நாளை 2.0 பட 3டி மேக்கிங் வீடியோ; ட்விட்டரில் அக்சய்குமார் தகவல்

நாளை 2.0 பட 3டி மேக்கிங் வீடியோ; ட்விட்டரில் அக்சய்குமார் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshay kumarஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து லைக்கா தயாரித்துள்ள படம் 2.0

ஏஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இதில் வில்லனாக நடித்துள்ள அக்சய்குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

3டியில் தயாராகியுள்ள 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை நாளை அக்டோபர் 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மெர்சலுக்கு கோர்ட் தடை நீங்கியது; விலங்குகள் நலவாரியம் பிரச்சினை முடிந்ததா.?

மெர்சலுக்கு கோர்ட் தடை நீங்கியது; விலங்குகள் நலவாரியம் பிரச்சினை முடிந்ததா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Animal Welfare board certification for Mersal movie is clearedஒருவழியாக விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டைட்டில் பிரச்சினை ஓய்ந்தது. மேலும் படத்தின் விளம்பரத்திற்கும் எந்தவிட தடையும் இல்லை என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் மூலமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஒரு படம் உருவாகும்போது அதில் விலங்குகளை பயன்படுத்தி படம்பிடித்தால், விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் இந்த படக்குழு அப்படி மருத்துவர்களை வைத்து படம்பிடிக்கவில்லை எனவும் அதனால் அவர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கூறப்பட்டது.

இதனால் படத்தை சென்சாருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

இதனால் தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படுமா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இதுகுறித்து படத்தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

விலங்குகள் நல வாரிய மருத்துவர்கள் இல்லாமல் சூட்டிங் நடந்தது என்பது தவறான செய்தி. விலங்குகளின் காட்சிகளின் போது கால்நடை மருத்துவர்கள் துணையோடுதான் படப்பிடிப்பு நடந்தது.

விலங்குகள் நல வாரியமும் அதற்கான அனுமதி சான்றிதழை வழங்கிவிட்டது.

எனவே படத்தை சென்சாருக்கு அனுப்பியுள்ளோம்.

மேலும் தடைகள் பல தாண்டி நிச்சயம் தீபாவளிக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல் ரிலீஸ் ஆகும்” என தெரிவித்தனர்.

Animal Welfare board certification for Mersal movie is cleared

மெர்சல் டைட்டில் தடையை நீக்கி வழக்கை தள்ளுபடி செய்தது கோர்ட்

மெர்சல் டைட்டில் தடையை நீக்கி வழக்கை தள்ளுபடி செய்தது கோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal stillsவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் வருகிற அக். 18ஆம் தே தீபாவளியன்று வெளியாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், 2014-ம் ஆண்டு ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் `மெர்சல் ஆயிட்டேன்’ என்ற தலைப்பைப் பதிவு செய்ததால் `மெர்சல்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து சென்னை ஐகோர்ட் மெர்சல் என்ற பெயரில் படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் அடுத்த தீர்ப்பு வரும் வரை இதுகுறித்த விளம்பரங்களை வெளியிடக் கூடாது என குறிப்பிட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மெர்சல்’ படத்துக்கான இடைகாலத் தடையை நீக்கி உத்தரவிட்டு, ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

 

புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை; விஷாலின் முடிவுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை; விஷாலின் முடிவுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Telugu Producer Council supports Vishal in LBET issue against TN Governmentதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் Local Body Entertainment Tax ( LBET) யை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர்களின் நலனுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது என்பதை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கோடாலி வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

1.) Local Body Entertainment Taxயை GST மேல் திணிக்கக் கூடாது.
2.) வெவ்வேறு மொழி படங்களுக்கு வெவ்வேறு ரேட் இருக்கக்கூடாது. என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள இந்த விஷயத்துக்கு தங்களுடைய ஆதரவை இந்திய தயாரிப்பாளர் கில்ட் தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வருகிற அக்டோபர் 3 – 2017 அன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்திருந்த வேலை நிறுத்தத்துக்கு இந்திய தயாரிப்பாளர் கில்ட் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த இரட்டை வரி, சினிமாவை ரசிக்க திரையரங்குக்கு வரும் இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய பளுவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு ஒப்புதலும் வழங்கி உள்ளது.

ஆதரவு அளித்த இந்திய தயாரிப்பாளர் கில்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எப்போதும் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஒரே அமைப்பு இந்திய தயாரிப்பாளர் கில்ட்.

அவர்களோடு எப்போதும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Telugu Producer Council supports Vishal in LBET issue against TN Government

telugu producer letter to vishal

படிக்க வசதியில்லாத சுகன்யாவை கல்லூரிக்கு அனுப்பிய ஜிவி பிரகாஷ்

படிக்க வசதியில்லாத சுகன்யாவை கல்லூரிக்கு அனுப்பிய ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash helpநடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமூக சேவை பணிகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாணவர்கள் நடத்திய போது அவர்களுடன் கலந்துக் கொண்டவர்.

மேலும் நெடுவாசல் போராட்டத்திலும் திரையுலகின் சார்பாக முதல் ஆளாக கலந்து கொண்டார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதா மரணத்திற்கு முதல் ஆளாக நேரில் சென்று அனிதா தந்தைக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இரண்டு வருட மருத்துவ படிப்பை மேற்கொண்ட மாணவி சுகன்யா படிக்க போதிய வசதியில்லாத காரணத்தால் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்.

இந்த செய்தி ஓரிரு நாட்களாகவே பல நாளிதழ்களில் வெளியானது.

இதனையறிந்த ஜிவி. பிரகாஷ் அந்த ஏழை மாணவியின் படிப்பிற்கு தேவையான மொத்த தொகையையும் ஏற்றுக்கொண்டார்.

GV Prakash helps Medical student Suganya with financial support

gv prakash help medical student suganya

ஜீவா-நிக்கி இணைந்துள்ள கீ பட டீசரை வெளியிடும் வெங்கட்பிரபு

ஜீவா-நிக்கி இணைந்துள்ள கீ பட டீசரை வெளியிடும் வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabhu will reveal Kee movie teaserசெல்வராகவனின் உதவி இயக்குநர் காலீஸ் இயக்கியுள்ள படம் கீ.

சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ படத்தை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் ஜீவா, நிக்கி கல்ராணி. அணைகா சோடி, R.J. பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையைமத்தார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்.

தற்போது கீ பட டீசரை இன்று அக். 7ஆம் தேதி 7.20 மணிக்கு வெங்கட்பிரபு வெளியிட உள்ளார்.

Venkat Prabhu will reveal Kee movie teaser

kee movie poster

More Articles
Follows