காசு மேலே காசு விமர்சனம்

காசு மேலே காசு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மயில்சாமி, ஷாரூக், காயத்ரிகோவை சரளா, நளினி, லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, கே.எஸ். பழனி மற்றும் பலர்.
இயக்கம் – கேஎஸ். பழனி
ஒளிப்பதிவு – சுரேஷ் தேவன்
இசை – பாண்டியன்
தயாரிப்பு – ராகவ் மூவி எண்டர்டெய்ன்மெண்ட் P.ஹரிஹரன்
பாடல்கள் – கருப்பையா
பிஆர்ஓ. – ராஜ்குமார்

கதைக்களம்…

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் மயில்சாமி. தன் மகன் ஷாரூக்கை பணக்கார பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நாமும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என நினைக்கிறார்.

இவரின் மகனுக்கு பெண் கொடுக்க வரும் உறவினர்களான அக்கா நளினியையும், மச்சான் சாமிநாதனையும் இதனாலேயே தவிர்க்கிறார்.

தன் திட்டப்படி ஊரில் மிகப்பெரிய பணக்கார வீட்டை தேர்ந்தெடுக்கிறார்.

அந்த வீட்டில் இருந்து வரும் காயத்ரியை காட்டி அவளை தன் மகனிடம் காதலிக்க சொல்கிறார்.

ஆனால் காயத்ரியோ அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் என்பது இவர்களுக்கு தெரியாது. மேலும் பிச்சைக்கார தம்பதி பழனி மற்றும் மதுமிதாவின் மகள்தான் அந்த காயத்ரி என்பது கூடுதல் ரகசியம்.

அப்பாவின் ப்ளான் படி ஷாருக்கும் காயத்ரியை காதலிக்கின்றனர்.

கல்யாணம் நடந்ததா-? பிச்சைக்காரன் மகளுக்கு மயில்சாமி மகனை கொடுத்தாரா? ரகசியம் தெரிந்தா?

அதன்பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே இப்படத்தின் கதை.

kasu mela kasu audio launch

கேரக்டர்கள்..

சில படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய கே எஸ் பழனி முதல் முறையாக இயக்கியுள்ளார்.

இவரும் மயில்சாமியும் செம போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.

படத்தில் இளம் ஜோடிகள் இருந்தாலும் இவர்கள்தான் மெயின் கேரக்டர்கள்.

பழனியின் அதிரடி நடிப்பாலும் வசனங்களாலும் தியேட்டர்களில் சிரிப்பு மழை. ஒரு காமெடி முடியும் முன்னே அடுத்த காமெடி தொடங்கி விடுகிறது.

மயில்சாமி படம் முழுக்க காமெடியால் தெறிக்கவிட்டுள்ளார்.

பழனியின் 2வது மனைவியாக வரும் ஜாங்கிரி மதுமிதாவும் படத்திற்கு கூடுதல் சுவை சேர்த்துள்ளார். பிச்சைக்காரி வேடத்திற்கும் அவர் பேச்சுக்கும் செம பிட்டாகியிருக்கிறார்.

காதலர்களாக ஷாரூக் மற்றும் காயத்ரி. இளமை துள்ளலுடன் கூடிய நடிப்பு.

kasu mela kasu pair

கடத்தல் கும்பலாக வரும் அந்த மூதேவி குழுவினரும் செம சாய்ஸ். தங்கள் பங்களிப்பை சிரிப்பாக செய்துள்ளனர்.

நளினி மற்றும் லொள்ளு சபா சாமிநாதன் சில காட்சிகளிலே வந்தாலும் அதிரடி. காமெடி சரவெடி.

காமெடியை நம்பியே களம் இறங்கியுள்ளனர்.

எனவே படத்தின் ஒளிப்பதிவிலும் பாடல்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். அது பெரும் குறையாக உள்ளது.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் கொடுத்த காசுக்கு மேல சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தில் மொத்தமே 20 கேரக்டர்கள்தான். அவர்களை சுற்றியே காட்சிகளும் கட்டிடங்களும் வருவதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படலாம்.

கோவை சரளா இறுதி காட்சியில் வந்து சிநேகிதியே என பாடி அவர் செய்யும் அமர்க்களம் செம.

படத்தின் இயக்குனர் பழனிக்கு இனி பட வாய்ப்புகள் குவியும். நடிப்புக்கும் சேர்த்து தான் சார். வாழ்த்துக்கள்

காசு மேலே காசு… கொடுத்த காசுக்கு மேலே காமெடி

Kasu mela kasu aka Kaasu Mela Kaasu movie review rating

Mr சந்திரமௌலி விமர்சனம்

Mr சந்திரமௌலி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா காசன்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மகேந்திரன், சந்தோஷ், ஸ்டன்ட் சில்வா மற்றும் பலர்.
இயக்கம் – திரு
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்
இசை – சாம் சி.எஸ்
தயாரிப்பு – தனஞ்செயன்
பிஆர்ஓ. – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

நவரச நாயகன் கார்த்திக் தான் சந்திரமௌலி. அவரது சொந்த மகன் கௌதம் கார்த்திக்கே இதிலும் மகன். மகனின் காதலி ரெஜினா.

கௌதம் கார்த்திக் ஒரு குத்துச்சண்டை வீரர்.

இதனிடையில் பைரவி (வரலட்சுமி) என்ற இளம் பெண் உடன் நட்புக் கொள்கிறார் சந்திரமௌலி. இது கௌதமுக்கு தெரியாது.

ஒரு நாள் திடீரென்று நிகழும் கார் விபத்தில் சந்திரமௌலி கொல்லப்படுகிறார்.

அந்த விபத்தில் கௌதமின் கண் பார்வை பாதியாக பறி போகிறது.

தன் தந்தையை கொன்றவர் யார்? எனபதை தன் பார்வை குறைபாடுடன் கண்டுபிடிப்பது தான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக். பழைய பார்மில் இல்லையென்றாலும் அவரின் வழக்கமான மேனரிசத்தில் குறை வைக்கவில்லை.

பத்மினி கார் மீது காதல், மகன் மீது அன்பு, மருமகள் மீது பாசம், பைரவி மீது நேசம் என அனைத்திலும் கார்த்திக் அவர்கள் கச்சிதம்.

இதுநாள் வரை கௌதம் அவரது படங்களில் ஆக்சன், ரொமான்ஸ் மட்டுமே செய்து வந்தார். ஆனால் இதில் பாசம், அழுகை என வெரைட்டி காட்டியிருக்கிறார்.

தந்தை இறந்த பிறகு அவர் அழுதுக் கொண்டே பேசும் காட்சி கண்ணீரை வரவழைக்கும்.

வரலட்சுமி சில காட்சிகளிலே வந்தாலும் நம்மை ஈர்க்கிறார். இவருக்கும் கார்த்திக்கு உள்ள உறவுதான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

அது கள்ளம் இல்லாத உறவாக இருந்தாலும் அப்பா என அழைக்கமாட்டேன் என்கிறார். வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பது நெருடல்தான்.

நடிப்பு, அழகு என ரெஜினா ஸ்கோர் செய்கிறார். அதிலும் ஏது ஏதோ ஆனானே பாடலில் வெர்ஜின் பசங்க சாபத்தை வாங்கி கொள்கிறார் ரெஜினா.

காமெடியுடன் குணச்சித்திர கேரக்டரிலும் சதீஷ் சபாஷ் பெறுவார்.

மகேந்திரன், மைம் கோபி, ஸ்டன்ட் சில்வா, போலீசாக விஜி ஆகியோரின் பாத்திர படைப்பு ரசிக்கும் விதம்.

வித்தியாசமான வில்லனாக சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஸ்டைலிஷ் வில்லன் இவர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் நாயகிகளின் அழகும் செம.. ஒளிமயமான ஒளிப்பதிவில் ரசிக்க வைக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் நாயகன் என்ட்ரீ கொடுக்கும் போது பின்னணி இசையில் சாம் சி.எஸ் பின்னி எடுத்துள்ளார்.
ராஜாதி ராஜா பாடல் ஆட்டம் போட வகை என்றால், இடைவேளைக்கு பின்னர் வரும் தீராதோ வலி சோக பாடல் மனதிற்கு இதம்.

திரைக்கதை பற்றிய அலசல்…

ஜாலியான ஒரு படம், அதில் ஒரு மெசேஸ், ஆக்சன் த்ரில்லர் டைரக்டர் திருவும் தயாரிப்பாளரும் தனஞ்செயனும் என கலந்து கொடுத்துள்ளனர்.

நான் சிகப்பு மனிதனில் ஹீரோவுக்கு ஒரு குறை வைத்திருப்பார். இதிலும் ஒரு குறை வைத்துள்ளார். அது அவரின் பார்முலா? என தெரியவில்லை.

ஒரு கால் டாக்சி அக்கௌண்ட்டில் இருந்து மற்றொரு நிறுவன டிரைவருக்கு பணம் பரிவர்த்தனை நடக்கிறது. இதை கூடவா இவ்வளவு ஓபனாக செய்வார்கள்? அதிலும் இப்போது எல்லாம் ஆதார் கார்டு, பான் கார்டு என எதையும் மறைக்க முடியாது. அதை டைரக்டர் கவனித்திருக்கலாம்.

பாக்சிங் போட ஸ்பான்சர் கிடைத்தவுடன் அன்று மிகப்பெரிய அளவில் பார்ட்டி நடக்கிறது. (ராஜாதி ராஜா பாடல்). ஸ்பான்சருக்கே பணம் இல்லாதவர்களுக்கு பார்ட்டிக்கு ஏது அவ்வளவு பணம்..?

ஒருவேளை அது கனவு பாட்டாக இருந்தால், போட்டோ எடுக்க முடியாது. போட்டோவை காட்டும் ஒரு காட்சி வேற படத்தில் இருக்கிறதே? அது எப்படி?

கால் டாக்ஸி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நடக்கும் போர். அதில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் என ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர். அதற்காகவே அவரை பாராட்டலாம்.

மிஸ்டர் சந்திரமௌலி…. சபாஷ் சந்திரமௌலி

செம போத ஆகாதே விமர்சனம்

செம போத ஆகாதே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அதர்வா, மிஷ்டி, அனைகா, கருணாகரன், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகி பாபு, அஸ்வின் ராஜா மற்றும் பலர்.
இயக்கம் – பத்ரி வெங்கடேஷ்,
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
இசை – யுவன் சங்கர் ராஜா
எடிட்டிங் – பிரவீன் கே.எல்.
தயாரிப்பு – அதர்வா
பிஆர்ஓ. : நிகில் முருகன்

கதைக்களம்…

நாயகன் அதர்வாவும், நாயகி மிஷ்டியும் பிரிந்துவிடுகின்றனர். மிஷ்டியை பிரிந்த துக்கத்தில் இருக்கிறார் அதர்வா. தன் நண்பன் அதர்வாவுக்கு ஆறுதல் சொல்ல ஒரு விபச்சாரியை அழைத்து வருகிறார் கருணாகரன்.

அவருடன் அதர்வா இணையும் போது குறுக்கிடுகிறார் பக்கத்து பிளாட் தேவதர்ஷினி.

அதாவது அவருடைய மாமனாருக்கு ஹார்ட் அட்டாக், வரவே அதர்வாவை உதவிக்கு அழைக்கிறார்.

எனவே அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து விட்டு ஆஸ்பிட்டல் செல்கிறார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பும் போது அந்த விபச்சாரி பெண் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

அதன்பின் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களே இந்த படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்…

பானா காத்தாடி படத்திற்கு பிறகு மீண்டும் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ளார் அதர்வா. ஜாலியான இளமையான கேரக்டர் என்பதால் அதர்வா அதகளம் பண்ணியிருக்கிறார்.

அதர்வா கருணாகரன் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கருணாகரனின் காமெடிக்கு நிறைய கைத்தட்டல்களை கேட்க முடிகிறது.

மிஷ்டிக்கு தமிழில் இது தான் முதல் படம். மாடர்ன் பெண் கேரக்டரில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

அனைகா சோதியின் கேரக்டர் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், படத்தில் அதுதான் முக்கிய கேரக்டர்.

இவர்களுடன் ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகி பாபு, அஸ்வின் ராஜா ஆகியோரின் கேரக்டர் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். ஆனால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். படம் ஏதோ போதையிலே தள்ளாடுவது போல கதையுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கும். அதுவும் ஐட்டக்காரன் பாடல் அதிரடி.

பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை யுவன்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

மொத்தத்தில் `செம போத ஆகாதே… தெளியாத போதை

Semma Botha Aagathey review and rating

அசுரவதம் விமர்சனம்

அசுரவதம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சசிகுமார், நந்திதா, வசுமித்ரன் மற்றும் பலர்.
இயக்கம் – மருதுபாண்டியன்,
ஒளிப்பதிவு – எஸ்ஆர். கதிர்
இசை – கோவிந்த மேனன்
தயாரிப்பு – லீலா லலித்குமார்
பிஆர்ஓ. : சுரேஷ் சந்திரா ரேகா

கதைக்களம்…

வில்லன் வசுமித்ரன் ஒரு மளிகை கடை வைத்திருக்கிறார். இவருக்கு அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து மிஸ்டு கால் வந்துக் கொண்டே இருக்கிறது. அதுவே அவருக்கு செம எரிச்சலை உண்டாக்குகிறது.

அதன் அடுத்த கட்டமாக பேச ஆரம்பிக்கிறது அந்த குரல். அவர்தான் சசிகுமார். உன்னை கொல்லப் போகிறேன் என மிரட்டுகிறார்.

இதன் பின்னரும் எப்போதும் சாவு பயத்தை காட்டுவது போல ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டே இருக்கிறார். அடிக்கடி பின் தொடர்கிறார்.

அவன் யார்? எதற்காக கொல்ல வேண்டும்? என்பது புரியாமலே தவிக்கிறார்.

இதனையடுத்து ஆட்களை செட் செய்ய, அவர்களையும் அடித்து துவைக்கிறார் சசி. அதன்பின்னர் போலீஸ் உதவியை நாட ரவுண்ட் கட்ட ஆரம்பிக்கின்றனர்.

அதன்பின்னர் என்ன நடந்தது..? போலீஸ் வலையில் சிக்கினாரா.? வசுமித்ரனை கொன்றாரா? என்பதுதான் ‘அசுரவதம்’ பட மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வழக்கமான சசிகுமார் படம் என்றால் குடும்பம், நட்பு, சென்டிமெண்ட், ஆக்சன் என அனைத்தும் கலந்திருக்கும். மேலும் நிறைய காட்சிகளில் சசிகுமார் அடிக்கடி அட்வைஸ் செய்துக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பார்.

ஆனால் இதில் ஆக்சனை தவிர மற்றவை மிஸ்ஸிங். சீரியசனா மனிதராக சிறப்பான ஆக்சனை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பம் இருந்தாலும் அதில் அலட்டிக் கொள்ளாத நடிப்பு.

ஒரு முறை போனில் பேசிக்கொண்டே சசிகுமார் கதறும் காட்சி சபாஷ் பெறுகிறது. மற்ற இயக்குனர்கள் அந்த காட்சியை வழக்கமாக எடுத்திருப்பார்கள். அப்போது வன்முறை இல்லாமல் அதை அருமையாக காட்டியுள்ளனர். (படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்)

வசுமித்ரனுக்கு சசிகுமார் கொடுக்கும் டார்ச்சர்கள் செம. அவர் எதற்காக டார்ச்சர் கொடுத்தார் என்பது தெரிய வரும்போது அவனை எல்லாம் சும்மாவிட கூடாது என அந்நியன் போல கோபம் வருவது நிச்சயம்.

வசுமித்ரனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒரே காட்சியின் மூலம், சொல்லியிருக்கும் விதம் சூப்பர்.

இவர்களைத் தவிர படத்தில் நந்திதா, அவரது மகள், போலீஸ்கார் என பலர் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சசிகுமாரின் மகளாக வரும் அந்த சிறுமி நம்மை ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், கோவிந்த் மேனனின் இசையும் படத்திற்கு பெரிய பலம். அந்த லாட்ஜ் பைட் சீன் அதனை தொடர்ந்து வரும் வயல்வெளி காட்சிகள் மிரட்டுகிறது.

க்ளைமாக்ஸ் பைட்டில் பின்னணி இசையே நம்மை பயமுறுத்தும். சூப்பர் ஜி.

பைட் மாஸ்டர் தீலிப் சுப்பராயன் அனல் பறக்க செய்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் கதையை சொன்ன டைரக்டர் முதல்பாதியை கொஞ்சம் கவனித்திருக்கலாம். பயம், டார்ச்சர், பயங்கர கத்தல் என அப்படியே கொண்டு செல்வது பயங்கர போரடிக்கிறது.

ஆக்சன் ரசிகர்களுக்கு படத்தை பிடிக்கும்படி செய்துவிட்டார். ஆனால் க்ளைமாக்சில் ஒரு மெசேஜ் சொல்லி தன்னை காப்பாற்றிவிட்டார்.

அசுரவதம்… அலட்டிக் கொள்ளாத அசுரன்

Asuravadham movie review rating

டிக் டிக் டிக் விமர்சனம்

டிக் டிக் டிக் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜீனன், ரமேஷ் திலக், ஜெயம் ரவி மகன் ஆரவ் மற்றும் பலர்.
இயக்கம் – சக்தி சௌந்தர் ராஜன்,
ஒளிப்பதிவு – வெங்கடேஷ்
இசை – இமான்
கலை – எஸ் எஸ் மூர்த்தி
தயாரிப்பு – நேமிசந்த்
பிஆர்ஓ. : யுவராஜ்

கதைக்களம்…

படத்தின் தொடக்கமே வின்வெளியில் இருந்து ஆரம்பமாகிறது.

அப்போது வானத்திலிருந்து 8 டன் எரிகல் ஒன்று சென்னையில் விழுகின்றது. இதனால் பூமியில் பெரிய பள்ளமும், பல உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.

இதனையடுத்து ஆராய்ச்சி செய்யும் குழுவினர் அடுத்து 60 கிலோ டன் எரிகல் ஒன்று தமிழகத்தில் விழ போகிறது என்பதை கண்டு பிடிக்கின்றனர். அதுவும் 6 நாடகளில் வரப்போகிறது.

600 கிலோ டன் என்பது கிலோவை குறிப்பிடுவது அல்ல. அது வெடிக்கும் திறனை பற்றியது.

அது விழுந்துவிட்டால் 4 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்பதால் அதை தடுக்க முயல்கின்றனர்.

நிச்சயமாக 4 கோடி மக்களை மாநிலத்திலிருந்து வெளியேற்ற முடியாது என்பதால் ஒரு மிஷைல் (ஏவுகணை) வைத்து அதை உடைக்க முயல்கின்றனர்.

ஆனால், அதை உடைக்க எந்த நாட்டிலும் அப்படியொரு ஏவுகனை இல்லை என்பது தெரிய வருகிறது.

இதனால் வெளியுலகுக்கு தெரியாமல் ஒரு நாடு மட்டும் அதை வைத்திருக்க, அதை திருட ஒரு மெஜிசிஷியன் மற்றும் திருடனான ஜெயம் ரவி மற்றும் அவரது டீமை நாடுகின்றனர்.

அவர்களுக்கு நாளே நாட்களில் பயிற்சியளித்து விண்வெளிக்கு அனுப்புகின்றனர்.
அங்கே, அந்த ஏவுகனை திருடினார்களா.? அந்த எரிகல்லை உடைத்தார்களா? மக்கள் என்ன ஆனார்கள்? மாநிலம் காப்பாற்றப்பட்டதா? என்பதே இந்த டிக். டிக் டிக்.

கேரக்டர்கள்…

வித்தியாசமான கேரக்டர்களை தொடர்ந்து செல்க்ட் செய்வதற்காக ஜெயம் ரவியை பாராட்டலாம். கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால் படத்தை போல முதல் பாதியில் கூட சீரியசாகவே வருகிறார். சிரிப்பதை கூட அளந்தே சிரிக்கிறார்.

கொஞ்சம் கூட சிரிக்காமல் படம் முழுவரும் வருகிறார் நிவேதா பெத்துராஜ். ஒரு காட்சியில் மட்டும் நீச்சல் உடையில் வந்து கிளுகிளுப்பூட்டுகிறார்.

வில்லன் வேடத்திற்கு ஜெயப்பிரகாஷ் பொருந்தவே இல்லை. அட்லீஸ்ட் வின்செட் அசோகனை வில்லனாக சித்தரித்து இருக்கலாம்.

ஜெயம்ரவி மகன் ஆரவ் க்யூட்டாக வருகிறார். அவ்வளவுதான்.

மற்றபடி மற்ற கேரக்டர்களில் சுவராஸ்யம் இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். தீம் மியூசிக்கிலும் கலக்கியிருக்கிறார். இமானின் 100வது படத்தில் சென்சுரி அடித்திருக்கிறார்.

ஆனால் பாடல்கள் கவரவில்லை. குறும்பா குறும்பா பாடல் ஜெயம் ரவி மகனுக்காகவே எழுதப்பட்டதாக தெரிகிறது.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நாமே வின்வெளிக்கு சென்றது போன்ற அனுபவம் வரும்.

இவர்களை விட முக்கியமானவர் ஆர்ட் டைரக்டரும் கிராப்பிக்ஸ் டீமும்தான். வின்வெளி ஆராய்ச்சி நிலையம் முதல் ஏவுகனை வரை அனைத்தையும் அசலாக பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இப்படியொரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தமைக்காக சக்தி சௌர்தரர்ராஜனை பாராட்டலாம்.

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த டைரக்டர் கேரக்டர் செல்க்சனிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

இதுபோன்ற சாகச படங்களை எடுக்கும்போது தனி ஒருவன் படத்தில் அந்த ஐவர் அணி போல உள்ள நடிகர்களை பயன்படுத்தியிருக்கலாம்.

ஜெயம் ரவி உடன் வரும் அர்ஜீனன் மற்றும் ரமேஷ் திலக் இதற்கு பொருந்தவில்லை. ஒருவேளை அவர்களை இந்த சீரியஸ் படத்திற்கு காமெடிக்காக பயன்படுத்தியிருந்தால் காமெடியாவது கொடுத்திருக்கலாம். அதுவும் இல்லை என்பதால் ஏமாற்றம்தான்.

ஒரு மாநிலத்திற்கே பேராபத்து வரும்போது அதை மக்களுக்கு தெரிவிக்காமல் பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும். அப்படியொரு காட்சியே படத்தில் இல்லை. அவர்களே எல்லாம் முடிவையும் எடுக்க முடியுமா?

பெரிய விஞ்ஞானிகள் இருக்கும் போது, ஒரு திருடனையா ஏவுகனையை திருட அனுப்புவார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம்.

விண்வெளி வீரர்களுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் மேஜிக் மேன் ஜெயம் ரவிக்கு தெரிந்திருக்கிறது என்பது கொடுமை.

இந்தியாவின் முதல் விண்வெளி படம் என்பதால் லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் ரசிக்கலாம்.

கம்மி பட்ஜெட்டில் காஸ்ட்லியான வின்வெளியை கொடுத்த இந்த டீமை பாராட்டலாம்.

டிக் டிக் டிக்…. வின்வெளியில் விறுவிறுப்பு – 50%

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: எஸ்ஏ சந்திரசேகர், ரோகினி, ஆர்கே சுரேஷ், எஸ்வி சேகர், அம்பிகா, மனோ பாலா, விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான் மற்றும் பலர்
இயக்குனர்: விக்கி
இசையமைப்பாளர்: பாலமுரளி பாலு
தயாரிப்பாளர்: எஸ்ஏ சந்திரசேகர் க்ரீன் சிக்னல்
பிஆர்ஓ. : சக்தி சரவணன்

கதைக்களம்…

இன்றைய நாட்டு நடப்பில் இப்படி ஒரு மனிதர் வாழ முடியுமா? இந்த வயதிலும் போராட முடியுமா? என்பதற்கு விடைதான் இந்த டிராஃபிக் ராமசாமி.

அநீயாயம் செய்பவர்களுக்கு பிடிக்காத ஒரு தனி ஒருவரின் வாழ்க்கை பதிவு.

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் இருந்தால் அதை நம்மில் பலர் எதிர்த்து பேசுவார்கள். ஆனால் அதை கிழித்தெறியும் முதல் மனிதர் இவர்.

அத்தோடு இல்லாமல் எங்கு அநீதி நடந்தாலும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முதல் வழக்கு தொடுத்து அதில் வெற்றி கண்டு வருபவர்.

பெரும்பாலும் இவரை பற்றி நாம் பேசும்போது விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை இவர் அகற்றுவார் என்பதுதான் நமக்கு தெரியும்.

ஆனால் அதையும் மீறி தமிழக அரசையே எதிர்த்து இவர் செய்த சாகசங்கள் அனைத்தும் கலந்த கலவைதான் இந்த டிராஃபிக்.

கதைக்களம்…

சென்னையில் மீன்பாடி (மூன்று சக்கர) வண்டிகளால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது.

பொதுவாக இந்த வண்டிக்கு 25சிசி ஸ்பீடு மட்டுமே இருக்கும். அதற்கு மட்டும்தான் அனுமதியுள்ளது.

ஆனால் டூவிலரில் உள்ள இன்ஜினை திருடி, அதை மீன்பாடி வண்டியில் பொருத்தி ஓவர் ஸபீடாக சென்று பலரை கொல்கின்றனர்.

இந்த விபத்துக்கு எதிராக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கில் எம் எல் ஏ, மேயர், மந்திரி என அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர்.

இவர்கள் டிராபிக் ராமசாமியை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தாண்டி இந்த வழக்கில் டிராபிக் ராமசாமி வெற்றி கண்டாரா? என்பதே இப்பட கதை.

கேரக்டர்கள்…

டிராபிக் ராமசாமியாக எஸ் ஏ சந்திரசேகரன். நிஜ டிராஃபிக் ராமசாமிக்கு இவரை விட பொருத்தமான ஒரு ஆள் கிடைப்பாரா தெரியல.

கதைக்கும் கேரக்டருக்கும் மிக கச்சிதம்.

போலீசை எதிர்த்து அவர் பேசும் வசனங்கள் முதல் அரசியல்வாதிகள் தில்லாக பேசும் காட்சிகள் அனைத்தும் அசத்தல்.

அதிலும் கோர்ட் காட்சிகளில் இவரே வாதாடி வழக்கறிஞர்களையே வென்று விடுகிறார்.

போலீஸ் ஸ்டேசனில் இவர் அடி வாங்குவதை பார்த்தால் நமக்கே பாவமாக தோன்றும்.

பேத்தியுடன் பாசம், மனைவியுடன் நேசம், குடும்பத்தில் அன்பு என சகலத்திலும் ஜொலிக்கிறார்.

வில்லனாக இருப்பார் என்று பார்த்தால் தன் கேரக்டரில் ஹீரோவாக உயர்ந்து விடுகிறார் ஆர்கே சுரேஷ்,
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் கணவனை விட்டுக் கொடுக்காத ரோகினி மனதில் நிறைகிறார்.

இவர்களுடன் நிறைய நட்சத்திரங்கள்…

லிவிஸ்டன், எஸ்வி சேகர், அம்பிகா, மனோ பாலா, விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பூ, சீமான், இமான் அண்ணாச்சி, பிரகாஷ்ராஜ் என பலரும் வந்து செல்கிறார்கள்.

இதில் இமான் அண்ணாச்சி செய்யும் இம்சைகள் சில கவுன்சிலர்களை நினைவுப்படுத்தும்.

இதில் விஜய் ஆண்டனி வரும் காட்சி படு செயற்கையாக இருக்கிறது.

எஸ்வி சேகரை நீதிபதியாக பார்க்கும்போது ஆடியன்ஸ் கிளாப்ஸ் அள்ளும். அதற்கு காரணம்தான் உங்களுக்கு தெரியுமே.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலமுரளி பாலுவின் பின்னணி இசை பேசப்படும். குடும்ப பாடல் மற்றும் போராட்ட பாடல் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் அவர்கள் பணியில் கச்சிதம்.

ஒரு தனி மனிதரின் வாழ்க்கை பதிவை அப்படியே கொடுக்காமல் கமர்சியல் கலந்து கொடுத்துள்ளார் விக்கி.

அறிமுக இயக்குனர் என்று அவர்தான் சொல்கிறாரே தவிர படத்தில் அப்படி தெரியவில்லை.

சீனியர் நடிகர்களை நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார்.

கமர்சியலாக கொடுக்க நினைத்து சில நேரங்களில் காட்சி அமைப்புகளில் அதுவே மைனசாக மாறிவிட்டது.

கொஞ்சம் விறுவிறுப்பாக காட்சிகள் செல்லும் போது அம்பிகாவின் அரட்டை கொஞ்சம் ஓவராக தெரிகிறது.

பல கோர்ட் காட்சிகள் நாடகத்தன்மை உள்ளது. யதார்த்தம் கலந்து கொடுத்திருக்கலாம்.

டிராஃபிக் ராமசாமி… ஒன் மேன் ஆர்மி

More Articles
Follows