மொட்ட சிவா கெட்ட சிவா விமர்சனம்

மொட்ட சிவா கெட்ட சிவா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ், அசுதோஷ் ராணா, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : சாய் ரமணி
இசை : அம்ரீஷ் கணேஷ்
ஒளிப்பதிவாளர் : சர்வேஷ் முரளி
எடிட்டிங்: கே.எல். பிரவீன்
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : சூப்பர் குட் பிலிம்ஸ்

msks 4

கதைக்களம்…

போலீஸ் துறையில் மட்டும்தான் சங்கம் இல்லை. அதில் பிரிவினை வரக்கூடாது என்பதால்தான் இந்த விதிமுறை.

ஆனாலும் சில அதிகாரிகளுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினையாலும் அவர்கள் ரவுடியிசத்துக்கு துணை போவதாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

அதுபோலதான் இங்கே நேர்மையான சத்யராஜ் மற்றும் நேர்மையற்ற லாரன்ஸ் இருவருக்கும் இடையே நடைபெறும் பனிப்போர் தான் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா.

msks 1

கதாபாத்திரங்கள்…

டைட்டில் கார்டில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ லாரன்ஸ் என்றுதான் அறிமுகமாகிறார். (உங்க தலைவர் ரஜினிக்கு தெரியுமா…?)

ஆனால் படத்தின் விளம்பரங்களில் இந்த வாசகம் இல்லையே சார்? என்னமோ திட்டமிருக்கு..?

தனது வழக்கமான பார்முலாவில் ரவுண்ட் கட்டி அடிக்கிறார் லாரன்ஸ்.

தெலுங்கு பட்டாஸ் படத்தின் ரீமேக் என்பதால் வில்லன் ஆட்களை அடித்து பட்டைய கிளப்புகிறார். வில்லனிடம் செய்யும் சேட்டைகளை ரசிக்கலாம்.

லாரன்சுக்கு இணையாக நிக்கி கல்ராணி ஆட்டம் போடுகிறார். ஆனால் பெரும்பாலும் பாடலுக்கு மட்டுமே வருகிறார். இவருடன் குத்து பாட்டுக்கு லட்சுமி ராயும் வந்து கிறங்கடிக்கிறார்.

சத்யராஜ் தன் வேலையை வெகு சிறப்பாக செய்துள்ளார்.

msks 2

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அம்ரீஷ் இசையில் பாடல்கள் செம குத்து ரகம். மாஸ் மாஸ் பாடல் தாளம் போட வைக்கும்.

ஒளிப்பதிவு பயங்கர கலர்புல். தெலுங்கில் நேரடியாக ரிலீஸ் செய்துவிடலாம்.

படத்தின் ப்ளஸ் அண்ட் மைனஸ்…

பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. ஆனால் அனைத்தும் செட் போடப்பட்டுள்ளது.  கொஞ்சம் லொக்கேஷன் சேஞ்ச் செய்திருக்கலாம். ஒரு மெலோடி கொடுத்திருக்கலாம்.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு அவர்களே அராஜகம் செய்கின்றனர்.  ஊருக்கே கேமரா வைக்க சொல்லும் போலீஸ் அங்கே கேமரா வைக்கவில்லையா? அதுபற்றி வில்லனுக்கு சொல்ல தெரியாதா?

சதீஷ், கோவை சரளா சாம்ஸ் இருந்தும் காமெடி சொல்லும்படியாக இல்லை என்பது வருத்தமே.

ஆக்ஷன் பிரியர்கள் மட்டும் ரசிக்கும்படி மேஜிக் செய்திருக்கிறார் டைரக்டர் சாய்ரமணி.

பன்ச் டயலாக்ஸ்களுக்கும் பறந்து பறந்து அடிக்கும் பைட்டுக்கும் பஞ்சமில்லை.

மொட்ட சிவா கெட்ட சிவா… பைட்டு பாட்டு வெய்ட்டு சிவா…

முப்பரிமாணம் விமர்சனம்

முப்பரிமாணம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சாந்தனு, ஸ்ருஷ்டி டாங்கே, ஸ்கந்தா அசோக், ரவி பிரகாஷ், தம்பி ராமையா, அப்புகுட்டி, சுவாமிநாதன், கல்யாணி, ரேகா சுரேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : அதிரூபன்
இசை : ஜிவி பிரகாஷ்
ஒளிப்பதிவாளர் : ராசாமதி
எடிட்டிங்: விவேக் ஹர்சன்
பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்
தயாரிப்பாளர் : ஸ்மலயா கிரியேசன்ஸ்

கதைக்களம்…

உண்மையான காதலாக இருந்தாலும் கல்யாணம் என்று வரும்போது வசதியான வாழ்க்கை வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிலரின் உணர்வு பூர்வமான பதிவு.

சிறுவயது முதலே காதலிக்கும் கதிர் மற்றும் அனு வாழ்வில் மற்றொரு நாயகன் வர, அவர்கள் மூவரும் சந்திக்கும் விளைவுகளே இந்த முப்பரிமாணம்.

கதாபாத்திரங்கள்…

சாந்தனு…. இவரை இனி சபாஷ் சாந்தனு என்றே அழைக்கலாம். உருகி உருகி காதலிப்பது ஒரு சாந்தனு என்றால், அடுத்து ஆக்ஷனில் மற்றொரு அவதாரம் எடுத்து இருக்கிறார்.

தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து நடித்திருக்கிறார். நிச்சயம் பாராட்டலாம்.

ஸ்ருஷ்டிக்கு இதில் நிறைய பாராட்டுக்களை கொடுக்கலாம். பெண்கள் திடீரென மனம் மாறுவது, காதலனிடம் பொய் சொல்லி சமாளிப்பது, வசதியான வாழ்க்கை வேண்டும் என நினைப்பது என அனைத்திலும் ஜொலிக்கிறார்.

நடிகர் சந்தோஷ் ஆக வருபவரும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

தம்பி ராமையாவுக்கு காட்சிகள் இல்லை. அப்புக்குட்டி நடிப்பை பாராட்டலாம்.

கல்யாணி மற்றும் ரேகா சுரேஷ் இருவரும் சினிமா அம்மாக்களாக தொடர்ந்து வர வாய்ப்புள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ராசாமதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. கிராமத்து அழகையும் காதலின் அழகையும் ரசிக்க வைக்கிறார்.

படம் பேசப்படும் அளவுக்கு நிச்சயம் ஜிவி. பிரகாஷின் இசையும் பேசப்படும். க்ளைமாக்ஸில் வரும் பாட்டு நிச்சயம் இளையராஜா ரசிகர்களை கவரும்.

அதிரூபனுக்கு இதல் முதல் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பாலாவின் சிஷ்யர் பட்டை தீட்டி வந்திருக்கிறார்.

காதல் என்றால் கல்யாணம் வரை இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஆண்களும், காதல் வேறு கல்யாணம் வேறு என நினைக்கும் பெண்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் முப்பரிமாணம்.

க்ளைமாக்ஸ் நிச்சயம் ரசிகர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

முப்பரிமாணம்… பொய்யான காதலுக்கு முற்றுப்புள்ளி

குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அருண்விஜய், மகிமா நம்பியார், அபிநயா, வம்சி கிருஷ்ணா, விஜயகுமார், தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் : அறிவழகன்
இசை : விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவாளர் : பாஸ்கரன்
எடிட்டிங்: புவன் ஸ்ரீனிவாஸ்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : இந்தர்குமார்

Kuttram3
கதைக்களம்…

நவீன மருத்துவ வளர்ச்சி காரணமாக செயற்கையாக கருத்தரித்தல் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

கணவரின் விந்தனு இல்லாமலும் மற்றவருடன் உடலுறவு கொள்ளாமலும் (அவரின் விந்தனு) கருத்தரித்தல் முறையே இந்த செயற்கை கருத்தரித்தல்.

அதாவது ஆணின் 23 க்ரோமோசோம்கள் பெண்ணின் 23 க்ரோமோசோம்களுடன் சேர்ந்து கருத்தரித்தல்.

இதனை வைத்து ஏற்படும் மருத்துவ முறைகேடுகளும் அதை வியாபாரமாக்கும் வில்லனின் (ப்ளாக் மெயில்) முயற்சியே இந்த குற்றம் 23.

அதனை போலீஸ் வெற்றிமாறன் கேரக்டரான அருண்விஜய் எப்படி கண்டுபிடித்து வெல்கிறார் என்பதே இதன் கதை.

arun vijay body

கதாபாத்திரங்கள்..

படம் முழுவதையும் அழகான நடிப்பால் தாங்கிநிற்கிறார் அருண்விஜய்.

போலீஸ் உடையில் கம்பீரம் என்றால் காதலை சொல்லும்போது கூட கண்ணியம்.

ஒரு யதார்த்தமான குடும்பத்தில் கேரக்டராக ஒன்றிவிட்டார் அருண்விஜய்.

குழந்தை இல்லாத அண்ணி மீது காட்டும் பாசம் ஆகட்டும், பிரச்சினையில் இருந்து நாயகியை காப்பாற்றும் காட்சிகள் ஆகட்டும் பாராட்டியே கொண்டே இருக்கலாம்.

நடனத்தில் மிரட்டும் அருண்விஜய்க்கு இப்படத்தில் ஒரு டான்ஸ் பாட்டு இல்லையே என்பதுதான் வருத்தம். மற்றபடி வெற்றிமாறன் கேரக்டருக்கு எது தேவையோ அதில் சிறிதும் குறைவைக்கவில்லை.

mahima

போல்டான கேரக்டரில் மகிமா மெகா நாயகியாக தெரிகிறார். இவருடன் அண்ணி அபிநயாவும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இருவரும் போட்டிக் போட்டு கொண்டு நடித்து, மனதில் நிற்கின்றனர்.

இவர்களுடன் டாக்டர் கல்யாணி, வில்லன்கள் அரவிந்த் ஆகாஷ், வம்சி கிருஷ்ணா, ஸ்டண்ட் சில்வா என அனைவரது பாத்திரங்களையும் நம் மனதில் பதிய வைக்கிறார் டைரக்டர்.

சீரியஸ் படத்தில் காமெடி தேவையில்லை என்றாலும் தம்பி ராமையா தன் பங்கை மிகச்சரியாக செய்திருக்கிறார். தம்பிராமையாவுக்கு தாங்க்ஸ்.

kuttram 23 team

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் பாடல்கள் விட பின்னணி இசையே பெரிதும் பேசப்படும். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஒருபடி மேலே சென்றுள்ளார்.

கிச்சன் பைட் மற்றும் அந்த க்ளைமாக்ஸ் பைட் ஆக்ஷன் ரசிகர்கள் மட்டுமில்லை. அனைவருக்கும் பிடிக்கும்.

எடிட்டர் தன் பணியை நிறைவாக செய்துள்ளார்.

பாஸ்கரன் ஒளிப்பதிவில் படத்தின் எல்லா காட்சிகளும் அருமை. அவரின் கேரியரில் இப்படம் நிச்சயம் இடம் பிடிக்கும்.

arun vijay

இயக்குனர் பற்றிய அலசல்….

ஈரம் படத்தில் முத்திரை பதித்தவர் டைரக்டர் அறிவழகன். அந்த ஈரமே இன்னும் பலருக்கு காய்ந்திருக்காது.

அதற்குள் மற்றொரு மெடிக்கல் த்ரில்லரை பேமிலியுடன் பார்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார்.

வெறும் போலீஸ் கண்டுபிடிப்பு என்றில்லாமல் க்ளைமாக்ஸில் காண்பிக்கப்படும் அந்த தாய்மை வாசகம் நிச்சயம் நம் இதயத்தை கனமாக்கும்.

குழந்தைக்கு ஏங்கும் பெற்றோர்களை விட பெற்றோருக்கு ஏங்கும் குழந்தைகளே இங்கே அதிகம். அதையும் மனதில் பதிய வைத்து வெற்றி காண்கிறார் அறிவழகன்.

குற்றம் 23… இப்படம் பார்க்காவிட்டால் குற்றமே…

யாக்கை விமர்சனம்

யாக்கை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கிருஷ்ணா, ஸ்வாதி, மெல்வின், ஹரி கிருஷ்ணா, பிரகாஷ்ராஜ், சிங்கம்புலி, குருசோமசுந்தரம், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர்.
இயக்கம் : குழந்தை வேலப்பன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : சத்யா பொன்மார்
எடிட்டிங்: சாபு ஜோசப்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : ப்ரிம் பிக்சர்ஸ் முத்துக்குமரன்

கதைக்களம்…

மனித உடலின் மறுபெயர் தான் இந்த யாக்கை.

மருத்துவ துறையில் தன் வியாபாரத்திற்காக சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் பண முதலைகள் ஆடும் சதுரங்க வேட்டை தான் இந்த யாக்கை.

ஒரு அரிய வகை ரத்தம் உள்ளம் நாயகியை வில்லன் துரத்துகின்றனர்.

அதன் சூழ்ச்சியை பின்னர் அறிந்துக் கொள்ளும் அப்பாவி நாயகன் எடுக்கும் அவதாரமே இக்கதை.

C5j0nMwXQAApJ8G

கதாபாத்திரங்கள்…

லவ் பாயாகவும் ஆக்ஷன் ஹீரேவாகவும் வருகிறார் கிருஷ்ணா. காதலிக்காக கதறும்போது நம்மை உருக வைக்கிறார்.

ஆனால் மற்ற காட்சிகளில் ஒரு இடத்தில் நிற்காமல் துள்ளிக் கொண்டே இருக்கிறார். ஜாலியான காலேஜ் பசங்கன்னா இப்படி காட்டனுமா? என்ன?

நாயகி ஸ்வாதிக்கு நிறைவான படம். கண்களாலும் சைகையாலும் பேசும் காட்சிகளில் கவிதையாய் தெரிகிறார்.

ஜோக்கர் படத்தில் அசத்திய ஜனாதிபதி குருசோம சுந்தரம் இதில் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் ராதாரவி சில காட்சிகள் என்றாலும் முத்திரை பதிக்கின்றனர்.

C5hk_pfWYAAgPlL

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சத்யா பொன்மார் ஒளிப்பதிப்பில் காலேஜ் காட்சிகளை ரசிக்கலாம்.

ஆனால் எடிட்டர் சாபு ஜோசப்தான் பொறுமையை சோதித்துவிட்டார்.

முதல் பாதியில் நிறைய காட்சிகளை வெட்டியிருக்கலாம். காதல், ஆதரவற்றோர் இல்லம் என காட்டிக் கொண்டிருந்தாலும் அதில் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடல்கள் பலம் சேர்க்கின்றன. “என்னுள்ளே ஏன் சலனம்…”, “நான் இந்த காற்றில்..”,” எந்தன் இறுதி மூச்சு…” உள்ளிட்ட பாடல்கள் இனிமை.

ஒரு மருந்தை சாப்பிட்டு நோய் குணமாகிவிட்டால், பின் எப்படி மருந்து வியாபாரம் ஆகும்.

அதை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் மருந்து முதலாளிகளின் வேலை என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கும் இயக்குனர் குழந்தை வேலப்பனுக்கு சபாஷ் போடலாம்.

கருணை உள்ளம் கொண்ட காதலி, ரத்தம் கேட்டால் கொடுத்திருப்பா.. அவளை ஏண்டா இப்படி பண்ணீட்டீங்க என்று நாயகன் கூறும்போது ரத்ததான கொடை வள்ளல்கள் கண்முன்னே நிற்கின்றனர்.

யாக்கை… ரத்ததான விழிப்புணர்வு

கனவு வாரியம் விமர்சனம்

கனவு வாரியம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அருண் சிதம்பரம், ஜியா, ப்ளாக் பாண்டி, இளவரசு, யோக் ஜேப்பி, செந்தி குமாரி மற்றும் பலர்.
இயக்கம் : அருண் சிதம்பரம்
இசை : ஷியாம் பெஞ்சமின்
ஒளிப்பதிவாளர் : எஸ். செல்வகுமார்
எடிட்டிங்: காகின்
பி.ஆர்.ஓ.: ரியாஸ்
தயாரிப்பாளர் : டி.சி.கே.ஏ .பி சினிமாஸ் ஆணழகன் சிதம்பரம்

கதைக்களம்…
நாடெங்கிலும் உள்ள மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வுதான் இப்படம்.

மேலும் படிப்பு என்பது வேறு. அனுபவம் என்பது வேறு. படிப்பறிவு இல்லாமலும் நம்மால் எதையும் சாதிக்கலாம் என்பதன் முயற்சியே இந்த கனவு வாரியம்.

எப்போதும் அரசாங்கத்தை மட்டுமே சார்ந்திடாமல் நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் சாதிக்கலாம் என்கிறார் இயக்குனர் அருண் சிதம்பரம்.

இவரே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, பாடல் எழுதி இயக்கி. ஹீரோகவாகவும் நடித்திருக்கிறார்.

இவரது தந்தைதான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் சிதம்பரம் கிராமத்து இளைஞராக வருகிறார்.

C5Z4CLVVUAA-vpr

தன்னுடைய ஆராய்சிசியை அம்மா அடிக்கடி கண்டிப்பது, திட்டுவது போன்ற காட்சிகளில் இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கிறார்.

தந்தையாக இளவரசு.. சிறப்பான தேர்வு.

நண்பருக்கு உதவும் கேரக்டரில் ப்ளாக் பாண்டி. சிரிக்கவும் வைக்கிறார்.

நல்ல ஒரு ஆசிரியருக்கு ஞானசம்பந்தன் எடுத்துக்காட்டு.

அறிமுக நாயகி ஜியா பாஸ் மார்க் பெறுகிறார்.

ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்யும் யோக் ஜேப்பி மனதில் நிற்கிறார்.

இன்று விவசாயம் செய்பவனே நாளைய கோடீஸ்வரன் என்று சொல்வது சூப்பர்.

பெரிய பெரிய நிறுவனங்களை காய்கறி விற்குகுபோது நாமும் இயற்கை விவசாயம் செய்து முன்னேறலாமே என்று கூறும் காட்சிகள் கைத்தட்டல்களை அள்ளும்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலில் அறுபதுக்கும் மேற்பட்ட பாரம்பரிய தமிழ் கிராம விளையாட்டுக்களை காட்டியிருக்கிறார்கள்.

அதை அழகாக படம் பிடித்து நம்மை குழந்தை பருவத்திற்கே அழைத்து செல்கிறார் ஒளிப்பதிவாளர்.

C4cBfLMXAAAPXCq

இன்றைய குழந்தைகள் அந்த விளையாட்டுக்களை தவறவிட்டு விட்டோமே என நிச்சயம் ஏங்கலாம்.

மேலும் அந்த விளையாட்டுக்களை விளையாட கட்டணம் எதுவும் தேவையில்லை. நம்மை சுற்றியுள்ள பொருட்களே போதும் என காட்டியிருப்பது அருமை.

இப்படம் திரைக்கு வருவதற்க்கு முன்பே இரண்டு ரெமி விருதுகளை பெற்றுள்ளது. மேலும் ஏழு உலகப் பட விருதுகளையும் பதினைந்து நாடுகளின் சினிமா விழாக்களில் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவொரு கமர்ஷியல் படமல்ல. நல்ல முயற்சி.

எனவே இதுபோன்ற எண்ணங்கள் நம் மாணவர்களிடையே ஏற்படுத்தலாம்.

கனவு வாரியம்… வில்லேஜ் விஞ்ஞானி

எமன் விமர்சனம்

எமன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன், சங்கிலி முருகன், சார்லி, சுவாமிநாதன் மாரிமுத்து மற்றும் பலர்.
இயக்கம் : ஜீவா சங்கர்
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவாளர் : ஜீவா சங்கர்
எடிட்டிங் : வீர செந்தில்ராஜ்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : லைகா புரொடக்சன்ஸ் & விஜய்ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்

yaman dance

கதைக்களம்…

தான் பிறந்த ஒரு வாரத்திலேயே பெற்றோரை இழக்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் இவருக்கு எமன் என்ற பட்டபெயர் வந்துவிடுகிறது.

30 வருடங்களுக்கு பின், தன்னை வளர்க்கும் தாத்தாவின் ஆப்ரேசனுக்காக பணம் தேவைப்படுகிறது.

எனவே செய்யாத ஒரு குற்றத்திற்காக (குற்றவாளிக்கு பதிலாக) ஜெயிலுக்கு போனால் பணம் கிடைக்கும் என்கிறார் சுவாமிநாதன்.

அதன்படி ஜெயிலுக்குபோக, சில அரசியல்வாதிகள் சந்திக்கிறார். அதன்படி வெளியில் வந்தபின் ஒவ்வொருவராக இவர் சந்திக்க, இவரின் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே எமன்.

yaman jodi

கதாபாத்திரங்கள்…

அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் ஆண்டனி. இரண்டிலும் ரசிக்க வைக்கிறார்.

சிறந்த அரசியல்வாதி தன் ஒவ்வொரு அடியையும் எவ்வளவு நிதானமாக எடுத்து வைப்பாரோ? அப்படி அளந்து நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

எம்மேல கை வச்ச காலி பாடலில் டான்ஸ் ஆட முயற்சிப்பது காமெடி. பாடல் ரசிக்க வைத்தாலும் மூவ்மெண்ட்ஸ் வரல.

எப்போதும் மிகையில்லாத நடிப்பை தருபவர் மியா ஜார்ஜ். இதிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

டமீலோ டூமிலோ என்ற பாடல் வெஸ்டர்ன் பாணி என்றாலும் அதிலும் மேனியை முழுவதுமாக மூடி இருப்பது கொஞ்சம் ஓவர்தான். ஆனால் கிளாமரில் முதல் அடியை எடுத்து வைத்திருப்பதால் பாராட்டலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சைலண்ட் வில்லன் ரோல். தியாகராஜன் தன் நடிப்பில் உள்ளங்களை திருடுவது நிச்சயம்.

தான் வரும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார் சார்லி. சங்கிலிமுருகன், சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பான தேர்வு.

இவர்களுடன் ஏகப்பட்ட வில்லன்கள். அரசியல் களம் என்பதால் அப்படியோ? ஆனாலும் எல்லா கேரக்டர்களும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

yaman 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டைரக்டரே ஒளிப்பதிவாளர் என்பதால் இரண்டிலும் ஜெயிக்கிறார்.

சீரியசான படத்திற்கு பாடல்கள் தேவையில்லாத பீலிங்ஸ் இருக்கு.

ஆனாலும் எம்மேல கை வச்சா, கடவுள் எனும் கவிதை ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

முக்கியமாக பின்னணி இசை பெரிதாக பேசப்படும். படத்தின் தீம் மியூசிக் தியேட்டரில் விட்டு வந்தாலும் ஒலிக்கும்.

Yaman director team

இயக்குனர் பற்றிய அலசல்…

விஜய் ஆண்டனிக்காக பின்னப்பட்ட கதையை பிட்டாக கொடுத்திருக்கிறார் ஜீவா சங்கர்.

விறுவிறுப்பான கதைக்களம், அதிரடியான வசனங்கள் என நல்ல ப்ளாட்பார்ம் இருந்தாலும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம்.

அரசியல்வாதிகள் எல்லாருமே சாமானிய மனிதர்கள்தான். ஆனால் சராசரி மனிதன் திடீரென இன்றைய அரசியலில் இப்படி உருவெடுக்க முடியுமா?  என்பது டவுட்தான்.

சினிமா நடிகை, திடீரென விஜய் ஆண்டனியை நம்புவது எப்படி? என்று தெரியவில்லை.

பதவிக்காக ஒரு அரசியல்வாதி எதையும் செய்வான். அவன் மனித முகம் கொண்ட மிருகம் என்பதை அதிரடியாக சொல்லியிருக்கிறார் ஜீவாசங்கர்.

எதிரியை கூட நம்பிடலாம். எப்பவும் கூடவே விசுவாசமா இருக்கிறவன அரசியலில் நம்பமுடியாது  என்ற வசனங்கள் இன்றைய தமிழ்நாட்டு அரசியலை நிச்சயம் ஞாபகப்படுத்தும்.

எமன்… அரசியல்வாதியின் அசல் முகம்

More Articles
Follows