தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தியான் பிரபு, அஷ்மிதா, நிலோபர் , காக்கா முட்டை புகழ் ரமேஷ் மற்றும் விக்கி , வேல்முருகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தியான் பிரபு இயக்கியுள்ள படம் ‘படைப்பாளன்’. தியான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.
ஒன்லைன்..
சினிமா வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குனர்களின் பரிதாப நிலையை சொல்லும் படம். பல சிறப்பான கதைகளை படமாக்க முற்படும் ஒரு படைப்பாளனின் வாழ்வியல்.
கதைக்களம்…
சினிமாவில் சாதிக்க நினைக்கும் ஒரு உதவி இயக்குனர் நாயகன் தியான் பிரபு.
ஒரு கதையை தயாரிப்பாளரிடம் சொல்கிறார் தியான் பிரபு.
அந்த தயாரிப்பாளர் இவரின் கதையை மற்றொரு இயக்குனரிடம் கொடுத்து படத்தை தயாரிக்க திட்டமிடுகிறார்.
இதனால் விரக்தியடைந்த தியான் பிரபு, தனது கதையை திருடிவிட்டனர் என்று கூறி நீதிமன்றம் செல்கிறார்.
நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறக் கூறி தயாரிப்பாளர் குரு மிரட்டல் விடுக்கிறார்.
மிரட்டலுக்கு தியான் பிரபு பணிந்தாரா.? அல்லது தனது படைப்பு உரிமைக்காக போராடினாரா என்பதை படத்தின் மீதி கதை.
கேரக்டர்கள் & டெக்னீஷியன்கள்…
படத்தின் பெரிய மைனஸ் எதுவென்றால்..
நாம் ரேடியோவின் திரைச்சித்திரம் காண்பது போல உள்ளது…” நான் உள்ள வந்துட்டேன் இல்ல… நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன் இது போன்ற டயலாக்குகள் ஏதோ சினிமா பார்க்காத நபர்களுக்கு சொல்வது போல உள்ளது. இதை கூடவா இயக்குனர் கவனிக்கவில்லை..
அதிலும் அந்த பெண் ஆங்கிலத்தில் பேசும் போது இது போன்ற டயலாக்ஸ் ரிப்பீட் ஆகிறது அதை கவனித்திருக்கலாம்.
நாயகன் தியான் பிரபு, உதவி இயக்குனர் கதாபாத்திரத்தில் ஒன்றியிருக்கிறார்.
ஒரு உதவி இயக்குனரின் வலியையும் வேதனையும் யதார்த்தமாக சில நேரம் ஓவராகவே காட்டியிருக்கிறார் தியான் பிரபு.
வில்லனை பழிவாங்கும் காட்சி ரசிக்கலாம்..
படத்தில் நாயகிகளாக அஷ்மிதா, நிலோபர். இருவரும் வழக்கமான நாயகிகள்.. பெரிதாக வேலையில்லை. மஸ்காரா மஸ்காரா மஸ்காரா பாடலுக்கு நடனமாடிய நடிகைக்கு இந்த நிலையா? ஒரு நல்ல பாடலை கொடுத்தால் ரசிகர்கள் என்ஜாய் செய்திருப்பார்கள்.
காக்கா முட்டை விக்கி, ரமேஷ் ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வருகிறார்கள்.
வில்லன்களாக வளவன், பாடகர் வேல்முருகன் ஆகியோர் படத்தில் உள்ளனர்.
திரைப்படத்தயாரிப்பாளராக மனோபாலா நடித்திருக்கிறார்.
வேல் முருகனின் ஒளிப்பதிவில் ஒகே ரகம்.. பாலமுரளியின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
தமிழ் சினிமாவில் நடந்த கதை திருட்டு சம்பவத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளனர்.
உதவி இயக்குனர்களின் வலியையும் வேதனையையும் கண்முன்னே நிறுத்தியதற்காக இயக்குனர் தியான் பிரபுவிற்கு பாராட்டுக்கள்.
Padaippaalan movie review in Tamil