தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆர்கே சுரேஷ் , பூர்ணா , மது ஷாலினி , பகவதி பெருமாள் நடிப்பில் வெளியான விசித்திரன் விமர்சனம் இதோ . இசை – ஜிவி பிரகாஷ் . இயக்கம் – பத்மகுமார்.
ஒன்லைன்…
மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய் என்ற பேரில் நடக்கும் மெடிக்கல் மாஃபியாக்களின் கதை.
இந்த படம் மலையாளத்தில் ஜோசப் என்ற பெயரில் வெளியானது. அந்த படத்தின் ரீமேக் தான் இந்த விசித்திரன்.
கதைக்களம்…
மகள் மனைவியை இழந்து ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி விரக்தியால் இருக்கிறார். அவர் தன் நண்பர்களுடன் இணைந்து கொலை வழக்குகளை எப்படி அசால்ட்டாக கையாள்கிறார் என்பதுடன் படம் தொடங்குகிறது.
மாயன் என்ற கேரக்டரில் ஆர்கே. சுரேஷ். இவரின் காதல், திருமணம், வழக்கு விசாரணை, வாழ்க்கை, என படம் பயணிக்கிறது.
இவரின் முன்னாள் மனைவியின் இன்றைய கணவன் என்ற கிளைக்கதையும் இதில் அடங்கும்.
தன் மகள் மற்றும் மனைவி இருவரையுமே அடுத்தடுத்த விபத்துக்களில் பறிகொடுக்கிறார் ஆர்கே. சுரேஷ். அவர்கள் மூளைச்சாவு அடைந்துவிட்டதால் அவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது.
ஆனால் அது திட்டமிட்ட படுகொலை என்பதை அறிகிறார் நாயகன்.
அந்த கொலைகள் யாரால் செய்யப்படுகிறது. ஏன்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
120 கிலோ… 90 கிலோ… 80 கிலோ என தன் உடல் எடையை அதிகரித்து அதற்கேற்ப தன் உடல்மொழியை மாற்றியுள்ளார் ஆர்கே. சுரேஷ். வயிற்றில் தொப்பையை அதிகரித்து காட்ட ஒவ்வொரு காட்சிக்கும் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்திருக்கிறாராம். அதுபோல் இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதால் அந்த நபர் போல தினமும் 50 பீடிகளை குடித்தாராம் ஆர்கே. சுரேஷ். இந்த அர்ப்பணிப்புக்காகவே பாராட்டலாம்.
ஐங்கரன் விமர்சனம். 3/5..; இந்தியாவில் (வீக்) விஞ்ஞானி
பூர்ணா மற்றும் மதுஷாலினி என இரு நாயகிகள். இருவரும் சிறப்பு. பூர்ணா ஒரு படிமேலே சென்று தன் நடிப்பால் கவர்கிறார்.
இவர்களுடன் இளவரசு, மாரிமுத்து, பக்ஸ் உள்ளிட்டோரும் உண்டு.
டெக்னீஷியன்கள்…
ஜிவி. பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். இந்த கோடைக்காலத்தில் நம் கண்களுக்கு விருந்தாக கொடைக்கானலின் முழு அழகை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு கோடிகளில் கொட்டி கொடுக்கின்றனர் சிலர். ஆனால் அவை சீனியர்ட்டி அடிப்படையில் செயல்படுவது போல தோன்றினாலும் அந்த உறுப்புகள் ஒருவருக்கு சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை நாம் சரியாக கவனிப்பதில்லை.
அதிகமாக பணம் கொடுக்கும் மற்றொரு நபருக்கு அது பொருத்தப்படுகிறது. இதை தன் பாணியில் கண்டுபிடித்து தன் உயிரை பணயம் வைத்துள்ளார் நாயகன்.
ஒரு மலையாள படத்தை அதே சாயலுடன் தமிழில் கொடுத்துள்ளார் இயக்குனர் பத்மகுமார். வாழ்த்துக்கள்..
ஆக.. இந்த விசித்திரன்.. வித்தியாசமானவன் தான்.
விசித்திரன் விமர்சனம் போல் மேலும் சில பட விமர்சனங்களை நம் தளத்தில் கீழே காணுங்கள் .
Visithiran movie review
