தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்…
பொது கட்டண கழிப்பிடத்தை கவனித்து வருகிறார் நாயகன் நேசம் முரளி. இவரின் அம்மா மீரா கிருஷ்ணன் தவறான வழியில் இவரை பெற்று இங்கு இவரை போட்டு விட்டு சென்றுவிட்டதால் அந்த கக்கூஸை கூட கோயிலாக நினைத்து வழிப்பட்டு வருகிறார்.
சாம்பிராணி போடுவது முதல் நாயகி நந்தினியுடன் காதல் செய்வது வரை எல்லாத்தையும் அந்த கழிப்பிடத்திலேயே செய்து வருகிறார்.
அந்த கழிப்பிடத்தில் அருகே உள்ள நடைபாதையிலேயே நாயகி உள்பட பலரும் வசிக்கின்றனர்.
இதுபோல் ஒரு சிறுமியும் பாட்டியுடன் வசிக்கிறார். பள்ளி சென்று நன்றாக பயிலும் இவர், ஒரு வாடகை வீட்டிலாவது வசிக்க நினைக்கிறார். இதனால் இவர்களை அனைவரும் ஒரு வாடகை வீடு பிடிக்கவும் அட்வான்ஸ் கொடுக்கவும் படாதப்பாடு படுகின்றனர்.
அந்த சிறுமி படித்து முன்னேறினால் தாங்கள் அனைவரும் முன்னேறி விடலாம் என்பதால் ஒரு தங்கையாக நினைத்து சிறுமிக்கு நாயகன் உதவுகிறார்.
இவர்கள் நடைபாதை வாசிகள் என்பதாலும் இவர்களுக்கு யாருமில்லை என்பதாலும் அடிக்கடி போலீஸ் இவர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிறையில் அடைக்கின்றனர்.
ஒரு நாள் ஒரு பிரச்சினையில் நாயகனை போலீஸ் 2 வருடம் சிறையில் அடைத்து விடுகிறது.
அதன்பின்னர் என்ன ஆனது? சிறுமி படித்தாரா? கழிப்பிடம் என்ன ஆனது? காதலி என்ன ஆனார்? வாடகை வீட்டுக்கு சென்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
தவறான வழியில் பிறக்கும் படும் அவலநிலையை அழகாக சொல்லி இருக்கிறார் நேசம் முரளி. இவரே இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.
அடிக்கடி கழிப்பிடத்தை காட்டுவதும், அதற்கு பூஜை செய்வதும் எல்லாம் ரொம்ப எரிச்சலை உண்டாக்குகிறது.
சிறுமி ஐஸ்வர்யா அனைவரையும் கவர்கிறார். இவரது கேரக்டர் நம் மனதில் நிறைந்கு இருக்கும். சின்ன வயதிலயே முன்னேற துடிக்கும் இவரது கேரக்டர் பேசப்படும் வகையில் உள்ளது.
போலீஸ் அதிகாரியாக மன்சூர் அலிகான் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
நாயகி நந்தினியை பாராட்டியே ஆகவேண்டும். படம் முழுவதும் கழிப்பிடத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் எப்படி எல்லாம் நடித்தார்களோ? தெரியவில்லை. ஆனால் அவர்களின் சகிப்புத்தன்மையை பாராட்ட வேண்டும்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலம். அதுபோல் பட பாடல் வரிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.
உங்களுக்கு கழிப்பிடம் எங்களுக்கு இருப்பிடம் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.
உதவி செய்ய அனுமதி கேட்கனுமா? என்று சிறுமி கேட்கும் வசனங்கள் நம்மை ஈர்க்கிறது.
விஜியின் ஒளிப்பதிவு பிளாட்பாரத்தில் வாழ்பவர்களை யதார்த்தம் மீறாமல் காட்டியிருக்கிறார்.
30 வருடத்திற்கு முன்பு தவறவிட்ட குழந்தையை இப்போது தாய் தேடி வர என்ன காரணம்? என்பதை தெளிவாக சொல்லவில்லை.
தான் பிறந்த இடம் என்பதால் டாய்லெட்டில் உள்ள மலத்தை கையால் க்ளீன் செய்வது எல்லாம் முகம் சுழிக்க வைக்கிறது.
கபிலவஸ்து என்றால் புத்தர் இடம் என்பது நமக்கு தெரிந்திருக்கலாம். எனவே படத்தையும் புத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் எடுத்துள்ளனர்.
மொத்தத்தில் ‘கபிலவஸ்து’ நடைபாதை வாசிகளின் வலி
Kabilavasthu review rating