தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ், குமரவேல், பாலாசிங், ரமா, பிஎல். தேனப்பன், கஞ்சா கருப்பு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர்.
இயக்கம் : நித்திலன்
இசை : பி.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவாளர் : என்.எஸ்.உதய குமார்
எடிட்டர்: அபினவ் சுந்தர் நாயக்
பி.ஆர்.ஓ. : குமரேசன்
தயாரிப்பு : ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ்
கதைக்களம்…
படத்தின் முதல்காட்சியே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்யும். அதற்காக இயக்குனர் நன்றி சொல்லிவிட்டு விமர்சனத்தை தொடங்குகிறோம்.
சிலைக்கடத்தல் பேர்வழி தேனப்பன். தான் சிலையை கடத்தியபோது ஒரு போலீஸ்காரர் பார்த்துவிட்டார். எனவே அவரையும் கடத்திவிட்டோம் என பேசி ஆரம்பிக்கிறார்.
ஐந்து கோடி மதிப்புள்ள ஒரு சிலையை தனது உயிர் நண்பரும் தன்னிடம் வேலை செய்யும் பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னைக்கு சென்று குமரவேலிடம் கொடுக்க சொல்கிறார் தேனப்பன்.
ஞாபக மறதியும் அந்த நேரம் நேர்மையும் கொண்ட பாரதிராஜா அந்த குரங்கு பொம்மை டிசைன் செய்த பையை எடுத்துக் கொண்டு சென்னைக்கு செல்கிறார்.
இதுஒரு புறம் இருக்க, சென்னையில் வேலை செய்யும் பாரதிராஜாவின் மகன் விதார்த்திடம் ஒரு சூழ்நிலையில் அந்த பை சிக்குகிறது.
இந்த இரண்டு சம்பவங்களை வைத்துக் கொண்டு திரைக்கதையை கொஞ்சம் கூட பிசகாமல் கொண்டு சென்று முடிக்கிறார் இயக்குனர் நித்திலன்.
இதனிடையில் அந்த பையை வைத்து குமரவேல் ஆடும் ஆட்டமும், கல்கி என்ற அழுக்கு பையன் திருடும் சேட்டையும் படத்தின் சூப்பர் சுவாரஸ்யம்.
கேரக்டர்கள்…
படத்தின் ஹீரோ இயக்குனர் இமயம் பாரதிராஜாதான். இனி இவர் பண்பட்ட நடிகர் இமயம் என சொல்லாம்.
பல நடிகர்களை உருவாக்கிய இவரின் நிஜ நடிகரின் உருவம் தற்போது வெளிவந்துள்ளது.
குமரவேலிடம் இவர் சிக்கிக்கொண்டு அங்கு பேசும் வசன காட்சிகள் கண்களை நீராக்கும். ப்ரேம் பை ப்ரேமில் நெஞ்சில் நிறைகிறார்.
அலட்டிக் கொள்ளாத நடிப்பில் விதார்த் அருமை. கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு பாசமிக்க மகன் என்ன தண்டனை கொடுப்பான் என்பதை நிறைவாக செய்திருக்கிறார்.
பக்கத்துவீட்டு பெண் போல டெல்னா டேவிஸ். அழகிலும் ரசிக்க வைக்கிறார். இட்லி டிபன் காட்சியும், கஞ்சா கருப்பை தேடி செல்லும் காட்சிகள் சில உறவினர்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம்.
மிரட்டல் வில்லன் இல்லையென்றாலும் தன் தோற்றத்திலேயே மிரட்டலை தருகிறார் பி.எல். தேனப்பன்.
அசால்ட்டாக ஷோபாவில் படுத்துக் கொண்டு பேசும் காட்சியும், பணம் முக்கியமில்லடா என் நண்பனை தேடி வந்தேன் என்று சொல்லும் காட்சியில் கேரக்டராக நிற்கிறார்.
ராதாமோகன் மற்றும் பிரகாஷ்ராஜ் படங்களில் அதிகம் பார்த்த கேரக்டர் குமரவேல். யாரும் பார்த்திராத கேரக்டரில் குட் வேல் ஆகிறார்.
என்ன பண்றது… நானும் நாலு பேரு மாதிரி ஆடம்பரமா நல்லாயிருக்கணுமே? அதுக்காக உழைக்கவா முடியும்? என்று குமரவேல் பேசும் வசனமும், “அண்ணே… எந்த பைண்ணே…?”, “ம், ராஜ்கிரண் நடிச்ச மஞ்சப்பை போன்ற வசனங்களும் படம் பார்த்தால் புரியும்.
என்னை என்ன பண்ண முடியும். கடைசியாக கொல்லத்தானே போற. பண்ணிக்கோ என குமரவேல் கேட்கும்போது அட இவன என்ன பண்ணலாம்? என ரசிகர்களே எரிச்சல் ஆவார்கள்.
ஆனால் அதை மீறி டைரக்டர் வைத்த க்ளைமாக்ஸ் படத்தின் செம ஹைட்லைட்.
பாலாசிங், ரமா, கிருஷ்ணமூர்த்தி, பாலாசிங் மச்சனாக வருபவரும் கேரக்டர்களில் மன நிறைவு.
பிக்பாக்கெட் திருடனாக வரும் கல்கி அசத்தல். நான் சாதாரண ஆளு இல்ல. என்னைய பார்த்து ஏ.வி.எம் சரவணனே கைய கட்டிகிட்டுதான் பேசுவாரு…” என்று பேசும் வசனங்களும் கடைசியில் ஹீரோவுடன் இவர் செய்யும் உதவியும் ரசிக்கும் ரகம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் பின்ணனி இசை, பாடல்கள் ஓகே.
என்.எஸ்.உதய குமார் ஒளிப்பதிவும் முக்கியமாக அபினவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம். சொல்ல வந்த விஷயத்தை இழுத்தடிக்காமல் சரியான டைமிங் முடிக்கிறார்கள்.
இயக்கம் பற்றிய அலசல்…
குரங்கு பை போட்டோவை பேஸ்புக்கில் போட்ட பிறகு வரும் போன்கால்களும் அந்த மக்களும் சில சில்லறை கேரக்டர்களை நமக்கு நினைவுப்படுத்தும்.
அறிமுக இயக்குனர் ஒரு நிறைவான படத்தை கொடுத்திருக்கிறார். பாரதிராஜா என்ற இயக்குனர், குமரவேல் என்ற நடிகரை இவர் காட்டிய விதம் எந்த இயக்குனர் செய்யாத புதுமை.
பழிவாங்க அதிகபட்ச தண்டனை கொலைதானே… என்ற முடிவை மாற்றி, அட இப்படியும் ஒரு தண்டனை கொடுக்கலாமே என அப்ளாஸ் வாங்குகிறார் நித்திலன்.
ஒரே படத்தில் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடிக்கிறார் இயக்குனர் நித்திலன்.
குரங்கு பொம்மை