கஜாவால் கடுமையான பாதிப்பு; அனைவரும் உதவ லாரன்ஸ் வேண்டுகோள்

கஜாவால் கடுமையான பாதிப்பு; அனைவரும் உதவ லாரன்ஸ் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

All Tamil peoples must help Gaja cyclone affected peoples says Lawranceகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பகுதி மக்களை சந்தித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

அதன்பின்னர் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

அன்பு நண்பர்களுக்கு

வணக்கம்…

கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னூருக்கு வந்து பார்த்தேன்.

நாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்..

நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு. அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும். அவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வர வேண்டும். இது தான் என் தாழ்மையான வேண்டுகோள்…

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

All Tamil peoples must help Gaja cyclone affected peoples says Lawrance

*மார்டல் இன்ஜின்ஸ்* டிசம்பர் 7ல் உலகமெங்கும் ரிலீஸாகிறது

*மார்டல் இன்ஜின்ஸ்* டிசம்பர் 7ல் உலகமெங்கும் ரிலீஸாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mortal Engines release on 7th December 2018 Worldwideமார்டல் இன்ஜின்ஸ்… இதே பெயரில், பிலிப் ரீவ் எழழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம்.

‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், ‘தி ஹாபிட்’ தொடர் படங்கள் போன்ற மகத்தான படைப்புகளைப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கித் திரையில் உலா விட்ட பீட்டர் ஜாக்சன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன் வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். இப்படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது!

விஞ்ஞான ரீதியிலான சில நிகழ்வுகளின் விளைவாக, மனித குலமே உருமாறி பல மாறுதல்களை ஆரத் தழுவிக் கொண்ட ஒரு காலகட்டம். ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், கொலை செய்தும் வாழ்கிற ஒரு சூழல்.

ஹெல்டர் ஷா (ஹிரா ஹில்மர்) என்கிற ஒரு பெண், எதிர்பாராத விதத்தில் அங்கு வந்து சேர்கிறாள். அச்சமய, அவல, ஆபத்தான சூழ்நிலையை ஆளுகை செய்து வழி நடத்தவல்ல சக்தி அவளிடம் மட்டுமே உள்ளது!

வெளி உலக அனுபவம் அதிகமில்லாத ஓர் அப்பாவி, 16 வயது நிரம்பிய டாம் நேட்ஸ்வொர்த்தி. லண்டனில் வாழ்பவன்.

ஒரு கட்டத்தில், ஹஸ்டரும் டாமும் சந்திக்க நேரிடுகிறது. ஹெஸ்டர், தனது தாயின் மரணத்திற்குக் காரணமானவன் எனக் கருதும் தேடஸ் வெலண்டின் (ஹூகோ வீவிங்) என்பவனைக் கொல்ல முற்பட, சந்தர்ப்பவசத்தால், டாம் இடையில் வர, ஹெஸ்டரின் திட்டம் செயலிழந்து விடுகிறது!

இவர்கள் இருவரும், ஆனா ஃபாங் (ஜிஹா) என்கிற தேடப்படும் ஒரு பெண் குற்றவாளியோடு இணைந்து, எதிரிகளைச் சமாளித்து வெல்ல புதியதொரு திட்டம் தீட்டுகிறார்கள்.

ஒளிப்பதிவு – சைமன் ராபி; இசை – ஜன்கி XL; இயக்கம் – கிறிஸ்டியன் ரிவர்ஸ்.

வெளியீடு – December 7th
உருவாக்கம் – Universal Pictures
வெளியீடு – Hansa Pictures

Mortal Engines release on 7th December 2018 Worldwide

இணையத்தை கலக்கும் *கனா* டிரைலர்; 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்!

இணையத்தை கலக்கும் *கனா* டிரைலர்; 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans Kanaa trailer crossed 3 Million viewsசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் ‘கனா’ திரைப்படம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஒரு தனித்துவமான திரைப்படம்.

இயக்குனர் அருண்ராஜா காமராஜ், வெற்றியை நோக்கிய ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கூடுதலாக, ஒரு தந்தை தன் மகளின் கனவுகளை நிறைவேற்றுவதில் அவளுக்கு பக்க பலமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்த படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது.

இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, “எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு நன்றி” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “பெண்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் கடின உழைப்பு ஆகியவை எப்போதுமே நமக்கு உற்சாகம் அளிப்பதாகும்.

குறிப்பாக, அவர்கள் தடைகளை உடைத்து கிரிக்கெட்டில் சாதிப்பது. இது என் எண்ணம் மற்றும் நம்பிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் சமீபத்திய ஐ.சி.சி. டி 20 உலகக் கோப்பையில் இதை கண்டிருக்கிறது” என்றார்.

இந்த படத்தில் எமோஷன் பற்றி அவர் கூறும்போது, “இது வெறுமனே பெண்களின் கனவுகளையும் சாதனைகளையும் சொல்வதை தாண்டி, யதார்த்தமான முறையில் அவர்களுக்கு பின்னால் நின்று சாதிக்க துணையாக நிறபவர்களை சொல்லும் பற்றி சொல்லும் படமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

கனாவில் தந்தை மற்றும் மகள் இடையே உள்ள பிணைப்பு, முழு படத்தையும் எமோஷனால் அலங்கரித்திருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜ் மிக நிறைவாக செய்திருக்கிறார்.

சத்யராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட அத்தியாயங்கள் நிஜ வாழ்க்கையில் நம்மை பிரதிபலிப்பதோடு, ஊக்கமளிக்கும் என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

கனா படத்தின் இசை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Sivakarthikeyans Kanaa trailer crossed 3 Million views

பிரபாகரனின் வாழ்க்கை படத்தில் *சீறும் புலி*யாக பாபி சிம்ஹா

பிரபாகரனின் வாழ்க்கை படத்தில் *சீறும் புலி*யாக பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LTTE Prabhakarans biopic titled Seerum Puli Bobby Simha plays lead role

அண்மைக் காலமாக மறைந்த பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பது வாடிக்கையாக உள்ளது.

சாவித்ரியின் வாழ்க்கையை நடிகையர் திலகம் என்ற பெயரில் எடுத்தனர்.

தற்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுக்கப்பட முயற்சிகள் நடந்து வருகின்றது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மட்டும் கிட்டதட்ட 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உருவாகவுள்ளது.

ஸ்டூடியோ 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் பிரபாகரனாக நடிகர் பாபிசிம்ஹா நடிக்க இருக்கிறார்.

சீறும் புலி என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர்.

மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களையும் இலங்கையில் நடந்த கடைசிகட்ட போரை மையமாக வைத்து நீலம் என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீலம் படம் தணிக்கை அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளியாகவில்லை.

பிரபாகரனின் பிறந்தநாளில் சீறும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

அந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

LTTE Prabhakarans biopic titled Seerum Puli Bobby Simha plays lead role

பாகுபலி போல் 2.0 இருக்கும்; என் முதல் படம் போல் காத்திருக்கிறேன்.. : ரஜினி

பாகுபலி போல் 2.0 இருக்கும்; என் முதல் படம் போல் காத்திருக்கிறேன்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am eagerly waiting for 2pointO release like my first movie release says Rajiniரூ. 543 கோடியில் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 ஆண்டுகளுக்கு முன்பே மும்பையில் நடைபெற்றது.

இதன் பின்னர் ஒரு வருடம் கழித்து இசை வெளியீட்டு விழாவை துபாயில் பிரம்மாண்டமாக நடத்தினர்.

அண்மையில் சென்னையில் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதால் தெலுங்கு பிரஸ்மீட் வைக்கப்படவில்லை என தெலுங்கு திரையுலகினர் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ஐதராபாத்தில் 2.0 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது 1973ல் என் முதல் படமான அபூர்வ ராகங்கள் வெளியானது. என் முகத்தை முதன்முறையாக திரையில் பார்க்க ஆவலாக இருந்தேன்.

தற்போது 44 வருடங்களுக்கு பிறகு அதே உணர்வுடன் 2.0 படத்தை திரையில் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்.

பாகுபலி படத்தில் எப்படி அருமையான கதையுடன் கூடிய பிரம்மாண்டம் இருந்ததோ அதுபோல் 2.0 படத்திலும் நல்ல மெசேஜ் உடன் தொழில்நுட்ப பிரம்மாண்டம் இருக்கிறது” என ரஜினிகாந்த் பேசினார்.

I am eagerly waiting for 2pointO release like my first movie release says Rajini

விஜய்யின் உறவினர் இயக்கிய அக்னிதேவ் படத்தில் ஜெயா-சசி சர்ச்சை

விஜய்யின் உறவினர் இயக்கிய அக்னிதேவ் படத்தில் ஜெயா-சசி சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Agni Dev movie trailer slams TN Political leadersசர்கார் படத்தில் விஜய் பேசிய வசனங்கள் அதிமுக கட்சியினரை கொதிப்படைய வைத்தது.

தற்போது நடிகர் விஜய்யின் உறவினர் ஜான் பால்ராஜ் இயக்கியுள்ள அக்னி தேவ் படமும் நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

அதுப்பற்றிய விவரம் வருமாறு….

பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்துள்ள அக்னிதேவ் படத்தை ஜான் பால்ராஜ், மற்றும் சாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.

சியாண்டோ ஸ்டூடியோ மற்றம் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இதில் சகுந்தலாதேவி என்ற மிரட்டலான கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் மதுபாலா.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுபாலா தமிழில் நடிக்கும் படம் இது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குனிஞ்சி குனிஞ்சி நடிச்சா? நம்பிடுவேன் என நினைச்சீங்களா? என்றும் மதுபாலா மிரட்டும் தோனியில் கேட்கிறார் மதுபாலா.

அவருக்கு பின்னணியில் ஜெயலலிதாவிடன் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

எனவே இது ஜெயலலிதாவின் தோழி சசிகலா கேரக்டரை குறிக்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதில் ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Agni Dev movie trailer slams TN Political leaders

 

More Articles
Follows