பகலறியான் விமர்சனம் 3/5.. நைட் ரைடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பகலறியான் விமர்சனம் 3/5.. நைட் ரைடு

ரிஷிகேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் லதா முருகன் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து முருகன் இயக்கி இருக்கும் படம் ‘பகலறியான்’.

வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, வினு பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பகலை அறியாத ஓர் இரவு பறவை என்பது தான் இந்தப்படத் தலைப்பின் பொருள்..

ஓர் இரவில் நடக்கும் இரண்டு கதைகளை இணைத்து ‘பகலறியான்’ படத்தை இயக்கியிருக்கிறார் முருகன்…

ஸ்டோரி…

தந்தையை கொன்று சிறுவயதிலேயே ஜெயில் தண்டனை அனுபவித்தவர் நாயகன் வெற்றி.. வெளியே வந்த பிறகு இவரை நாயகி காதலிக்கிறார்.. ஆனால் முன்னாள் கைதிக்கு பெண் தர மறுக்கிறார் நாயகியின் தந்தை..

எனவே தந்தைக்குத் தெரியாமல் ஓடி சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என காரில் ஏற்றி இரவில் பயணிக்கிறார் வெற்றி.. ஆனால் ஒரு பெண் புரோக்கரிடம் தன் காதலியை விற்று விட துடிக்கிறார்.

இதே சமயத்தில் தன் தங்கையை காணவில்லை என்று என இரவு முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார் மற்றொரு நாயகன் முருகன்.. தனது எதிரி கும்பல் தான் தங்கையை கடத்தி வைத்திருக்கிறதா என்று எண்ணி அவர்களுடன் மோதுகிறார்..

இந்த இரு கதைகளும் சந்திக்கும் வேளையில் படத்தில் ஒரு கனமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் முருகன்..

கேரக்டர்ஸ்…

ஜீவி & ஜீவி 2 உள்ளிட்ட படங்களில் வெற்றி நாயகனாக வந்த நாயகன் வெற்றி இதிலும் ஒரு கனமான அழுத்தமான கேரக்டரை தேர்ந்தெடுக்கிறார்.. ஆனால் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான முகபாகனைகளை அவர் இன்னும் எத்தனை காலம் தான் வைத்து கொண்டே இருப்பாரோ? தம் அடித்தும் முறைத்து படத்தை ஓட்டிவிட்டார் நாயகன் வெற்றி.

ஒரே மாதிரியாக கார் கண்ணாடியை பார்த்துக் கொண்டே நாயகியை முறைக்கும் அந்த காட்சிகளை ரிப்பீட் மோடில் ஓட விட்டாரோ இயக்குனர் என தெரியவில்லை.

சைலன்ட் கேரக்டரில் நடித்து வைலன்ட் காட்டி இருக்கிறார் செகண்ட் ஹீரோ முருகன்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பும போற்றும் வகையில் உள்ளது.. அதேசமயம் எல்லாருமே நீண்ட தலை முடி தாடியிடம் வைத்திருப்பதால் யார் எவர்?என்று கன்பியூஷன் ஏற்படுகிறது.

நாயகி அக்‌ஷயா கந்தமுதன் கண்களாலும் உதடுகளாலும் கவனிக்க வைக்கிறார்.. காதலனை நம்பி வந்திருக்கும் நாயகி ஒரு கட்டத்தில் நாயகனின் பிளான் வேறு என்பதை தெரிந்த பின் இவர் கொடுக்கும் ரியாக்ஷன் செம ஆக்டிங்..

இதுவரை நாம் பார்க்காத வித்தியாசமான கேரக்டரில் காமெடியன் சாப்ளின் பாலு நடித்திருக்கிறார்.. பெரும்பாலும் இவரைப் போன்ற முன்னாள் காமெடியன்கள் டான் ஹீரோக்களுக்கு ஆலோசகராக வருவார்கள்.. இவரும் அதற்கு விதிவிலக்கல்ல!

போலீசாக நடித்திருக்கும் சாய் தீனா-வின் கேரக்டர் வேஸ்ட்.. இவருடன் வரும் மற்றொரு போலீஸ் ஓவர் ஆக்டிங்.. இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் அபிலாஷின் கேமரா இரவு வெளிச்சத்தில் காட்சிகளை ரம்யமாக்கி இருக்கிறது..

விவேக் சரோவின் இசையில் பின்னணி இசை காட்சிகளை திரில்லாக கொண்டு செல்கிறது.. பாடல்கள் ஓகே ரகம்… படத்தொகுப்பாளர் குரு பிரதீப் தன் பணியில் நேர்த்தி..

2வது நாயகனாக நடித்திருக்கும் முருகன் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. இவரது தோற்றம் கரடு முரடு என்றாலும் வாய் பேச முடியாதவராக நம்மை கவனிக்க வைக்கிறார்.. முக்கியமாக நடிப்பில் நம்மை பேச வைக்கிறார்..

மாநகரம் மற்றும் பவுடர் ஆகிய படங்கள் ஓர் இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி இருக்கும்.. அந்த பாணியில் இந்த படமும் வந்திருக்கிறது.

ஆனாலும் இடைவேளை வரை காட்சிகள் கன்ப்யூஷன் மோடில் இருக்கிறது.. கேரக்டர் விளக்கம் கொடுத்து படத்தை தொடங்கி இருக்கலாம்..

இறுதியில் எதிர்பாராத திருப்புமுனையை கொடுத்து நம்மை கொஞ்சம் கலங்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர்.. கிளைமாக்ஸில் எந்த ஒரு வசனத்தை வைக்காமல் ஓர் அழகான காதல் புரிதலை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் முருகன்..

ஆக பகலறியான்.. நைட் ரைடு

Pagalariyaan movie review

சாமானியன் விமர்சனம் 3.5/5.. நம்ம ஊரு கடன்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாமானியன் விமர்சனம் 3.5/5.. நம்ம ஊரு கடன்காரன்

ஸ்டோரி…

ராமராஜன் – ராதாரவி – எம் எஸ் பாஸ்கர் இவர்கள் மூவரும் பால்ய சிநேகிதர்கள்.. ராதாரவி சென்னையில் வசிக்க ராமராஜன் எம் எஸ் பாஸ்கர் மதுரை ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர்.

ஒரு நாள் சென்னைக்கு தன் நண்பனை காண ராமராஜன் எம் எஸ் பாஸ்கர் செல்கின்றனர்.. அங்குள்ள பிரபல வங்கிக்கு 35 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய இருப்பதாக சொல்லி வங்கிக்கு செல்கிறார் ராமராஜன்.

அங்கு சென்ற பின்னர் தான் அந்த வங்கி அதிகாரிகளை பிணைய கைதிகளாக வைத்து தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாம் வெடிக்க வைத்து கொன்று விடுவேன் என மிரட்டுகிறார்.

இதே நேரத்தில் போஸ் வெங்கட்டின் மனைவி வினோதினி & மகளை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார் எம் எஸ் பாஸ்கர்.

அதே நேரத்தில் மற்றொரு வீட்டில் கர்ப்பிணியான ஸ்மிருதி வெங்கட்டை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார் முஸ்லீம் பாய் ராதாரவி.

இந்த மூன்று நண்பர்களும் ஒரே நேரத்தில் இப்படி நடத்திக் கொள்வதன் நோக்கம் என்ன? இவர்கள் யார்? வங்கி அதிகாரிகளை மிரட்ட என்ன காரணம்? அதிகாரிகள் செய்த தவறு என்ன? நினைத்ததை இந்த சாமானியர்கள் சாதித்தார்களா என்பது தான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar, Smruthi Venkat, Apranathi, Aranthangi Nisha, Saravanan Sakthi, Gajaraj, Mullai, Arul Mani, Kodandam, Supergood Subramani, and other’s.

14 வருடங்களுக்குப் பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கும் ராமராஜன் வழக்கமான கதைக்களத்தை எடுக்காமல் இந்த 2K கிட்ஸ்களுக்கு பிடித்த கதையை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாக நடித்திருக்கிறார்.

எக்ஸ் ஆர்மி என்ற பிளாஷ்பேக் காட்சிகள் அவருக்கு பொருந்தவில்லை.. கொஞ்ச நேரம் ஓவியமாக காணப்பட்டாலும் அந்த காட்சிகளில் அவரது சிகை அலங்காரம் ஆர்மிக்கு ஒட்டவில்லை

முக்கியமாக 60 வயதானாலும் ஜோடி இல்லாமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ராமராஜனை பாராட்டலாம்.

மைம் கோபி, கோதண்டம், போஸ் வெங்கட் கே எஸ் ரவிக்குமார், சரவணா சுப்பையா உள்ளிட்டோர் கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு.. அதிலும் மெயின் வில்லன் மைம் கோபி மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இளம் காதலர்களாக லியோ சிவகுமார் மற்றும் நக்ஷாசரன்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐடி வேலை தம்பதியர்களாக வாழ்ந்திருக்கின்றனர்.. வீட்டுக் கடன் நம் உயிரை குடிக்கும் ஆயுளை விழுங்கி விடும் என்பதை எச்சரிக்கை பதிவாக கொடுத்திருக்கின்றனர்.

ஸ்மிருதி வெங்கட் அழகான நாயகியாகவும் கண் கலங்க வைக்கும் கர்ப்பிணியாகவும் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நியூஸ் ரிப்போர்ட்டர் அபர்ணா கொஞ்ச நேரம் என்றாலும் யார் இந்த ஆங்கர் என கவனிக்க வைக்கிறார்..

இவர்களுடன் வினோதினி, தீபா சங்கர், அறந்தாங்கி நிஷா, சரவண சக்தி, சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் உள்ளனர்.

டெக்னீசியன்ஸ்…

Written & Directed by
R RAHESH

Producer : V Mathiyalagan

Banner : Etcetera Entertainment
Music : Mestro Illayarajaa
Lyrics: Mestro Illayarajaa
Singers : Mestro Illayarajaa, Karthik, Sharreth
Cinematographer : C Arul Selvan
Editor : Ram Gopi
Story : V Karthik Kumar
Costume : SP Sugumar
Choreographer: Vishnuvimal
PRO : A. John

1980 களில் ரஜினி கமலுக்கு போட்டியாக கருதப்பட்டவர் ராமராஜன்.. இவரது படங்களும் சரி பாடல்களும் சரி சூப்பர் ஹிட். அதற்கு முக்கிய காரணம் இளையராஜா.. தற்போது இவர்களின் கூட்டணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது.

அந்தக் கால அளவு இசை ரசிக்க வைக்கவில்லை என்றாலும் ராமராஜன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இளையராஜா.

வழக்கம்போல பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. இந்த விறுவிறுப்பான பேங்க் திரில்லர் கதைக்கு பாடல்கள் தேவை இல்லை என்றாலும் இளையராஜா இணைந்திருப்பதால் இரண்டு பாடல்களை வைத்திருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.

அருள் செல்வம் ஒளிப்பதிவில் பேங்க் மற்றும் கிராமத்து காட்சிகள் அருமை. இடைவேளை முன்பு வரை வங்கியை மையப்படுத்தி காட்சி அமைப்புகள் உள்ளது. அதற்கு ஏற்ப கேமரா ஆங்கிள்களை வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

மேலும் ராமராஜனின் கிராமத்து ரசிகரை கவரும் வகையில் ஆடு மாடுகளை காட்டி அதற்குப் பின்னணியில் செண்பகமே செண்பகமே பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளனர்..

ராம் கோபி என்பவர் எடிட்டிங் செய்திருக்கிறார்.. இடைவேளை வரை காட்சிகள் விறுவிறுப்பாக செல்கிறது.. ராமராஜனின் மகள் & எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆகியோரின் பிளாஷ்பேக் காட்சிகளில் கத்திரிப் போட்டு இருக்கலாம்..

முக்கியமாக ராமராஜனின் ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அதுபோல இந்தியன் ஆர்மி காட்சிகளில் ராமராஜனின் உருவமும் தோற்றமும் பொருந்தவில்ல..

கிராமத்து ராமராஜனை சிட்டியை மிரட்டும் ராஜனாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ராகேஷ்.. ராமராஜன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஆங்காங்கே சொர்க்கமே என்றாலும்… செண்பகமே செண்பகமே… உள்ளிட்ட பல பாடல்களை ஒலிக்கவிட்டு இருக்கிறார் இயக்குனர்.

வங்கி வீட்டுக் கடனால் அவதிப்படும் சாமானிய மக்களின் வலியை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.. 40 வருடங்களுக்கு முன்பு வங்கியில் லோன் எடுத்தாலும் மக்கள் சந்தோஷமான வாழ்வை அனுபவித்தனர்.. ஆனால் தற்போது கார்ப்பரேட் வங்கிகளால் லோன் பெறும் ஒவ்வொருவரும் அல்லோல் படும் வலியை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார்.

சாதாரண பெட்டிக்கடையில் கூட கடன் அன்பை முறிக்கும் என்ற வாசகம் இருக்கும். ஆனால் வங்கியில் அப்படி எந்த ஒரு வாசகம் இடம் பெறுவதில்லை என்பதையும் வங்கி லோன் பத்திரத்தில் முக்கிய குறிப்புகளை கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பதிவிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்..

ஆக.. இந்த சாமானியன்.. லோன் வாங்கும் சாமானியர்களுக்கு எச்சரிக்கை பதிவு..

ராமராஜன் பாணியில் சொல்வதென்றால் நம்ம ஒரு கடன்காரன்..

Ramarajans Saamaniyan movie review

Feminist விமர்சனம்..; யார வேணாலும் வச்சிக்கட்டும்.. ஆனால்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Feminist விமர்சனம்..; யார வேணாலும் வச்சிக்கட்டும்.. ஆனால்..

ஸ்டோரி…

ஒரு இளம் பெண்ணியவாதி கவிதைகள் எழுதுவதிலும் பேச்சிலும் சிறந்தவர்.. இவர் பல கவிதைகளையும் கதைகளையும் சமூகவலையில் பதிவிட்டு வருகிறார். இதனால் பலரும் ஈர்க்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் அவளின் கவிதைகளால் ஈர்க்கப்படும் நாயகன் அவளைப் பின் தொடர்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் நிகழ்ச்சியில் ஒன்றில் சந்திக்கின்றனர். இதனால் அவர்களின் நட்பு மேலும் வலுவடைகிறது.

ஒரு கட்டத்தில் கொரோனா லாக்டவுன் போடப்படுகிறது. அந்தப் பெண் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடுகிறது.

ஒரு பெண் கவிஞருக்கும் கவிதை ரசிகனுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் உடலுறவு கொள்கின்றனர்.. நாம் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழலாம் என முடிவெடுக்கின்றனர்..

இப்படியாக சில தினங்கள் செல்லும் நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

நீ ஒரு ஃபெமினிஸ்ட் உனக்கு பல பேருடன் நெருக்கம் இருக்கிறது என்றெல்லாம் தவறாக பேசி விடுகிறார் நாயகன்.. இதனையடுத்து இருவரும் சண்டை போட்டு பிரிகின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது.?ஃபெமினிஸ்ட் என்பவள் இப்படி தானா?என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

MadhuAzhagan & Angelin Flora

மது அழகன் மற்றும் ஏஞ்சலினா இருவருமே நிஜ காதலர்களைப் போல எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.. அதிலும் ஏஞ்சலின் கண்கள் கிக் ஏற்றும் கண்கள்..

காதலர்களுக்குள் ஏற்படும் ஊடல் கூடல் மோதல் என அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இரண்டு கேரக்டர்களை மட்டுமே வைத்து ஒரு இதமான காதல் கதையை சொல்ல முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கேபிள் சங்கர்.

அதே சமயத்தில் பெண்ணியவாதி என்பதை ஒரு ஆண்மகன் எப்படி புரிந்து வைத்திருக்கிறான் என்பதையும் ஒரு பெண்ணியவாதி என்ற அடையாளப்படுத்தப்பட்ட ஒரு பெண் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதையும் அழகாகவும் உணர்வுப்பூர்வமாக உணர்ச்சிகரமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்..

Director : Cable Sankar
Music : Shamanth Nag
Camera : Murali Shridhar
Editor : Abishek கிரீம்

ஒரு குறும்படத்திற்கு தேவையான ஒளிப்பதிவும் படத்தொகுப்பம் இசையும் சரியாக கையாளப்பட்டிருக்கிறது..

இறுதியாக யார் யாரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்.. ஆனால் சந்தோஷமாக வைத்துக் கொள்ளட்டும் என்று திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் கேபிள் சங்கர்..

ஆக இந்த ஃபெமினிஸ்ட்… 2K கிட்ஸ் லவ்

Feminist short film review

தலைமைச் செயலகம் வெப்சீரிஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைமை செயலகம் வெப்சீரிஸ் விமர்சனம்

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் இந்த தலைமை செயலகம் வலைத்தொடர் சுமார் 8 பகுதிகளாக கொண்டு வெளிவரவுள்ளது.

2024 மே 17 ஆம் தேதி அன்று ZEE5 இணையத்தில் வெளியானது..

ஸ்டோரி…

மேற்கு வங்கத்தில் ஒரு இளம் பெண் சித்திரவதை செய்யப்படுகிறார்.. இந்த சம்பவத்திற்கு காரணமான பலரையும் வெட்டி சாய்கிறார் அந்த பெண்..

இதன் பிறகு 15 வருடங்களுக்குப் பிறகு கதை நகர்கிறது.. இங்கு தமிழக முதல்வராக கிஷோர் இருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் இவர் சிக்கியதால் இவரது பதவி பறிபோகும் நிலை ஏற்படுகிறது.. இதனால் தன் பதவியில் யாரை அமர்த்தலாம்? யார் விசுவாசி என்ற சிந்தனையில் இருக்கிறார் கிஷோர்..

இந்த சூழ்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அந்த கொலை சம்பவத்தில் வெட்டி சாய்த்த பின் என்ன ஆனார் அந்த பெண் என்ற விசாரணையை தொடங்குகிறது சிபிஐ..

இந்த இரண்டு கதைகளையும் இணைக்கும் விதமாக திரைக்கதை அமைத்து மீதி கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்..

கேரக்டர்ஸ்…

கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரன், சந்தான பாரதி, கவிதா பாரதி, மற்றும் பலர்.

கிஷோரின் மகளாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பரத் மற்றும் தர்ஷா குப்தா இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர்..

கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரன், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்டோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

முதல்வர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தன் கேரக்டரை உயர்த்தும் அளவிற்கு கெத்து காட்டி மிரட்டி இருக்கிறார் கிஷோர்..

டெக்னீசியன்ஸ்…

எழுத்து & இயக்கம் :- ஜி.வசந்தபாலன்.

ஒளிப்பதிவாளர் :- வைட் ஆங்கிள் ரவிசங்கர்.

படத்தொகுப்பாளர் :- ரவிக்குமார்.

இசையமைப்பாளர் :- ஜிப்ரான், சைமன் கே கிங்.

ஒளிப்பதிவாளர் வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை அருமை.. வலைதொடர் கதை ஓட்டத்திற்கு பொருத்தமாக பயணிக்கிறது..

ஜெயமோகனின் வசனங்கள் வெப்சீரிஸுக்கு பலமாக உள்ளது.

தமிழக மற்றும் ஆந்திர அரசியல் இரண்டையும் இணைத்து புதுவிதமான கதையை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்..

வெப் சீரிஸ் என்பதால் நீளத்தை நீட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் & எடிட்டர்.. 8 எபிசோடு பதிலாக 6 எபிசொட்டில் முடித்து இருக்கலாம்..

தயாரிப்பு நிறுவனம் :- ராடான் மீடியா பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர்கள் :- சரத்குமார், ராதிகா சரத்குமார்.

Thalaimai Seyalagam web series review

எலக்சன் விமர்சனம் 3.5/5.. குட் செலக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எலக்சன் விமர்சனம் 3.5/5.. குட் செலக்சன்

ஸ்டோரி…

தமிழகத்தில் உள்ள பிரபல கட்சிக்கு உண்மையான தொண்டனாக 40 வருடங்களுக்கு மேலாக உழைத்து வருகிறார் ஜார்ஜ் மரியான்.. இவரது மகன் விஜயகுமார்.. ஆனால் இவருக்கு துளியும் அரசியல் ஆர்வம் கிடையாது.

இப்படியான சூழ்நிலையில் கட்சிக்கு உண்மையான உழைத்த தனது தந்தையை அவமானப்படுத்தி விடுகிறது கட்சி தலைமை.. இதனைப் பார்க்கும் மகன் விஜயகுமார் தன் தந்தையின் செல்வாக்கை தலைமைக்கு உணர வைக்க தேர்தல் அரசியல் களத்தில் இறங்குகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றாரா.? ஜெயித்தது கட்சித் தலைவனா? கட்சித் தொண்டனா? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ்…

விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், பவல் நவகீதன், திலீபன், அருள் & பலர்..

உறியடி விஜயகுமார் முழுக்க முழுக்க அரசியல் களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.. இது போன்ற அரசியல் படங்களில் ஹீரோ ஜெயித்து விடுவார்.. ஆனால் இதில் தோல்வி கண்டு எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அரசியலால் எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன் என்று அவர் பேசும்போது விஜயகுமார் உணர்ச்சி மிகுந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.. ஆனால் இது போன்ற வலுவான கேரக்டருக்கு அவர் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்து இருக்க வேண்டும்

‘அயோத்தி’ பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இதில் அரசியலும் இல்லறமும் கலந்த குடும்ப பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்

பெண்களுக்கு தாலி போல் அரசியல் கட்சி தொண்டனுக்கு கரைவெட்டி தான் அடையாளம் என்னும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் தன் கேரக்டரை அருமையாக சித்தரித்து இருக்கிறார்.

இஸ்லாமியராக பாய் கேரக்டரில் வரும் அருள் நம்மை கவர்கிறார்.. அச்சு அசல் இஸ்லாமியரை போல நடித்திருக்கிறார்.. இவரின் கூடவே வரும் உயரமான லீ கார்த்தியும் கவனிக்கத்தக்க நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பாவல் நவகீதன் மற்றும் திலீப் இருவரும் கதையின் நாயகர்களாக வருகின்றனர் அரசியல் களத்திலும் ஆளுமையிலும் ஜெய்கின்றனர்.

திருநங்கையாக நடித்தவர், சேவியர், அம்பேத், மூர்த்தி உள்ளிட்ட நடிகர்கள் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்..

டெக்ணீசியன்ஸ்…

இயக்கம்: தமிழ்

இசை: கோவிந்த் வசந்தா

தயாரிப்பு: ரீல் குட் பிலிம்ஸ்

ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜூ

படத்தொகுப்பு: சி எஸ் பிரேம்குமார்

பொதுத் தேர்தலுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தமிழ்.

தனது வாக்கை பணத்திற்காக விற்க்கும் மக்கள் எப்படி விஸ்வாசமாக இருக்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

96 பட புகழ் கோவிந்த் வசந்தா காதல் களத்திற்கும் அரசியல் கழகத்திற்கும் ஏற்ற இசையை கொடுத்து இருக்கிறார்..

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதார்த்தமான அரசியல் களத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் தமிழ். அதற்கான நடிகர்கள் அவர் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டுக்குரியது

ஆக இந்த எலக்சன்.. குட் செலக்சன்

Election movie review

——

கன்னி பட விமர்சனம் 3.25/5.. இவள் ஒரு கன்னிவெடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னி பட விமர்சனம் 3/5.. இவள் ஒரு கன்னிவெடி

அஸ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் நடிக்க உருவாகியிருக்கும் படம் ‘கன்னி’.

ஒளிப்பதிவு – ராஜ்குமார்
இசை – செபாஸ்டியன் சதீஷ்.

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.

ஸ்டோரி…

கிருஷ்ணகிரி மாவட்டம் மலைகிராம கதையை மையப்படுத்தி படத்தையே கொடுத்து இருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவா..

உலக பணக்காரர்களில் ஒருவர் இந்த கிராமத்திற்கு வருகிறார்.. அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்படுகிறது.

இதனையடுத்து அந்த கிராமத்து மருத்துவச்சி செம்பா அவருக்கு தெய்வீக முறைப்படி சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கின்றார். இதனை அறியும் பல டாக்டர்கள் அதிர்ச்சியாகின்றனர்.

எந்த ஆங்கில மருத்துவத்திலும் சாதிக்க முடியாததை இந்த சித்த மருத்துவம் செய்திருக்கிறது என்பதால் வியக்கின்றனர்.

இதனையடுத்து அந்த மருத்துவ முறையை அறிந்து கொள்ளவும் அந்த சித்த மருத்துவ ஃபார்முலாவை அபகரிக்கவும் திட்டமிடுகின்றனர்.

இந்த மெடிக்கல் மாஃபியாவிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க செம்பி நாயகி அஸ்வினி போராடுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? சித்த மருத்துவ ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது.? என்பதுதான் இந்த ‘கன்னி’ படத்தின் கதை.

கேரக்டர்ஸ்…

மகள் செம்பியாக அஸ்வினி சந்திரசேகர்,
மாதம்மா வேல்முருகன் செங்கா, அவருடைய மகன் வேடனாக மணிமாறன் ராமசாமி, மருமகள் நீலிமாவாக தாரா க்ரிஷ், மச்சனாக ராம் பரதன், மாயம்மாவாக சரிகா செல்வராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்..

அழகு அஸ்வினி இந்த படத்தில் ஆக்சனிலும் அசத்தியிருக்கிறார். வில்லன் கும்பலிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற அவர் போராடும் போராட்டங்கள் கல்நெஞ்சையும் கரைக்கும்.

இவரின் அம்மா அண்ணா அண்ணி அனைவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கும் கேரக்டருக்கும் ஏற்ப பயணித்திருப்பது சிறப்பு..

டெக்ணீசியன்ஸ்…

தெய்வீக சிந்தனை மருத்துவ ஓலைச்சுவடி என சித்த மருத்துவத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த படத்தை கொடுத்திருக்கிறார் மாயோன் சிவா..

இதுபோன்று குறைந்த பட்ஜெட் படங்கள் சில சமயங்கள் கவனம் பெறுவதில்லை.. ஆனால் இந்த படத்தில் இசையிலும் சரி ஒளிப்பதிவிலும் சரி படத்தை உருவாக்கி விதத்திலும் சரி படக்குழுவினர் ஜெயித்திருக்கின்றனர்.

செபாஸ்டியன் சதீஷின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்..

ராஜ்குமார் பெரியசாமியின் ஒளிப்பதிவில், மலை கிராம பகுதி மக்கள் அங்கு வசிக்கும் வீடுகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது..

எந்தவித நோயானாலும் தீர்த்துவிடும் மருத்துவ குணங்களை அந்த மக்கள் அறிந்திருக்கின்றனர்.. அப்படியான சூழ்நிலையில் அங்கு ஒருவர் மட்டும் பைத்தியமாக திரிந்து கொண்டிருப்பதும் அவரை படம் முழுவதும் காட்டிக் கொண்டிருப்பது ஏனோ? அவரை குணப்படுத்தி இருக்கலாமே இயக்குனர்.?!

பெரும்பாலும் அந்த கிராமத்து மனிதர்கள் கருப்பாகவும் இருக்கின்றனர்.. ஆனால் அஸ்வினி மட்டும் கிராம மக்களிடம் ஒட்டாத ஒரு முகமாகவே தெரிகிறது.. ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி அஸ்வினியை கருப்பாக காட்டி இருக்கலாம்.

அந்த மலைவாழ் மக்களின் கிராமத்து பாஷைகளை அப்படியே உச்சரிக்கும் வகையில் கொடுத்திருப்பது சிறப்பு.

ஆக இந்த கன்னி.. இவள் ஒரு கன்னிவெடி

Ashwinis Kanni movie review

More Articles
Follows