சாதியை வெளுக்கும்… சாயம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…
சாதி என்ற சாயம் பூசப்படுவதால் வருங்கால தலைமுறை என்னாகிறது? என்பதே கதை.

கதைக்களம்…

ஓர் கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து தலைவர் பொன்வண்ணன். இவரது மனைவி சீதா. இவர்களது ஒரே மகன் அபிசரவணன் (இவரின் புதிய பெயர் விஜய் விஸ்வா). இவரின் முறைப்பெண் சைனி. (படத்தின் நாயகி)

விஜய்யின் நெருங்கிய நண்பர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் எந்த சாதி வேறுபாடும் இல்லாமல் நட்பாகவே உள்ளனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கின்றனர்.

ஆனால் கையில் கயிறு கட்டுவது.. பைக்கில் சாதி தலைவர்களின் ஸ்டிக்கர் ஒட்டுவது என ஒரு சிலரால் கல்லூரி மாணவர்களிடையே சாதி அரசியல் பேசப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வில்லன் சூழ்ச்சி வலையில் சிக்கி கொள்கிறார் விஜய் விஸ்வா. தன் உயிர் நண்பனையே சூழ்நிலை காரணமாக கொலை செய்ய சிறைக்குச் செல்கிறார்.

இதனால் இவர் சாதி வெறியர்களின் எதிரியாகிறார். சிறையில் விஜய்யை போட்டுத்தள்ள திட்டம் போடப்படுகிறது.
அங்கு விஜய்யின் சாதியினரின் ஆதரவினால் இவர் தப்பித் கொள்கிறார்.

சாதி சாயத்தில் சிக்கிக் கொண்ட விஜய் என்ன செய்தார்? அதன்பின்னர் விடுதலை ஆனாரா? என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இந்த படத்தை இயக்கியதோடு சாதி வெறி பிடித்த மிரட்டல் வில்லனாகவும் நடித்துள்ளார் இயக்குனர் அந்தோணி சாமி. இவர்தான் முதலில் நாயகன் போல காண்பிக்கப்படுகிறார். அப்புறம்தான் விஜய் விஷ்வா நாயகன் என்பதே தெரிகிறது.

வழக்கமான கிராமத்து இளைஞனாக விஜய் விஸ்வா நடித்துள்ளார். முதலில் சாதியை வெறுக்கும் விஜய் பின்னர் சாதி வெறி பிடித்த கைதியாக மாறுகிறார். காதல் காட்சிகள் இவருக்கு கைகொடுக்கவில்லை என்பதை விட

இவருக்கு காதல் காட்சிகளை இயக்குனர் கொடுக்கவில்லை என தெரிகிறது. க்ளைமாக்சில் எமோஷனல் ஆக்சன் என கொஞ்சம் முயற்சித்துள்ளார்.

நாயகி ஷைனி நாயகனை விட மூத்தவராக தெரிகிறார். சில காட்சிகளில் குண்டாகவும் மற்ற காட்சிகளில் ஒல்லியாகவும் தெரிகிறார். நாயகனை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இவர்களின் நண்பர்கள் கச்சிதம்.

பொன்வண்ணன், சீதா, இளவரசு, போஸ் வெங்கட் என பல அனுபவ கலைஞர்கள் உள்ளனர். அவர்களின் தேர்வு கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

நாகா உதயன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். கிரிஸ்ட்டோபர், சலீம் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
சாதி சாயம் பூசப்படுவதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை அந்தோணி சாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதை சொன்ன விஷயத்தில் தடுமாறியிருக்கிறார் டைரக்டர்.

ஆக மொத்தத்தில் சாயம் – சாதியை வெளுக்கும்.

Saayam movie review rating

சரவெடி சாமானியன்..; வீரமே வாகை சூடும் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடும் சாமானிய மனிதனின் கதை.

கதைக்களம்..

விஷாலின் அப்பா மாரிமுத்து போலீஸ்காரர். விஷாலின் தங்கை ரவீனா ரவி கல்லூரி மாணவி.

தன் அப்பாவை போல போலீஸ் ஆக முயற்சிக்கிறார் விஷால். (க்ரைம் ப்ரான்ச்)

ரவீனாவுக்கு லோக்கல் ஏரியா லவ் டார்ச்சர் கொடுக்கிறார். இதனால் விஷால் ஆவேசமடைகிறார். ஆனால் தந்தையோ பொறுத்து போ.. பொறுத்து போ என அட்வைஸ் செய்கிறார்

ஒரு கட்டத்தில் மற்றொரு கும்பல் ரவீனாவை கடத்தி செல்கிறது.

இறுதியில் தங்கை என்ன ஆனார்.? விஷால் கண்டு பிடித்தாரா? ரவீனாவை கடத்திய கும்பல் யார்? போலீஸ் ஆனாரா விஷால்.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆவேசம், காதல், தங்கை பாசம், சமூக அக்கறை என தன் வழக்கமான பாணியில் விளாசுகிறார் விஷால். ஆக்ஷன் காட்சிகளில் வேற லெவல். சென்டிமெண்டில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாயகியாக டிம்பிள் ஹயாதி. பேங்கில் வேலை செய்கிறார். இவரின் அறிமுக காட்சி சூப்பர். என்னடா… உன் கூட படுக்கனுமா? என பேங்க் மேனஜரை டேமேஜ் செய்கிறார்.

தங்கையாக வரும் ரவீனா நம்மை கவர்கிறார். அண்ணனுடன் செல்ல சண்டை…. ரவுடி டார்ச்சரால் அவஸ்தை என எமோஷனல் நடிப்பை கொடுத்துள்ளார்.

வில்லன் பாபு ராஜ் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் க்ளைமேக்ஸ் இவரது பைஃட் எதிர்பாராத ஒன்று. போராளி குமரவேல் தன் கேரக்டரில் கச்சிதம்.

காமெடியில் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு. கொஞ்சம் மாறுபட்ட நடிப்பில் மாரிமுத்து.

ஆர்என்ஆர் மனோகர் & மரியம் ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பு கவனம் பெறுகிறது.

டெக்னீஷியன்கள்…

கவினின் ஒளிப்பதிவு செம ரிச். க்ளைமாக்ஸில் ஹீரோ & வில்லன் காஸ்ட்யூம் ஏற்ப லைட்டிங் கொடுத்துள்ளது சிறப்பு.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை. ஆனாலும் பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அனல் அரசு & ரவி வர்மா சண்டை காட்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஃபைட் சீன்கள் பட்டைய கிளப்பியுள்ளன.

அதிகார வர்க்கத்தின் அக்கிரமங்களை பார்த்து ஒரு கட்டத்தில் வெகுண்டெழும் சாமானியனின் கோபத்தை யதார்த்தமாக கொடுத்துள்ளார் இயக்குனர் து.ப.சரவணன்.

இடைவேளை காட்சியில் மூன்று கிளை கதைகளை கொடுத்து இரண்டை இணைத்து திரைக்கதை உருவாக்கி இருக்கிறார் டைரக்டர். மிகச்சிறப்பு.

3வது ட்விஸ்டை க்ளைமாக்ஸில் இணைத்துள்ளது சிறப்பு.

இடைவேளை வரை காட்சிகள் படத்திற்கு பலம். பிற்பாதியில் யூகிக்கும் படியான காட்சிகள் வருவது பலவீனம்.

ஓரிரு பன்ச் வசனங்களை தவிர வழக்கமான வசனங்களும் பலவீனம்.

தெரியாமல் செய்தால் உதவி.. தெரிந்து செய்தால் விளம்பரம்.. என்ற வசனம் ரசிக்க வைக்கிறது.

ஆக ‘வீரமே வாகை சூடும்’… சரவெடி சாமானியன்

Veerame Vaagai Soodum movie review and rating in Tamil

பல டென்ஷன்களில் பல மனிதர்கள்..; சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், நாசர், அபிஹாசன், பானுப்ரியா, அஞ்சு குரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நம் செயல்பாடுகள் நமக்கு சரியாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களின் பார்வையில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..

சாதித்தவர்களின் சாதுவானவர்கள். அவர்களின் அனுபவப்படி நடத்தல் நலம்.

கொடுக்கப்பட்ட வேலையை முழுமையாக செய்யாவிட்டால் என்ன பிரச்சனை ?

ஆடம்பரமே வாழ்க்கையில்லை. பணத்தை மீறிய வாழ்க்கை உண்டு.

இப்படியாக 4 கதைகளை கொண்ட படம்தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

கதைக்களம்..

தன் தாயை இழந்த அசோக் செல்வன் தன் அப்பா நாசருடன் வாழ்ந்து வருகிறார். இவர் ரியா என்பரை திருமணம் அப்பா சம்மதத்துடன் மணக்கவிருக்கிறார்.

தன் அப்பா மீது அதீத பாசம் வைத்திருந்தாலும் அதை முரட்டுத்தனமாக காட்டுபவர் அசோக் செல்வன். உங்களுக்கு ஒன்றுமே தெரியல.. நான் சொல்றதை கேளுங்க என்ற அதட்டல் குணம் படைத்தவர்.

இவரின் பேச்சை கேட்காமல் நாசர் தன் நண்பர்களுக்கு மகனின் கல்யாண பத்திரிகை வைக்க தனியாக செல்கிறார்.

இரவு முழுவதும் அப்பாவை காணவில்லை என தேடி அலைகிறார் அசோக். என்ன ஆனார் நாசர்.?

2வது கதையில்…

பிரபலமான இயக்குனர் அறிவழகன் (கேஎஸ் ரவிக்குமார்) இவரது மகன் அபிஹாசன் அமெரிக்காவில் வளர்ந்தவர்.
சினிமா மீதுள்ள ஆசையால் நடிகராக அறிமுகமாகிறார். ஆனால் அப்பாவின் சென்டிமெண்ட் குடும்ப படங்கள் இவருக்கு சுத்தமாக பிடிக்காது.

அதிகார வர்க்க பணக்கார திமிரோடு வாழ்பவர். தந்தை துணை இல்லாமல் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவர். இவர் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். அப்பா உதவினாரா?

3வது கதை..

ஸ்டார் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பராக பணிபுரிபவர் மணிகண்டன். தனக்கு திறமை இருந்தும் மதிப்பு இல்லை என குமுறுபவர் இவர். மேலும் கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் அதை முழுமையாக முடிக்காதவர். இவர் பாதியில் ஒரு வேலையை விட்டு சென்றதால் மற்றவர் பாதிக்கப்படுகிறார்..

4வது கதை..

ரித்விகாவின் கணவர் பிரவீன் ராஜா. தன் மனைவி தன் குடும்பத்தை வசதியாக காட்டிக் கொள்ள நினைப்பவர். காஸ்ட்லியான பொருட்களை வாங்கி தம்பட்டம் அடிப்பவர் இவர்.

உங்களுக்காக என்னால் அப்படி வாழ முடியாது என்பவர் ரித்திகா. இதனால் என்ன பிரச்சினை உருவானது?

இந்த நாலு கதைகளும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறது. ஒவ்வொருவரின் டென்ஷன்கள் மற்றவர்களின் பிரச்சினைக்கு எப்படி காரணமாகிறது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், ரித்விகா, அபிஹாசன், கே எஸ் ரவிக்குமார், நாசர் உள்ளிட்ட கேரக்டர்கள் அனைத்தும் சிறப்பு. இயக்குனர் கேரக்டருக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்துள்ளது மிகச்சிறப்பு.

இதில் அதிகம் ஸ்கோர் செய்பவர் நடிகர் நாசர் தான். கொஞ்ச நேரமே வந்தாலும் சேரி பாஷைகளில் தன் பாசத்தை புரிய வைத்துள்ளார்.

கோபக்கார இளைஞனாக அசோக் செல்வன். இவர் வருங்கால மனைவியுடன் தன் தவறை உணர்ந்து அடங்கி போவது ரசிக்க வைக்கிறது.

எப்போதுமே கொடுத்த கேரக்டருக்கு மகுடம் சூட்டுபவர் நடிகர் மணிகண்டன். யதார்த்த நாயகனாக அசத்தியிருக்கிறார்.

SHIT… SHIT… என ஸ்டைலிஷ் இங்கிலீஷ் பேசியிருக்கிறார் அபிஹாசன். சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தெரிகிறது. குறைத்திருக்கலாம்.

ரித்விகா அவரது கணவர் பிரவீன் ராஜா இருவரும் சிறப்பு. பிரவீன் ராஜாவின் நண்பராக வரும் அந்த வக்கீல் சில காட்சிகளே என்றாலும் கவனிக்க வைக்கிறார்.

கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமாகுமார் பல சிறந்த நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

டெக்னிஷியன்கள்…

மெய்யேந்திரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. சேரி காட்சியிலும் ஆடம்பர குடும்ப காட்சியிலும் மாறுபட்ட லைட்டிங் கொடுத்திருப்பது சூப்பர்.

ரதனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னனி இசை சில இடங்களில் கவனம் பெறுகிறது.

அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் பாஸ் மார்க்கும் பெறுகிறார்.

நான்கு கதைகளை மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டே செல்வதால் ஒரு கதையை நாம் உணர்வதற்குள் அடுத்த கதை வருவதால் கவனம் சிதறுகிறது.

எமோஷனல் கதைதான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாக சொன்னாமல் போனதால் ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றமே.

முக்கியமாக ஒரு விபத்து நடக்கிறது. அதுக்கு யார் காரணம்? என பொதுமக்கள் இறுதியாக தெரிந்துக் கொண்டார்களா? என்பதை இயக்குனர் சரியாக காட்சிப்படுத்தவில்லை. அதை ரசிகர்களே புரிந்துக் கொள்ளட்டும் விட்டுட்டாரா?

நடிகரை ட்ரோல் செய்யும் காட்சிகள் சிறப்பு. இது என்ன சொல்ல போகிறாய்? நடிகர் அஸ்வினை குறிப்பதாகவே உள்ளது. அவர் பேசி சர்ச்சையான இசை வெளியீட்டுக்கு விழாவுக்கு முன்பே எடுக்கப்பட்ட காட்சியா? என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

ஆக.. நம்மில் பல பேர் பல டென்ஷன்களுடன் வாழும் மனிதர்கள் தான் என்பதை சொல்லி ரிலாக்ஸ் ஆக சொல்லியிருக்கிறார் டைரக்டர் விஷால் வெங்கட்.

Sila Nerangalil Sila Manidhargal review

செய்முறை சடங்கும் சங்கடமும்..; மருத விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தமிழக கிராமங்களில் இன்றளவிலும் காணப்படும் செய்முறை பற்றிய படம் இது. சில கிராமங்களில் இதை மொய்விருந்து என அழைப்பதுண்டு.

ஒருவர் தன் வசதிற்கேற்ப தன் உறவினருக்கு செய்முறை செய்ய 10-20 வருடங்களுக்கு பிறகு அதை வட்டியுடன் செய்ய முடியாமல் போகும் ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் நிலையே இந்த படம்.

செய்முறை செய்ய முடியாமல் சிலர் அவமானப்படுகின்றனர். சிலர் தற்கொலை செய்து உயிரையும் மாய்த்துக் கொள்ளுகின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது இந்த செய்முறை சடங்கை ரத்து செய்தார். ஆனால் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கதைக்களம்…

சரவணன் ராதிகா இருவரும் அண்ணன் தங்கை.

சரவணனின் மனைவி விஜி. இவர்களுக்கு ஒரு மகள். (மகனும் உண்டு). ராதிகாவின் கணவர் மாரிமுத்து. இவர்களுக்கு ஒரு மகன். இவர்தான் படத்தின் இயக்குனரும் கூட.

ராதிகா மகனின் காதணி விழாவிற்கு சரவணன் தன் கௌரத்திற்காக அதிகமாக செய்முறை செய்துவிடுகிறார். ராதிகா எவ்வளவோ மறுத்தும் இது நடந்துவிடுகிறது.

சில வருடங்களுக்கு பிறகு ராதிகாவின் கணவர் மாரிமுத்துவை விஜி அசிங்கப்படுத்த மாரிமுத்து தற்கொலை செய்து விடுகிறார்.

இதனால் வறுமைக்கு தள்ளப்படும் ராதிகாவால் செய்முறை செய்ய முடியாமல் போகிறது. இவரின் மகனோ ஊதாரித்தனமாக இருக்கிறார்.

இறுதியாக ராதிகாவிடம் இருந்து செய்முறையை எப்படி வசூலித்தார் விஜி சந்திரசேகர்… இவர்களின் குடும்பம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

பாரதிராஜாவின் உதவியாளர் ஜி.ஆர்.எஸ். தான் இப்பட இயக்குனர் மற்றும் நாயகன். பாரதிராஜா பாணியில் படத்தை இயக்க முயற்சித்து இருக்கிறார்.

கிராமங்களில் நாம் பார்க்கும் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து ஆகியவற்றை வைத்தே படத்தை பாதி நகர்த்தியிருக்கிறார்.

இவருக்கு ஊரில் சில நண்பர்கள் இருக்கும்படியாக காட்டியிருக்கலாம். இவரே எல்லாம் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டார் போல. முதல் பாதியில இவரின் ஓவர் ஆக்டிங் கொடுமை தாங்க முடியவில்லை.

மீம்ஸ் எமோஜிக்கு ஏற்ப இவர் முக பாவனைகள் காட்டுவதை ரசிக்க முடியவில்லை.

பாவப்பட்ட நடிப்பில் ராதிகா அசத்தல். கிராமத்து அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். கிராமத்து பாஷை இவருக்கு கைவந்த கலை.

சித்தப்பு சரவணன். ப்ளாஷ்பேக்கில் கெத்து.. இரண்டாம் பாதியில் வெத்து என வெரைட்டி காட்டியிருக்கிறார். மனைவிக்கு பயந்து வாழ்ந்தாலும் தேவைக்கேற்ப ஆவேசம் காட்டியுள்ளது சிறப்பு.

மாரிமுத்து சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் நடிப்பில் கச்சிதம்.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வில்லி சொர்ணாக்கா எனலாம். அப்படியொரு மிரட்டலாக நடிப்பில் விஜி சந்திரசேகர் வாழ்ந்திருக்கிறார். ஆனாலும் இவரும் சில காட்சிகளில் ஓவர் ஆக்ட்டிங்கை கொடுத்துவிட்டார். இயக்குனர் அப்படி சொல்லிருப்பார் போல.

விஜியின் மகளாக அவரின் நிஜ மகளே நடித்துள்ளார். அவர்தான் படத்தின் நாயகி லவ்லின். அம்மா.. அத்தை என நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஆனால் இவருக்கு கிராமத்து பாஷை சரியாக ஒட்டவில்லை. அதை சரி செய்திருக்கலாம்.

டெக்னிஷியன்கள்..

பட்டுக்கோட்டை ரமேஷின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆனால் கிராமத்து அழகை இன்னும் காட்டியிருக்கலாம். இவர்கள் குடும்பதை மட்டுமே காட்டியிருப்பது போரடிக்கிறது.

படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அவரின் இசையை குறை சொல்லும் அளவுக்கு நாம் தகுதியானவர் இல்லை. ஆனால் அவரது பழைய பாடல்கள் போல இல்லை என்பதே உண்மை.

ஆக செய்முறையை இன்னும் சிறப்பாக செய்திருந்தால் மருத இன்னும் மணக்கும் வகையில் இருந்திருக்கும்.

Marudha movie review and rating in Tamil

நினைத்தாலே இனிக்கும்…; முதல் நீ முடிவும் நீ விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

96 படத்தில் பள்ளி நினைவுகள்… பின்னர் ரீயூனியன் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் அந்த படத்தின் ப்ளாஷ்பேக்கில் விஜய்சேதுபதி த்ரிஷா கேரக்டர்களில் கௌரி ஆதித்யா நடித்திருந்தனர்.

இந்த படத்தில் பள்ளி பருவத்தில் நடித்தவர்களே 10-15 வருடங்களுக்கு பிறகு சந்திப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜதந்திரம் படத்தில் நடிகர்… எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இசையமைப்பாளர் என அறியப்பட்ட தர்புகா சிவா இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார்.

கதைக்களம்..

11ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் வினோத், ரேகா, அனு, கேத்ரின், சைனீஸ், துரை, பிரான்சிஸ், ரிச்சர்ட் உள்ளிட்ட மாணவர்கள்.

இதில் வினோத்தும் ரேகாவும் காதலிக்கிறார்கள். வினோத்தின் எல்கேஜி ப்ரெண்ட் சைனீஸ் யாராவது காதலிக்க மாட்டார்களா? என ஏங்குகிறார்.

வழக்கமான பள்ளிக் கூட கலாட்டா… கல்ச்சுரல் ப்ரோக்ராம்.. சைட் அடிப்பது.. ஊர் சுற்றுவது.. வாக்மேனில் பாட்டு கேட்பது… வாடகைக்கு கேசட் எடுத்து வீட்டில் பிட் படம் பார்ப்பது என ஜாலியாக முதல் பாதி செல்கிறது.

இடைவேளை கட்டத்தில் வினோத் ரேகா காதல் பிரச்சினையால் பிரிய நேர்கிறது. அதே சமயத்தில் சைனீஸ் அனு காதல் கை கூடுகிறது.

இவர்கள் கிட்டத்தட்ட 10 12 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் கொள்ளும் நேரத்தில் யாருடைய வாழ்க்கையில் யார் இருக்கிறார்? என்னென்ன சாதித்தார்கள்.? எப்படி எல்லாம் வாழ்க்கை மாறியது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

வினோத் என்ற கேரக்டரில் ஹீரோவாக கிஷன் தாஸ். பள்ளி பருவத்தில் ரேகாவுடன் ஊர் சுற்றுவது.. ஒரு கட்டத்தில் தான் செய்யாத தவறுக்காக அவளின் காதலை உதாசீனப்படுத்துவது என பின்னி எடுத்திருக்கிறார்.

இசையில் சாதித்து பெரிய இசையமைப்பாளர் என வலம் வரும் போது இவரிடம் காணப்படும் மெச்சூரிட்டி நடிப்பில் வியக்கவைத்துள்ளார்.

இவரின் நண்பர்.. 2வது ஹீரோ எனலாம். சைனீஸ் கேரக்டரில் அதகளம் பண்ணியிருக்கிறார் ஹரீஷ். ஸ்கூல் பையனாக பாடிலாங்குவேஜில் மிரட்டியிருக்கிறார். அதே பையன் வளர்ந்த பிறகு பக்குவ நடிப்பிலும் சிறப்பு.

இவரின் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. நிச்சயம் நம் ஸ்கூலில் இப்படியொரு பையன் நமக்கும் நண்பனாக இருந்திருப்பார்.

இவர்களை போல ரேகா.. அனு.. கேத்ரீன் கேரக்டர்களுக்கு சூப்பர். அப்படியொரு அப்பாவித்தனமாக பள்ளிப் பருவ நடிப்பை கொடுத்துள்ளனர்.

சுரேந்தர் கதாபாத்திரத்தில் கெளதம் ராஜ், கேத்ரின் கதாபாத்திரத்தில் பூர்வா ரகுநாத், துரை கதாபாத்திரத்தில் ஷரன் குமார், ப்ரான்சிஸ் கதாபாத்திரத்தில் ராகுல் கண்ணன், ரேகா கதாபாத்திரத்தில் மீதா ரகுநாத், ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் வருண் ராஜன், திருமால் கதாபாத்திரத்தில் நரேன், விக்கி கதாபாத்திரத்தில் ஹரினி ரமேஷ் கிருஷ்ணன் அனைவரும் அசத்தியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

சுஜித் சரங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். எங்கும் மிகைப்படுத்தப்படாத காட்சிகள் நம்மை படத்துடன் ஒன்ற வைத்துள்ளன.

படத்தின் இயக்குனர் தர்புகா சிவா ஒரு காட்சியில் நடிகராக வருகிறார். இவரே இசையமைத்தும் இருக்கிறார்.

சித்து ஸ்ரீராம் குரலில் முதல் நீ.. முடிவும் நீ பாடல் நிச்சயம் அனைத்து தரப்பினரையும் கவரும். ஆனால் (மறுவார்த்தை பேசாதே) என்ற பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

வாசுதேவனின் ஆர்ட் ஒர்க் பேசப்படும் வகையில் உள்ளது. 1990களில் உள்ள கேசட்.. கம்ப்யூட்டர்.. ஸ்கூல் யூனிபார்ம்.. பைக்,.. வாக்மேன்… தளர்வான உடைகள் என அனைத்தையும் கவனித்து செய்துள்ளார்.

பள்ளி காலங்களில் படிக்கும் நாம் பெரிய ஆளாக ஏதாவது ஒன்றை நினைப்போம். ஆனால் காலங்கள் மாற மாற.. எப்படியெல்லாம் நம் எண்ணங்கள் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் முதல்பாதியில் இருந்த கலாட்டா இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். காதலர்கள் இணைந்தால் இப்படியொரு சம்பவம்.. காதலர்கள் இணையாவிட்டால் இப்படியொரு சம்பவம் என ரசிகர்களே பிரித்துக் கொள்ளலாம். இந்த புது முயற்சியை நிச்சயம் பாராட்டலாம்.

ஆக. முதல் நீ.. முடிவும் நீ.. நம் நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்.

Mudhal Nee Mudivum Nee movie review and rating in Tamil

தேனாக கொட்டிய பாசம்.. தேள் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பொதுவாக ஒரு படத்தை காப்பியடிப்பவர்கள்… கதையை திருடுபவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இது கொரிய மொழிப்படம் ஒன்றின் தழுவல் என சொல்லி படத்தை தொடங்கிய இயக்குநர் ஹரிகுமாருக்கு பாராட்டுக்கள்..

கதைக்களம்..

கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரத்தை விட கந்து வட்டி பிசினஸ் கனஜோர். இந்த கும்பலிடம் வேலை செய்கிறார் பிரபுதேவா. இவரது பேச்சு குறைவு செயல் அதிகம்.

அதாவது பணம் தராமல் இழுத்தடிக்கும் பேரிடம் பணத்தை வாங்கி வருவதற்கு பதிலாக உயிரையே வாங்கி வரும் பலே கில்லாடி. இதனால் பிரபுதேவாவுக்கும் எதிரிகள் உண்டு.

இவருக்கு யாரும் இல்லை என்பதால் தனியாக வாழ்கிறார். இவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏரியா டான்சர் சம்யுக்தா ஹேக்டே. நாயகியின் ப்ரோ யோகிபாபு.

ஒரு கட்டத்தில் நான்தான் உன் அம்மா என சொல்லி வருகிறார் ஈஸ்வரி ராவ். முதலில் ஏற்க மறுக்கிறார் பிரவுதேவா. 15 வயதில் என்னை ஒருத்தன் கெடுத்துவிட்டான். விவரம் தெரியாத வயதில் உன்னை அனாதையாக்கி சென்றுவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்கிறார்.

பின்னர் மனம் மாறி அம்மாவை ஏற்கிறார். புதிதாக கிடைத்த தாய் பாசத்தால்  கந்து வட்டி வசூலிக்க செல்ல மறுத்து அம்மாவுடன் வாழ்கிறார்.

பிரபுதேவா இல்லாமல் பணம் சரியாக வசூலாகவில்லை என்பதால் கும்பலின் கோபத்துக்கு ஆளாகிறார்.

அதன்பின்னர் என்னானது..? பிரபுதேவாவை அந்த கும்பல் என்ன செய்தது? அம்மா மகன் பாசம் நீடித்ததா..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

டான்ஸ் இல்லாத படத்தில் டான்சர் பிரபுதேவா என்பதே ஆச்சரியமான விஷயம்தான். தனிமையில் வாழ்வதும் பின்னர் அம்மாவின் பாசத்துக்காக ஏங்குவதும் என உணர்ந்து நடித்துள்ளார்.

க்ளைமாக்ஸ் முடிவு எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் கேரக்டர். இதற்காகவே பிரபுதேவாவை நிச்சயம் பாராட்டலாம்.

யோகிபாபுவின் ஒன்லைன் காமெடிகள் பெரிதாக எடுபடவில்லை. பிரபுதேவா செய்யாத நடனத்தை சம்யுக்தா செய்து அசத்தியிருக்கிறார். நாயகனை சுற்றி சுற்றி காதலிக்கும் வழக்கமான நாயகி வேடம். ஆனால் கிளாமர் காட்டி இந்த குளிர் சீசனில் கொஞ்சம் சூடேற்றிவிட்டார்.

ஈஸ்வரி ராவ் கேரக்டர் எதிர்பாராத ஒன்று. காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகனிடம் கெஞ்சும் காட்சிகளில் நம்மை அழ வைக்கிறார். ஆனால் சில சீன்களில் நரைத்த முடியுடன் வருகிறார். மற்ற காட்சிகளில் கறுப்பு தலைமுடி.

ப்ளாஷ்பேக்கில் மாரிமுத்து.. கந்து வட்டி மற்றொரு தலைவனாக அர்ஜெய். இவர்களின் காட்சிகள் குறைவு.

டெக்னிஷியன்கள்…

சி.சத்யாவின் இசையில் தாய்ப் பாடல் உருக வைக்கிறது. என்னை பெத்த தேவதையே… என் தேவதையே என அம்மாவுக்கான பாடல் வரிகள் சூப்பர். பின்னணி இசையிலும் நல்ல தேர்ச்சி. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

நிறைய படங்களில் நாயகனாக நடித்த ஹரிக்குமார் தான் இப்படத்தின் இயக்குனர். பிரபுதேவாவின் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

பொதுவாக தமிழ் படங்களில் நாயகன் ரவுடியாக இருந்தால் நாயகி வந்துதான் திருத்துவார். ஆனால் அம்மாவாக ஒரு கேரக்டர் (ஜெமினி படம் அப்படித்தான்) வந்து திருத்துவது சில படங்களில் உள்ள புதுமை.

அம்மா மகன் பாசம் இன்னும் நெருக்கமாக இருந்திருந்தால் நாமும் படத்துடன் ஒன்றிருந்திருக்கலாம். முதல்பாதியில் மெதுவாக கதை நகர்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

Thael Movie review rating

More Articles
Follows