முகேஷ் அம்பானியுடன் இணைந்து மகாபாரதத்தை படமாக்கும் அமீர்கான்

முகேஷ் அம்பானியுடன் இணைந்து மகாபாரதத்தை படமாக்கும் அமீர்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aamir khan film Mahabharata budget Rs 1000 croresஇந்திய நாட்டின் காவியமான மகாபாரதத்தை ரூ1000 கோடி செலவில் திரைப்படமாக நடிகர் அமீர்கான் எடுக்கவுள்ளார்.

ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற பிரம்மாண்டமான படமாக இதனை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இப்படத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தின் அறிமுக விழாவில் பேசிய அமீர்கான், மகாபாரதத்தை திரைப்படமாக எடுப்பது தனது கனவு என்றும், கர்ணன் பாத்திரத்தில் தாம் நடிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

உடல்வாகு காரணமாக கர்ணன் பாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனால் தான் கிருஷ்ணர் கேரக்டரில் நடிக்க விரும்புவதாகவும் அவர் பேசினார்.

Aamir khan film Mahabharata budget Rs 1000 crores

சாமி ஸ்கொயருக்காக 15 வருடம் பின்னோக்கி செல்லும் விக்ரம்

சாமி ஸ்கொயருக்காக 15 வருடம் பின்னோக்கி செல்லும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saamy 2 will recreate set from first partகடந்த 2003ஆம் ஆண்டில் விக்ரம், த்ரிஷா இணைந்து நடித்த சாமி திரைப்படம் வெளியானது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை சாமி ஸ்கொயர் என்ற பெயரில் அதே இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார்.

இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். த்ரிஷா இப்படத்திலிருந்து விலகியதால் அவரது கேரக்டர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

தற்போது வரை இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளதாம்.

சாமி படத்தின் முதல் பாகத்தில் திருநெல்வேலி அல்வாடா என்ற பாடல் மற்றும் சண்டை காட்சிகள் மிகப் பிரபலமானது.

இவை நெல்லை நகரத்தில் உள்ள தெருக்களில் படமாக்கப்பட்டு இருந்தன.

தற்போதும் அதே தெருவில் சாமி-2 படத்துக்காக பாடல் மற்றும் சண்டை காட்சிகளை எடுக்க நினைத்தாராம்.

ஆனால் அந்த தெருவில் தற்போது நிறைய மாற்றங்கள் இருப்பதால் 15 ஆண்டுக்கு முன்பு இருந்தது போல் நெல்லை புறநகர் பகுதியில் செட் அமைத்து பாடல் மற்றும் சண்டை காட்சிகள் எடுக்க இருக்கிறார்களாம்.

Saamy 2 will recreate set from first part

Breaking: நாளை முதல் எல்லா தியேட்டர்களில் படம் பார்க்கலாம்

Breaking: நாளை முதல் எல்லா தியேட்டர்களில் படம் பார்க்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film industry strike over From 23rd March all theaters will be openedடிஜிட்டல் திரையிடல் க்யூப்புக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் எந்த ஒரு புதுப்படங்களும் வெளியாகவில்லை.

புதுப்படங்கள் வெளியாகாத காரணத்தால் தியேட்டர்களும் மூடும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

ஆனால் சென்னையில் மட்டும் பழைய ஹிட்டான படங்களை திரையிட்டு வந்தனர்.

இவையில்லாமல் எந்த தமிழ் பட சூட்டிங்கையும் நடத்த கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனால் ஒட்டுமொத்த திரையுலமே முடங்கியது.

தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த மற்ற துறையினரும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.

இன்று சற்று நேரத்திற்கு முன் தமிழக அமைச்சர்களை சினிமா பிரபலங்கள் சந்தித்துள்ளனர்.

அதன்படி நாளை மார்ச் 23முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்கும் என சென்னை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ உத்தரவாதம் அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் என அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு எந்தெந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது என்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Tamil film industry strike over From 23rd March all theaters will be opened

சம்பளத்த குறைச்சா மட்டும் பிரச்னை சரியாகிடுமா.? சிம்பு பேச்சால் பரபரப்பு

சம்பளத்த குறைச்சா மட்டும் பிரச்னை சரியாகிடுமா.? சிம்பு பேச்சால் பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu open talk about Heros salary and Black money issueமார்ச் மாதம் தொடங்கியது முதல் தமிழ் திரையுலகம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

தற்போது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் தினம் தினம் நடந்து வருகிறது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்கு திடீரென சிம்பு வந்தார்.

அவரின் வருகையை நடிகர் விஷால் உட்பட பலரும் பாராட்டினர்.

அவர் பேசும்போது…

தமிழ் சினிமாவில் இருப்பதே 10 பெரிய நடிகர்கள் தான். கடவுள் புண்ணியத்தில் அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.

அவர்களின் சம்பளத்தைக் குறைப்பதால் மட்டும் பிரச்சினை சரியாகாது. நான் இலவசமாகக் கூட நடித்துக் கொடுப்பேன்.

நீங்கள் ஏன் கறுப்பு பணத்தில் சினிமா எடுக்கிறீர்கள்? அனைத்தையும் வெள்ளையில் கொடுத்து, ஒழுங்காக வரிகட்டி கணக்கு காட்டுங்கள்.

அப்போதுதான் ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார், எவ்வளவு வட்டி கட்டுகிறார் என்பது சம்பந்தப்பட்ட ஹீரோக்களுக்கும் தெரியும்.

கறுப்புப் பணத்தை ஒழியுங்கள். அனைத்துமே சரியாகிவிடும்” என்று பேசியிருக்கிறார்.

ஹீரோக்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் பட்ஜெட் அதிகமாகிறது என்று சில தயாரிப்பாளர்கள் கூறிவந்த நிலையில், சிம்புவின் எதிர்பாராத இந்த பதில் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியதாம்.

STR aka Simbu open talk about Heros salary and Black money issue

சினிமா ஸ்டிரைக் நீடித்தால் மக்களுக்கு பழகிடும்; எச்சரிக்கும் சுரேஷ்சுபா

சினிமா ஸ்டிரைக் நீடித்தால் மக்களுக்கு பழகிடும்; எச்சரிக்கும் சுரேஷ்சுபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Cinema strike continues public lose their interest to watch movies says writer Suresh Subhaஅண்மையில் போக்குவரத்து மற்றும் மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டங்களை நடத்திய போது தமிழகமே முடங்கியது எனலாம்.

ஆனால் கடந்த மூன்று வாரங்களாக (மார்ச் 1முதல்) எந்த ஒரு புது தமிழ்ப் படமும் வெளியாகவில்லை.

சினிமா ஸ்டிரைக்கால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது மக்களை மகிழ்விக்க பல சாதனங்கள் வந்துவிட்டது.

இந்த ஸ்டிரைக் தொடர்ந்தால் ரசிகர்களுக்கு சினிமா மீது ரசிகர்களுக்கு உள்ள ஆர்வம் குறைய ஆரம்பித்துவிடும் என பிரபல எழுத்தாளர் சுரேஷ் சுபா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ, ஆரம்பம், வேலாயுதம், வேலைக்காரன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் பணியாற்றியுள்ள சுபாவிடம் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்ததை பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் சினிமா உலகினரை எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

அதில்…
suresh subha‏ @sureshsubha 1h1 hour ago

தமிழ் திரைத்துறை அவசரமாக கவனிக்கவும்: சின்னதோ பெரியதோ எந்த தமிழ்ப்படம் ரிலீஸானாலும் 3 நாட்களுக்குள் பார்த்துவிட்டு நியாயமான விமர்சனமும் தரும் (தெரிந்த) ஆட்டோ ஓட்டுநர் சொன்னார்: “தியேட்டருக்குப் போகாம இருக்கறது மெதுவா ஒருமாதிரி பழகிடுச்சு. திரும்ப அந்த தவிப்பு வருமா தெரியல சார்”

If Cinema strike continues public lose their interest to watch movies says writer Suresh Subha

எனது திருமண முடிவு பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம்.: விஷால்

எனது திருமண முடிவு பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம்.: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishal open talk about his Marriage proposalநடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என பிஸியாக வலம் வருபவர் நடிகர் விஷால்.

இவருக்கு 40 வயதை நெருங்கி விட்ட போதிலும் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டிய பிறகு அங்குதான் தன் திருமணம் நடக்கும் என உறுதியாக அறிவித்துள்ளார்.

இந்த 2018 ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.

இவர் இவ்வாறு கூறிய போதிலும் இவருடைய வீட்டில் பெண் பார்க்க தொடங்கிவிட்டார்களாம்.

இது தொடர்பாக விஷால் அவரின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

எனக்கு பெண் பார்த்து பார்த்து வீட்டில் உள்ளவர்கள் சோர்ந்துவிட்டார்கள்.

ஏதாவது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு என்னை அவர்கள் அழைத்தாலே அங்கு எனக்கு பார்த்துள்ள பெண் வந்திருக்கிறாள் என்று என தெரிந்து விடும்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கிற வரையில் என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று நானே சொல்லி விட்டேன்.

என்னுடைய இந்த முடிவு பைத்தியக்காரத்தனமாக கூட இருக்கலாம். இதனால் என்னோட தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Actor Vishal open talk about his Marriage proposal

More Articles
Follows