தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
ராம்நாடு மாவட்டம் பகுதியில் இரு வேறு சாதிப் பிரிவினர் உள்ளனர். வழக்கம் போல தமிழ் சினிமாவில் காட்டப்படும் மேல் சாதி – கீழ் சாதி பிரிவு தான்.
அருள்நிதியும் சந்தோஷ் பிரதாப்பும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.
சந்தோஷ் பிரதாப் மீது எவராவது கை வைத்தால் அவன் தன் சாதியை சேர்ந்தவர் என்றாலும் அடித்து துவம்சம் செய்பவர் அருள்நிதி.
இந்த சூழ்நிலையில் சாதி அரசியல் நடத்தும் வில்லன் ராஜசிம்மனால் சந்தோஷூக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார். அதன் பழி அருள்நிதி மீது விழுகிறது.
இதன் பிறகு என்ன ஆனது.? தன் நண்பனை கொன்றவர்களை பழி வாங்கினாரா அருள்நிதி.? ராஜசிம்மன் யார்? அவரது பின்னணி என்ன? என்பதே இந்த படத்தின் கதை.
கேரக்டர்கள்…
பெரும்பாலும் பேய் மற்றும் திரில்லர் படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. ஆனால் இதில் முழுக்க முழுக்க அடிதடியில் இறங்கி அமர்க்களம் செய்துள்ளார்.
முறுக்கேறிய மீசை அதற்கேற்ற உயரம் என கம்பீரமாக தோன்றி கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார் அருள்நிதி. மூர்க்கசாமி என்ற கேரக்டரில் முத்திரை பதித்துள்ளார்.
அருள்நிதிக்கும் துஷாரா விஜயனுக்கும் உள்ள காதல் காட்சிகள ரசிக்கும்படியாக படமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அருள்நிதிக்கு முத்தம் கொடுத்தபின் துஷாரா பேசும் வசனங்கள் நம்மை கலங்க வைக்கும்.
சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு நட்புக்கு துணை நிற்கும் கேரக்டரில் சந்தோஷ் பிரதாப் பிரகாசிக்கிறார்.
அருள்நிதியின் அப்பாவாக யார் கண்ணன், மாமாவாக முனிஷ்காந்த், மாவட்ட எஸ்பியாக சரத் லோகித்சவா, சந்தோஷ் காதலியாக சாயாதேவி உள்ளிட்ட கேரக்டர்கள் நிச்சயம் ரசிகர்கள் மனதில் நிற்கும்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக பத்மன் வருகிறார். கதை ஓட்டத்தில் இவரது கேரக்டர் முக்கியத்துவம் பெறுகிறது.
சில நடிகர்களின் போட்டோக்களை வைத்து அவர்களின் சாதியை குறிப்பிட்டு சொல்லி விடுகிறார் இயக்குனர்.
டெக்னீஷியன்கள்…
மிகவும் மோசமான தவறுகளை செய்பவனை கழுவேத்தி மரத்தில் கட்டி வைத்து தண்டனை கொடுப்பது அந்த காலத்து நடைமுறை. எனவே அந்த கழுவேத்தி முறையை பயன்படுத்தி கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சை கௌதம் ராஜ்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தன்னுடைய பணியை மிகச் சிறப்பாக கையாண்டு உள்ளார். ராம்நாடு மக்களின் வாழ்வியலையும் அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையும் அப்படியே படம் பிடித்து காட்டி இருப்பது சிறப்பு.
இந்தப் படத்திற்கு இமான் இசை என்றால் நிஜமாகவே நம்ப முடியவில்லை. நிறைய எதிர்ப்பார்த்தோம்.
ஆனால் ‘அவ கண்ணை பார்த்தா.. என்ற பாடல் காதலர்களுக்கு பிடிக்கும். அருள்நிதிக்கு கொடுத்துள்ள பின்னணி இசையில் அனல் தெரிக்கிறது.
கணேஷ்குமாரின் சண்டை பயிற்சி பணத்திற்கு பெரிய பலம் ஆக்ஷனை அள்ளித் தெறிக்கவிட்டுள்ளார். அதுபோல நாகூரானின் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு படத்திற்கு உறுதுணை.
அரசியல் சார்ந்த சாதி படம் என்றாலும் நட்பை மையப்படுத்தி கதையை நகர்த்தி இருப்பது படத்திற்கு பெரிய பலம். அது போல ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் என நம்பலாம்.
ஆக கழுவேத்தி மூர்க்கன்…. முறுக்கேறிய மூர்க்க சாமி
Kazhuvethi Moorkkan movie review and rating in tamil