தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
போகுமிடம் வெகு தூரமில்லை விமர்சனம் 4/5.. கலைஞனுக்கு கலை தூரமில்லை
ஸ்டோரி…
ஒரு அப்பன் இருதாரத்திற்கு பிறந்தவர்கள் ஆடுகளம் நரேன் மற்றும் பவன்.. இவர்களுக்கு பல ஆண்டுகளாக பகை நீடித்து வருகிறது.
ஊரில் மிகப்பெரியவரான இவர் ஒரு கட்டத்தில் சென்னை சென்ற போது மரணம் அடைகிறார்.. அங்கு யாரும் துணைக்கு இல்லாத நிலையில் விமல் ஓட்டும் அமரர் உறுதியில் அவரது பிணத்தை வைத்து அனுப்ப சொல்கின்றனர்.
தன்னுடைய மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருக்கும் நிலையில் வேறு வழியில்லாமல் பணத்தேவைக்காக பிணத்தை அமர ஊரில் வைத்துக் கொண்டு புறப்படுகிறார் விமல்.
திருநெல்வேலியில் இரு தரப்பு குடும்பமும் பிணத்தை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.
விமல் செல்லும் வழியில் தெருக்கூத்து கலைஞர் கருணாஸ் லிப்ட் கேட்டு ஏறி கொள்ள மேலும் ஒரு காதல் ஜோடியும் இதில் தஞ்சம் அடைகிறது.. இதனால் பல பிரச்சினைகளை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார் விமல்.
இப்படியாக பிரச்சனைகளுடன் விமல் பயணித்துக் கொண்டிருக்க யாரோ ஒரு மர்ம கும்பல் பிணத்தை திருடி விடுகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது.? விமல் என்ன செய்தார்.? பிணத்திற்கு கொள்ளி வைத்தது எந்த மகன்.? மனைவியின் பிரசவம் என்ன ஆனது.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நடிகர் விமல், கருணாஸ், நாயகி மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
Vemal as Kumar
Karunas as Nalinamoorthy
Mery Rickets as Kalaiyazhagi
Aadukalam Naren as Sankarapandian
Deepa Shankar as Avudaiyammal
Charles Vinoth as Shanmugam
Manojkumar
Pawan
Aruldoss
விமல் இதுவரை ஏற்காத ஒரு வேடத்தை ஏற்று நடித்த நடித்திருப்பது சிறப்பு.. சீரியஸ் முகத்துடன் காணப்பட்டாலும் சில காட்சிகளில் உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
வடசென்னை வட்டார வழக்கு விமலுக்கு வரவில்லை என்பதால் யாரோ ஒருவர் டப்பிங் கொடுத்திருப்பார் போல… ஆனாலும் குறையில்லை
தெருக்கூத்து கலைஞனாக அசத்தியிருக்கிறார் கருணாஸ்.. அந்நியன் படத்தில் விக்ரம் 3 முகத்தை தான் காட்டிருப்பார்.. ஆனால் நான் 5 நவரசங்களை காட்டுவேன் என இவர் சொல்லும் அந்த காட்சியில் நம்மால் சிரிக்க முடியாது.. அர்ஜெண்டாக யூரின் அடிக்கணும் என்ற சொல்லிவிட்டு டாஸ்மாக்கில் அமர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் செம.. இப்படியாக படத்தை கலகலப்பாகிய கருணாஸ் கடைசியில் எடுக்க முடிவு நம் மனதை உருக்குகிறது..
கூத்து கலைஞராக கருணாஸ் பேசிய வசனங்களை கிளைமாக்ஸ் காட்சியில் இணைத்து பின்னணியில் கொடுத்திருப்பது டைரக்ஷன் டச்..
நாயகி மேரி ரிக்கெட்ஸ்க்கு வேலை இல்லை.. நிறைமாத கர்ப்பிணியாக கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார்..
ஆடுகளம் நரேன், சார்லஸ் வினோத், பவன் தீபா சங்கர், அருள்தாஸ் அனைவரும் தங்கள் கேரக்டரில் ஜொலிக்கின்றனர்.. தன் உரிமையை தன் தம்பி உரிமை விட்டுக் கொடுக்காத கேரக்டரில் தீபா சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ் …
Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவான படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.
Director : Michael K Raja
Producer : Siva killari
Music director: NR.Raghunandan
cameraman : Demil Xavier Edwards
Editor : M.thiyagarajan
Stunt director : Metro Mahesh
Dance master : Richie Richardson
Art director : Surendar
Production controller : Rakesh Raghavan
Executive producer : Venki Magi
PRO – Sathish (AIM)
சமீபகாலமாக மெலோடி பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்த ரகுநந்தன் தான் இந்த படத்தின் இசை அமைப்பாளர்.. இசையின் இரைச்சலை குறைத்து பாடல் வரிகள் புரியும்படி இசை அமைத்திருப்பது சிறப்பு.
சென்னையில் தொடங்கி திருநெல்வேலி வரை பயணிக்கும் அமரர் ஊர்தி (வழி) வலியை அழகாகவும் நேர்த்தியாகவும் ட்ரோன் மூலமும் படம் பிடித்து நம்மையும் அந்த வழியாக பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டெெமில் சேவியர்..
இயக்குனர் மைக்கேல் ராஜா சாலையில் செல்லும் பயணத்திற்கு போகும் இடம் வெகு தூரம் இல்லை என அழகான தலைப்பு வைத்து கதை ஓட்டத்திற்கும் ஒன்ற வைத்து சிறப்பு சேர்த்திருக்கிறார்..
வசனங்களும் ஆங்காங்கே நம்மை கவனம் ஈர்க்கின்றன.. முக்கியமாக கருணாஸ் பேசும் ஒரு வசனத்தில்.. “அம்மா இருந்தவரை திருமண ஆசை இல்லை.. அம்மா இறந்த பிறகு திருமண வயசு இல்லை என்ற சொல்லும் போது.. திருமணமாகாத இளைஞர்களின் நிலையை சொல்லும்..
ஒரு சில படங்கள் சப்தம் இல்லாமல் வந்து மக்களின் ஆதரவை பெறும்.. ரசிகர்களை கைதட்ட வைக்கும்.. சிந்திக்க வைக்கும்.. அந்த படங்களின் வரிசையில் போகுமிடம் வெகு தூரம் இல்லை படம் நிச்சயம் இணையும்..
Pogumidam vegu Thooramillai movie review