சிவகார்த்திகேயன் ரசிகர்களை காக்க வைக்கும் இறைவா

சிவகார்த்திகேயன் ரசிகர்களை காக்க வைக்கும் இறைவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan welcomeசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் வெளியாகி ஓராண்டை கடந்துவிட்டது.

அதற்கு அடுத்து அவர் ஒப்புக் கொண்ட வேலைக்காரன் படம் முடிவடைந்தும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த 2017 ஆண்டு இறுதியில் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

எனவே அந்த நாளை எதிர்நோக்கி சிவகார்த்திகேயன் காத்திருக்கும் நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள இறைவா என்ற பாடலை வருகிற நவம்பர் 2ஆம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.

இதற்கு முன்பே கருத்தவெனல்லாம் கலீஜாம் என்ற ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத இசையமைக்க, நயன்தாரா, சிநேகா, பகத்திபாசில், பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan fans waiting for Iraiva 2nd single from Velaikkaran

iraiva 2nd single velaikkaran

Breaking: பிக்பாஸ் ஆரவ்-வின் முதல் படத்தை இயக்கும் சிம்பு பட இயக்குனர்

Breaking: பிக்பாஸ் ஆரவ்-வின் முதல் படத்தை இயக்கும் சிம்பு பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss aravகமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சி 100 நாட்களை கடந்த பின்னரும் தற்போது வரை விஜய் டிவி, அது குறித்த ஷோக்களை நடத்தி வருவது வேறுகதை.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஓவியா-ஆரவ் வின் காதல் மிகப்பரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ஆரவ் தன் முதல் பட அறிவிப்பை சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இவரின் முதல் படத்தை சிம்பு நடித்த சிலம்பாட்டம் பட இயக்குனர் சரவணன் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை விஜய பார்க்கவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Bigg Boss fame Aarav debut movie with Silambattam director Saravanan

Arav‏Verified account @Nafeez_Arav 9m9 minutes ago
Roaring high….
My first project after Bigg Boss!!
#Director Saravanan (Silambattam fame)
#VijayaBhargavi Entertainment!!
Much excited

போதும் என்கிற நல்ல மனசு கொண்டவர் சிவகுமார்… பாக்யராஜ் பேச்சு

போதும் என்கிற நல்ல மனசு கொண்டவர் சிவகுமார்… பாக்யராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bhagyaraj speech about Sivakumar and his talentபிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

இந்நூலை பத்திரிகையாளர் அருள்செல்வன் தொகுத்துள்ளார்.

விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

“ஒருவர் பற்றி யார் சொல்கிறார்கள் என்பதை வைத்து அவரது கேரக்டர் தெரியும்.எம்.ஜி.வல்லபனின் நண்பர்களைப் பார்த்தே அவரை யார் என்று கூற முடியும்.

வல்லபனின் கேரக்டர் பிடித்துதான் இங்கே இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்.

இங்குள்ள சிவகுமார் சார் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவரிடம் நடிப்புத்திறமை, ஓவியத்திறமை, சொற்பொழிவாற்றும் திறமை போல எல்லாத் திறமைகளும் இருக்கின்றன.

இதைவிட பெரிய விஷயம். ‘போதும் ‘ என்கிற மனசு அவருக்கு அது இருக்கிறது. அது பெரிய விஷயம். அது எல்லாருக்கும் வராது.

சம்பாதிக்கிற நேரத்தில் கூட, வீட்டில் வந்து நடிக்க கூப்பிட்டால் கூட ‘போதும்’ என்று இருந்தவர். வீட்டிலும் சும்மா இருக்காமல் அடுத்து என்ன செய்யலாம் என்ற போது கம்பராமாயணம், மகாபாரதம் என்று எவ்வளவோ பேசுகிறார்.

இது போன்ற மனசு யாருக்கும் வருவதில்லை. நாட்டில் எவ்வளவோ கோடிகள்இங்கே வருகின்றன. எவ்வளவோ கோடிகள் அங்கே போகின்றன. என்றாலும் இன்னும் என்ன வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

போதும் என்கிற மனசு எல்லாருக்கும் வராது .

வல்லபன் மலையாளியாகப் பிறந்து தமிழில் இவ்வளவு அடுக்கு மொழியில் எழுதவது சிரமம். அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரிகளைக் கண்டு நான் வியந்ததுண்டு.

நான் ஒரு மலையாளப் படத்தில் நடித்து விட்டு நான் பட்டபாடு இருக்கிறதே. அதே போல் ‘ஆக்ரிரஸ்தா’ வில் நான் அமைத்த ஆங்கில வசனம் பேசிய போது அமிதாப் என்னை முழுதாக நம்பவில்லை.

ஆனால் அப்படியே நடித்து விட்டார்கள். படம் போட்டுப் பார்த்தபோது அவரது வேலையாட்கள் அதைப் பார்த்து புரிந்து கைதட்டியவுடன்தான் அவருக்கும் புரிந்தது திருப்தி வந்தது , பர்ஸ்ட் பெஞ்ச்காரர்களே புரிந்து விட்டார்கள் என்று. மனைவி ஜெயா வேறு பாராட்டினார்.

பிறகுதான் நம்பிக்கை வந்தது என்றார் அமிதாப்.. ஆனால் முதலில் என் மேல் அவருக்கு சந்தேகம் இருந்தது. அது இப்போது நினைவுக்கு வருகிறது.

வல்லபனின் எழுத்தாற்றல் வியக்கவைக்கிறது.

அவர் என் ‘பாக்யா’ வில் வேலைக்கு வருவாரா என்று கூட நினைத்தேன். ஆனால் அவர்தை எதையும் நினைக்காமல் வந்து வேலைபார்த்தார். அவர் இங்கு வந்ததும் ‘பாக்யா’வை அவரிடம் விட்டுவிட்டு நான் படப்பிடிப்புக்கு கவலை யில்லாமல் போய் விடுவேன் அவர் பத்திரிகையாளராக இருந்த போது கூட அவரை அங்கங்கே பார்ப்பேன். .பாக்யா வந்த பிறகுபேச வாய்ப்பே இருக்காது.

ஓல்டு இஸ் கோல்டு.பழைய விஷயங்களுக்கு என்றும் மதிப்பு உண்டு. நண்பர்களிடம் பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கும் போதுகூட அதில் புதிய புதிய தகவல்கள் கிடைக்கும்.

வல்லபன் சிவாஜி, எம்.ஜிஆர் முதல் தனுஷ் காலம் வரை இருந்திருக்கிறார் ; பலருடன் பழகியிருக்கிறார்.அவரைப் பற்றி அருள் செல்வன் பலரது அனுபவங்களைத் தொகுத்த மாதிரி வல்லபனின் அனுபவங்களையும் தொகுக்க வேண்டும். பழையது என்பது சாதாரணமானதல்ல. அவரது அனுபவங்கள் எழுதப்படாமல் தவறி விட்டது .அவர்பற்றி இன்னும் எழுத வேண்டும்.” இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

விழாவில் சித்ரா லெட்சுமணன் பேசும்போது,
“எனக்கு வல்லபனை பல ஆண்டுகளாகத் தெரியும். நட்பாகத் தொடங்கி சகோதர உறவாக பரிணமித்ததுதான் எங்கள் உறவு .
வல்லபன் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் ஆற்றல் உடையவர்.

நான் பி.ஆர்.ஓவாகப் பணியாற்றிய போது ஒரு அழைப்பிதழ் 6 வரி எழுதச் சொன்னால் கூட அதில் 4 வார்த்தைகள் புதியதாக இருக்கும்.

அவர் குடும்பத்தோடு இருந்த நாட்களைவிட என்னோடு இருந்த நாட்கள்தான் அதிகம். அந்தளவுக்கு ஆழமான நட்பு எங்களுடையது.

இந்த நூல் படித்ததன் மூலம் வல்லபனுடன் இவ்வளவுபழகிய எனக்கே தெரியாத புதிய பரிமாணம் கிடைத்தது.

இங்கே இவ்வளவுபேர் இணைந்து இருப்பதற்கு இந்த புத்தகமே சாட்சியாக இருக்கிறது. என்னை விழாவுக்கு இவர்கள் அழைக்கும் முன்பே சிவகுமார் கூப்பிட்டு விட்டார். அதுதான் அப்போதுள்ள நட்பு.

அப்போதெல்லாம் எப்போது வேண்டுமானாலும் எம்.ஜி.ஆர் சிவாஜியைச் சந்திக்கலாம்.

பத்திரிகையாளர்களுக்கும் நட்சத்திரங்களுககும் நல்ல நட்பு இருந்தது. குடும்பத்தினர் போலப் பழகுவோம்..

எண்பதுகள் இன்பமான காலம். இப்போது அப்படி இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ”என்றார்.

‘குங்குமம்’ கே.என்.சிவராமன் பேசும் போது. ,

“நான் இன்று இங்கே நிற்க எம்.ஜி.வல்லபன்தான் காரணம்.

அவர் எப்போதும் முதல் ஆளாக காலை 8 மணிக்கே அலுவலகம் வந்து விடுவார். மற்றவர் வருகை பற்றி கவலைப்பட மாட்டார் . அதே போல மாலை 6 மணிக்கு மேல் வெளியே சென்று விடுவார் பத்திரிகையாளனுக்கு வெளியேதான் வேலை என்பார்.

அவர் ஒரு நல்ல தோட்டக்காரர். அவர் நேரம் கிடைக்குப் போதெல்லாம் விதைகளைத்தூவி முளைக்க வைத்து நீர்ஊற்றி வளர்க்கும் நல்ல தோட்டக்காரர்.

செடி வளர்ந்து மரமாகி தன்னை நினைக்குமா இல்லையா என்று நினைக்க மாட்டார். அவர் ஒரு நல்ல தோட்டக்காரர். “என்றார்

நடிகர் ராஜேஷ் பேசும் போது,

“அவருக்கும் எனக்கும் அறிவுபூர்வமான கருத்துகளில் மோதல் வந்து நட்பானோம். நான்ஆர்வமாகப் படிப்பவன் என்றதும் பிடித்து விட்டது. என்னை அவர் ஸ்டார் என்றார். நான் இன்னமும் நடிகனாகவே இல்லையே என்றேன்.

அவர் மிடுக்காக உடையணிந்து ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி போல இருப்பார். பொதுவாக எழுத்தாளர் சுஜாதா, சத்யராஜ் போன்று உயரமாக வளர்ந்தவர்கள் குனிந்துதான் மற்றவர்களிடம் பேசுவார்கள் .ஆனால் வல்லபன் குனிய மாட்டார். நிமிர்ந்துதான் பேசுவார். அபரிமிதமான அறிவு கொண்டவர். அவருக்கு நல்ல நகைச்சுவையுணர்வும் அதிகம்.

இவ்வளவு திறமை இருந்தும் அவர் உயரே போக முடியாமல் போனது புதிரான பிரபஞ்ச ரகசியம். அவரைப் பாராட்ட இங்கே சிவகுமார் வந்திருப்பது அவரது பெரியமனம் .இப்படி மனம் விட்டுப் பாராட்டுவது உயர்ந்த குணம் பலரிடம் இல்லாதது “என்றார்.

பத்திரிகையாளரும் இயக்குநருமான த.செ.ஞானவேல் பேசும் போது,

“நான் எம்.ஜி.வல்லபன் அவர்களைப் பார்த்தது கிடையது. இந் நூலைப் படித்தே அவரைப்பற்றி முழுதும் அறிந்து கொண்டேன். ‘சகலகலா வல்லபன்’ நூல் எனக்கு ஒரு முழுமையான பத்திரிகையாளரை அறிமுகப் படுத்தி இருக்கிறது . வாழ்தலுக்கும் பிழைத்தலுக்கும் வித்தியாசம் உண்டு.

எம்.ஜி.வல்லபன் வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

பத்திரிகை என்பது எப்போதும் எதிர்க்கட்சி மனநிலை உடையது. தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுதான் பத்திரிகை தர்மம். மக்களுக்கான சமூகத்திற்கான மேம்பாட்டு விஷயங்களுக்காகத் தன் குரலை ஓங்கி ஒலிக்கும் பணியை பத்திரிகை எந்த நேரத்திலும் நிறுத்தக் கூடாது.

இன்று பத்திரிகைகளை இருமுனை கத்திகுத்திக் கிழிக்கிறது . ஒருபக்கம். விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் முற்றாக சமூகத்தில் ஒழிந்து விட்டது.

இன்னொரு புறம் விமர்சனம் எழுத எந்தத் தகுதியும் இருக்க வேண்டாம் என்கிற நிலை.

எம்.ஜி.வல்லபன் காலம் பொன்னான காலம். அந்த எண்பதுகள் பத்திரிகை சுதந்திரத்தின் பொற்காலமாக இருந்திருக்கும்.

எழுத்தில் நேர்த்தியாக இருப்பதுடன் வாசகனை மேம்படுத்தவும் வேண்டும் என்று அவர் இருந்திருக்கிறார்.
இந்த நூல் இளம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய நூல் என்பேன். வெறும் பேட்டி எடுப்பதும் புகழ்வதும் திட்டுவதும் மட்டுமே பத்திரிகையாளனின் வேலையல்ல. நல்ல விஷயத்தை அறிமுகப் படுத்துவதும் சமூகத்துக்குக் தேவையான கடமை.
அப்படிக்கடமை யாற்றிய வல்லபன் போன்றோரின் நினைவுகள் போற்றப்பட வேண்டும்.” என்றார்
இயக்குநர் பேரரசு பேசும்போது,
. “எம்.ஜி.வல்லபன் அவர்களை நான் பார்த்தது இல்லை. பழகியதில்லை இருந்தாலும் இந்த’சகலகலா வல்லபன்’ நூல்

படித்ததும் அவருடன் பழகியதைப் போல உணர்ந்தேன். படிக்கப்படிக்க நெருங்கிப் பழகிய உணர்வு இருந்தது.
அவருக்கு திறமைக்கு ஏற்ற ,உழைப்புக்கு ஏற்ற வெற்றி அமையவில்லை.

இன்று ஊரை ஏமாற்றுகிறவர்கள்தான் நன்றாக இருக்கிறார்கள். வல்லபன் பணத்தைச் சம்பாதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் மக்களைச் சம்பாதித்திருக்கிறார். இந்த தலைமுறை பத்திரிகையாளர்கள் இந்த’சகலகலா வல்லபன்’ நூலைப் படித்தால் அவர்களுக்கு புது வேகம் வரும்.” என்றார்

கவிஞர் அறிவுமதி பேசும் போது,

“இந்த விழா ஒரு குடும்ப உணர்வை ஊட்டுகிறது. அவர் என்னை தாய்போல அரவணைத்தவர். என்னை அழைத்து பிலிமாலயாவில் எழுத வைத்தார்.

என் ஆண்தாய் போன்ற பாரதிராஜா அழைத்த போது அவரிடம் போகப் பயந்து பாக்யராஜிடம் உதவியாளனாகச் சேர்ந்தேன். ‘பாமா ருக்மணி’ படத்தில் பணிபுரிந்த போது கிடைத்த இடைவெளியில் வல்லபன் என்னை, தான் இயக்கும் ‘தைப்பொங்கல்’ படத்துக்கு அழைத்தார்.

என்னை முதலில் உதவி இயக்குநர் ஆக்கியது அவர்தான் .’தைப்பொங்கல்’ படப்பிடிப்புக்கு மாண்டியா போனபோது அங்கே படக்குழுவினருடன் இருந்த நாட்கள் பொன்னான காலங்கள்.
அவர் சொல்லச்சொல்ல நான் எழுதிய நாட்கள் மறக்க முடியாதவை. மிகச்சிறந்த ஆளுமையாக அவர் இருந்தார்.” என்றார்.

கவிஞர் யுகபாரதி பேசும்போது ,
“நானும் பாடல் எழுதுவதை வெளியிலிருந்த போது கிண்டலடித்து இருக்கிறேன். உள்ளே நுழைந்து எழுதுகிற போதுதான் அதன் சிரமம் புரிகிறது.

ஒரு பத்திரிகையாளராகவும் பாடலாசிரியராகவும் இருப்பது மிகவும் சிரமம் .அவர் எழுதிய இலக்கிய நயமிக்க வரிகளைப் பார்க்கும் போது அவரது வாசிப்பு இலக்கிய தேர்ச்சியையும் அறிய முடிகிறது.

அவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்திருக்கலாம் என்றார்கள். அவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து இருந்தால் இன்று இந்நேரம் நாம் இப்படி ஒரு விழா எடுத்திருக்க மாட்டோம்.” என்றார்.

இயக்குநர் ஈ. ராம்தாஸ் பேசும்போது,

“என்னை முதலில் சார் என்று அழைத்ததும் எனக்கு எழுதவரும் என்று ஊக்கப் படுத்தியதும் அவர்தான். என்னாலும் முடியும் என்று வசனம் எழுதத் தூண்டியதும் அவர்தான்.”” என்றார்

முன்னதாக நூலின் தொகுப்பாசிரியர் அருள்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் அர்ச்சனா பிரகாஷ் நன்றி கூறினார். விழாவை ராஜசேகர் தொகுத்து வழங்கினார்.

book launch

கவுண்டமணியின் மங்கிஸ்தா கிங்கிஸ்தா டயலாக்கை பாடலாக்கிய டிஆர்

கவுண்டமணியின் மங்கிஸ்தா கிங்கிஸ்தா டயலாக்கை பாடலாக்கிய டிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRajendar records Mokinstha Kinkistha for Film KOOTHANசரத்குமார் இரு வேடங்களில் நடித்த நாட்டாமை படத்தில் மங்கிஸ்தா கிங்கிஸ்தா என்ற டயலாக்கை கவுண்டமணி பேசுவார்.

இப்போது அந்த வார்த்தையே டிஆர். குரலில் பாடலாகியுள்ளது.

இதன் விவரம் வருமாறு…

நீல்கிரிஸ் ட்ரீம் என்டேர்டைன்மெண்ட் “நீல்கிரிஸ் முருகன்” தயாரிக்கும் திரைப்படம் “கூத்தன்” இதில் புதுமுக நாயகனாக நடிக்கிறார் ராஜ்குமார்,பாலாஜி இசையமைக்க எழுதி இயக்குகிறார் வெங்கி.A.L.

டி.ஆர் பாடல் பாடினாலே சோசியல் மீடியாவில் வைரல் தான்.

இதை அறிந்த நிறைய தயாரிப்பாளர்கள் டி.ஆர் வீட்டில் படையெடுத்து வருகிறார்கள்.

ஆனால் டி.ஆர்ரோ தனக்கு பாடலின் மெட்டும் வரிகளும் பிடித்திருந்தால் மட்டுமே க்ரீன் சிக்னல் காட்டுகிறார்.

இந்நிலையில் கூத்தன் பட குழு மற்றும் இசையமைப்பாளர் பாலாஜி அவரை முதலில் அணுகிய போது நோ என்று சொன்ன அவர் பாடலின் மெட்டை கேட்ட உடன் குஷியாகிவிட்டார்.

மேலும் இந்த பாடலை யார் பாடினாலும் சூப்பர் ஹிட் ஆகக்கூடிய மெட்டும் வரியும் தான் இந்த “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” என்று கூறினார்.

ஆனால் இசையமைப்பாளர் பாலாஜி, சார் நீங்கள் இந்த பாடலை பாடவேண்டும்மென்றுதான் நான் இசையமைத்தேன்.

வேறுயாரையும் வைத்து இந்த பாடலை ஓலிப்பதிவு செய்ய விருப்பமில்லை என்று கூறியவுடன் அதை கேட்டு நெகிழ்ந்து போன டி.ஆர் நானே இந்த பாடலை பாடுகிறேன் என்று ஒப்புக்கொன்டு மெர்சலாக பாடிக் கொடுத்திருக்கிறார்.

என்னதான் ஜாலி பாடல் ஆக இருந்தாலும் ஒரு வரி செண்டிமெண்ட் இதில் வைத்துயிருந்தார்கள் “ஒன்னும் இல்ல ரத்தத்தில சொந்தம் தான் டா மொத்தத்தில” என்ற ரோகேஷ் எழுதிய வரியை பாடி முடித்தவுடன் கண்கலங்கி டி.ஆர் இந்த வரிகளை நான் பாடவில்லை மைக்கின் முன் நடித்திருக்கிறேன் என்று அவர் கூறியவுடன் நெகிழ்ந்துப்போனது கூத்தன் படக்குழு.

இந்த பாடலை மிக பெரிய பொருட் செலவில் பிரமாண்ட அரங்கில் அசோக் ராஜா நடன அமைப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரிப்பில் படமாக்க இருக்கிறார்கள்.

TRajendar records Mokinstha Kinkistha for Film KOOTHAN

TRajendar records Mokinstha Kinkistha for Film KOOTHAN

விரைவில் 200 கோடியை நெருங்கும் மெர்சல்.; காத்திருக்கும் ரசிகர்கள்

விரைவில் 200 கோடியை நெருங்கும் மெர்சல்.; காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal near to touch Rs 200 crores collection worldwideதீபாவளி திருநாளை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதுவே படத்திற்கு பெரும் விளம்பரத்தை கொடுக்க, மக்கள் வெள்ளத்தால்வ அரங்குகள் நிறைந்தன.

மேலும் படத்தில் அந்த ஜிஎஸ்டி காட்சி நீக்கப்பட்டு விடுமோ? என்ற சந்தேகத்தினால் கூட்டம் அதிகரிக்க, காட்சிகளும் அதிகரித்தன.

பல பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு அதிகாலை காட்சியும் திரையிடப்பட்டது.

மேலும் சென்னையில் மூடப்பட்டிருந்த ஐநாக்ஸ், பிவிஆர் தியேட்டர்களும் மெர்சலுக்காக திறக்கப்பட்டன.

உலகளவில் 3 நாட்களில் சுமார் 100 கோடி வசூலைக் கடந்த, இப்படம் தற்போது 150 கோடியை நெருங்கிவிட்டதாக வியாபார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் உலகளவில் 200 கோடி வசூலை தொட்டுவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இப்போதே இதை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கி விட்டார்களாம்.

தமிழகத்தில் முதல் 5 நாட்களில் வசூலில், ‘பாகுபலி 2’ மற்றும் ‘எந்திரன்’ ஆகியவற்றுக்கு பின்னால் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mersal near to touch Rs 200 crores collection worldwide

தளபதி-62 அப்டேட்ஸ்… மலையாள கலைஞரை தமிழுக்கு அழைக்கும் விஜய்

தளபதி-62 அப்டேட்ஸ்… மலையாள கலைஞரை தமிழுக்கு அழைக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 62 cinematographerமெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இந்நிலையில் இதில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் இதுவரை களி, சோலோ உள்ளிட்ட மலையாள படங்களில் மட்டுமே பணிபுரிந்துள்ளார்.

கடந்த 2016ல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான குப்பி படத்திற்காக கேரள அரசின் விருதைப் பெற்றிருக்கிறார்.

இவர் விஜய்யுடன் இணைவதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

cinematographer Girish Gangadharan joins with Murugadoss for Vijay 62

More Articles
Follows