தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிப்பு – பகத் பாசில், நஸ்ரியா, கவுதம் மேனன்
இயக்கம் – அன்வர் ரஷீத்
இசை – ஜேக்சன் விஜயன், வினாயகன், சுஷின் ஷியாம்
தயாரிப்பு – தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்
முதலில் இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். இந்த படம் ஒரு நேரடி தமிழ் படமாக உருவாகி இருந்தால் இங்கு பல பிரச்சினைகள் எழுந்திருக்கும். மலையாள சினிமாவில் இந்த படம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகையல்ல.
ஒன்லைன்…
இந்திய திருநாட்டில் வேற்று மதத்தைச் சார்ந்தவர்களை தங்கள் மதத்திற்கு இழுக்கும் முயற்சியாக சில கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் அல்லேலூயா கூட்டத்தை தோலுரித்துக் காட்டும் படம் தான் இந்த நிலை மறந்தவன்.
மலையாளத்தில் பகத்பாசில் நடிப்பில் ‘டிரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தின் டப்பிங் படம் தான் இந்த நிலை மறந்தவன்.
சுதந்திர காலத்திலும் சுதந்திர அடைந்த பின்னும் ஒரு சில பிரிவினருக்கு மறுக்கப்பட்ட கல்வி மற்றும் ஆரோக்கியத்தை வழங்கினர் அந்த பிரிவினர். அதனால் அந்த மதத்தின்பால் பற்றுக் கொண்டு ஏராளமானோர் அந்த மதத்துக்கு மாறிச் சென்றனர்.
ஆனால் அவை எல்லாம் ஒரு மாய பிம்பம் அல்லேலூயா என்ற பெயரில் சிலர் செய்யும் உலகளாவிய வியாபாரம் தான் இந்த படத்தின் கதைகளம். அந்த தில்லுமுல்லுகளை தோலுறுத்தி காட்டி இருக்கிறார் பாஸ்டர் JC என்ற பெயரில் நடித்திருக்கும் பகத் பாஸில்.
கதைக்களம்..
போலி பாதிரியார்களை உருவாக்கி மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் கும்பல் கவுதம் மேனன், செம்பன் வினோத் ஜோஸ்.
தன் குடும்ப சூழ்நிலை காரணமாக இவர்களிடம் சிக்கிக் கொள்கிறார் இந்து மதத்தைச் சேர்ந்தவரான பகத்.
ஒரு கட்டத்தில் கிறிஸ்துவ பாதிரியாராக போலியாக மாறி மதப் பிரசங்கம் செய்கிறார்.
பகத் செய்யும் பிரசங்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதனால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் உலகப் புகழ் பெறுகிறார் பகத்.
ஒரு கட்டத்தில் இவர் போலி என மக்களுக்குத் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.
கேரக்டர்கள்…
கிறித்துவ மதத்தில் நடக்கும் குற்றங்களை வெளிப்படுத்த நிஜ வாழ்க்கையில் இஸ்லாமியரான ஃபகத்பாசிலைப் பயன்படுத்தி கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அன்வர் ரஷீத். மேலும் அவரை ஓர் இந்துவாக காட்டியிருக்கிறார்.
பகத் பாசிலும் தன் நடிப்பில் மிச்சம் எங்கும் வைக்கவில்லை. ஒரு அசல் பாஸ்டராகவே மாறி இருக்கிறார். அவர் சொல்லும் போதனைகள் கிறிஸ்துவ மத போதகர்களை தங்களுக்கு நினைவு படுத்தலாம். அதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறோம்.
நாயகியாக பகத் மனைவி நஸ்ரியாவே நடித்திருக்கிறார். இதுவரை பார்க்காத நஸ்ரியாவை இதில் காணலாம்.. சிகரெட் சரக்கு பாப் கட்டிங் என மாடராக் மங்கையாக வருகிறார் நஸ்ரியா.
தன் வழக்கமான குறும்புத்தனம் கலந்த நடிப்பில் ரசிகர்களை ஈர்க்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் கவுதம்மேனன், செம்பன் வினோத் ஆகியோர் செம கார்ப்பரேட் வில்லன்கள் .
சில காட்சிகளில் வரும் விநாயகன் சற்று வித்தியாசமானவர் தான்.
டெக்னீஷியன்கள்…
இந்து மத சாமியார்களை பல படங்களில் கிண்டலடித்துள்ளனர் தமிழ் சினிமா இயக்குனர்கள்.
ஆனால் கிறிஸ்துவ மதத்தில் மக்களை ஏமாற்றும் போலி மத போதகர்களைப் பற்றி ஒருவர் கூட படம் எடுக்கவில்லை.
மூக்குத்தி அம்மன் படத்தில் இது போல காட்சிகளை வைத்திருந்தார் ஆர் ஜே பாலாஜி. ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எதிர்ப்பு உருவானதால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டார். ஆனால் படம் முழுவதும் இந்து மத போதகர்களை அவர் கிண்டல் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமல்நீரத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், நிஜமாக நடக்கும் மதக்கூட்டங்களைப் போல காட்சிகளை அமைத்துள்ளனர்.
ஜாக்சன் விஜயன், சுஷின்ஷியாம் ஆகியோரின் இசையும் படத்துக்குப் பலம்.
மலையாள படம் என்றாலும் தமிழில் டப்பிங் செய்யும்போது தமிழுக்கான வசனங்களும் பவர் புல்லாகவே உள்ளது..
கடவுள் மீதும் மதங்கள் மீதும் அளவு கடந்து நம்பிக்கை வைப்பது ஆபத்து என்பதை உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் அன்வர் ரஷீத்.
ஆக இந்த நிலை மறந்தவன்.. மதம் பிடிக்காத மனிதம்
Nilai Marandhavan Movie Review in Tamil