பெண்களுக்கு எச்சரிக்கை..; பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

பெண்களுக்கு எச்சரிக்கை..; பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

ஒன்லைன்..
நவீன செல்போன் உலகத்தில் HIDDEN CAMERA வைத்து இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்களை குறி வைத்து பணம் பறிக்கும் சில நேரம் உயிரை பறிக்கும் கும்பலின் கதை இது.

வரதாஜ் இயக்கத்தில் ராஜ்கமல், மது, ஷ்வேதா பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதைக்களம்..

ஆண் நண்பர்களுடன் பெண்கள் சுற்றும்போது.. காதலனுடன் தனிமையில் பூங்காக்களில் தடவும்போது.. பெண்கள் குளிக்கும் போது… இதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அவர்களுக்கு தெரியாமல் “ஹிட்டன் கேமரா” பொருத்தி அந்தரங்கங்களை வீடியோ எடுக்கிறது ஒரு கும்பல்.

பிளம்பர் வேலைக்கு வரும் நபர்கள் முதல்நாள் வந்து பைப் சரி செய்வதுபோல் கேமராவை பொருத்தி செல்கின்றனர். நாளை மீண்டும் வந்து செக் செய்கிறேன் என கூறி அடுத்த நாள் ரெக்கார்ட்டிங் கேமராவை எடுத்து செல்கின்றனர்.

வழி வராத பெண்களிடம் காதல் வலை வீசி அவளுடன் செக்ஸ் வைக்கும்போது கேமராவை வைத்து படம் எடுக்கின்றனர்.

பிறகு அந்த பெண்களுக்கே அனுப்பி, மிரட்டி பணம் பறிக்கிறது அந்த கும்பல். சிலர் மானத்திற்கு பயந்து தற்கொலை செய்கின்றனர்.
இந்த தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகிறது. எனவே இதை விசாரிக்க போலீஸ் விரைகிறது. சில இடங்களில் HIDDEN CAMERA மர்ம நபர்களால் பொருத்தி வைக்கப்பட்டதை அறிந்தபின்னர் விசாரணை சூடு பிடிக்கிறது.

இதுபோன்ற கும்பலிடம் நாயகி எப்படி சிக்கினார்? நாயகன் ராஜ்கமல் யார்.? போலீஸ் எப்படி அவர்களை கண்டு பிடித்த்து? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

சீரியல்களில் கலக்கும் நடிகர் ராஜ்கமல் அடிக்கடி இதுபோல சினிமாவில் எட்டிப் பார்ப்பதுண்டு. இதில் எவரும் யூகிக்க முடியாத கேரக்டரை செய்துள்ளார். காதலியிடம் கெஞ்சும்போதும் மிரட்டும் போதும் ரசிக்க வைக்கிறார். ஒருசில இடங்களில் ஓவர் ஆக்டிங் ஓவர் லோட் ஆகிறது.

காதலியுடன் ரொமான்ஸ் போதவில்லை. ஒருவேளை நாயகியை பார்த்தால் ஒன்றும் தோனவில்லையோ… நாயகி தேர்வில் இயக்குனர் கவனம் செலுத்தியிருக்கலாம். ராஜ்கமலின் மனைவி நடிகை லதாவே நாயகியாக நடித்திருக்கலாம். அவர்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

நாயகி ஸ்வேதா பாண்டி உடல் அழகில் நம்மை சூடேற்றுகிறார். இவரை பேபி மா.. பேபி மா.. என முதலில் அழைப்பது முதலில் ரசிக்க வைத்தாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் போரடிக்கிறது.. பேபி மா சொல்லு.. பேபி மா எப்படி என அடிக்கடி கேட்டு நமக்கே போராச்சு.

ஆப்பிரிக்க வில்லன் நடிகர் அசத்தல். அப்பாவியாக வந்து அசத்தியிருக்கிறார். போலீஸ் கேரக்டரில் வருபவர் நம் கவனம் ஈர்க்கிறார்.

நாம் லாட்ஜில் தங்கும்போது ஒய்ஃபை WIFI பாஸ்வேர்ட் போட்டு நம் செல்போனில் நுழைந்தால் அதன் மூலம் செல்போன் தகவல்கள் திருடப்படுவது எதிர்பாராத ஒன்று. இடைவேளை ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்றுதான்.

கொடைக்கானல் காட்சிகள் அழகு. சதீஷ்குமார் மற்றும் கார்வ மோகனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. டூயட் பாடலில் அந்த இயற்கை அழகு மனதை கொள்கிறது.

விவேக் சக்ரவர்த்தியின் இசை ஓகே ரகம். பாடல் வரிகளில் இருந்த உணர்வு இசையில் இல்லாதது வருத்தமே.

செல்போன்கள் பெண்கள் வாழ்க்கையை எப்படி சீரழிக்கிறது என்பதை சின்ன பட்ஜெட்டில் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் வரதராஜ். காட்சிகளின் தரத்தை உயர்த்தி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வை இந்த படம் தரும் என நம்பலாம்.

Pen Vilai Verum 999 Rupaai Mattume review rating

Related Articles