25 கிலோ எடையை குறைக்கும் டாப் ஸ்டார்,; பிரமிக்க வைக்கும் பிரசாந்த்

25 கிலோ எடையை குறைக்கும் டாப் ஸ்டார்,; பிரமிக்க வைக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Prashanth lost his weight for Mohan raja movieஆயுஷ்மன் குரானா, தபு ஆகியோர் நடித்திருந்த ‘அந்தாதுன்’ என்ற ஹிந்தி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 3 தேசிய விருதுகளையும் வென்றது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி உருவான நிலையில் இதன் உரிமையை டாப் ஸ்டார் பிரசாந்த் கைப்பற்றினார்.

அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் பிரசாந்த்

இவரின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் அந்த ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.

இந்த படத்தை தமிழில் மோகன் ராஜா இயக்கவுள்ளார் என்பதை நம் தளத்தில் சில தினங்களுக்கு முன் பதிவிட்டு இருந்தோம்.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

மீண்டும் மீண்டும் அழகிகளுடன் ஜோடி போடும் பிரசாந்த்

இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரசாந்த் தன் உடல் எடையை 25 கிலோ குறைத்து வருகிறாராம்.

விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ஆக.. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும்போது பிரமிக்க வைப்பார் பிரசாந்த் என நம்பலாம்.

பிரகாசிக்கும் பிரசாந்த்… ஜானி விமர்சனம்

Actor Prashanth lost his weight for Mohan raja movie

ரஜினி பட வழக்கில் உண்மை வென்றது..; ‘லிங்கா’ தயாரிப்பாளர் ஹாப்பி

ரஜினி பட வழக்கில் உண்மை வென்றது..; ‘லிங்கா’ தயாரிப்பாளர் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rockline Venkatesh is happy with Judgement in Linga Story caseமுத்து, படையப்பா ஆகிய படங்களை அடுத்து லிங்கா படத்தில் ரஜினி மற்றும் கேஎஸ் ரவிக்குமார் இணைந்திருந்தனர்.

இந்த படம் கடந்த 2014ல் ரஜினி பிறந்தநாளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.

இப்பட கதை தன்னுடையது என்று மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து லிங்கா பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறியதாவது:

“இயக்குநர் ரவிரத்தினம் தொடுத்த வழக்கை ரத்துசெய்யக்கோரி, ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தேன்.

மதுரை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் ‘லிங்கா’ கதை உரிமம் தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

ரூ.10 கோடி காப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு லிங்கா திரைப்படத்தை வெளியிடலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அப்போது உத்தரவிட்டது.

தற்போது கோர்ட் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வெளியாகியுள்ளது .

ரஜினி சார் படம் வெளியாகும் போது இப்படி பிரச்சினைகள் வரும்.

ஆனால் எங்கள் படத்தில் இடம் பெறும் “உண்மை ஒருநாள் வெல்லும்.. இந்த உலகம் உன் பேர் சொல்லும்” பாடலை போல் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது’ என ராக்லைன் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

Rockline Venkatesh is happy with Judgement in Linga Story case

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் நாளை தீர்ப்பு

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் நாளை தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High Court judgement tomorrow on Nadigar sangam election result casesகடந்த 2019 ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதற்கு முன்பே சில உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் ஜூன் 19ஆம் தேதி தேர்தலை நிறுத்து வைத்து உத்தரவிட்டார் மாவட்ட பதிவாளர்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தேர்தலை மட்டும் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தான் 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் வாக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சங்க அனைத்து வழக்குகளிலும் நாளை 2020 ஜனவரி 24ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த தீர்ப்பை நீதிபதி கல்யாண சுந்தரம் அளிக்கவுள்ளார்.

நடிகர் சங்க தேர்தல், தேர்தல் ரத்து செய்ய கோரிய வழக்கு, தனி அதிகாரி நியமனம் உள்ளிட்ட பல வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கிறார்.

High Court judgement tomorrow on Nadigar sangam election result cases

என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு அங்க 2 இன்ச் கம்மி.. – ராதிகா சரத்குமார்

என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு அங்க 2 இன்ச் கம்மி.. – ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radhika talks about Aishwarya rai at Vaanam Kottattum eventமணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனசேகரன் என் தனா இயக்கியுள்ள படம் ‘வானம் கொட்டட்டும்’.

இந்த படத்தை தன் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக மணிரத்னம் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, சரத்குமார், ராதிகா, வேலையில்லா பட்டாதாரி படத்தில் நடித்த அமிதாஷ் பிரேதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சித் ஸ்ரீராம்.

இந்த பட டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள ஆண்டாள் பள்ளியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் மேடையேறி பேசினார்.

சரத்குமார் பேசியதாவது…

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசில் நடிப்பது சந்தோஷம். அவரது தயாரிப்பில் நடித்தால் சிறந்த கலைஞருக்கான அடையாளம் கிடைத்துவிடும்.

ராதிகா பேசியதாவது…

மணிரத்னத்தின் 2வது படத்தில் என்னை பரதநாட்டிய கலைஞராக நடிக்க வைத்தார் மணி. அப்போது அழுதே விட்டார்.

அதன்பின்னர் நிறைய படங்களில் என்னை நினைத்து தான் கேரக்டரை வடிவமைப்பார். ஆனால் என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு அங்க அங்க 2 இன்ச் கம்மியாக இருப்பதால் அவரையே நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இந்த படம் நன்றாக வந்துள்ளது. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.

நான் பார்த்தபோது விக்ரம் பிரபு குட்டி பையன். என் வயதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. அன்று அவரது அப்பாவுடன் நடித்துள்ளேன். இன்று இவருடன் நடித்துவிட்டேன்” என பேசினார் ராதிகா.

இந்த படத்தை பிப்ரவரி 7-ம் தேதி திரைக்கு கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Radhika talks about Aishwarya rai at Vaanam Kottattum event

Vaanam Kottattum

 

இந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்

இந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையுடன் வெளியாகும் டே நைட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

day knightஅத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும் அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர்.

டே நைட் படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. மிகக்குறைந்த முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள்.

இது ஒரு சைக்கோ திரில்லர் படம் என்பதை விட மர்டர் மிஸ்டரி படம் என்று சொல்லலாம். பாடல் காட்சிகள் எதும் இப்படத்தில் இல்லை. ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.

படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம்’. நான் சினிமாவை மட்டும் தான் நேசிக்கிறேன். இந்தப்படத்தின் கதை என்னவென்றால் எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல் கொடூரமானது’ என்றார்.

நடிகரும் தயாரிப்பாளருமான ஆதர்ஷ் இப்படம் குறித்து கூறும்போது, ‘எங்களுக்கு சினிமா பின்புலம் எதுவும் கிடையாது. அரசியல் பவரும் கிடையாது. 7 லட்சம் ரூபாயில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். இயக்குனர் என்.கே.கண்டிக்கு மிகப்பெரிய திறமை உண்டு. சரியான ஹீரோ, பட்ஜெட் கிடைத்தால் இவர் மிகப்பெரிய இயக்குனர் வரிசையில் இருப்பார். வெறும் பத்து லட்சம் ரூபாயில் இவ்வளவு குவாலிட்டியாக படம் எடுத்த இயக்குனர் கண்டிக்கு நன்றி. இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் எங்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று நம்புகிறோம். முழுக்க முழுக்க சினிமா மேல் இருக்கிற காதல் காரணமாகத் தான் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்து தயாரித்து நடித்துள்ளேன்’ என்றார்.

அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். ஏவிஎஸ் பிரேம் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஆதர்ஷ், ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.கே.கண்டி இயக்கியுள்ளார். ஜோஜோ மற்றும் ரியா சௌத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

“83” படத்தில் இணைந்த கமலஹாசன்!

“83” படத்தில் இணைந்த கமலஹாசன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanகமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமாகிய ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட், ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து இவ்வாண்டின் வெகு முக்கிய படைப்பான “83” படத்தின் தமிழ் பதிப்பை வழங்குகிறார்கள்.
இந்திய சினிமாவில் சரித்திரம் படைத்த பன்முகத்தன்மை கொண்ட நாயகனாக விளங்ககூடியவர் கமலஹாசன். அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் ( Rajkamal Films International ) தயாரிக்கும் மற்றும் வழங்கும் படங்கள்,எப்போதும் தரமும் தனித்தன்மை ஒருங்கே கொண்டதாக இருக்கும்.

அந்த வகையில் “83” படத்தை தமிழில் வழங்குவது குறித்து திரு. கமலஹாசன் கூறியதாவது…
83 படத்தை தமிழில் வழங்குவதில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும் பெருமையும் கொள்கிறேன். அது மட்டும் அல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில் இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு. முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கையும், மனத்திடமும், இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த கதையை, கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி, உலககோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி.

தொடர்ந்து கதை அம்சமுள்ள , மற்றும் வெகு ஜன ரசனைக்கேற்ப படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தியில் தயாரித்து வரும் Y Not ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் இந்தப் படத்தை விநியோகம் செய்ய உள்ளார்.

Y not studios தயாரிப்பாளர் சசிகாந்த் கூறியதாவது….
“83” படத்தின் தமிழ்பதிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் வழங்குவது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரும் பெருமை. “83” படம் கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடும் ஒரு படம். கிரிக்கெட் சாதாரணமான விளையாட்டல்ல. அது இந்திய மக்கள் அனைவரும் பேதமின்றி பூஜிக்கும் மதம் ஆகும். இந்தியாவிற்கு உலககோப்பையை கொண்டு வந்த வீரர்களை திரையில் மீட்டுருவாக்கம் செய்வது மிகப்பெரும் பெருமை. அந்த வீரர்கள் இப்படத்தின் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்திருப்பது எங்கள் அனைவருக்கும் பெருமை. இப்படி ஒரு படத்தை தமிழில் இணைந்து விநியோகிப்பதில் எங்கள் நிறுவனம் இணைந்திருப்பது மிகப்பெரும் கௌரவம் என்றார்.

இயக்குநர் கபீர்கான் கூறியதாவது…
திரு கமல்ஹாசன் அவர்களையும் திரு சசிகாந்த் அவர்களையும் பெரும் மகிழ்ச்சியுடன் எங்கள் அணிக்கு வரவேற்கிறேன். இருவரும் எங்கள் படத்தின் பதிப்பை இணைந்து வழங்குவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் ஆகும். மிகப்பெரும் நிறுவனங்கள் இணைந்திருப்பதால் தமிழில் இப்படம் மிகப்பெரிய வெளியீட்டை காணும் என நம்பிக்கை கொள்கிறேன்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ்வாக நடிக்கிறார். இவருடன் தாஹிர் ராஜ் பாஷின், ஜீவா, சாஹிப் சலீம், ஜதீன் சர்னா, சிராக் படேல், டிங்கர் சர்மா, நிஷாந்த் தாஹியா, ஹார்டி ஷந்து, ஷஹில் கத்தார், அம்மி விர்க், ஆதிநாத் கொதாரே, தாய்ர்யா கர்வா, R பத்ரி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் அணி வீரர்களாக நடித்துள்ளார்கள். தீபிகா படுகோன் கபில்தேவ் மனைவி ரோமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Reliance Entertainment நிறுவன நிர்வாக அதிகாரி ஷிபாஷிஷ் சர்கார் கூறியதாவது ….
உலகநாயகன் திரு கமல்ஹாசன் இப்படத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தியது எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. Rajkamal Films International நிறுவனமும் Y not studios நிறுவனமும் “83” படத்தை தமிழில் தரமான, மிகப்பெரும் வெற்றிப்படமாக மாற்றுவார்கள்.

83 படத்தை Kabirkhan Films Productions, Rajkamal Films International, Reliance Entertainment இணைந்து வழங்குகிறார்கள்.
தயாரிப்பு – கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, Phantom Films, Reliance Entertainment.

Reliance Entertainment, Y Not X இணைந்து விநியோகிக்கும் இத்திரைப்படம் 2020 ஏப்ரல் 10 உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

More Articles
Follows