக்கலைட்ஸ் குழுவினர் அதி திறமைசாலிகள் அவர்கள் அனைவரும் இன்னும் நன்றாக வரவேண்டும்.

இப்படத்தில்
நக்கலைட்ஸ் குழுவினர் ராஜேஷ் ஶ்ரீஜா, அனிருத், கவி, அனீஷ், சிவன், வைத்தீஸ்வரி, நிவேதா ஆகியோர் சிறு பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் அவர்களது பகுதியை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள். ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா உடைய உதவியாளர் லோகையன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் பயணித்து வருகிறார். தீனதயாளன் என்ற இசையமைப்பாளர் இந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்தப்படத்திற்கு மிகப் பொருத்தமான, அற்புத இசையை தந்திருக்கிறார்.

அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருக்கும் வரும் பிப்ரவரி 19 உலகம் முழுவதும் மஸ்டர்பீஸ் கம்பெனி மூலம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Director Raja Sekar praises Actress Anandhi

ஹீரோவை விட அதிக சம்பளம் பெறும் வில்லன்..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

ஹீரோவை விட அதிக சம்பளம் பெறும் வில்லன்..; மாஸ் காட்டும் மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiசின்ன சின்ன வேடங்களில் வந்து செல்லும் துணை நடிகராக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் விஜய்சேதுபதி.

கதையின் நாயகனாக இவரின் அறிமுக படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ இந்தியளவில் பேசப்பட்டது.

பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் முதல் சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் விஜய்சேதுபதியை வித்தியாச சேதுபதியாக மாற்றியது.

ஈகோ பார்க்காமல் இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை என பல தோற்றங்களில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான நடிகராகிவிட்டார்.

இப்போதும் கூட காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் விஜய்சேதுபதி.

சினிமாவில் அவரின் அந்தஸ்து உயர உயர சம்பளமும் எகிறி வருகிறது.

இதுவரை 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கியவர் விஜய்சேதுபதி.

தற்போது ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் அதில் நாயகனாக நடிக்கும் இந்தி நடிகர் ஷாகித் கபூரை விட அதிக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

ஹீரோவுக்கு சம்பளம் ரூ.40 கோடி என கூறப்படுகிறது.

இந்த தொடரில் விஜய்சேதுபதிக்கு வில்லன் வேடமாம். இந்த தொடரில் ராஷிகன்னா நாயகியாக நடிக்கிறார்.

Vijay Sethupathi gets more salary than hero of the film

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..: ஏர்முனை கடவுள் விவசாயி – ஜிவி பிரகாஷ்..; அதிகாரத்தை வழங்கியது மக்களே.. – வெற்றிமாறன்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு..: ஏர்முனை கடவுள் விவசாயி – ஜிவி பிரகாஷ்..; அதிகாரத்தை வழங்கியது மக்களே.. – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash vetrimaaran (1)புதுடெல்லியில் கடந்த 75 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று போலீஸ் தடியடியுடன் கலவரமாக மாறியது.

இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர் விவசாயிகளில் சிலர்.

இன்று வரை தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வெளிநாட்டினர் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழக திரை பிரபலங்கள் எவரும் இது குறித்து பேசவில்லை.

இந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் விவசாயிகள் போராட்டம் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

தன் ட்விட்டர் பதிவில்…

“போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளக்கூறி வற்புறுத்துவது தற்கொலைக்குச் சமம்.

மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது ஜனநாயகமே. அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் தன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது…

“ஆள்பவர்களுக்கு மக்கள்தான் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அந்த அதிகாரம் மக்களின் நலனைக் காக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது.

தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கவே விவசாயிகள் முயற்சி செய்கின்றனர். தங்களுடைய உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அந்தப் போராட்டத்தை ஆதரிப்பதே ஜனநாயகம் ஆகும்”.

இவ்வாறு வெற்றிமாறன் பதிவிட்டுள்ளார்.

GV Prakash and Vetrimaaran supports Farmers

More Articles
Follows