மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

நடிகர்கள்: துருவ், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர்.
இயக்கம் – ராகேஷ்
ஒளிப்பதிவு – பி.ஜி. முத்தையா
எடிட்டிங் – சான் லோகேஷ்
இசை – அச்சு ராஜமணி
தயாரிப்பு : மதியழகன் ரம்யா
பிஆர்ஓ : அ. ஜான்

பாலியல் தொல்லை செய்திகளை போல செயின் பறிப்பு செய்திகளும் தினம் தவறாமல் செய்தி தாள்களில் இடம் பெற்று வரும் காலம் இது.

நம் வீட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே நாம் அதிர்ச்சியாக துக்கமாக பார்க்கிறோம். இல்லையென்றால் ஜஸ்ட் லைக் தட் என கடந்து செல்கிறோம்.

கதைக்களம்…

செயின் பறிப்பு திருடர்களால், அந்த நிகழ்வில் தன் மனைவியை இழந்து பாதிக்கப்பட்ட தன் அம்மாவுடன் வாழும் ஒரு இளைஞனின் கதைதான் இப்படம்.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் துருவ்வின் ஆரம்பமே படு ஸ்பீட். அவர் திருடர்களிடம் இருந்து செயினை தட்டி பறிப்பதும் முதலே படம் வேகம் எடுக்கிறது.

கேஸ் சிலிண்டர் போடும் பையனாக வந்தாலும் போலீசுக்கு ஏற்ற கம்பீரத்துடன் காட்சியளிக்கிறார்.

தாய் மீது பாசம், மனைவி மீது அன்பு என யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் 2வில் கலக்கி கொண்டிருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் இன்ட்ரோ சீனுக்கு எத்தனை பேர் துள்ளி குதிப்பார்களோ? எனத் தெரியாது.

அவர் துள்ளி துள்ளி ஓடி வரும் காட்சியை மறைந்திருந்து எத்தனை பேர் பார்ப்போர்களா? அதே சமயத்தில் அவரது நடிப்பும் கச்சிதம்.

ப்ளாஷ் பேக்கில் வரும் அஞ்சனா கீர்த்தியும் அசத்தல். ஆங்கராக வந்து இறுதியில் அனுதாபத்தை பெறுகிறார்.

ரொம்பவே ப்ராடிக்கலான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். கொஞ்சம் நேரமே வந்தாலும் கவர்கிறார்.

இவர்களுடன் மிரட்டல் வில்லன்களாக மைம் கோபி, ராம்ஸ், அருள்தாஸ் அனைவரும் பக்கா.

திறமையான நடிகர் ராதாரவி. அவருக்கான காட்சியை அதிகப்படுத்தியிருக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜேடி. சக்கரவர்த்தி நல்ல மிடுக்கு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவில் இரவு நேர செயின் பறிப்பு காட்சிகள் அருமை. என்ன நடக்குமோ? என்ற பயம் அடிக்கடி ஒட்டிக் கொள்கிறது.

அச்சு ராஜாமணி இசையில் எனக்கு என்னாச்சு, உருவாஞ்சுறுக்கு பாடலும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
மிரட்டலான பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

என்னடா ஹீரோ இவன்? திருடனிடமிருந்து திருடுகிறானே? எனும்போது படத்தின் மீது ஒரு ஆவல் பற்றிக் கொள்கிறது.

அப்படியென்றால் நிச்சயம் ஒரு ப்ளாஷ்பேக் இருக்கும் என்பதை அப்பட்டமாக காட்டி விட்டார் டைரக்டர் ராகேஷ்.

ராத்திரி 12 மணிக்கு நகை போட்டு பெண் நடந்தால் அன்றே உண்மையான சுதந்திர தினம் என மகாத்மா காந்தி ஜி கூறியிருந்தார்.

ஆனால் இன்று பகல் 12 மணிக்கே அப்படி நகை போட்டு நடக்க முடியவில்லை. ஏனென்றால் கடுமையான தண்டனைகள் வேண்டும் என ஆணித்தரமாக சொல்லியுள்ள ராகேஷை பாராட்டலாம்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.. *தங்க*மான மக்களே உஷார்

Marainthirunthu Paarkkum Marmam Enna movie review rating

Comments are closed.