தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விமர்சனம்..
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஒன்லைன்..
பழிக்குப் பழி… பழிக்குப்பழி.. இதுவே கதை.
கதைக்களம்…
அதர்வா ஒரு கபாடி வீரர். ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார். இவருக்கு பெற்றோர் இல்லை. ஒரு தங்கை மட்டுமே. இவரது கபடி அணியை வெல்ல பல எதிரணிகள் முயல்கின்றன.
இவர் பள்ளி ஆசிரியை பிரியா பவானி சங்கரை காதலிக்கிறார்.
ஊரில் பெரிய ரவுடி பெண் தாதா ராதிகா. அவரின் மகன் மற்றும் கூட்டாளிகளுடன் அடிக்கடி அதர்வாவுக்கு மோதல் நடக்கிறது. ஒரு கட்டத்தில் வெட்டு குத்து வழக்கில் அதர்வா கைதாகிறார்.
அப்போது ராதிகாவின் மகனே அதர்வாவை ஜாமீனில் எடுக்கிறார். இதனால் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விடுகின்றனர்.
இவர்களின் நட்பை பிடிக்காத ஒரு கும்பல் அதர்வாவின் நண்பனை கொன்றுவிடுகிறது. மேலும் ராதிகாவை கொல்லவும் சிலர் திட்டமிடுகின்றனர்.
தன் நண்பனை இழந்த அதர்வா என்ன செய்தார்? அவர்கள் கொல்ல என்ன காரணம்? அவரது பின்னணியில் யார் என்பதே மீதி கதை.
கேரக்டர்கள்…
அதர்வாவுக்கு ஆக்சன் என்றால் அல்வா சாப்பிடுவது போல.. ஆக்ஷனில் பிரித்து மேய்ந்து இருக்கிறார். இந்த படத்தில் பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை.
பிரியா பவானி சங்கர் இருக்கிறார். அவ்வளவுதான். ஏற்கனவே பிரீயா கவர்ச்சி ஒன்றும் காட்ட மாட்டார். தன் நடிப்பால் மட்டுமே நம்மை கவர்வார். இதில் அது கூட இல்லை.
முக்கிய பாத்திரங்களில் கண்ணா ரவி மற்றும் வட்சன்.. இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையில் கன கச்சிதம்.
ராதாரவியால் படத்தில் ஆங்காங்கே சிரிப்பலைகள் எழுவதை காண முடிகிறது. போட்டியாடா…துப்பாக்கி என்றால் அதற்கு டபுள் மீனிங் என்ற பொருள் படும் காட்சி உள்ளது.
வித்தியாசமான வில்லி வேடத்தில் ராதிகா. தன் மகனை இழந்த ராதிகா ஒரு சபதம் போடுகிறார். தன் மகனை கொன்றவரை கொன்றால் மட்டுமே கொல்லி போடுவேன் என்கிறார். ஆனால் அடுத்த காட்சியிலே கொல்லி போடுகிறார். கொலைக்காரன் உயிரோடுதான் இருக்கிறான். என்ன லாஜீக்?
அதுபோல ஒரு காட்சியில் ராதிகா தீ மிதிக்கும் போது ஒருவர் கொல்ல நினைக்கிறார். அப்போது தன் மகளுக்காக தான் ராதிகா தீ மிதிக்கிறார் என தெரிந்ததும் அவர் கொல்லவில்லை. ஆனால் அடுத்த நாள் காட்சியில் அருவாள் கொண்டு கொல்ல முயற்சிக்கிறார்.. இதுவும் எந்த லாஜிக்கு புரியல..
டெக்னீஷியன்கள்..
படம் முழுவதும் வெட்டு குத்து வெட்டு குத்து என ரத்தம் திரையில் தெறித்து நம் கண் முகத்தில் படுகிறது. நல்லவேளை 3டி தொழில்நுட்பம் இல்லை.
மிஷ்கின் உதவியாளர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர்தான் எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கியிருந்தார். அந்த நம்பிக்கையில் சென்றால் நம்மை ஏமாற்றி விட்டார்.
படத்தில் நந்தலாலா பிசாசு ஆகிய படங்களின் சாயல்கள் முக்கியமாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தெரிகிறது.
படத்தில் எடிட்டிங் என்ற பெயரில் பல காட்சிகளை வெட்டி வெட்டி அருவாள் வெட்டு போல நமக்கும் பல காயங்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் அடுத்தடுத்து காட்சிகள் தொடர்பே இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்துடன் நம்மால் ஒன்றே முடியவில்லை.
பின்னணி இசையும் பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.. ஒளிப்பதிவும் சுமார் ரகமே. ஆக்ஷன் காட்சிகள் கிராபிக்ஸ் ஃபைட் போல அல்லாமல் எதார்த்தமான சண்டை காட்சிகளாக உள்ளது. எனவே அதனை பாராட்டலாம்.
ஆக மொத்தம்… இந்த ‘குருதி ஆட்டம்’.. குருட்டு ஆட்டம்.. அல்லது அறுவை ஆட்டம் எனலாம்.
Kuruthi Aattam movie review and rating in Tamil
