அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் கருணாஸின் மகன் கென்

அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் கருணாஸின் மகன் கென்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karunas son Ken acting in Dhanushs Asuran வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் படம் ‘அசுரன்’.

கலைப்புலி எஸ் தானு இப்படத்தை தயாரிக்க ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படமானது கரிசல் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பதை பார்த்தோம்.

தனது அண்ணனை கொலை செய்தவனைப் பழிவாங்கும் பதினைந்து வயது சிறுவன், தனது தந்தையுடன் ஒரு வாரம் காடுகளில் சுற்றித் திரிந்து, நீதிமன்றம் செல்லும் பயணம் தான் இந்த ‘வெக்கை’ நாவல்.

தந்தை கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அந்த சிறுவன் கேரக்டரில் நடிகர் கருணாஸின் மகன் கென் நடிக்கவுள்ளார்.

இதற்கு முன்பே ‘அழகு குட்டி செல்லம்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களில் கென் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Karunas son Ken acting in Dhanushs Asuran

காதல் கலந்த ஹாரர் படம் “நெஞ்சில் ஒரு ஓவியம்“

காதல் கலந்த ஹாரர் படம் “நெஞ்சில் ஒரு ஓவியம்“

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Jothipillai talks about Kadhal oru Oviyam movieஸ்ரீ விஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் K. ஜோதிபிள்ளை – சுகுணா கந்தசாமி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “நெஞ்சில் ஒரு ஓவியம்“.

தங்கரதம் படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்ரிஷா நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக K.ஜோதிபிள்ளை நடித்துள்ளார்.

மற்றும் போண்டாமணி,ஜெயமணி, யூசுப், தளபதி தினேஷ், பாப்சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் K.ஜோதிபிள்ளை கூறியதாவது..

இது ஒரு காதல், செண்டிமெண்ட், காமெடி கலந்த ஹாரர் திரைப்படம். மூன்று கோணங்களில் பயணிக்கும் திரைக்கதையை உள்ளடக்கிய கதை இது.

இந்த படத்தில் கதாநாயகி அக்ரிஷாவிற்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் அவரை சுற்றிதான் இந்த மூன்று திரைக்கதையும் பயணிக்கும். ஓவியராக இருக்கும் நாயகன் வெற்றி, பெய்ண்டிங் துறையில் மிகபெரிய சாதனை புரிவதையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறார்.

இடையில் காதலில் விழும் அவனுக்கு சில பிரச்னைகள் வருகின்றன, அந்த பிரச்சனைகளை எப்படி கையாண்டான் அதிலிருந்து எப்படி வெளியேறி வாழ்கையில் ஜெயித்தான் என்பதை ஹாரர், காதல், செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்.

ஹாரர் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும். படப்பிடிப்பு சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் K.ஜோதிபிள்ளை.

ஒளிப்பதிவு – ராஜாமணி
இசை – ஸ்டீபன் ராயல்
பாடல்கள் – இளையகம்பன், கவிகாற்கோ, நிலவநேசன்
எடிட்டிங் – பாலா
கலை இயக்குனர் – ஸ்ரீதர்
ஸ்டன்ட் – தளபதிதினேஷ்
நடனம் – பார்கவ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
கதை, வசனம் – சுகுணா கந்தசாமி
தயாரிப்பு – K.ஜோதி பிள்ளை – சுகுணா கந்தசாமி
திரைக்கதை, இயக்கம் – K.ஜோதிபிள்ளை, சாமுவேல்ராஜ்.

Director Jothipillai talks about Kadhal oru Oviyam movie

நீங்கதான் எங்க ரோல்மாடல்.; ரசிகர்கள் பேச்சால் சந்தோஷத்தில் சந்தானம்

நீங்கதான் எங்க ரோல்மாடல்.; ரசிகர்கள் பேச்சால் சந்தோஷத்தில் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanam talks about his fans and Dhillukku Dhuddu 2 movieஇயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் தில்லுக்கு துட்டு 2.

இப்படம் வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் பேசியதாவது…

ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி பேசும்போது :-

சந்தனம் கூட இரண்டாவது படம். இயக்குநருடன் மூன்றாவது படம். இருவருடன் பணியாற்றுவது எப்போதும் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். வெளிப்படையாக ஆலோசிக்கலாம். நம்முடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். அதேபோல, கதை எழுதுவதில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அமையும்.

மேலும், தயாரிப்பாளர் ஒரு காட்சிக்கு தேவையானதை ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்காமல் செய்து தருவார். எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்ததால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இப்படம் காட்சி விருந்தாக அமையும்.

இயக்குநர் ராம்பாலா பேசும்போது :-

30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். பல இடங்களில் கதை கூறியும் எதுவும் ஏற்றுக் கொள்ளபடவில்லை. அதன்பிறகு தான் சந்தானம் நாம் இருவரும் சேர்ந்து படம் எடுக்கலாம் என்று கூறினார். அது தான் ‘தில்லுக்கு துட்டு’. இக்காலத்தில் ஒரு படம் 10 நாட்கள் ஓடினாலே பெரிய விஷயம்.

ஆனால், ‘தில்லுக்கு துட்டு’ 75 நாட்கள் கடந்து சாதனை படைத்தது. அதற்காக கேடயமும் பெற்றேன். மாறன், ஆனந்த், முருகன், சேது ஆகியோருடன் சேர்ந்து இந்த கதையை எழுதினோம். ஷபீர் இசையமைத்திருக்கிறார். இரண்டு பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. படத்தொகுப்பு புதுமுகம் செஞ்சி மாறன் செய்திருக்கிறார்.

கதாநாயகன் சந்தானம் பேசும்போது :-

நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாக பார்த்தோம்.

அதுபோல, இப்படமும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கலந்து பேசி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம்.

நான் இந்தளவுக்கு வளர்வதற்கு எனக்கு முதுகெலும்பாக இருப்பது மாறன், ஆனந்த், குணா, சுந்தர், சேது மற்றும் ஜான்சன் ஆகியோர்கள் தான்.

‘லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி வித்தியாசமானது என்று பெயர் வாங்கியது போல், இப்படத்திலும் வித்தியாசமான நகைச்சுவையாக இருக்க புது முயற்சி எடுத்திருக்கிறோம்.

ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தின் இரண்டாவது பாதி கேரளா பின்னணியில் இருப்பதால் கேரளா பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரை தேர்ந்தெடுத்தோம்.

‘மொட்டை’ ராஜேந்திரன், விஜய் டிவி ராமர், விபின், சிவசங்கர் மாஸ்டர், விஜய் டிவி தனசேகர், சி.எம்.கார்த்திக், ஊர்வசி, இயக்குநர் மாரிமுத்து, ஜெயப்ரகாஷ், பிரஷாந்த், இன்னும் பலரும் பணியாற்றியிருக்கிறார்கள்.

கேமரா மேன் தீபக் நன்றாக பணியாற்றியிருக்கிறார். பேய் படத்திற்கு காட்சிகள் தான் முக்கியம். அது தரமாக இல்லையென்றால் பொம்மை படம் போல இருக்கும். அதற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார்.அதேபோல், காதல் பாடலை நன்றாக அமைத்து கொடுத்திருக்கிறார்.

ஷபீர் நன்றாக இசையமைத்திருக்கிறார்.இரண்டு பாடல்களும் சாண்டி தான் நடனம் அமைத்திருக்கிறார். கலை இயக்குநர் மோகன், சண்டை பயிற்சி தினேஷ்,

நடிகராக இருப்பதை விட தயாரிப்பாளராக இருப்பது தான் கஷ்டம்.
பலரும் ஆர்யா திருமணத்தைப் பற்றி தான் கேட்கிறார்கள். அதை அவரிடமே கேட்டு சொல்கிறேன்.

வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏற்கனவே 3 படங்கள் முடிந்த நிலையில் இருக்கிறது. வெளியாவதற்கு தாமதம் ஆகிறது.

இடையில்… இனி காமெடியனாக நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு.. படங்களை இயக்குவேன். நான் இயக்குநரானால் ஆர்யாவை வைத்து தான் படம் எடுப்பேன்.

சிம்புவிற்கென்று கதை எழுதி தான் இயக்க வேண்டும். எந்த படம் எடுத்தாலும் நல்ல படமாக இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

என்னை ‘லொள்ளு சபா’வில் அறிமுகப்படுத்திய பாலாஜி அண்ணன், சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு அவர்களுக்கு நன்றி. என்னை கதாநாயகனாக்கிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் ரசிகர்கள் நீங்க தான் என்னுடைய முன்மாதிரி என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்திரா சௌந்தராஜன் இப்படத்தின் கதைக்கு உறுதுணையாக இருந்தார். மையக் கதையை அவர் தான் எழுதியிருக்கிறார். பி.ஆர்.ஓ. ஜான்சன் அவர்களுக்கும் நன்றி. எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

Santhanam talks about his fans and Dhillukku Dhuddu 2 movie

Dhillukku Dhuddu 2 press meet

பேட்ட படத்தை விட விஸ்வாசம் வசூல் அதிகம்… : விநியோகஸ்தர் ஸ்ரீதர்

பேட்ட படத்தை விட விஸ்வாசம் வசூல் அதிகம்… : விநியோகஸ்தர் ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

petta and viswasamசுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா, சீமான், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மிக மிக அவசரம்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பட டிரைலரை சென்னையில் வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது திருச்சி விநியோகஸ்தர் ஸ்ரீதர் என்பவர் பேசும்போது…

பொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம் என்ற இரண்டு படங்களில் எந்த படம் அதிகமாக வசூலித்துள்ளது என்பது ஒரு விநியோகஸ்தராக எனக்கு தெரியும்.

எத்தனை கோடி என்பதை இப்போது என்னால் சொல்ல முடியாது.

ஆனால் ரஜினியின் பேட்ட படத்தை விட அஜீத்தின் விஸ்வாசம் 10 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளது என்று நான் உறுதியாக சொல்வேன்” என்று பேசினார்.

ஊழலை எதிர்க்க கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் ஆர்யா.?

ஊழலை எதிர்க்க கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் ஆர்யா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya and kamalலைகா, கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முதல் பாகத்தை போலவே ஊழல், லஞ்சம் ஆகியவற்றை மையப்படுத்தியே இப்படம் உருவாகி வருகிறது.

இதில் வயதான இந்தியன் தாத்தா இளம் வாலிபர்கள் உதவியோடு ஊழலை எதிர்ப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இதில் இளைஞராக ஆர்யா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு அந்த கேரக்டரில் சிம்பு நடிப்பார் என கூறப்பட்டது.

தமிழுக்கு வரும் விஜய் தேவர்கொண்டாவின் “அர்ஜுன் ரெட்டி “

தமிழுக்கு வரும் விஜய் தேவர்கொண்டாவின் “அர்ஜுன் ரெட்டி “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay devarakondaஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க No.1 , பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களை தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “ அர்ஜுன் ரெட்டி “

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்ட படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவர்கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஸ்யாம் கே.நாய்டு

இசை – சாய்கார்த்திக்

எடிட்டிங் – பிரேம்

தயாரிப்பு – A.N.பாலாஜி

கதை, திரைக்கதை, இயக்கம் – ஸ்ரீனிவாச ரவீந்திரா

படம் பற்றி A.N.பாலாஜி கூறியதாவது..

தெலுங்கில் “ துவாரகா “ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படமே தமிழ் “ அர்ஜுன்ரெட்டி “ என்ற பெயரில் தயாரித்துள்ளோம்.

அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான விஜய்தேவர் கொண்டாவின் படம் மிகபெரிய வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே. நோட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிதார் விஜய் தேவர்கொண்டா. இந்த “ அர்ஜுன்ரெட்டி படமும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

காதல், ஆக்ஷன், கமர்ஷியல் மூன்று ஒருசேர கலந்த கலவைதான் இந்த “ அர்ஜுன்ரெட்டி. அந்த அர்ஜுன் ரெட்டியை போலவே இந்த அர்ஜுன்ரெட்டியும் மிகுந்த வரவேற்பை பெரும் என்றார் A.N.பாலாஜி.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற உள்ளது.

More Articles
Follows