முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம் (மலையாளம்) 3.75/5

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம் (மலையாளம்) 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிநவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’.

இயக்கம் : அபினவ் சுந்தர் நாயக்
இசை : சிபி மேத்யூ அலெக்ஸ்
தயாரிப்பு : டாக்டர் அஜித் ஜாய்

கதைக்களம்…

வாழ்க்கையில் தான் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒருவன் எத்தனை தில்லுமுல்லுகள் செய்தாலும் அவன் இலக்கை அடைந்து விடுவான்.. அதுவும் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு எளிதான காரியமே.

நாம் பல படங்களில்.. “ஒரு வழக்கு விசாரணைக்காக போலீஸ் எந்த மாதிரியான காரியங்களிலும் இறங்கி தனக்கு சாதகமான விசாரணையை மாற்றி அமைத்துக் கொள்வார்கள் என்பதை பார்த்து இருக்கிறோம்.

அது போல இந்த படத்தில் வக்கீல் ஒருவர் சாதாரணமாக எதிர்பாரா விதமாக நடைபெறும் விபத்துகளை தனக்கு ஏற்றவாறு மாற்றி அதன் மூலம் காப்பீட்டுக்கான தொகையை பெற்று நினைத்ததை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி அடைவதே இந்த படத்தில் கதை.

அந்த வக்கீல் எந்த மாதிரியான தில்லுமுல்லுகளை செய்தார்.? வாழ்க்கையில் வெற்றி அடைந்தாரா? என்பதே படத்தில் கிளைமாக்ஸ்

கேரக்டர்கள்…

வழக்கறிஞர் கேரக்டர்க்கு வினீத் சீனிவாசன் பொருத்தமானவர் என்பதை காட்சிகள் நிரூபித்திருக்கிறார். ஒரு யதார்த்த வக்கீலாகவும் முன்னேற துடிக்கும் இளைஞனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தன் மனைவி புத்திசாலி என்றால் தன் நண்பன் கட்டிக்க போகும் மனைவி அதி புத்திசாலி என்பதால் அவர் யோசிக்கும் ஒவ்வொரு சிந்தனைகளும் நம்மை அதிர வைக்கின்றன.

அதுபோல அவரது மைண்ட் வாய்ஸ் காட்சிகள் அனைத்தும் காமெடி கலக்கலாக உள்ளது.

மேலும்… சூரஜ்ஜ, வெஞ்சாராமூடு, சுதய்,கோபா, அர்ஷா பைஜு, தன்விராம், ஜார்ஜ்கோரா ஆகியோர் தங்கள் பங்களிப்பை நேர்த்தியாக சேர்த்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் ஒளிப்பதிவு பாராட்டும்படியாக உள்ளது. முக்கியமாக படத்தின் டைட்டில் கார்டிலேயே பேச வைக்கப்படுகிறார்கள்.

உதாரணத்திற்கு இந்த படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்று டைட்டில் கார்டு வரும்.. அதற்கும் ஒரு கார்ட்டூன் டிசைன் செய்து கிராபிக்ஸ் செய்துள்ளனர்.

அதுபோல இடைவேளை முடிந்து படம் ஆரம்பிக்கும் போது.. “எல்லாரும் வந்துட்டீங்களா.? வந்தாலும் வரலைன்னாலும் நாங்க ஸ்டார்ட் பண்றோம் என்பது போல காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

அது போல கிளைமேட்சியிலும் கார்ட்டூன் கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. இது போல வித்தியாசமான சிந்தனைகள் தான் ஒரு படைப்பாளியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.

சிபி மேத்யூ அலெக்ஸ் பின்னணி இசையில் கதையுடன் ஒன்ற வைத்துள்ளார்.

ஆக எல்லோரும் விரும்பும் வகையில் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் அபிநவ் சுந்தர் நாயக்..

Cast and Crew :

Main Lead : Vineeth Srinivasan

Actors : Vineeth Srinivasan, Suraj Venjaramoodu, Sudhy Kopa, Arsha Baiju, Tanvi Ram, George Kora, Riaa Saira, Sudheesh..

Director : Abhinav Sunder Nayak

Writers : Abhinav Sunder Nayak & Vimal Gopalakrishnan

DOP : Viswajith Odukkathil

Music : Sibi Mathew Alex

Executive Producers : Pradeep Menon, Anoop Raj M

Mukundan Unni Associates movie review and rating in tamil

மிரள் விமர்சனம் 3/5.; குலசாமியும்… குற்ற ஆசாமியும்..

மிரள் விமர்சனம் 3/5.; குலசாமியும்… குற்ற ஆசாமியும்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பரத் வாணி போஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். மனைவி பயந்த சுபாவம் என்பதால் அதை நினைத்து கவலை கொள்கிறார் பரத்.

ஒரு கட்டத்தில் தன் மாமியார் மீராவிடம் இது பற்றி கூறுகையில்..” மாப்ள எங்கள் கிராமத்திற்கு வந்து குல தெய்வத்தை வழிபட்டால் சரியாகும் என்கிறார்.

எனவே கிராமத்திற்கு சென்று குலசாமியை வழிபடுகின்றனர். திடீரென பரத் தொழில் ரீதியாக உடனே திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே தன் மாமனார் கேஎஸ். ரவிக்குமாரிடம் சொல்லி விட்டு நடுராத்திரியில் மனைவி மற்றும் மகனுடன் காரில் பயணிக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக கார் பிரேக் டவுன் ஆகிறது. அந்த சமயத்தில் பரத்தை மர்ம ஆசாமி ஒருவன் அடித்துப் போட்டுவிட்டு வாணியை கடத்திச் செல்கிறார்.

அந்த மர்ம ஆசாமி யார்? பரத்தை அடித்து போட என்ன காரணம்? வாணியை கடத்த என்ன காரணம்? அந்த இரவில் நடந்தது என்ன? என்பதே கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

எந்த ஒரு ஹீரோ பந்தாவும் இல்லாமல் அமைதியாக கேரக்டருக்கு தகுந்தாற்போல் நடித்திருக்கிறார் பரத். இவருக்கு சரியான ஜோடி வாணி.

நாம் காணும் இல்லத்தரசியாக அழகாக வந்து செல்கிறார் வாணி. இவர்களை மிரட்டும் உருவத்தை காணும்போது இருவரும் பயந்து நம்மையும் பயப்பட வைத்துள்ளனர். அடுத்தது என்ன நடக்கும்.? என்ன நடக்கும்? என்ற பரிதவிப்பை தன் கண்களில் காட்டி இருக்கின்றனர்.

வாணியின் பெற்றோர்களாக கேஎஸ் ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள்.

பரத்தின் நண்பராக ராஜ்குமார் நடித்துள்ளார். இவரின் கேரக்டர் ஏனோ தானோ என இருக்கிறதே என நினைக்கையில் ஒரு செம டெஸ்ட் கொடுத்து இருக்கிறார்கள்.. அதை சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும்.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா இரவு காட்சிகளில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். எஸ்என் பிரசாத்தின் பின்னணி இசை திடீர் திடீரென பயமுறுத்தி நம்மை பேய் படம் பார்க்கும் எண்ணத்தை கொடுத்துள்ளது.

இதுவும் வழக்கமான பேய் படம் தானா என்று நாம் நினைக்கும் போது கிளைமாக்ஸ் வித்தியாசமான ஒரு விஷயத்தை கொடுத்து மிரள வைத்துள்ளார் இயக்குனர் சக்திவேல்.

ஆனால் முதல் பாதியில் நீளத்தை கொஞ்சம் எடிட்டிங் செய்து இருக்கலாம் எடிட்டர்.

ஆக இந்த மிரள்.. குலசாமியும் குற்ற ஆசாமியும்..

பரோல் விமர்சனம்.; சகோதர வேஷம் Vs தாய் பாசம்

பரோல் விமர்சனம்.; சகோதர வேஷம் Vs தாய் பாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தமிழ் சினிமாவில் வடசென்னை மக்களின் வாழ்க்கை பற்றி சொல்ல வந்துள்ள மற்றொரு படம் இது. வன்முறையோடு இரத்தம் தெறிக்க ராவாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

நடிகர்கள் : லிங்கா, ஆர்எஸ் கார்த்திக், கல்பிகா, மோனிஷா.

இயக்கம் – துவாரக் ராஜா

இசை – ராஜ்குமார் அமல்

தயாரிப்பு ட்ரிப்ர் என்டர்டெயின்மென்ட்

கதைக்களம்…

வட சென்னையில் வசிக்கிறார் அம்மா ஜானகி சுரேஷ். இவருக்கு கரிகாலன் (லிங்கா) & கோவலன் (பீச்சாங்கை கார்த்திக்) என்ற இரு மகன்கள். இவர்களுக்கு தந்தை இல்லை.

சிறு வயதில் தன் தாயிடம் தவறாக நடக்க முயன்ற ஒருவரை கொலை செய்து விடுகிறார் அண்ணன் லிங்கா.

எனவே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்கிறார். தனக்காக சிறை சென்ற மூத்த மகன் மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார் அம்மா. இதனால் தனக்கு சரியான பாசம் கிடைக்கவில்லை என ஏங்குகிறார் கார்த்திக்.

ஒரு கட்டத்தில் அம்மா மரணம் அடைய இறுதிச் சடங்கு செய்ய அண்ணனுக்கு பரோல் கிடைக்க போராடுகிறார் தம்பி. இதற்கு முன்பே ஜெயிலில் இருந்து தப்பிக்கு முயற்சிக்கிறார் லிங்கா. இதனால் பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் லிங்காவை போட்டுத்தள்ள ஒரு கும்பல் காத்திருக்கின்றனர்.

இறுதியாக பரோல் கிடைத்ததா?அம்மாவுக்கு இறுதி சடங்கு செய்தாரா? அந்த ரவுடி கும்பல் என்ன செய்தது? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

கார்த்திக் & லிங்கா இருவரும் ஹீரோ & வில்லன் என மாறி மாறி மிரட்டியுள்ளனர். இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

அண்ணனுக்கு காதல் வந்ததும் வீட்டில் அவர் பண்ணும் ரவுசு சூப்பர்.. அது போல அண்ணன் மீது வெறுப்பை காட்டுவதும் ஒரு கட்டத்தில் பாசத்தை காட்டுவதும் எனக்கு கார்த்தி வெரைட்டி காட்டியிருக்கிறார்.

நாயகனின் காதலிகளாக கல்பிக்கா & மோனிஷா முரளி நடித்துள்ளனர் அதிகப்படியான காட்சிகள் இல்லை என்றாலும் இருவரும் சிறப்பு.. லிங்காவின் காதலி முரட்டு காதலியாகவும் கார்த்திக்கின் காதலி மென்மையாகவும் காட்டியிருக்கிறார்கள்.

வக்கீலாக வினோதினி. அவரது பணியில் வழக்கம் போல அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு. மகன் கொலைகாரன் என்றாலும் அவன் மீது பாசம் காட்டும் அம்மாவாக ஜானகி சுரேஷ்.

டெக்னீஷியன்கள்…

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காட்டப்படும் ஹோமோ செக்ஸ், கொலைகள்.. மற்றும் வன்முறைகள் ஓவராக உள்ளன.

கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்படும் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். வடசென்னை என்றாலே ரத்தம் மட்டுமே என்பது போல ராவாக காட்டி இருக்கிறார் இயக்குனர்

இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல், ஒளிப்பதிவாளர் மகேஷ் திருநாவுக்கரசு, எடிட்டர் முனீஸ் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

கரிகாலன் யார் அவரைப் பார்க்க வேண்டும் என சிறுவன் கேட்கும் போது அந்த சின்ன குழந்தை இடம் வன்முறை காட்சிகளை சொல்லுவதை தவிர்த்து இருக்கலாம்.

வடசென்னை மக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்பதை எத்தனை படங்களில் தான் காட்டப் போகிறார்கள்?

‘பரோல்’ பற்றி தெரியாத பலருக்கும் இந்த படத்தை பார்த்தால் பரோலின் பல விஷயங்கள் புரியும்.

ஆக பரோல்… சகோதர வேஷம் Vs தாய் பாசம்

parole movie review and rating in tamil

FIRST ON NET யசோதா விமர்சனம்..3.5/5.; சபாஷ் சமந்தா

FIRST ON NET யசோதா விமர்சனம்..3.5/5.; சபாஷ் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யசோதா படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி உள்ளது. சமந்தா, வரலட்சுமி சரத்குமார், முகுந்தன், சம்பத்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் என இரண்டு பேர் இயக்கி உள்ளனர்.

கதைக்களம்…

பெற்றோர் இல்லாத காரணத்தால் தன் தங்கை ஆபரேசனுக்காக போராடுகிறார் சமந்தா.

எனவே வாடகை தாயாக மாறி லட்சக்கணக்கில் பணம் பெற சமந்தா மருத்துவமனைக்கு செல்கிறார்.

அங்கு மிகப்பெரிய நிறுவனத்தில் பலத்த பாதுகாப்புடன் சமந்தாவை போலவே பல கர்ப்பிணி பெண்களும் பிரசவத்திற்காக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க தயாராகி வருகின்றனர்.

ஒரு சில கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன்னே இறக்கின்றனர். இதில் ஏதோ ஒரு சதித்திட்டம் இருப்பதாக நினைக்கிறார் சமந்தா.

சதி திட்டங்களை முறியடித்து அங்குள்ள பெண்களை காப்பாற்ற போராடுகிறார். அந்த நிறுவனத்தில் என்ன நடக்கிறது? கர்ப்பிணிகளின் நிலை என்ன? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்..

முதலில் சாந்தமாக காணப்படும் சமந்த இடைவேளைக்குப் பிறகு ஆக்சனில் அதிரடி காட்டியுள்ளார் படத்தின் நாயகியாக தன் கேரக்டரை உணர்ந்து படம் முழுவதையும் தாங்கி நிற்கிறார்… சபாஷ் சமந்தா.

‘சர்கார்’ படத்தை தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டரில் வரலட்சுமி… கோலிவுட் சினிமாவிற்கு கிடைத்துள்ள ஸ்டைலிஷான அழகான வில்லி வரலட்சுமி.

இதர நட்சத்திரங்களும் தங்கள் பங்களிப்பில் சிறப்பு.

டெக்னீஷியன்கள்….

பின்னணி இசை, விஷுவல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் பலம் சேர்த்துள்ளன.

மணிஷர்மாவின் பின்னணி இசையும் சுகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

படத்தின் வித்தியாசமான கான்செப்டும் அருமை. இதுவரை சொல்லப்படாத வாடகைத்தாய் & சிசு குழந்தை & அழகு சாதனங்கள் என சிறப்பாக கையாண்டுள்ளனர்.

இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கியுள்ளனர். யசோதா க்ளைமாக்ஸில் டுவிஸ்ட் மற்றும் அதிரடி திருப்பங்கள் நிறைந்துள்ளன. அதே சமயம் பெண்களுக்கான எமோஷனல் திரில்லரும் கலந்துள்ளது பாராட்டுக்குரியது.

ஆனால் பாதாள குகை… பிரம்மாண்ட செட் ஆகியவை செயற்கையாக உள்ளது. VFX – யில் கவனம் செலுத்தி இருக்கலாம்… அதுபோல ஆக்சன் காட்சிகளில் சமந்தா நார்மாலாகவே இருக்கிறார். கர்ப்பிணி என்பதை மறந்துட்டாரோ.??

ஆக சபாஷ் போட வைக்கிறார் சமந்தா..

Yashoda movie review and rating in tamil

காஃபி வித் காதல் விமர்சனம்..; கன்ஃப்யூசன் வித் காதல்

காஃபி வித் காதல் விமர்சனம்..; கன்ஃப்யூசன் வித் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஒன்லைன்…

சுந்தர் சி-யின் வழக்கமான குடும்ப சென்டிமெண்ட் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ளது இந்த காஃபி வித் காதல்.

கதைக்களம்…

பிரதாப் போத்தன் தம்பதிக்கு 3 மகன்கள்.. 1 மகள் (டிடி).. மூத்தவர் அண்ணன் ஸ்ரீகாந்த்.. முதல் தம்பி ஜீவா… இளையவர் ஜெய்.்

ஸ்ரீகாந்த்துக்கு சம்யுக்தாவுடன் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார்.

ஜீவா தன் காதலி ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டு-கெதர் உறவில் 3 வருடங்கள் இருக்கிறார்.

இந்த நிலையில் ஜெய்க்கும், ஜீவாவுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் ஏற்பாடுகளை பெற்றோர் செய்கின்றனர்.

ஜெய்யின் நெருங்கிய தோழி அம்ரிதா அவரை காதலிக்கிறார். ஆனால் முதலில் மறுக்கும் ஜெய் மெல்ல மெல்ல அம்ரிதாவுடன் காதல் கொள்கிறார்.

ஆனால் அம்ரித்தாவோ வேறு ஒருவரை திருமணம் செய்ய சம்மதித்து நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.

இந்த நிலையில் சொத்துக்காக ஆசைப்படும் ஜெய் ஒரு பணக்கார பெண்ணுக்கு ஓகே சொல்கிறார். (ஆனாலும் அம்ரித்தாவே வேண்டும் என அடம் பிடிக்கிறார்.)

ஆனால் அந்த பணக்கார பெண்ணுக்கோ ஜீவா மீது காதல் வருகிறது. ஜீவாவும் காதலிக்கிறார். ஆனால் ஒரு தன் தம்பி ஜெயிக்காக தன் காதலை விட்டுக் கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் ஜீவாவுக்கு ரைசாவை பெண் பார்க்கின்றார் பெற்றோர். ஆனால் ரைசா ஸ்ரீகாந்த் உடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறார்.

இது போன்ற கன்ப்யூஷனான காதல் கதைகளை கொண்டது இந்த படம். இறுதியில் யார் யாரோடு இணைந்தார்கள்? திருமணம் என்ன ஆனது? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்

கேரக்டர்கள்….

என்னதான் அண்ணன் வேடம் ஏற்று இருந்தாலும் ஸ்ரீகாந்துக்கு பெரிதாக இடமில்லை.. தன் கள்ளக்காதலியே தன் தம்பியின் வருங்கால மனைவியா? என்ன பதறும்போது தவிக்கிறார். இதனையும் காமெடியாகவே சொல்லிவிட்டார் இயக்குனர் சுந்தர் சி.

ஜெயிக்கும் ஜீவாவுக்கும் அதிகப்படியான காட்சிகள் உள்ளன.. மனதுக்குப் பிடித்த பெண்ணா? அல்லது பணக்கார பெண்ணா? என அதிகமாகவே தடுமாறி இருக்கிறார் ஜெய்.

நிச்சயிக்கப்பட்ட ஜெய் தன் காதலை வேறு ஒரு பெண்ணிடம் (அம்ரிதா) சொல்லும் போது..”நீ நினைத்தால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி இருக்கலாம்.. ஆனால் என்னை விட வசதியான பெண்ணை ஏற்றுக் கொள்ள நினைத்தாயே.. இதான் உன் காதலா? என கேட்பது நெத்தியடி.

ஐஸ்வர்யா தத்தாவுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

இந்த மழைக்காலத்தில் ரசிகர்களுக்கு சூடேற்றிச் செல்கிறார் ரைசா வில்சன்.

யோகி பாபு & ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. கவுண்டமணி – செந்தில் போல கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

படம் முழுவதுமே கர்ப்பிணியாகவே வருகிறார் டிடி. ஆனால் படம் முடிந்த பிறகு கிளைமாக்சில் வரும் ரம்பம் ரம்பம் பாடலுக்குள் குழந்தை பெற்று ஆட்டம் போடுகிறார்.

ஸ்ரீகாந்தின் மகள் பள்ளி விழாவில் ஆட்டம் போடும்போது சைனிங் ஸ்டார் கோபப்படுவது ஏன்? சிறுமி செய்யும் நையாண்டியை கூட ஒரு நட்சத்திரம் ஏற்றுக் கொள்ள மாட்டாரா?

ஐஸ்வர்யா தன்னால் கர்ப்பமாக இருக்கிறார் என சொல்கிறார் ஜீவா. ஆனால் அதன் பின்னர் கிளைமாக்ஸ் காட்சியில்.. “நல்ல வேளை யார் புள்ளைக்கோ நீ அப்பாவாகி இருப்ப..” என டிடி சொல்வதெல்லாம் திணிக்கப்பட்ட சீன்.

டெக்னீஷியன்கள்…

ரம்பம் ரம்பம் பம்.. பாடலை தவிர மற்ற பாடல்கள் கவனம் ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார் யுவன்.

ஒளிப்பதிவு பாராட்டும்படியாக இருக்கிறது. ஸ்மார்ட்டான ஹீரோக்கள்.. அழகு அழகான ஹீரோயின்கள்.. என கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் கேமராமேன். ஆனால் எடிட்டர் தன் பணியை இன்னும் கொஞ்சம் கண்டிப்பாக செய்து இருக்கலாம்.

மற்றபடி எந்த லாஜிக்கும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதற்காகவே காதலை இடியாப்ப சிக்கலில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

ஆக.. காபி வித் காதல்… கன்ஃபியூஷன் வித் காதல் என்றே சொல்லலாம்

Coffee with kadhal movie review and rating in tamil

’லவ் டுடே’ LOVE TODAY விமர்சனம் 4.25/5.; அலைபேசியில் காதல் அலை

’லவ் டுடே’ LOVE TODAY விமர்சனம் 4.25/5.; அலைபேசியில் காதல் அலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவரது அடுத்த படத்தில் இவரே நாயகனாகவும் நடித்து இயக்கியுள்ளார்.

இந்த ‘லவ் டுடே’ படம் 2K கிட்ஸ் மற்றும் செல்போனில் வளர்ந்த காதலை சொல்லும் படமாக அமைந்துள்ளது.

கதைக்களம்…

ஹீரோ பிரதீப்.. ஹீரோயின் இவானா இருவரும் காதலிக்கின்றனர். ஹீரோயின் அப்பா சத்யராஜ்.

ஹீரோவின் அம்மா ராதிகா… அக்கா ரவீனா.. அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை யோகிபாபு.

ஒரு கட்டத்தில் சத்யராஜுக்கு பிரதீப் – இவானா காதல் தெரிய வருகிறது. எனவே கல்யாணத்திற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார்.

பிரதீப்பின் செல்போனை இவானாவிடம் கொடுக்க… இவாவின் செல்போனை பிரதீப்பிடம் கொடுக்கிறார்.

24 மணி நேரம் இருவரும் போனை மாற்றிக் கொள்ள வைத்துக் கொள்ளுங்கள்.்அடுத்த நாள் வரை உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் இருந்தால்.. ஒளிவு மறைவு எதுவும் இல்லாமல் இருந்தால்.. உங்கள் காதலை நான் ஏற்கிறேன் என்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? காதல் என்ன ஆச்சு? செல்போனால் ஏதாச்சும் பிரச்சனை வந்ததா? என்பதே கதை.

கேரக்டர்கள்…

90s கிட்ஸ் காதலை இன்றைய ட்ரெண்டிங்குக்கு ஏற்ப செமயாய் சொல்லிட்டார் பிரதீப். அதுவும் இன்ஸ்டாகிராம் இவர் டிராவல் செய்யும் வரும் வசனங்கள் வேற லெவல்.

இடைவேளை வரை.. முதல்பாதி செல்வதே தெரியவில்லை. பிரதீப் – இவானா பேசும் ரொமான்டிக் டயலாக்ஸ் ரசிக்க வைக்கிறது.

இவானா செம க்யூட்.. தன் லீலை காதலனுக்கு தெரிந்த பின்னும்.. காதலனின் லீலை இவருக்கு தெரிந்த பின்னும் இவானா காட்டும் ரியாக்சன் செம.

சத்யராஜ் அவரது பாணியில் பின்னி எடுத்துள்ளார். அவரது கேரக்டரில் வேறு யாரையும் நினைக்க முடியல. ராதிகாவும் கண்டிப்பான அம்மாவாக கவர்கிறார்.

யோகிபாபு காமெடி செய்யவில்லை என்றாலும் கண் கலங்க வைத்துவிட்டார்.

அக்கா ரவீனாரவி தன் கேரக்டரில் பக்கா. வருங்கால கணவரை நம்புவதும் பின்னர் சந்தேகப்படுவதும் என வெரைட்டி காட்டியிருக்கிறார்.

இவானாவின் பெஸ்ட்டி ரெவியும் (ஆஜித்) சிறப்பு.. இவர்களுடன் பிரதீப் ப்ரெண்ட்ஸ் கதிர் & டீம் கலக்கல்.

டெக்னீஷியன்கள்…

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு ஏக பொருத்தம்.

காதல் என்பது என்ன என்பதை அழகாக இயக்குனர் காண்பித்து இருக்கிறார். முக்கியமாக யோகிபாபு தன்னை உதாசீனப்படுத்தும் வசனங்களை பேசும்போது தேர்ந்த நடிகராக நிரூபித்துவிட்டார்.

கடைசியாக ராதிகா & சத்யராஜ் பேசும் வசனங்கள் சூப்பர் நெத்தியடி. ஒரு செடி நட்டு வச்சா தினம் தினம் நோண்டி பார்க்க கூடாது. அது வளரும் என நம்பனும்..

செல்போன் & சோஷியல் மீடியா போன்று எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கனும்.. உள்ளிட்ட வசனங்கள் அப்ளாஸ் பெறும்.

ஆக இந்த ‘லவ் டுடே’… அலைபேசியில் காதல் அலை

More Articles
Follows