தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பே அறிவித்தனர்.
ஆனால் இந்த படத்திற்கு விமானப்படை தரப்பிலிருந்து தடையில்லாச் சான்றிதழ் வருவது தாமதமானது.
இதனையடுத்து ‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தள்ளிபோகும் என அறிவித்து அது தொடர்பான தனது வருத்தத்தை அறிக்கையாக வெளியிட்டார் சூர்யா.
இதன்பின்னர் ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது என அறிவித்தனர்.
எனவே ட்ரெய்லர் மற்றும் இதர பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
மேலும் தீபாவளி வெளியீடாக ‘சூரரைப் போற்று’ படத்தை ரிலீஸ் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு ‘சூரரைப் போற்று’ டிரைலர் வெளியாகும் என்ற அறிவிப்பை பேப்பர் ராக்கெட் செய்துக் கொண்டே ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார் சூர்யா.
The wait is over! Trailer out on Oct 26, 10 AM ✈️
Here’s the premiere link, set your reminder!https://t.co/lT6tUzrwnC#SooraraiPottruOnPrime @PrimeVideoIN #SudhaKongara @gvprakash @Aparnabala2@nikethbommi @deepakbhojraj @2D_ENTPVTLTD @rajsekarpandian @guneetm @SonyMusicSouth pic.twitter.com/xHrfdW1cYB— Suriya Sivakumar (@Suriya_offl) October 24, 2020
Actor Suriya announces when ‘Soorarai Pottru’ trailer would be out