செல்வராகவன் & தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’..; ஆனால் 4 வருஷம் காத்திருக்கனுமே…

செல்வராகவன் & தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’..; ஆனால் 4 வருஷம் காத்திருக்கனுமே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#AayirathilOruvan2செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

2010-ம் ஆண்டில் ரிலீசான இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

அந்த சமயத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனால் சினிமா விரும்பிகளிடம் ஆயிரத்தில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம் இரண்டு எப்போது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர்.

இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

செல்வராகவனின் ட்விட்டர் பதிவில், ‘இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் கார்த்தி நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ஹீரோவாக தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

இப்படம் 2024-ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தியேட்டரில் ‘மாஸ்டர்’ படம் FDFS பார்க்க ஆசைப்படும் மிஷ்கின்

தியேட்டரில் ‘மாஸ்டர்’ படம் FDFS பார்க்க ஆசைப்படும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mysskinமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் இளையராஜா இசையில் உருவான படம் ‘சைக்கோ’.

இந்த படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு மிஷ்கின் இயக்கவுள்ள படம்
பிசாசு 2.

இந்த நிலையில் 2021 புத்தாண்டை ஒட்டி ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…

“கதைகளும், சினிமாவும் இல்லாமல் நம் வாழ்வு முழுமை பெறாது.

இனி வரும் நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செல்வோம்.

நான் தனிப்பட்ட முறையில் “மாஸ்டர்” படம் காண ஜனவரி 13 திரையரங்குக்கு செல்லவுள்ளேன்.

அனைத்து ரசிகர்களும் மீண்டும் திரையரங்குகளுக்கு செல்ல வேண்டும்.

திரைத்துறை மீண்டும் செழித்து வளர உதவு வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.” என இயக்குனர் மிஷ்கின் பதிவிட்டுள்ளார்.

I will watch Master movie in Cinema theatres says Mysskin

மக்களை காக்க மறுபிறவி எடுத்தாய்… மறுபரிசீலனை செய் தலைவா..; மன்றாடும் ரஜினி ரசிகர்கள்

மக்களை காக்க மறுபிறவி எடுத்தாய்… மறுபரிசீலனை செய் தலைவா..; மன்றாடும் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகொரோனா வைரஸ் பரவல் மற்றும் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனாலும் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் சேவை செய்ய முடியும் என அறிவித்தார்.

ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆனாலும் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தினம் தினம் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் தர்ணா & ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை மற்றொரு அறவழிப் போராட்டத்தை கையில் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி நாளை திண்டுக்கல் கல்லறை தோட்டத்தில் மாபெரும் அமைதி போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Rajini fans protest against Rajinis political decision

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் அனுமதியில்லை.!

ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..; காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் அனுமதியில்லை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Lock downகொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

இதில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது :

1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த 1.1.2021 முதல் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.

2) திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்படத் தொழிலுக்கான உள் அரங்கு மற்றும் திறந்தவெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு, வெளியிடப்பட்ட உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

3) நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:-

புதிய உருமாறிய நோய்க் கிருமி பரவாமல் தடுக்க, வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களைத் தவிர) தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை தொடரும்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.1.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்“ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN lockdown guidelines for Jan 2021

‘ஈஸ்வரன்’ படம் ரிலீஸ் ஆகுமா..? சிம்புவின் நஷ்டமடைந்த படத்தால் வந்த சிக்கல்..!

‘ஈஸ்வரன்’ படம் ரிலீஸ் ஆகுமா..? சிம்புவின் நஷ்டமடைந்த படத்தால் வந்த சிக்கல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eeswaranசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’.

நாளை மறுநாள் 2021 ஜனவரி 2ஆம் தேதி இப்படி பாடல்களை படக்குழு வெளியிடவுள்ளது.

இப்படத்தை 2021-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை எனக் கூறி டி.ராஜேந்தர் ஆரம்பித்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பில் இருப்போர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்…, “‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இந்த கொரோனா பிடியிலிருந்து மீண்டு வந்திரமாட்டோமா என்று அத்தனைபேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், தைரியமாக ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட முன்வந்திருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நம்ம வரவேற்பு கொடுக்கனும்.

அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளரையும், படத்தை வாங்கிய விநியோகஸ்தரையும் போன் செய்து இந்த படம் வெளியிடனும்னா ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்டணும் என்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை.

அந்த தீய சக்திகளுக்கு வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும். ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்னைகள் இருந்தது.

அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார்.

மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.

‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், கட்டபஞ்சாயத்து மூலமாக பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே இந்த பிரச்னையை நீதிமன்றத்தில் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

அதைவிட்டு விட்டு நாங்கள் கட்ட பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது nசட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Will Eeswaran release on pongal ?

ஜனவரி 31 வரை ஊரடங்கு..; மீண்டும் தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..? முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் விஜய்

ஜனவரி 31 வரை ஊரடங்கு..; மீண்டும் தள்ளிப்போகும் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..? முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Vijayலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

ஹிந்தியில் ‘விஜய் தி மாஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் முதல்வரை சந்தித்து நடிகர் விஜய் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இன்று ஜனவரி 31-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதில் திரையரங்கில் 100% பார்வையாளர்கள் உயர்த்தப்பட்டதாக அறிவிப்புகள் எதுவும் இல்லை.

எனவே தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகளின்படி 50% இருக்கைகளை மட்டுமே நிரப்பி ‘மாஸ்டர்’ படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Thalapathy Vijay waiting for CM desicion on Master release

More Articles
Follows