*பொத்திட்டு இருந்தாலே கெத்தோட வாழலாம்..* – யோகிபாபு கலகல

*பொத்திட்டு இருந்தாலே கெத்தோட வாழலாம்..* – யோகிபாபு கலகல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Yogi Babu reveals his hair style secret and cinema experienceகுறுகிய காலத்தில் 100 படங்களை தொட்டுவிட்டார் நடிகர் யோகிபாபு.

தான் நடித்த பட பிரஸ்மீட்டுக்கு கூட வரமுடியாத அளவுக்கு மனிதர் படு பிஸியாகிவிட்டார்.

தற்போது விஜய்யுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவரது பேட்டியில்…

எனக்கு ரோல் மாடல் யாரும் கிடையாது. கவுண்டமணி, செந்தில் இருவரையும் ரொம்ப பிடிக்கும்.

நல்ல நல்ல இயக்குனர்கள் எனக்கு கிடைச்சாங்க. மக்களுக்கும் என்னைப் புடிச்சிட்டு.

எனக்கு காமெடி வசனங்கள் எழுத எந்த அணியும் கிடையாது. டைரக்டர் சொல்றதை செய்றேன்.

ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன தோணுதோ, அதை செய்றேன். சில நேரம் நாம அடிக்கிற டைம்மிங் காமெடியும் ஒர்க் அவுட் ஆகுது.

அவங்களுக்குப் பிடிக்குது. எல்லா இடத்திலுமே சோலோதான்.

என் தலைமுடிக்கு நான் பெருசா மெனக்கடுறதில்ல. லோக்கல் ஷாம்பூ, புலி மார்க் சீயக்காய் தூள்தான் போடுறேன்.

எப்பவும் சினிமாவுல காமெடியனாக இருப்பேன். என்னைய வெச்சு எப்படி காமெடி செய்யலாம்னு என் டைரக்டர்களுக்கு தெரியும். நாம பொத்திகிட்டு இருந்தாலே கெத்தோட வாழலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

Actor Yogi Babu reveals his hair style secret and cinema experience

3 டைரக்டர்களிடம் மட்டும் கதை கேட்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி

3 டைரக்டர்களிடம் மட்டும் கதை கேட்காமல் நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi wont ask story line with 3 directorsபல முன்னணி ஹீரோக்கள் ஏற்கத் தயங்கும் கேரக்டர்களை ஏற்று அசால்ட்டாக செய்து வருபவர் விஜய்சேதுபதி.

ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி ஹீரோக்களிள் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.

இருந்தபோதிலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் என்பதால் கதையை கேட்காமல் கூட உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

மேலும் அது ரஜினிகாந்த் படம். அவரிடம் அடி வாங்கி வீழ்வது கூட பெருமையே.

கார்த்திக் சுப்பராஜைப் போல் சீனுராமசாமி, மணிகண்டன் ஆகியோரிடமும் கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக்கொள்வேன்.” என தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi wont ask story line with 3 directors

பிரபல டிவியின் *மெகா ஐகான்ஸ்* நிகழ்ச்சியில் கமல்-வீராட்கோலி

பிரபல டிவியின் *மெகா ஐகான்ஸ்* நிகழ்ச்சியில் கமல்-வீராட்கோலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and Virat Kohli are the first Mega Icons in National Geographicநே‌ஷனல் ஜியாகிரபி சேனலில் ‘மெகா ஐகான்ஸ்’ என்ற பெயரில் ஒரு புதிய தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இதில் ஒவ்வொரு துறையில் சாதித்த ஆளுமைகள் பற்றிய பதிவுகள் இடம் பெறவுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

இந்தத் தொடரில் பிரபலங்களின் பின்புலம், சூழல், அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள், புள்ளிவிவரங்கள், கள ஆய்வுகள், நிபுணர்களுடைய ஆய்வு முடிவுகள் ஆகியவற்றையும் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Kamal and Virat Kohli are the first Mega Icons in National Geographic

*கடைக்குட்டி சிங்கம்* கார்த்தி சொன்னதை நிறைவேற்றிய தமிழக அரசு

*கடைக்குட்டி சிங்கம்* கார்த்தி சொன்னதை நிறைவேற்றிய தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Celluloid Representation Of Kadaikutty Singam On Farming Products Becomes A Reality In Tamil Nadu Nowசூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் “கடைக்குட்டி சிங்கம்“.

இப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகிறார்கள்.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார்.

அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவார். நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார்.

இதன் பிரதிபலிப்பாக தற்போது தமிழக அரசு தற்போது இலவசமாக விவசாய பொருட்களை பேருந்தில் ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது.

இதனை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Celluloid Representation Of Kadaikutty Singam On Farming Products Becomes A Reality In Tamil Nadu Now

மகேந்திரன் நடிக்கும் *இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்*

மகேந்திரன் நடிக்கும் *இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahendran starring Ithukkuthana Naan Appave Sonnen movie news updatesகுளோபல் பிலிம்ஸ் சார்பில் தொழிலதிபர் டில்லி ஆர்.சிவா தயாரித்துள்ள படம் ‘இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்’.

மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் புதுமுகம் திவ்யா ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர், ‘லொள்ளு சபா’ மனோகர், மூர்த்தி, ஈ. ராமதாஸ், நெல்லை சிவா, ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.ஆர். சிவா இயக்குனராக அறிமுகமாகிறார்.

படம் குறித்து இயக்குனர் ஏ.ஆர். சிவா கூறுகையில்…

”நண்பர்கள் மூவருடன் ஊரில் சுற்றிக்கொண்டு இருப்பவர் மகேந்திரன். இவர்கள் சீரியசாக செய்யும் வேலைகள் எல்லாம் காமெடியில் முடியும்.

இதனால் இவர்களின் அட்டூழியங்களை தாங்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

மகேந்திரனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்து அவனது சேட்டைகளுக்கு முடிவு கட்ட நினைக்கிறார் அவரது தாய்மாமன்.

திருமணம் செய்து கொண்டால் தனது சுதந்திரமே பறிபோய் விடுமே என்று எண்ணி மாமாவிடம் கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார்.

அதற்கு அவரது மாமாவோ, “நான் சொல்ற வேலைய வெற்றிகரமாக முடித்தால் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன், முடிக்கவில்லை என்றால் என் மகளை உனக்கு கட்டி வைத்து விடுவேன்” என்று கூற, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை மிகுந்த நகைச்சுவையுடன் கூறியிருக்கிறோம்” என்றார்.

Mahendran starring Ithukkuthana Naan Appave Sonnen movie news updates

ரஜினி-கமலுக்கு ஆதரவு; மகேந்திரன் நடித்துள்ள பட விழாவில் தாணு பேச்சு

ரஜினி-கமலுக்கு ஆதரவு; மகேந்திரன் நடித்துள்ள பட விழாவில் தாணு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Kalaipuli Thanu welcomes Rajini and Kamal political Entryகுளோபல் பிலிம்ஸ் சார்பில் தொழிலதிபர் டில்லி ஆர்.சிவா தயாரித்துள்ள படம் ‘இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்’.

மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் புதுமுகம் திவ்யா ஹீரோயி-னாக நடிக்கிறார்.

இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர், ‘லொள்ளு சபா’ மனோ¬கர், மூர்த்தி, ஈ. ராமதாஸ், நெல்லை சிவா, டில்லி ஆர். சிவா, முத்துக்¬காளை, சுப்புராஜ், டவுட் செந்தில், மிப்பு, கலக்கல் சத்யா ஆகியோ¬ரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்¬கதை, வசனம் எழுதி ஏ.ஆர். சிவா இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலைப்புலி தாணு, கலைப்புலி ஜி.சேகரன், ஜாக்குவர் தங்கம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

கலைப்புலி ஜி. சேகரன் பேசும்போது…

திரையுலகில் பல பிரச்சினைகள் உள்ளது. ஆனால் அதை தடுக்காமல் ரஜினி, கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு செல்ல நினைக்கிறேன் என பேசினார்.

அதற்கு அடுத்து பேசிய கலைப்புலி தாணு அவர்கள் கூறியதாவது…

அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் கலைத்துறையில் இருந்துதான் அரசியலுக்கு வந்தனர்.

அவர்கள் தமிழகத்தில் நல்லாட்சியை கொடுத்தனர். அதுப்போல் நம் துறையில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வருவதை வரவேற்க வேண்டும்.

ரஜினி, கமல் அவர்கள் அரசியலுக்கு வந்து நல்லாட்சியை கொடுக்க விரும்புகின்றனர். அதை நாம் வரவேற்க வேண்டும்” என பேசினார்.

Producer Kalaipuli Thanu welcomes Rajini and Kamal political Entry

Ithukkuthana Naan Appave Sonnen

More Articles
Follows