தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’.
இதில் அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க எஸ்.ஆர்.பிரபுவின்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
தயாரித்துள்ளது.
கதைக்களம்.?
அரசியல்வாதி கே எஸ் ரவிக்குமாருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடிக்கிறார் ஜப்பான் (கார்த்தி). இதனால் அரசியல்வாதியின் கட்டளை பேரில் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.
தென்னிந்திய முழுவதும் தேடப்படும் மிகப்பெரிய கொள்ளைக்காரன் ஜப்பான் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்து படங்களையும் வீடியோக்களையும் எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் ஜப்பானுடன் தொடர்பு இருப்பதாக ஒரு நபரை விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர்.. அவரோ மனைவி குழந்தை மீது அதிக பாசம் கொண்டவர்.. அந்த அப்பாவியின் நிலை என்ன?
இந்த நிலையில் போலீசில் சிக்கும் ஜப்பான் மீது செய்யாத குற்றத்திற்காக மற்றொரு வழக்கும் போடப்படுகிறது. அப்படி என்றால் அந்த குற்றத்தை செய்தவர் யார்? ஜப்பானுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு?
தென்இந்தியா முழுவதும் தேடப்படும் குற்றவாளி ஜப்பான் உண்மையில் யார்? அவனது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
சிறுத்தை படத்திற்குப் பிறகு பக்கா திருடனாக ஜப்பானாக ஜொலிக்கிறார் கார்த்தி.. எந்த இடத்திலும் கார்த்தியை வெளிப்படுத்தாத வண்ணம் குரலை மாற்றி வித்தியாசமாக முயற்சித்து இருக்கிறார். ஆனால் சில இடங்களில் மட்டும் சத்தமாக பேசும் காட்சிகளில் குரல் மாற்றம் தெரியல.
அதேசமயம் தாய் பாசத்திற்காக ஏங்கும் நாயகனாகவும் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் சொல்லப்படும் அந்த மீன் கதை உயிரோட்டமாக இருந்தாலும் படத்தின் நீளத்திற்காக குறைத்து இருக்கலாம்.
கார்த்தியின் 25வது படத்தில் தான் நாயகி என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம் அணு இம்மானுவேல் மற்றபடி அவரது காட்சிகள் அணு அளவே உள்ளது.
அரசியல்வாதி கே.எஸ்.ரவிக்குமார்.. போலீஸ் அதிகாரி.. சுனில் & விஜய்மில்டன் ஆகியோர் தங்களது பங்களிப்பில் குறை வைக்கவில்லை.. எழுத்தாளர் பவா செல்லத்துரை-யின் கேரக்டரில் வலுவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வாகை சந்திரசேகர் மனதில் நிற்கும் படியான கேரக்டரை கொடுத்திருக்கிறார்.
கார்த்தி கும்பலில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் கேரக்டர் திடீரென மாறுவது எதிர்பாராத ஒன்று. இவர்களின் மோதல் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. நுங்கு பாம் வித்தியாசமான கற்பனை.
டெக்னீசியன்கள்…
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்ய ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் பின்னணி இசைக்கு கொடுத்த ஆர்வத்தை பாடல்களிலும் கொடுத்திருக்கலாம். பாடல்கள் ஈர்க்கவில்லை என்பது வருத்தம்.
ஒளிப்பதிவாளர் தன் பங்களிப்பில் நேர்த்தி. ஆனால் எடிட்டர் பொறுமையை சோதித்து விட்டார்.. மீன் கதை.. ஹீரோயின் ஷூட்டிங் காட்சிகள் உள்ளிட்டவைகள் நீளம்.
மிகப்பெரிய கொள்ளைக்காரன் கார்த்தி பெரிய அளவில் யாரையும் கூட வைத்துக் கொள்ளாதது நம்பும் படியாக இல்லை. . போலீஸால் தேடப்படும் ஒரு திருடன் சினிமா எடுப்பது வீடியோ பதிவிடுவது எல்லாம் நம்ப முடியாத லாஜிக் ஓட்டை.
லாஜிக்கை எல்லாம் மறந்து கொள்ளை மேஜிக்கை காண நினைத்தால் இந்த படத்தை பார்க்கலாம்.. ஜோக்கர் குக்கூ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் எடுத்த ராஜூமுருகன் இதில் தன் பாதையை மாற்றி கமர்சியலுக்கு தாவியுள்ளார்.
அதேசமயம் அரசியல்வாதிகளையும் காவல்துறையையும் தன்னுடைய நையாண்டி மூலம் கலாய்த்திருப்பது சிறப்பு.
ஒரு மெசேஜ் அனுப்பினால் அதை ஒரு நிமிடத்தில் ஆயிரம் பேருக்கு ஃபார்வேர்டு செய்வார்கள்.. வதந்தியை நம்பும் வாட்ஸ்அப் மக்கள் கூட்டம் என்றும் ஜனங்களையும் கலாய்த்து இருக்கிறார்.
தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா போன்ற எந்த மாநிலம் என்றாலும் காவல்துறையிலும் கருப்பு ஆடுகள் இருப்பதால்தான் திருடர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுற்றுகிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டி இயக்குனர் ராஜூமுருகன்.
japan movie review and rating in tamil