நயன்தாராவுக்கு போட்டியாக கஸ்தூரி…? ஜெயிக்க போவது யாரு..?

நயன்தாராவுக்கு போட்டியாக கஸ்தூரி…? ஜெயிக்க போவது யாரு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சீசன் உள்ளது. ஒரு படம் ஹிட்டானால் அதுபோலவே பட படங்கள் உருவாகும்.

பேய் படங்கள் ஹிட்டானால் தொடர்ந்து பேய் படங்கள்… காமெடி படங்கள் ஹிட்டானால் காமெடி படங்கள்… காதல் படங்கள் ஹிட்டானால் காதல் படங்கள்.. ஆக்சன் படங்கள் ஹிட்டானால் ஆக்சன் படங்கள் உருவாகும்.

தற்போது அம்மன் சீசன் வந்துவிட்டது போல..

ஆர்ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன்.

இப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

தற்போது அவருக்கு போட்டியாக புதிய படமொன்றில் அம்மன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் கஸ்தூரி.

அந்த படத்திற்காக அம்மன் வேடத்தில் எடுத்த சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சபாஷ் சரியான அம்மன் போட்டி இருக்கும் போலவே…

Actress Kasthuri competes with Nayanthara

kasthuri nayanthara

தனுஷ் கால்ஷீட் இல்ல..; கௌதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்.?

தனுஷ் கால்ஷீட் இல்ல..; கௌதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

selvaraghavanஎன்ஜிகே படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார் என கூறப்பட்டது.

தனுஷ் கைவசம் நிறைய படங்கள் உள்ளதால் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறாராம்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கர்ணன், அத்ரங்கி ரே, கார்த்திக் நரேன் படம், ராம்குமார் படம் என தனுஷ் படங்கள் காத்திருக்கின்றன.

எனவே குறைந்த பட்ஜெட்டில் புதிய படமொன்றை இயக்க முடிவெடுத்துள்ளாராம் செல்வராகவன்.

அதில் ஹீரோவாக கௌதம் கார்த்திக் நடிப்பார் என கூறப்படுகிறது.

சூர்யா, சாய்பல்லவி, ராகுல் பரீத்தி சிங் நடித்த என்.ஜி.கே படத்தை இறுதியாக இயக்கி இருந்தார் செல்வராகவன்.

ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Director Selva Raghavan’s next film with Gautham Karthik

கதிரேசன் தயாரிப்பில் இணையும் லாரன்ஸ் & ஜிவி பிரகாஷ்

கதிரேசன் தயாரிப்பில் இணையும் லாரன்ஸ் & ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawrence gv prakashநடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ஹிந்தி படம் லட்சுமி பாம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இதில் ரஜினியின் 2.0 பட வில்லன் அக்சய்குமார் நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் நடிகராக தமிழுக்கு திரும்பியுள்ளார்.

இவர் நடிக்கும் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம் படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

முதன்முறையாக லாரன்ஸ் படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

படத்தின் இயக்குனர் யார்? ஒருவேளை லாரன்ஸ் இயக்குகிறாரா?

மற்ற விபரங்களை வருகிற அக்டோபர்.,29ல் படக்குழு அறிவிக்கவுள்ளது.

Raghava Lawrence’s next film update on october 29

ஓடிடி பயமில்லை.. தியேட்டர்களே வெற்றியை தீர்மானிக்கும்.. நடிகர்கள் தியேட்டருக்கு வரனும் – ‘ரோகினி’ பன்னீர் செல்வம்

ஓடிடி பயமில்லை.. தியேட்டர்களே வெற்றியை தீர்மானிக்கும்.. நடிகர்கள் தியேட்டருக்கு வரனும் – ‘ரோகினி’ பன்னீர் செல்வம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rohini panneerselvamகொரோனா ஊரடங்கால் கிட்டதட்ட 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் இன்னும் தமிழக அரசு இதுபற்றி வாய் திறக்கவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதாவது…

தியேட்டர்களை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் மாநில அரசு இதுவரை அனுமதியளிக்கவில்லை. விரைவில் அனுமதி அளிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.

ரசிகர்களால் தான் நாங்கள். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.

கொரோனா பிரச்சினையால் தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்கள் தியேட்டருக்கு வர அச்சம் கொள்வார்கள்.

அப்போது நடிகர், நடிகைகள் தியேட்டருக்கு வந்தால், அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்தால் அவர்களே வருகிறார்களே என்று தைரியமாக ரசிகர்களும், பொதுமக்களும் தியேட்டருக்கு வருவார்கள்.

ஓடிடி தளங்கள் பற்றி முதலில் எங்களுக்கு பயம் இருந்தது.

கொரோனா காலத்தில் 15 தமிழ் படங்கள் ஒடிடியில் வெளிவந்துள்ளது. ஆனால் அவைகள் வந்ததும் போனதும் தெரியவில்லை.

மக்கள் தியேட்டரைத் தான் விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தியேட்டர்கள் தான் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.

இவ்வாறு ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Rohini Panneer Selvam about movies releasing in OTT

இலங்கையில் பாட SPB அனுமதி கேட்டாரு..; விஜய்சேதுபதியை அச்சுறுத்தவில்லை.. பெண்களை திருமா இழிவுப்படுத்தவில்லை.. – சீமான்

இலங்கையில் பாட SPB அனுமதி கேட்டாரு..; விஜய்சேதுபதியை அச்சுறுத்தவில்லை.. பெண்களை திருமா இழிவுப்படுத்தவில்லை.. – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanசுதந்திர போராட்ட வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.

அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

“பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட SPB க்கு வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, “போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி” என்று என்னிடம் கேட்டார்.

மனுஸ்மிருதியில் பெண்களை இழிவு படுத்தி பேசப்பட்டிருக்கிறது என்பதுதான் சொன்னாரே தவிர திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசவில்லை.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

அவரின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அறிவுறுத்துனோம்.

அறிவுறுத்தல் இருந்ததே தவிர அச்சுறுத்தல் இல்லை”

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

NTK leader Seeman supports Thiruma Valavan’s statement

தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது? முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது எப்போது? முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

தற்போது தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெக்கு வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் வகுப்பு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், 9 முதல் 12 வகுப்பு பள்ளிகளை திறந்து மாணவர்களின் பாட சந்தேகங்களை ஆசிரியர்கள் தீர்த்து வருகின்றனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது? என்பது குறித்து முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நாளை முடிவாக உள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் தலைமையில் நாளை நடக்கும் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.

நாளை அக்டோபர் 28ல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பள்ளிகள் முழுமையாக திறப்பது குறித்தும் மாணவர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் விநியோகம் குறித்தும் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest update on schools and colleges re opening in TN

More Articles
Follows