‘அவள் அப்படித்தான்’… சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் பிரபல தொகுப்பாளினி

‘அவள் அப்படித்தான்’… சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் பிரபல தொகுப்பாளினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1979ல் ‘வண்டிச்சக்கரம்’ பட மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சில்க் ஸ்மிதா.

கமல் & ரஜினி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 450 படங்களுக்கு மேல் நடித்தவர்.

இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அப்போதே அது மிகப்பெரிய சர்ச்சையானது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை வித்யா பாலனை வைத்து ‘தி டர்ட்டி பிக்சர்’ என்கிற பெயரில் ஹிந்தியில் உருவாக்கினர். அந்த படமும் நன்றாக பேசப்பட்டது.

ஆனால் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தவறாக காண்பித்தனர் என்று விமர்சனம் எழுந்தது.

ஆனாலும் வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது.

பின்னர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்க நடிகர் வினு சக்ரவர்த்தி முயற்சித்தார்.

ஆனால் அது பேச்சோடு நின்றது. நடக்கவில்லை.

இந்நிலையில் சில்க் வாழ்க்கை படம் ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட புகழ் மணிகண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல தெலுங்கு டிவி தொகுப்பாளினியும் தெலுங்கு நடிகையுமான அனசுயா பரத்வாஜ் தான் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததற்காக விருது பெற்றவர் அனசுயா.

காயத்ரி பிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அண்மையில் விஜய் சேதுபதியின் அருகில் நிற்கும் படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில் புதிய தொடக்கம்.. கோலிவுட் என கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Anasuya Bharadwaj to play the lead role in Silk Smitha’s Telugu biopic

anasuya bharadwaj latest photos

முகத்தில் ரத்த காயங்கள்.. 2 மாதம் முன்பே ரகசிய திருமணம்..; சித்ரா தற்கொலை சீக்ரெட்ஸ்..

முகத்தில் ரத்த காயங்கள்.. 2 மாதம் முன்பே ரகசிய திருமணம்..; சித்ரா தற்கொலை சீக்ரெட்ஸ்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Chitraபாண்டியன் ஸ்டோர் டிவி சீரியல் மூலம் மிக பிரபலமானவர் நடிகை சித்ரா.

பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளனியாகவும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் இன்று அதிகாலை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்துக் கொண்டார். அப்போது அவருக்கு நிச்சயிக்கப்பட்ட கணவர் ஹேமந்த் உடனிருந்துள்ளார்.

சித்து மறைவுக்கு அவருடன் நடித்த நடிகர், நடிகைகளும், விஜய்டிவி பிரபலங்களும், ரசிகர் ரசிகைகளும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது.. இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும் ஹேமந்த்க்கும் ரிஜிஸ்டர் திருமணம் நடைபெற்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா புகைப்பட ஆல்பம்

2021 பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்யவிருந்தார்.

என் மகள் சித்ரா முகத்தில் காயம் இருந்தது.

அவர் மரணத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

யார் மீதும் சந்தேகம் இல்லை. போலீஸ்தான் அதை விசாரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

நாளை சித்ராவின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

The reason behind serial actress Chitra suicide

அரசியலில் கமல் & ரஜினி..; சிம்மக்குரலோன் சிவாஜியோடு ஒப்பீட கூடாது..; நாசர் வேதனை

அரசியலில் கமல் & ரஜினி..; சிம்மக்குரலோன் சிவாஜியோடு ஒப்பீட கூடாது..; நாசர் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor nasserதென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

“சிவாஜி ஐயா அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வரம்.

பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேசவைத்ததிலும் திரை நடிப்பு கலையில் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர்.

அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழ்த்திரை அப்படியொரு கம்பீரமான குரல் கேட்டதில்லை.

சிம்மக்குரல் என்பது சும்மா கொடுத்த பட்டமன்று.

சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும் நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியது அவர் பால் அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறது.

தேர்தல் காலம் இது. நெருங்கி வருகின்ற இவ்வேளையில் , திரைத்துறையில் இருந்து பலரும் அரசியல் களமிறங்குகின்றன.

சிவாஜி ஐயாவின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தனமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.

அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு. பெரும்தலைவர்களோடு பழகியும்.. புரிந்தும் வந்தவர் .

அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார்.

இனியும் அவர் பெயரை கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டுமென்று ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் சார்பாய் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாசர் கூறினார் .

சமீபத்தில் நடிகர் சங்கத்தில் நடந்த தீ விபத்தைப்பற்றி அவரிடம் கேட்ட போது…

“அது விபத்து தான் என்றும் முக்கிய ஆவணங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதென்றும் .. உரிய நேரத்தில் கடமையாற்றிய தீயணைப்பு துறைக்கும் அரசு பொறுப்பு அதிகாரிக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் நாசர் .

Actor Nasser requests netizens not to compare Rajini and Kamal politics to Sivaji

பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாருக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் தூக்குவாளியில் உணவு வழங்கும் ரஜினி ஃபேமிலி

பாதுகாப்புக்கு இருக்கும் போலீசாருக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் தூக்குவாளியில் உணவு வழங்கும் ரஜினி ஃபேமிலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Police security at Rajinikanth houseதமிழகமே எதிர்பார்த்த தன் அரசியல் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

கட்சி கொடி சின்னம் தொடர்பான விவரங்களை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரஜினியுடைய போயஸ் கார்டன் இல்லம் & தெருவிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

12-15 தமிழக போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த போலீசாருக்கு ரஜினி இல்லத்திலிருந்து (பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல்) தூக்குவாளி மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மதியம் உணவை தொடர்ந்து மாலை நேரங்களில் டீ & காபி வழங்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் வீட்டு உணவு கிடைத்த உற்சாகத்தில் போலீசாரும் உற்சாகமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rajinikanth family provides lunch and evening snacks to police security guards

400 ஏழை மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கிய அர்ஷிதா & குனிஷாவுக்கு பாராட்டு..; புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதியில்லை.. – கமல்ஹாசன்

400 ஏழை மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கிய அர்ஷிதா & குனிஷாவுக்கு பாராட்டு..; புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதியில்லை.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள் & கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக (மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை) மூடப்பட்டுள்ளன.

தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன.

கல்லூரிகளில் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் இவை இரண்டையும் குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன் ட்வீட்டில் பதிவிட்டுள்ளதாவது…

இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்பிற்கு திறன்பேசி வாங்க வசதியற்ற ஏழை மாணவர்களுக்காக, “ஹெல்ப் சென்னை” அமைப்பைத் தொடங்கி பயன்படுத்தப்பட்ட திறன்பேசிகளை தானமாகப் பெற்று 400 மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய அர்ஷிதா அகர்வால், குனிஷா அகர்வால் இருவரையும் பாராட்டுகிறேன்.

Kamal praises helpline social activists, Arshitha Aggarwal and Kunisha Aggarwal

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ரா தற்கொலை; வருங்கால கணவருடன் பிரச்சினை?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ரா தற்கொலை; வருங்கால கணவருடன் பிரச்சினை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandian Stores fame VJ Actress Chitra suicideவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் சித்ரா. 1992ம் ஆண்டு மே 2ஆம் தேதி பிறந்தவர்.

இவர் நடிகையாவதற்கு முனபு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தார்.

2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர்.

நடனம், மாடலிங் என பல திறமைகளை கொண்டவர். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடிகை நிரோஷாவுடன் நடித்தும் வந்தார்.

சின்னத்திரையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. வருங்கால கணவரின் பெயர் ஹேமந்த் ரவி.

இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்துகொண்டார் சித்ரா. நேற்று நள்ளிரவில் சூட்டிங் முடிந்து அறைக்கு திரும்பியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா புகைப்பட ஆல்பம்

அப்போது ரூமில் வருங்கால கணவரும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது- அதிகாலை பாத்ரூம் சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் சித்ரா கதவை திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமந்த் ஓட்டல் நிர்வாகிகளிடம் கூற அவர்கள் கதவை திறந்துள்ளனர்.

அப்போது சித்ரா தூக்கில் தொங்கியதை கண்டுள்ளனர். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது-

தற்கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தன் சீரியல் துறையில் பிரச்சினையா? வருங்கால கணவருடன் பிரச்னையா, உள்ளிட்ட கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

சித்ராவின் திடீர் மறைவுக்கு நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Pandian Stores fame VJ Actress Chitra suicide

More Articles
Follows