இயற்கையை அழிப்பது எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும்..; EIA 2020 குறித்து கார்த்தி

இயற்கையை அழிப்பது எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும்..; EIA 2020 குறித்து கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthiஉழவன் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார் நடிகர் கார்த்தி.

மத்திய அரசு புதிதாக திருத்தம் செய்து வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் வரைவு குறித்து உழவன் ஃபவுண்டேஷன் மூலம் நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்…

’பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில் இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020’ வரைவு நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

மலைகளும், ஆறுகளும், பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும், இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல.

இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்வுக்குறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது

இந்த வரைவில் பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது. நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும் அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே கூடாது என்பது எந்தவகையில் நியாயமான சட்டமாக இருக்கும்?

மேலும் தொழிற்சாலைகளின் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை, மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களை குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான சட்டம் என்ற போதும் இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும், ஆங்கிலத்திலேயும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய் மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கொரோனா எனும் அரக்கப்பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

எனவே இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் நம் கருத்துகளை பதிவு செய்வோம்.

அறிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்துகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இ-பாஸ் வாங்கியே ரஜினி செங்கல்பட்டு சென்றார்… – ஆணையர் பிரகாஷ்

இ-பாஸ் வாங்கியே ரஜினி செங்கல்பட்டு சென்றார்… – ஆணையர் பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் கடந்த ஜூன்19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

அந்த சமயத்தில் ஜூன் 26 ஆம் தேதி செங்கல்பட்டு எல்லைக்குள் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ரஜினி சென்றபோது, சீட் பெல்ட் அணியாததால் அபராதம் செலுத்தியிருப்பது அம்பலமானது.

ஆனால் அபராதம் தொகை கட்டியது ரஜினியின் கார் டிரைவர் என்பது பின்னர் தான் தெரியவந்தது.

இந்த சர்ச்சைக்குள் மற்றொரு சர்ச்சையும் உருவானது.

முழு ஊரடங்கின் போது ரஜினி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றது எப்படி? அவர் இ பாஸ் வாங்கினாரா? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ரஜினி இ-பாஸ் வாங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தற்போது தெரிவித்துள்ளார்.

கோலிவுட்லும் NEPOTISM.. நட்டி & சாந்தனு போட்டுடைத்த ரகசியம்

கோலிவுட்லும் NEPOTISM.. நட்டி & சாந்தனு போட்டுடைத்த ரகசியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanthanu nattyபாலிவும் என்றழைக்கப்படும் ஹிந்தி சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் வாரிசு அரசியலை உலகிற்கு எடுத்து காட்டியது.

கடந்த சில தினங்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சவுண்ட இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோரும் தங்களை ஹிந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் தடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் என்பவர் இந்த குற்றசாட்டை கூறியுள்ளார்.

லவ் ஆஜ் கல், ப்ளாக் பிரைடே உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

“தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க?” என்று கூறி பரபரப்பை உருவாக்கியுள்ளார்.

அதுபோல் நடிகர் சாந்தனுவும் அவரது ட்விட்டரில் இது குறித்து கூறியுள்ளார்.

#Nepotism இங்கேயும் உள்ளது.. அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்… தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்

என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1964 கால காதலுக்காக ‘மகாநடி’ படத்தயாரிப்பாளருடன் இணையும் துல்கர்

1964 கால காதலுக்காக ‘மகாநடி’ படத்தயாரிப்பாளருடன் இணையும் துல்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dulquer salmaanபெரும் வெற்றிபெற்ற நடிகையர் திலகம்/மஹாநடி படத்தின் தயாரிப்பாளர்களான வையெஜந்தி மூவீஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ், துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் தங்களுடைய புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.

நடிகையர் திலகம் / மகாநடி பட தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் நாடு முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய சினிமாவில் நினைவுகூரத்தக்க 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் விதமாக, வைஜெயந்தி மூவீஸ் சமீபத்தில் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும், ஒரு மிகப்பெரிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர்.

இது தவிர நந்தினி ரெட்டியின் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது மற்றும் ஜதி ரத்னலுவின் படமும் முடியும் தருவாயில் உள்ளது.

அவர்களின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். “ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை” என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்ற நேர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது.

நடிகையர் திலகம்/மஹாநடி படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துல்கர் சல்மான் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதே தயாரிப்பாளர்களோட இன்னொரு படத்திலும் இணைகிறார். அவரது சமீபத்திய திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளது.

துல்கர் சல்மானின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் கான்செப்ட் போஸ்டர் ஒரு அழகான டெலிகிராமை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாக தோன்றுகிறார், அதில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைவது ஒரு காதல் பக்கத்தைக் குறிக்கிறது. போர்ப் பின்னணியில் ஒரு காதல் என்பதே படத்தின் மிகவும் ஈர்க்கத்தக்க அம்சமாக உள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.

வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.

கொரோனா மருந்து விவரங்களை வெளியிட்ட நடிகர் விஷால்

கொரோனா மருந்து விவரங்களை வெளியிட்ட நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஎவராக இருந்தாலும் என் முன்னால் எல்லாமே ஒன்றுதான் என பலரையும் தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

இதனால் ஒரு சிலர் உயிரிழந்தாலும் பலர் இந்த நோயிலிருந்து மீண்டு வருகின்றனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் விஷாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விஷாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிலர் கேட்டுக் கொண்டதற்காக.. தாங்கள் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை வெளியிட்டுள்ளார் விஷால்.

மேலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அனைத்து ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்தகங்களில் இந்த மருந்து கிடைக்கும் எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கில் தடை மீறி பயணம்.; விமல்-சூரி மீது போலீசார் வழக்கு

ஊரடங்கில் தடை மீறி பயணம்.; விமல்-சூரி மீது போலீசார் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vimal sooriதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் சில தினங்களுக்கு முன் நடிகர்கள் விமல் சூரி சென்றுள்ளனர்.

அங்கு தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் சென்று அவர்கள் மீன் பிடித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் விமல் மற்றும் சூரி ஆகிய இருவருக்கும் அபாராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் வனத்துறை காவலர்கள் இருவரும் சூழல் காவலர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் சூரி மற்றும் விமல் மீது தற்போது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஊரடங்கை மீறியது, தொற்று பரவ காரணமாக இருந்ததாக உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More Articles
Follows