தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்…
நாயகன் கார்த்திகேயன். இவர் வாய்பேச முடியாதவர். ஆனாலும் பட்டதாரி. இவர் தன் இரண்டு தங்கைகள் மற்றும் அப்பா அம்மாவுடன் ஓர் அழகான கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.
விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர் கார்த்திகேயன். திடீரென ஒரு நாள் ஒரு விபத்தில் தன் தந்தை மற்றும் தாயை இழக்கிறார். இதனால் குடும்பம் நிலை குலைந்து போகிறது.
எனவே குடும்பத்தை காக்க சென்னைக்கு சென்று கட்டிட வேலைக்கு செல்கிறார். அங்கு ஒரு கட்டத்தில் நாயகி சுகுணாவை ஒருதலையாக காதலிக்கிறார்.
அண்ணனை புரிந்துக் கொண்ட பாசமலர் தங்கைகள் வாய் பேச முடியாத அண்ணனுக்காக பெண் கேட்க செல்கின்றனர்.
அப்போது இரண்டு தங்கைகளும் யாரோ சிலரால் கொல்லப்படுகின்றனர்.
இதன் பிறகு என்ன ஆனது? நாயகியிடம் தன் காதலை சொன்னாரா கார்த்திகேயன்.? தங்கைகளை கொன்றது யார்? இடையில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…
நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் கார்த்திகேயன். நல்ல உயரம் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.. ஆனால் ஊமை நடிப்பு செயற்கை தனமாக உள்ளது.. ஊமை என்பதால் எப்போது வாயை திறக்கவே மறுக்கிறார் போல.. வாயை மூடியப்படியே வைத்துள்ளது ஏன் என்று தெரியல.?!
இரண்டு தங்கை கேரக்டர் நடித்துள்ளவர்கள் அழகாக இருக்கிறார்கள்.. ஆனால் இன்னும் சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கலாம்.
நாயகியாக சுகுணா.. பக்கத்து வீட்டு பெண் போல் இயல்பான நடிப்பு.
சேகர் என்ற கேரக்டரில் பாடலாசிரியர் ஜெயம்கொண்டான் நடித்துள்ளார். இவரால் தான் படத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.
நெல்லை சிவா – தீப்பெட்டி கணேசன் ஆகிய இருவரும் கொஞ்சம் சிரிக்கவும் வைத்து கொஞ்சம் அழவும் வைத்துள்ளனர். சிலர் காட்சிகளில் இவர்களுடைய ஓவர் ஆக்டிங் தென்படுவதை குறைத்து இருக்கலாம். தற்போது இருவரும் உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேஸ்திரி வேடத்தில் நடித்திருக்கிறார் இயக்குநர் எம்.சி.வி.தேவராஜ். இவரை காலி செய்ய நெல்லை சிவா & தீப்பெட்டி கணேசன் போடும் திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.. அதுபோல எதிர்பாரா விதமாக வில்லத்தனம் செய்யும் தேவராஜ் ரசிக்க வைக்கிறார்.
ஒரு அழகான கதையை உருவாக்கியவர் திறமையான கலைஞர்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருந்தால் இந்த உருச்சிதை இன்னும் சிறப்பாகவே வந்திருக்கும்.
படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை கலைக்குமார் எழுதியுள்ளார். ஜெ ஆனந்த் இசையமைத்துள்ளார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை லக்ஷ்மண் கவனித்துள்ளார். சண்டைக் காட்சிகளை தீப்பொறி நித்யா வடிவமைத்துள்ளார்.
Uruchithai movie review and rating in tamil
