இனிமேல் ஆக்‌ஷன் ரோலில் ரசிகர்களை மிரட்டுவேன்.. : நிகிஷா படேல்

இனிமேல் ஆக்‌ஷன் ரோலில் ரசிகர்களை மிரட்டுவேன்.. : நிகிஷா படேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nikesha Patel says about her action moviesதெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல்.

தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ மற்றும் ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா.

இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார்.

படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், ‘நான் ஒரு குத்துசண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது.

அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன்.

இனி வரும் காலங்களிலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களிலே களமிறங்கவிருக்கிறேன்’ என கூறுகிறார் நிகிஷா.

Actress Nikesha Patel says about her action movies

விஜய் ஜெயித்த கதை-யை புத்தகமாக வெளியிட்டார் சபீதா ஜோசப்

விஜய் ஜெயித்த கதை-யை புத்தகமாக வெளியிட்டார் சபீதா ஜோசப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Jeitha Kathai book written by Sabitha Josephநடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார்.

இந்நிலையில், விஜய் பற்றிய புத்தகம் ஒன்று ‘விஜய் ஜெயித்த கதை’ என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

இந்த புத்தகத்தை பத்திரிகையாளரும எழுத்தாளருமான சபீதா ஜோசப் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில் 1992-ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படம் வரை, அவர் கடந்து வந்த வெற்றி பயணங்களை பற்றி எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

Vijay Jeitha Kathai book written by Sabitha Joseph

த்ரிஷா விலகியதால் சாமி ஸ்கொயர் கதையில் அதிரடி மாற்றம்

த்ரிஷா விலகியதால் சாமி ஸ்கொயர் கதையில் அதிரடி மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trisha quit from Saamy Square So the story may be changedஹரி இயக்கத்தில் விக்ரம்-திரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியான படம் சாமி.

சுமார் ரூ.5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டதட்ட 6 மடங்கு லாபத்தை தயாரிப்பாளருக்கு அப்போது கொடுத்தது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தையும் ஹரி இயக்க விக்ரம் நடிக்கிறார்.

த்ரிஷாவுடன் மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ஆனால் தன் கேரக்டரில் வலுவில்லை என்பதால் த்ரிஷா விலக, இப்போது படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து த்ரிஷா மீது சம்பந்தப்பட்ட சங்கங்களில் புகார் அளித்தனர்.

ஆனால் த்ரிஷா தன் முடிவில் உறுதியாக இருக்க, சமரச முயற்சிகள் தோல்வி அடைந்தன.

எனவே படத்தின் ஆரம்பத்தில் த்ரிஷா இறந்து விடுவது போல் அவரது போட்டோவை காட்டி விடலாமா? அல்லது வேறு நாயகியை வைத்து படப்பிடிப்பை நடத்தலாமா? என படக்குழு கன்ப்யூஸனில் இருக்கிறதாம்.

Trisha quit from Saamy Square So the story may be changed

என் அரசியல் சந்தேகத்தை கேரள முதல்வர் தீர்த்து வைக்கிறார்… : கமல்

என் அரசியல் சந்தேகத்தை கேரள முதல்வர் தீர்த்து வைக்கிறார்… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala CM Pinarayi Vijayan is clearing my political doubts says Kamalhassanவருகிற பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் தன் அரசியல் கட்சி அறிவிப்பை அறிவிக்கிறார் கமல்ஹாசன்.

அதன்பின்னர் மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.

இந்நிலையில் தன் அரசியல் பணி பற்றி அவரின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழக அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது. வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்தது ரொம்பவே அதிகப்படியான தண்டனை.

போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுக்காக அறிஞர்கள், மற்றும் அது தொடர்பான விஞ்ஞானிகளை நாடப்போகிறேன்.

எனக்கு ஏற்படும் அரசியல் குறித்த சந்தேகங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்த்து வைக்கிறார்.

பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் கண்டிப்பாக நாங்கள் எங்கள் அணியில் சேர்த்துக் கொள்வோம்’ என்றார் கமல்ஹாசன்.

Kerala CM Pinarayi Vijayan is clearing my political doubts says Kamalhassan

அரசியலில் ரஜினியும் நானும் சேர்வது தேவையா?.. கமல் கேள்வி

அரசியலில் ரஜினியும் நானும் சேர்வது தேவையா?.. கமல் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal open talk about will he alliance with Rajini in Politicsசினிமாவில் மிகப்பெரிய இரு துருவங்களாக இருந்தபோதிலும் 40 ஆண்டு காலமாக நல்ல நட்புடன் ரஜினியும் கமலும் பழகி வருகின்றனர்.

தற்போது இருவரும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனையும் செய்து வருகிறார்கள்.

சினிமாவை போல் இவர்கள் அரசியலில் இணைந்து செயல்படுவார்களா? என்பதே இப்போது பலரின் கேள்வியாக உள்ளது.

தற்போது இந்த கூட்டணி குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.

‘ரஜினியும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.

இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா? என்று பார்க்க வேண்டும்.

மேலும் ரஜினியும் நானும் சேர்வது என்பது இப்போது எடுக்கக்கூடிய முடிவே கிடையாது. ரஜினியும் நானும் சேர்வது தேவையா? என்பதை இருவருமே யோசிக்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

Kamal open talk about will he alliance with Rajini in Politics

கொல்கத்தா சென்டிமெண்ட் பார்க்கும் விஜய்-முருகதாஸ்.?

கொல்கத்தா சென்டிமெண்ட் பார்க்கும் விஜய்-முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kolkata fight scene sentiment in Vijay 62 movieகத்தி மற்றும் துப்பாக்கி படங்களை தொடர்ந்து 3வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி இணைந்துள்ளது.

பெயரிப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதன் சூட்டிங் அண்மையில் சென்னையில் துவங்கியது.

அப்போது ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் ஒரு அதிரடியான குத்துப் பாடலை முருகதாஸ் படமாக்கினார்.

தற்போது படக்குழு கொல்கத்தா மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு அதிரடியான பயங்கர ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகின்றனர்.

மாபெரும் வெற்றி பெற்ற கத்தி படத்தின் ஒரு ஆக்ஷ்ன் சீன் அங்குதான் படமாக்கப்பட்டதாம்.

எனவே அந்த சென்ட்டிமெண்ட் காரணமாக தற்போதும் இது தொடர்வதாக கூறப்படுகிறது.

Kolkata fight scene sentiment in Vijay 62 movie

More Articles
Follows