தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்…
’மெட்ராஸ்’, ‘வட சென்னை’, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து நம்மை கவனிக்க வைத்தவர் பாவெல் நவகீதன். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ ஹீரோவாக நடித்துள்ளார்.
‘V1’ என்ற ஒரு வீட்டில் லிஜேஷும், காயத்ரியும் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்கிறார்கள்.
இவர்களுக்குள் காலையிலேயே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. அதன்பின்னர் வேலைக்கு செல்கிறார் காயத்ரி.
இரவு காயத்ரி லேட்டாக வர மர்ம நபர் ஒருவர் இவரை கொல்கிறார். அந்த சமயத்தில் மழை பெய்வதால் குற்றவாளியின் தடயங்கள் அழிகிறது.
இதனை விசாரிக்க தடயவியல் (FORENSIC) துறை போலீஸ் அதிகாரியான ராம் அருண் கேஸ்ட்ரோ வருகிறார்.
எந்த தடயமும் கிடைக்காமல் இருக்கவே இந்த கொலையை மறைக்க முயல்கிறது போலீஸ்.
ஆனால் இவரோ எப்படியாவது கண்டு பிடித்தே தீருவேன் என தன் துறை தோழி லுனாவுடன் களத்தில் இறங்குகிறார்.
இறுதியில் கொலையாளியை எப்படி கண்டு பிடித்தார்.? கொலையாளி யார்? அவர் கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக மட்டும் இல்லாமல் க்ளைமாக்ஸில் , சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு படமாக முடித்துள்ளார் இயக்குநர் பாவெல் நவகீதன். முதலில் அவரை பாராட்டிவிட்டு மற்றதை பார்ப்போம்.
இது போலீஸ் துறை என்றாலும் தடயவியல் துறை என்பதால் கலர் சட்டைகளில் வருகிறார் ஹீரோ ராம் அருண் கேஸ்ட்ரோ. அவரின் கேரக்டரை மிக அசால்லட்டாக செய்துள்ளார்.
நாயகி விஷ்னுபிரியா பிள்ளையை பாராட்டியே ஆக வேண்டும். அழகு கம்பீரம் என வெளுத்து கட்டியிருக்கிறார். இவரின் அழகான கண்களை பார்த்தால் குற்றவாளியே சரணடைந்துவிடுவார்.
காயத்ரியின் காதலனாக வரும் லிஜேஷ் சில காட்சிகள் வந்தாலும் ஸ்கோர் செய்துவிடுகிறார். சமீபத்தில் கூட குண்டு படத்தில் இவரின் போலீஸ் கேரக்டர் அருமையாக இருந்தது.
ஓரிரு காட்சியில் வந்தாலும் காயத்ரி செம. இவரை ஒரு தலையாக காதலிக்கும் லிங்கா, காயத்ரியின் பெற்றோர் என அனைவரும் நல்ல தேர்வு.
புள்ளிங்கோ ஸ்டைலில் வரும் லிங்காவின் நடிப்பு சிரிப்பை வர வைக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ரோனி ரெபேலின் பின்னணி இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு சரியாக பொருந்தியுள்ளது.
அதுபோல் சி.எஸ்.பிரேம்குமாரின் எடிட்டிங் பணிகள் கச்சிதம்.
படத்தின் முதல் காட்சியிலேயே கொலை… அதனை அடுத்து நிறைய திருப்பங்கள்… யார் கொலையாளி? இவரா? அவரா? என நம்மை திகைக்க வைத்துள்ளார்.
யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திரைக்கதையை கொடுத்து இறுதியில் இட இவரா? என திடீர் ட்விஸ்ட் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார்.
கொலையாளி இவர் தான் என ஒரு சின்ன க்ளு கொடுத்துள்ளார். அதை சிலர் கவனித்திருந்தால் அவர் புத்திசாலி என்று பொருள்.
சில நேரங்களில் மெதுவாக நகரும் காட்சிகள் நம்மை சோதிக்கிறது. இத்தனைக்கும் படம் நீளம் 2 மணி நேரம் கூட இல்லை என்பபது குறிப்பிடத்தக்கது.
ஆக.. இந்த வி1 படம் ஏ1 வரிசையில் சேரும்.
V1 Murder Case review rating
