ராஜா மகள் விமர்சனம் 3.5/5.; குறை தெரியாத குட்டீஸ்

ராஜா மகள் விமர்சனம் 3.5/5.; குறை தெரியாத குட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

ஆடுகளம் முருகதாஸ் – வெலீனா தம்பதிகளுக்கு பிரதிக்ஷா என்ற 8 வயது மகள்.. செல்போன் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருக்கிறார் முருகதாஸ்.

தன் மகள் மீது கொள்ளை பாசம் வைத்திருக்கிறார். மகள் எதை கேட்டாலும் உடனே வாங்கி கொடுத்துவிடும் சுபாவம்.

ஒரு நாள் தன் பள்ளி தோழன் வீட்டு விழாவுக்கு செல்கிறார் பிரதிக்ஷா. அப்போது சொந்த வீடு.. பங்களா.. வாடகை வீடு உள்ளிட்டவைகளை பற்றி அறிகிறார்.

எனவே தனக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் என அப்பாவிடம் கேட்கிறார். மகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் அப்பா சரி வாங்கி தரேன் என்கிறார்.

ஆனால் உடனே வேண்டும் என அடம் பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் வீடு வாங்கியாச்சு என பொய் சொல்கிறார்.

இதன்பிறகு என்னாச்சு.? தந்தை மீது மகள் வைத்த நம்பிக்கை என்ன ஆனது.? பொய்யே சொல்லாத தந்தை பின்னர் என்ன செய்தார்.? தன்னுடைய அப்பா தான் ஹீரோ என்று நினைக்கும் மகள் என்ன செய்தார்? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகன் ஆடுகளம் முருகதாஸ். நாயகி வெலீனா.. ஆனால் இவர்கள் இருவரையும் தன் நடிப்பில் முந்திவிட்டார் குட்டி பெண் பிரதிக்ஷா. அவரின் முகபாவனைகளும் அவர் பேச்சும் வேற லெவல்.. பள்ளியில் அவர் செய்யும் அலப்பறைகளும் சூப்பர்.. நிச்சயமாக விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரை பல படங்களை காமெடி செய்து வந்த ஆடுகளம் முருகதாஸ் ஓர் யதார்த்த தந்தையாக வாழ்ந்திருக்கிறார்.

அதுபோல இளம் வயதிலேயே ஒரு மெச்சூரிட்டியான கேரக்டரை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் வெலீனா.. மகளிடம் அதிக செல்லம் காட்டும் கணவனை கண்டிக்கும் மனைவியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடித்துள்ள பக்ஸ் பகவதி உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் பள்ளி மாணவர்களும் அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

நிக்கி கண்ணனின் கேமரா கதைக்கு துணை புரிந்துள்ளது. சங்கர் ரங்கராஜணனின் பின்னணி இசையை விட பாடல்கள் அதிக கவனம் பெறுகிறது.

குழந்தைகளிடம் பொய் சொல்லி வளர்ப்பதை விட தங்களின் இயலாமையை பெற்றோர்கள் சொல்லி வளர்ப்பது நல்லது என்பதை இயக்குனர் ஹென்றி புரிய வைத்திருக்கிறார்.

ஏழையாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு அப்பனும் ராஜா தான். அதே சமயம் தங்கள் கஷ்டங்களை சொல்லி வளர்க்கும் தந்தையே உண்மையான ராஜா என்பதையும் உணர வைத்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி.

ஆக ராஜா மகள்.. குறை தெரியாத குட்டீஸ்

Raja Magal movie review and rating in Tamil

FIRST ON NET குடி மகான் விமர்சனம் 3.25/5.; குடித்தால் தாங்குமா.?

FIRST ON NET குடி மகான் விமர்சனம் 3.25/5.; குடித்தால் தாங்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

குடிக்காத ஒருவனுக்கு ஏற்படும் வியாதி போதையாகிறது.. இதனால் அவனுக்கு ஏற்படும் அவமானமே படத்தின் கதை.

கதைக்களம்…

தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி.. அவரது மகன் விஜய் சிவன்.. அவரது மருமகள் சாந்தினி தமிழரசன்.. இவர்களுக்கு ஒரு குழந்தை.!

ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும் வேலையை செய்கிறார் நாயகன். இவருக்கு புதுவிதமான நோய் ஒன்று வருகிறது. அதாவது உடலில் கார்போஹைட்ரேட்ஸ் குறைந்து காணப்படுவதால் அது போதை ஆகிறது.. அவர் எதை சாப்பிட்டாலும் அதுவும் போதையாகவே பல பிரச்சினைகளை சந்திக்கிறார்.

ஒருநாள் ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்பும்போது 100 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் கட்டுகளை வைக்கிறார்.. இதனால் படம் எடுப்பவர்கள் லட்சக்கணக்கில் படம் எடுக்கின்றனர்.

இது பெரும் பிரச்சனையாகவே அவரது வேலை பறிபோகிறது.. இதனையடுத்து மீண்டும் வேலை கேட்கிறார்.. நீ பணத்தை திருப்பி கொடுத்தால் வேலை தருகிறோம் என்கின்றனர் பேங்க் அதிகாரிகள்.

எனவே பணத்தை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பணம் பெற முயற்சிக்கிறார்.

இறுதியில் என்ன ஆனது? பணம் கிடைத்ததா.? வேலை கிடைத்ததா.? நாயகனின் வியாதி குணமானதா.? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

விஜய் சிவன் நாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் நாயகியாக நடித்துள்ளார்.

பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கேரக்டரில் தன்னால் முடிந்த வரை சிறப்பாக கையாண்டுள்ளார் நாயகன் விஜய் சிவன்.. நல்லவேளை இவருக்கு படத்தில் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை வைக்கவில்லை.

சுரேஷ் சக்கரவர்த்தி செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாது.. படத்தை கலகலப்பாக எடுத்துச் சென்றுள்ளார்.

சாந்தினி தமிழரசன் சாந்தமாக வந்து ஒரு இல்லத்தரசியாக தனது வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

நமோ நாராயணன் வந்த பிறகு படம் வேறு பாதையில் வேற லெவலில் பயணிக்கிறது.. அவருடன் வரும் அல்லக்கைகளும் அட்டகாசம் செய்துள்ளனர்.

இவர்கள் தவிர நாளைய இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்….

பாலுமகேந்திராவிடம் சீடராக பணியாற்றிய மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். ஷிபு நீல் BR படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

படத்தின் பின்னணி இசை பின்னணி இசை காமெடிக்கும் கை கொடுக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு படத்தொகுப்பம் கச்சிதமாக அமைந்துள்ளது.

நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்.

படத்தை கலகலப்பாக கொடுக்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.. மக்களும் கைத்தட்டி ரசிப்பதை காண முடிந்தது.

உணவுப்பொருள் எப்படி போதையாகும்.? என்ற லாஜிக் பார்க்காமல் இந்த படத்தை நாம் பார்த்தால் கண்டிப்பாக ரசிக்கலாம்.

ஆக.. குடி மகான்… குடித்தால் தாங்குமா்.?

kudi mahaan movie review and rating in tamil

கொன்றால் பாவம் விமர்சனம் 3.75/5

கொன்றால் பாவம் விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

18 கன்னடப் படங்களை இயக்கியுள்ள தமிழரான தயாள் பத்மநாபனுக்கு இது முதல் தமிழ்ப் படம்.

2018ல் ‘ஆ காரல ராத்ரி’ என்னும் கன்னடப் படத்தை இயக்கி அதை தற்போது தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார்.

தன்னுடைய சுயலாபத்திற்காக ஒருவரை கொன்றால் அது பாவமா இல்லையா.? என்பதுதான் இதன் கதை

கதைக்களம்…

கருப்பசாமி (சார்லி), அவர் மனைவி வள்ளியம்மாள் (ஈஸ்வரி ராவ்). இவர்களது மகள் மல்லிகா (வரலட்சுமி சரத்குமார்). இவர்கள் வீட்டு அழையா விருந்தாளி.

சார்லி, ஈஸ்வரி, வரலட்சுமி இவர்களின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. இதனால் வரலட்சுமிக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.. ஒருநாள் இக்கட்டான சூழ்நிலையில் வரும் சந்தோஷ் இவர்கள் வீட்டில் தங்க நேரிடுகிறது. அவரிடம் அதிக அளவில் பணம் நகைகள் இருப்பதை கண்டறிகின்றனர்.

இதனையடுத்து அவர்களை இந்த குடும்பத்தினர் கொல்ல திட்டமிடுகின்றனர் இறுதியில் என்ன ஆனது? கொன்றால் பாவம் இல்லையா என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்….

வரலட்சுமி, சார்லி, ஈஸ்வரி ராவ், சந்தோஷ் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். படத்தின் கதை ஓட்டத்தை புரிந்து அதற்கு ஏற்ப தங்கள் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்

பார்வையற்றவராக வரும் சென்றாயன், காவலராக வரும் கவிதாபாரதி, சாராயக் கடை முதலாளி சுப்ரமணிய சிவா உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை திறம்பட கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

செழியனின் ஒளிப்பதிவு காலத்துக்கு ஏற்ப நம்மை பயணிக்க வைக்கிறது. சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை வழக்கம்போல நம்மை கவர்ந்து விடுகிறது.. மேலும் த்ரில்லர் படத்திற்கு தேவையான பதட்டத்தைக் கூட்டுகிறது. பாடல்களும் நம் கவனம் ஈர்க்கின்றன.

இயக்குநர் தயாள் பத்மநாபன்.. ஒருவனுக்கு திருடவே மனமில்லை என்றாலும் அதிக அளவு பணத்தை பார்த்தால் மனம் சஞ்சலப்படும்.. திருடத் தூண்டும் என்பதையும் அப்பட்டமாக தன் காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

மேலும் மனித வாழ்வில் ஆசையை என்றுமே தவிர்க்க முடியாது.. அதற்கு எல்லையே கிடையாது என்பதையும் சொல்லியிருக்கிறார்..

அதே சமயம் கொன்றால் பாவம்.. தண்டனை ஒருநாள் வரும் என்பதையும் ரசிகர்களுக்கு புரியும் வகையில் உணர்த்தி இருப்பது கூடுதல் சிறப்பு..

ஆக கொன்றால் பாவம்.. சரிதான்..

Kondral Paavam movie review and rating in tamil

அகிலன் விமர்சனம் – 3.5/5..; ஹாயாக ஓர் ஹார்பர் ட்ரிப்

அகிலன் விமர்சனம் – 3.5/5..; ஹாயாக ஓர் ஹார்பர் ட்ரிப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கடல் வழியே நடைபெறுகிற கள்ளக் கடத்தலை சொல்லும் படம் இது.. ஒரு கட்டத்தில் அகிலன் என்ற பெயர் கொண்ட ஜெயம் ரவி இந்தியன் ஓஷனுக்கே ராஜாவாகிறார்.. அது எப்படி என்பது தான் படத்தின் கதை.

கதைக்களம்….

கடல் வழி கள்ளக்கடத்தல் தலைவன் கபூர்.

இவருக்கு கீழே சின்ன சின்ன தாதாக்கள்.. அதில் ஒருவர் ஹரிஷ் பெர்ரடி. இவரிடம் உள்ள திறமையான கடத்தல்காரன் தான் அகிலன் (ஜெயம் ரவி).

தன் கடத்தலுக்கு போலீஸ் பிரச்சினை இல்லாமல் இருக்க தன் காதலி பிரியா பவானி சங்கரை போலீசாக்குகிறார்.

ஆனால் வட இந்திய போலீஸ் (டெல்லி இன்டலிஜன்ஸ் படையை சேர்ந்த சிரக் ஜானி) அகிலனை கைது செய்ய கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்.

இவர்களின் பிடியில் இருந்து தப்பித்து பல கடத்தல்களை செய்து இந்திய பெருங்கடலுக்கே கடத்தல் ராஜாவாக உருவெடுக்கிறார் ஜெயம் ரவி.

இதற்கு பின்னணியில் ஒரு பிளாஷ்பேக் காட்சியும் இருக்கிறது.. அது என்ன என்பதுதான் படத்தின் மையக்கரு.!

கேரக்டர்கள்….

ரொமான்டிக் பாய்.. நேர்மையான போலீஸ்.. ஜாலியான ஜெயம் ரவியை பார்த்த நாம் இதில் முரட்டுத்தனமான அகிலனை பார்க்கலாம். ஃப்ளாஷ்பாக்கில் வரும் மற்றொரு ஜெயம் ரவி சென்டிமென்ட் நடிப்பில் கலங்க வைக்கிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு கேங்ஸ்டர் போல வெளுத்து கட்டி இருக்கிறார் ஜெயம் ரவி.

வில்லன் வேடத்தில் வரும் போலீஸ் அதிகாரி சிரக் ஜானி.. ஆனால் அவரோ செகண்ட் ஹீரோ போல சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார். இவருக்கு கூட ஒரு ஜோடி நாயகி வைத்திருக்கலாம்.

ப்ரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் என இரண்டு ஹீரோயின் இருந்தும் படத்தில் போதுமான காட்சிகள் இல்லை.

இவர்களுடன் மதுசூதனன், ஹரீஷ் பெர்ரடி, ஹரீஷ் உத்தமன், திலீபன் என அனைவரும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

இதுவரை பல படங்களில்.. தரையில் படமாக்கப்பட்ட படங்களை பார்த்து இருக்கிறோம்.. இது தண்ணீரில் மிதக்கும் கப்பல்கள் பற்றிய கதைக்களம்..

நாம் பார்க்காத ஹார்பர் கண்டெய்னர்கள் பற்றிய அரசியலையும் வியாபாரத்தையும் அக்குவேர் ஆணிவேராக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்.

படத்தில் ஒரு துளி கூட காமெடி இல்லை.. கலகலப்புக்கு கொஞ்சம் இணைத்திருக்கலாம்.

ஆனால் முதல் பாதையில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லை என்பது தான் பெரும் குறையாக உள்ளது..

அகிலனுக்கு பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும்.. பாடல்களை விட பின்னணி இசை வேற லெவல்.. சாம் சி எஸ். கேங்ஸ்டர் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி மிரட்ட வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு சிறப்பு.. கண்டெய்னர் லாரி திரும்புவது முதல் அது செயல்படும் விதம்.. கப்பல் சேஸிங்… அது தொடர்பான காட்சிகள் என ஹார்பரை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஆக.. தண்ணீர் உலக மாஃபியா என வித்தியாசமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்.

ஆக அகிலன்… ஹாயாக ஓர் ஆச்சர்ய ஹார்பர் ட்ரிப்..

agilan movie review and rating in tamil

அரியவன் விமர்சனம் 3.25/5.; அதிரடி அண்ணன்

அரியவன் விமர்சனம் 3.25/5.; அதிரடி அண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

காதல் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடும் மனித மிருகங்களுக்கு வேட்டை மன்னன் இந்த ஈஷான் (அரியவன்)

கதைக்களம்…

நாயகன் ஈஷான் ஒரு கபடி வீரர்.. தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.. இவரின் காதலியின் தோழிக்கு ஒரு பிரச்சனை வருகிறது.

அதாவது காதல் வலையில் பெண்களை வீழ்த்தி அவர்களின் அந்தரங்களை படம் பிடித்து மிரட்டி பணம் பறிக்கிறது ஒரு கும்பல்.. மேலும் பெரிய தொழிலதிபர்களுக்கு அந்தப் பெண்களை கூட்டிக் கொடுப்பதும் இவர்களின் வேலை.

இதனால் நிறைய பெண்கள் தற்கொலைக்கு முயற்சிக்க வில்லன் டேனியல் பாலாஜியை எதிர்த்து ஆடும் களமே இந்த அரியவன்.

அரசியல் பலம்.. பண பலம்.. போலீஸ் பலம் ஆகியவற்றை எதிர்த்து நாயகன் என்ன செய்தார்.? டேனியல் பாலாஜியை எப்படி கண்டுபிடித்தார்.? என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

அறிமுக நாயகன் ஈஷான்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார்.. அடிதடி இவருக்கு அல்வா சாப்பிடுவது போல பின்னி எடுத்து இருக்கிறார்.. ஆனால் காதல் காட்சிகளில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.. அதுபோல எப்போதுமே சீரியஸ் ஆகவே காணப்படுகிறார்.. கடுகளவு கூட சிரிப்பு வரவில்லை..

நாயகி பிரணாலி அழகாக வந்து காட்சிகளுக்கு அழகு சேர்த்துள்ளார். காதல் காட்சிகளிலும் கவர்கிறார்.

வில்லனாக டேனியல் பாலாஜி அவரின் வழக்கமான ஸ்டைலிஷ் வில்லத்தனத்தில் மிரட்டல்.. அம்மா ரமா, மாமா சுப்ரமணி வரும் காட்சிகள் நிறைவு.

சத்யன் ஏன் நடித்தார்?? கல்கி ராஜா, ரமேஷ் சக்ரவர்த்தி, காவ்யா, ரவி வெங்கட்ராமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரிநந்த் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஓரளவு கை கொடுக்கின்றன.. ஆக்ஷன் காட்சிகளில் பின்னணி இசை ஃபயராக உள்ளது. ‘அனார்கலி’ பாடல் ஓகே.. வி.வி.யின் பின்னணி இசை பலம்

ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.. விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது..

வசனங்கள் சில இடங்களில் புரியாத போல உள்ளன.. நான் ஒன்னு கேக்கணும் நெனச்சேன் என்று சொல்வதற்கு பதிலாக.. “உன்கிட்ட சொல்லனும் ஒன்னு நினைச்சேன்.. பிக் பாஸில் இன்னைக்கு யார் எலிமினேட் ஆகுறாங்க என கேள்வி கேட்கிறார்.!? இது பதிலா.!?

படத்தில் ஓரிரு காட்சியில் வரும் சத்யன் நாயகனுக்கு நண்பனாக படம் முழுவதும் வந்திருந்தால் காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.. படம் முழுவதும் சீரியஸாகவே காணப்படுகிறார் ஹீரோ அதை இயக்குனர் கொஞ்சம் கவனித்து இருக்கலாம்..

பேஸ்புக் வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்களில் உலாவும் பெண்களுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படம் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை தரும்.

நமக்கு ஒரு பிரச்சனை என்றால் யாரும் வர மாட்டார்கள்.. நாம்தான் எச்சரிக்கையுடன் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஓர் அண்ணனாக இருந்து அவர்களுக்கு அவப்பெயர் வராமல் பாதுகாக்கும் காவலனாக நாயகனை முன்னிறுத்தி உள்ளார் இயக்குனர்..

ஆக அரியவன்… அதிரடி அண்ணன்

Ariyavan movie review and rating in tamil

பல்லு படாம பாத்துக்க விமர்சனம் 1/5..; இந்த படம் உங்க கண்ணுல படாம பாத்துக்க

பல்லு படாம பாத்துக்க விமர்சனம் 1/5..; இந்த படம் உங்க கண்ணுல படாம பாத்துக்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, சாரா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பாரேடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘பல்லு படாம பாத்துக்க’.

பலான மேட்டர்களையே குறிவைத்து இந்த படத்தை உருவாக்கி இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன்…

மனிதர்களை கடித்து கொன்று குவிக்கும் Zombie ஷாம்பிகளிடமிருந்து தப்பிக்கும் நண்பர்கள் பற்றிய கதை.. அந்த சோம்பிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள ‘பல்லு படாம பாத்துக்க’ என்பது தான் ஒன்லைன்.

கதைக்களம்…

குஞ்சுதண்ணிகாடு என்ற மலையில் சிலர் தற்கொலை செய்ய முயல்கின்றனர்.. ஒவ்வொருவருக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக்.

திடீரென தற்கொலை செய்வதை தவிர்த்து நண்பர்கள் ஆகிறார்கள்.. அப்போது சரக்கு அடிப்பதற்காக அட்டகத்தி தினேஷ் தலைமையில் ஒன்று கூடுகிறார்கள்..

அந்த காட்டுப்பகுதியில் உள்ள ஜாம்பிகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற சஞ்சிதா செட்டி வருகிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது.? ஜாம்பிகள் அங்கு உருவாக என்ன காரணம்.? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…

முழுக்க முழுக்க ஆபாச வார்த்தைகளை வைத்து படத்தை ஓட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் வரதராஜன்.

அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி, சாரா, மொட்டை ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பாரேடி ஆகிய பிரபல திறமையான நட்சத்திரங்கள் இருந்தும் ஒருவரிடம் கூட ஒழுங்காக வேலை வாங்கவில்லை.

சஞ்சிதாவின் அப்பாவாக பழைய டான்சர் நடிகர் ஆனந்த் பாபு வருகிறார்.. நீண்ட இடைவெளிக்கு பின் நடிக்கும் நடிகர்கள் ஏன் இது போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்து எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை..

படத்தில் எதையாவது ஒன்றை பாராட்டலாம் என நினைத்தால் எதுவுமே தோன்றவில்லை.. கிட்டத்தட்ட கொரோனாவுக்கு முன்பு இந்த படம் எடுக்கப்பட்டது..

தயாரிப்பாளரின் பணத்தை வீணடித்து ரசிகர்களின் நேரத்தை வீணடித்திருக்கிறார் இயக்குனர் விஜய் வரதராஜ். இந்தப் படத்தில் அவரும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜெகனுடன் ஹோமோ செக்ஸ் செய்யும் நபராக வருகிறார்..

ஆக பல்லு படாம பாத்துக்க.. இந்த படத்தின் போஸ்டர் கூட உங்க கண்ணுல படாம பாத்துக்க.

Pallu Padama Paathuka movie review and rating in tamil

More Articles
Follows